Sponsored Advertisementspot_img
HomeLocal NewsCEB ஊழியர் மீது தாக்குதல்: மின்னல் வேகத்தில் கம்பி எண்ணிய அரசியல்வாதி!

CEB ஊழியர் மீது தாக்குதல்: மின்னல் வேகத்தில் கம்பி எண்ணிய அரசியல்வாதி!

  • மின்னல் வேகத்தில் கம்பி எண்ணிய அரசியல்வாதி! மின்துண்டிப்புக்கு சென்ற CEB ஊழியர் மீது தாக்குதல்: மாதம்பேயில் அதிரடி கைது
  • பில் கட்டவில்லை; கேட்டதற்கு சரமாரி அடி! சிலாபம் பிரதேச சபை உறுப்பினர் வசமாக சிக்கினார்
  • கடமைக்குச் சென்ற ஊழியருக்கு நேர்ந்த கதி: சிலாபத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அரசியல்வாதியின் அடாவடித்தனம்!

ஜுட் சமந்த

கடமை நேரத்தில் தன் பொறுப்பை நிறைவேற்றச் சென்ற அரச ஊழியர் மீது, அதிகாரத் தோரணையில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தாக்குதல் நடத்திய அதிர்ச்சி சம்பவம் மாதம்பை பகுதியில் அரங்கேறியுள்ளது.

செப்டம்பர் 23 நண்பகல் ஒரு மணியளவில் மாதம்பை பழைய நகரப் பகுதியில் மின்சார சபையின் விசேட குழுவினர் மின்துண்டிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோதே இந்த களேபரம் ஆரம்பமானது. நீண்டகாலமாக மின் கட்டணத்தை செலுத்தத் தவறிய வாடிக்கையாளர்களின் மின் விநியோகத்தை துண்டிக்கும் அதிகாரபூர்வ பணியில் ஈடுபட்டிருந்த ஊழியரை, அங்கு வந்த குறித்த அரசியல்வாதி தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

சொற்கள் மோதலாகி, அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த ஊழியர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. இதில் நிலைகுலைந்து போன சிலாபம், ஆனந்த மாவத்தையைச் சேர்ந்த 29 வயதான தர்ஷன் பிரதீப் குமார் என்ற ஊழியர் பலத்த காயங்களுக்கு உள்ளானார்.

காயமடைந்த ஊழியர் உடனடியாக மீட்கப்பட்டு சிலாபம் பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பில் மாதம்பே பொலிஸ் நிலையத்தில் உடனடியாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

சட்டத்தை கையில் எடுத்த சிலாபம் பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 27 வயதுடைய குறித்த பிரதேச சபை உறுப்பினரை மாதம்பை பொலிஸார் துரிதமாகச் செயற்பட்டு சம்பவ இடத்திலேயே கைது செய்தனர். சந்தேகநபரான அரசியல்வாதியை சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான பணிகளை மாதம்பை பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

ALTEC SOLUTION

Official Instagram

Most Popular

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular