Saturday, April 18, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஅமைச்சர் கே.டி லாந்காந்தவிடம் மன்னிப்பு கோரியதா ஹிரு ஊடகம்?

அமைச்சர் கே.டி லாந்காந்தவிடம் மன்னிப்பு கோரியதா ஹிரு ஊடகம்?

அமைச்சர் கே.டி லாந்காந்தவின் சொத்துக்கள் தொடர்பில் ஹிரு தொலைக்காட்சியூடாக ஒளிபரப்பிய செய்தி தவறானது என அறிவித்து, அமைச்சரின் சட்டத்தரணியால் கோரிக்கை கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஹிரு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டதற்கு அமைய, அமைச்சரின் பிணையங்களின் பெறுமதி மற்றும் சொத்துக்களின் மொத்த பெறுமதி ஆகியன தவறாக அறிக்கையிடப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் சில தரவுகளை மீண்டும் உறுதி செய்துக் கொள்வதற்கான உரித்துக்கு அமைய, குறித்த தகவல்களை ஹிரு தொலைக்காட்சி செய்தி மீண்டும் வெளியிட்டுள்ளது.

அமைச்சர் கே.டி. லால்காந்த, தன்னுடையதும், தனது குடும்ப உறுப்பினர்களுக்குமான 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்குரிய சொத்து விபரங்களை கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவிடம் சமர்பித்தமை தொடர்பில் கடந்த 16 ஆம் திகதி ஹிரு செய்தி வெளியிட்டது.

அதற்கமைய, அசையா சொத்துக்களாக, அன்பளிப்பு உரித்தினூடாக கிடைக்கப்பெற்ற 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான 2500 சதுரஅடி கட்டடம், 10 பேர்ச்சஸ் காணி, 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான நிரந்தர கட்டடம் மற்றும் 20 பேர்ச்சஸ் காணி, 560 இலட்சம் ரூபாய் பெறுமதியான நான்காயிரத்து 50 சதுர அடி கட்டடம் மற்றும் 14 பேர்ச்சஸ் காணி ஆகியன தொடர்பில் ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன.

மேலும், உரித்தினூடாக கிடைக்கப்பெற்ற 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான 7.26 பேர்ச்சஸ் காணியிலுள்ள 2500 சதுர அடியிலான கட்டடம் மற்றும் வணிக கட்டடம் என்பனவும் தமது அசையா சொத்துக்கள் என அமைச்சர் கே.டி லாந்காந்த அறிவித்துள்ளார்.

இதனை தவிர அசையும் சொத்துக்களாக, 16 இலட்சம் ரூபாய் பெறுமதியான 8 பவுண் தங்க ஆபரணங்களும், 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான 120 கிராம் தங்கம் மற்றும் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிற்றூர்ந்து ஒன்றும் உள்ளதாக தெரிவித்து அவர் ஆவணங்களை சமர்பித்துள்ளார்.

அத்துடன், மாதாந்த சம்பளத்தினூடாக உழைத்த 7 இலட்சத்து, 38 ஆயிரத்து 918 ரூபாய் 10 சதம் பணமும், சொத்துக்களை குத்தகைக்கு வழங்கியமையூடாக பெற்றுக் கொள்ளப்பட்ட 4 இலட்சம் ரூபாய் பணமும், ஓய்வூதிய கொடுப்பனவாக 7 இலட்சத்து 71 ஆயிரத்து 400 ரூபாய் பணமும் அவரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை தவிர, சொத்து விபரங்களின் அடிப்படையில், நிலையான வைப்பினூடாக வருடாந்தம் 27 இலட்சத்து 55 ஆயிரத்து 851 ரூபாய் 97 சதம் பணத்தை பெற்றுக் கொண்டுள்ளதாகவும், தற்போதைய தொழில் என்ற அடிப்படையில் வருடாந்தம் 18 இலட்சம் வருவாய் சமர்பிக்கப்பட்டுள்ளதாக, ஹிரு தொலைக்காட்சியின் செய்தியில் அறிக்கையிடப்பட்டது.

இந்த சொத்து விபரங்களில் தவறில்லை என்பது, கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவிடம் சமர்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களுடாக அறியமுடிகிறது.

எனினும், அமைச்சரின் பிணையங்கள் மற்றும் சொத்துக்களின் மொத்த பெறுமதி தவறானது என தெரிவித்து, அமைச்சரின் சட்டத்தரணி ஹிரு ஊடகத்திற்கு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.

அமைச்சரின் பிணையங்களின் மொத்த பெறுமதி 38 கோடியே 39 இலட்சத்து ஆறாயிரத்து 705 ரூபாய் 40 சதம் என ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்ததாக, தவறாக அறிக்கையிடப்பட்டதை ஹிரு தொலைக்காட்சி இன்று தெரிவித்துள்ளது.

அதன்படி, அமைச்சருக்கு சொந்தமான பிணையங்களின் மொத்த பெறுமதி ஒரு இலட்சத்து, 43 ஆயிரத்து 475 ரூபாய் 08 சதம் என்பதே சரியான அறிக்கையாகும்.

இதனை தவிர அமைச்சரூடாக சமர்பிக்கப்பட்ட சொத்துக்களின் மொத்த பெறுமதி 46 கோடி ரூபாய்க்கும் அதிகம் என அறிக்கையிட்டமை, மொத்தக் கணிப்பில் ஏற்பட்ட தவறு என்பதையும் ஹிரு தொலைக்காட்சி செய்தி இன்று குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், அமைச்சரூடாக சமர்பிக்கப்பட்ட ஆவணங்களுக்கு அமைய, சொத்துக்களின் மொத்த பெறுமதி சுமார் 08 கோடி ரூபாய் ஆகும்.

இதற்கமைய, அமைச்சர் கே.டி.லால்காந்தவுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு ஹிரு தொலைக்காட்சி செய்தி கவலை வெளியிட்டுள்ளது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular