Wednesday, April 22, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeWorld Newsவிஜய் முட்டி போட்டு நடக்க இப்படி ஒரு காரணமா?

விஜய் முட்டி போட்டு நடக்க இப்படி ஒரு காரணமா?

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் சமீபத்திய நகர்வுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, திருச்சி மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அவர் போட்டியிடும் வேளையில், அவருக்குக் கிடைத்துள்ள ரகசிய கள ஆய்வுகள் அவருக்குச் சாதகமாக இல்லை என்று தகவல்கள் கசிந்துள்ளன.

நெகட்டிவ் ரிப்போர்ட்: விஜய்க்கு அதிர்ச்சித் தகவல்!

விஜய் போட்டியிடும் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அவரது வெற்றி வாய்ப்பு குறித்து கட்சி மேலிடம் நடத்திய ரகசிய ஆய்வில், அவருக்குப் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

பெரம்பூரில் ஆளும் திமுகவின் பலமான கட்டமைப்பு மற்றும் திருச்சி கிழக்கில் இனிகோ இருதயராஜூக்கு இருக்கும் கிறிஸ்துவர்கள் வாக்கு ஆகியவை விஜய்க்கு சவாலாக உள்ளன. இந்த இரண்டு தொகுதிகளிலும் விஜய் தோல்வியைத் தழுவக்கூடும் என்ற ‘நெகட்டிவ் ரிப்போர்ட்’ வந்ததைத் தொடர்ந்து, அவர் தனது தேர்தல் வியூகத்தை அதிரடியாக மாற்றியுள்ளார்.

திருச்சி கிழக்குத் தொகுதியைப் பொறுத்தவரை, சுமார் 35% கிறிஸ்தவ வாக்காளர்கள் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர். ஏற்கனவே கிறிஸ்தவ ஆயர்கள் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது விஜய்க்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது.

இந்தச் சூழலில், எப்படியாவது சிறுபான்மையின வாக்குகளைத் தன் பக்கம் திருப்ப வேண்டும் என்பதற்காகவே, புனித அந்தோணியார் ஆலயத்தில் விஜய் முட்டிப் போட்டுப் பிரார்த்தனை செய்ததாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இது ஒரு ‘இறுதிக்கட்ட முயற்சி’ என்றும், தனது மத அடையாளத்தை வெளிப்படுத்துவதன் மூலம் மக்களின் உணர்வுகளைக் கவர விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய்யின் இந்த திடீர் ‘பக்தி அரசியல்’ ஆளும் திமுக தரப்பிற்குச் சிறு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தங்களது உறுதியான வாக்கு வங்கியில் விஜய் ஓட்டை போடுகிறாரோ என்ற அச்சம் திமுகவினரிடையே எழுந்துள்ளது.

மறுபுறம், இந்த மோதலைக் கண்டு அதிமுக உற்சாகத்தில் உள்ளது. திமுகவின் வாக்குகள் விஜய்யால் பிரிக்கப்பட்டால், அது தங்களுக்கு எளிதான வெற்றியைத் தேடித்தரும் என அதிமுக கணக்குப் போடுகிறது.

பொதுவாக கிறிஸ்தவ மற்றும் சிறுபான்மையின வாக்குகள் திமுகவின் கோட்டையாகக் கருதப்படுபவை. தற்போது விஜய் அந்த வாக்கு வங்கியில் கை வைப்பதால், திமுகவிற்குச் செல்ல வேண்டிய வாக்குகள் இரண்டாகப் பிரியும் (DMK & TVK). இதில் விஜய் பாதியை எடுத்தால் போதும்.. வாக்குகள் அப்படியே சிதறும். அப்படியே மற்ற வாக்குகள் எதிரணிக்கு செல்லும். அதாவது அதிமுகவிற்கு மற்ற வாக்குகள் அதிமுகவிற்கு செல்லும். அதிமுக வாக்குகள் உடையாமல் இருப்பதால் அது அவர்களுக்கு சாதகமாக மாறும்.

இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெறுவது விஜய்யின் அரசியல் எதிர்காலத்திற்கு மிக முக்கியமானது. தோல்வி பயம் காரணமாக அவர் மேற்கொண்டுள்ள இந்தத் தீவிர முயற்சி, திருச்சி மற்றும் பெரம்பூர் மக்களின் மனதை மாற்றுமா? அல்லது ரகசிய ஆய்வுகள் சொன்னது போலவே அவருக்குப் பின்னடைவு ஏற்படுமா? என்பது வாக்கு எண்ணிக்கையின் போதுதான் தெரியவரும்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular