Sponsored Advertisementspot_img
HomeLocal Newsமுந்தல் களப்பில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி: மாயமான தெப்பம்!

முந்தல் களப்பில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி: மாயமான தெப்பம்!

ஜுட் சமந்த

முந்தல் – கீரியன்கல்லிய களப்புப் பகுதியில் வழக்கம் போல மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் உள்ளூர் மீனவர் ஒருவருக்கு, எதிர்பாராத பேரதிர்ச்சி ஒன்று காத்திருந்துள்ளது. ஜீவனோபாயத்திற்காகக் களப்புக்கரையோரத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தெப்பமும், அதிலிருந்த அனைத்து மீன்பிடி வலைகளும் ஒரே இரவில் சுவடு தெரியாமல் களவாடப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட கீரியன்கல்லிய பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய செய்யது இப்ராஹிம் மொஹமட் சியாப்தீன் என்பவர், கடந்த ஒக்டோபர் 01 ஆம் திகதி பகல் வழமைபோல் தனது மீன்பிடித் தொழிலை நிறைவு செய்துள்ளார். பின்னர், தனக்குச் சொந்தமான சுமார் 60,000 ரூபா பெறுமதியான தெப்பத்தையும், 1,24,000 ரூபா பெறுமதியான 14 மீன்பிடி வலைத் தொகுதிகளையும் களப்புக்கரையின் வழக்கமான தரிப்பிடத்திலேயே பத்திரமாகப் பூட்டிவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

தொடர்ந்து வந்த இரண்டு நாட்கள் அவர் தொழிலுக்குச் செல்லாத நிலையில், கடந்த 04 ஆம் திகதி அதிகாலை மீன்பிடிக்கப் புறப்பட்டு களப்புக்கரைக்குச் சென்றுள்ளார். ஆனால், அங்கு சென்ற அவருக்குக் காத்திருந்தது பலத்த ஏமாற்றம் — தெப்பமும் அதிலிருந்த தொழில் உபகரணங்களும் நின்ற இடத்தில் காணாமல் போயிருந்தன.

சுமார் 1,84,000 ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தனது வாழ்வாதாரச் சொத்துக்கள் களவாடப்பட்டமை தொடர்பில் அவர் உடனடியாக முந்தல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

நள்ளிரவு வேளையில் களப்பு வழியே இந்தத் திருட்டுத் திட்டம் அரங்கேற்றப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், இதன் பின்னணியில் உள்ள நபர்கள் யார் என்பது தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை. இத்திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மர்ம நபர்களைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த முந்தல் பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

RELATED ARTICLES

ALTEC SOLUTION

Official Instagram

Most Popular

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular