Sunday, July 5, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஇலங்கையில் டெங்கு அவசரகால நிலை! 39 பேர் பலி!

இலங்கையில் டெங்கு அவசரகால நிலை! 39 பேர் பலி!

  • ஜனவரி முதல் ஜூலை 4 ஆம் திகதி வரை இலங்கையில் 59,638 பேருக்கு டெங்கு தொற்று உறுதி; 39 உயிர்கள் பலி!
  • மேல் மாகாணத்தில் மாத்திரம் 52.50% வீதமான பாதிப்பு; கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே அதிக அபாயம்.
  • ஜூலை மாதத்தின் முதல் 4 நாட்களில் மாத்திரம் 4,251 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு நிலைமை தீவிரமடைந்துள்ளது.

இலங்கையில் இம்முறை பெய்த தென்மேற்கு பருவமழையும், அதனைத் தொடர்ந்த வெள்ளப்பெருக்கும் வடிந்துவிட்டாலும், அது விட்டுச்சென்ற ஆபத்து இப்போது ஒட்டுமொத்த நாட்டையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. ஆம், 2026 ஆம் ஆண்டின் டெங்கு காய்ச்சல் பரவல் தற்போது சாதாரண கட்டத்தைத் தாண்டி, ஒரு தீவிர தொற்றுநோய் (Epidemic) நிலையை எட்டியுள்ளது. இது ஒவ்வொரு குடிமகனும் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டிய தருணம் என்பதை புள்ளிவிவரங்கள் அச்சுறுத்தலோடு உணர்த்துகின்றன.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் (NDCU) அதிர்ச்சியூட்டும் தரவுகளின்படி, ஜனவரி முதல் ஜூலை 4 ஆம் திகதி நள்ளிரவு வரையிலான காலப்பகுதியில் மாத்திரம் 59,638 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 39 உயிர்களை இந்த நுளம்பு காவு கொண்டுள்ளது. நிலைமையின் தீவிரம் என்னவென்றால், கடந்த மே மாதத்தில் 8,590 ஆக இருந்த பாதிப்பு, ஜூன் மாதத்தில் 21,546 ஆக இருமடங்கிற்கும் மேலாக சடுதியாக அதிகரித்துள்ளது. இதைவிடக் கொடுமை, ஜூலை மாதத்தின் முதல் நான்கு நாட்களுக்குள் மாத்திரம் 4,251 புதிய நோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளமை நிலைமையின் வேகத்தை கண்முன் நிறுத்துகிறது.

துரதிஷ்டவசமாக, நாட்டின் மொத்த பாதிப்பில் அரைவாசிக்கும் மேற்பட்டவை (52.50%) மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளன. கொழும்பு (12,017 பாதிப்புகள்) மற்றும் கம்பஹா (11,740 பாதிப்புகள்) ஆகிய இரண்டு மாவட்டங்கள் மாத்திரமே முழு நாட்டின் பாதிப்பில் 40 வீதத்தை தம்மகத்தே கொண்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக தென் மாகாணத்தில் 9,507 பேரும், சபரகமுவ மாகாணத்தில் 5,172 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் உள்ள 142 சுகாதார வைத்திய அதிகாரிகள் (MOH) பிரிவுகள் தற்போது “அதி அபாய வலயங்களாக” பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த சடுதியான அதிகரிப்பால் நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பு பாரிய நெருக்கடியை சந்தித்துள்ளது. சிறுவர் வைத்தியசாலைகள் உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள பல அரச வைத்தியசாலைகள் நோயாளர்களால் நிரம்பி வழிவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கண்ணங்கர கவலையுடன் சுட்டிக்காட்டியுள்ளார். ஒவ்வொரு கட்டிலிலும் நோயாளர்கள் முண்டியடிக்கும் நிலை, நிலைமையின் பயங்கரத்தை எடுத்துக்காட்டுகிறது.

இந்த ஆபத்தான நிலையை கட்டுப்படுத்த அரசாங்கம் இப்போது அதிரடி களமிறங்கியுள்ளது. சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவின் நேரடி வழிகாட்டலில் ‘அவசரகால டெங்கு ஒழிப்பு செயல்பாட்டு மையம்’ உடனடியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நுளம்பு பெருகும் இடங்கள் குறித்த முறைப்பாடுகளை வழங்க 0117 966366 என்ற விசேட அவசர இலக்கமும் (Hotline) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வீடுகள், பாடசாலைகள், பொது மற்றும் கட்டுமான இடங்களில் நீர் தேங்கும் வகையில் நுளம்பு பெருகும் சூழலை வைத்திருப்பவர்களுக்கு எதிராக ‘சிவப்பு எச்சரிக்கை’ (Red Notice) வழங்கப்படுவதுடன், கடுமையான சட்ட நடவடிக்கைகளும் பாய்ந்து வருகின்றன.

டெங்கு ஒரு சாதாரண காய்ச்சல் அல்ல, அது உயிரைப் பறிக்கும் ஆயுதம். உங்கள் வீட்டைச் சுற்றியுள்ள சிறிய சிரட்டை, பிளாஸ்டிக் மூடிகளில் தேங்கும் ஒரு துளி நீர் கூட உங்கள் குடும்பத்தின் உயிரைப் பறிக்கலாம். விழிப்பாக இருப்போம், டெங்குவை ஒழிப்போம்!

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular