Friday, May 22, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஅவசர எச்சரிக்கை: கொட்டும் மழையால் அதிரும் 6 மாவட்டங்கள்!

அவசர எச்சரிக்கை: கொட்டும் மழையால் அதிரும் 6 மாவட்டங்கள்!

நாடு முழுவதும் வெளுத்து வாங்கி வரும் கனமழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக, இலங்கையின் மிக முக்கிய 6 மாவட்டங்களுக்குப் பாரிய நிலச்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) இந்த அவசர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த நிலச்சரிவுக்கான ஆரம்பக்கட்ட எச்சரிக்கையானது நாளை (மே 23) இரவு 9:00 மணி வரை அமலில் இருக்கும் என NBRO அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

🛑 உயிரைக் காக்க உடனே நகருங்கள்: 7 பிரதேசங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’ (Level 3)!

நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதால், கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மிக ஆபத்தான ‘நிலை 3’ (Level 3 Red Warning) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் வாழும் மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

  • கேகாலை மாவட்டம்: தெரணியகல, ருவன்வெல்ல, தெஹியோவிட்ட.
  • இரத்தினபுரி மாவட்டம்: இரத்தினபுரி, அயகம, குருவிட்ட, எஹெலியகொட.

முக்கிய குறிப்பு: சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்போர், நிலச்சரிவுக்கான அறிகுறிகள் (மண்ணில் வெடிப்பு, மரங்கள் சாய்வது, திடீர் நீரூற்றுகள்) தென்பட்டால் கணப்பொழுதும் தாமதிக்காமல் பாதுகாப்பான முகாம்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

⚠️ தீவிரக் கண்காணிப்பில் இருக்கும் ஏனைய பகுதிகள் (Level 2 எச்சரிக்கை):

மேலும் 6 மாவட்டங்களைச் சேர்ந்த பல பிரதேசங்களுக்கு ‘நிலை 2’ (Level 2) எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில்

மாவட்டம்அபாயப் பகுதிகள் (Level 2)
கொழும்புசீதாவக்க, படுகா
கம்பஹாமீரிகம, திவுலபிட்டிய, அத்தனகல்ல
களுத்துறைஅகலவத்த, மத்துகம, ஹொரண, புலத்சிங்கள, இங்கிரிய, பாலிந்தநுவர
கேகாலைபுலத்கோஹுபிட்டிய, யாட்டியாந்தோட்டை
நுவரெலியாஅம்பகமுவ
இரத்தினபுரிபெல்மதுல்ல, கிரியெல்ல, எலபாத்த, கலவானை, நிவித்திகல
🌧️ செய்திப் பிரிவு வழங்கும் அவசர வேண்டுகோள்:

மழை தொடர்ந்து நீடிப்பதால், மலைப்பாங்கான மற்றும் சரிவான பகுதிகளில் வசிக்கும் மக்கள் இரவு வேளைகளில் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அத்தியாவசியத் தேவையின்றி ஆபத்தான மலைப் பாதைகளில் பயணிப்பதைத் தவிர்க்குமாறும் மக்கள் கேட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

உங்கள் உயிரும், உங்கள் குடும்பத்தின் பாதுகாப்பும் உங்கள் கைகளில்தான் உள்ளது! வானிலை மாற்றங்களை உடனுக்குடன் அவதானியுங்கள்!

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular