ஜூட் சமந்த
நாத்தாண்டியா கூட்டுறவு வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, நாத்தாண்டியா பல்வேறு சேவை கூட்டுறவுச் சங்கத்தின் 50ஆவது பொன்விழா ஆண்டு நிறைவை முன்னிட்டு 50 பௌத்த துறவிகளுக்கான மகா தானப் புண்ணிய காரியம் கடந்த 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பக்திப்பூர்வமாக நடைபெற்றது.
சங்கத்தின் 50 ஆண்டுகால வெற்றிகரமான மக்கள் சேவையைக் கொண்டாடும் வகையிலும், அதற்கு ஆசி வேண்டியும் இந்த ஆன்மீக நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விழாவின் முக்கிய அம்சமாக, நாத்தாண்டியா நகர மையப்பகுதியில் இருந்து ஆரம்பமான பௌத்த துறவிகளை அழைத்து வரும் ஊர்வலம் அமைந்திருந்தது. இதில் 50 மகா சங்கத்தினரும் பக்திப்பூர்வமாக விழா நடைபெறும் இடத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, முறைப்படி 50 மகா சங்கத்தினருக்குமான மகா தானம்மற்றும் அட்டப்பிறிகர உள்ளிட்ட நற்கொடைகள் வழங்கும் புண்ணிய காரியங்கள் நடைபெற்றன.
இந்நிகழ்வில் 50 ஆண்டுகால கூட்டுறவுச் சங்கத்தின் வளர்ச்சிக்கு உழைத்த அனைவருக்கும் இதன்போது ஆசிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


