Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஉடைப்பெடுக்கும் அபாயத்தில் ரத்மல்ஓயா அணை!

உடைப்பெடுக்கும் அபாயத்தில் ரத்மல்ஓயா அணை!

  • உடைப்பெடுக்கும் அபாயத்தில் ரத்மல்ஓயா அணை: நாராவில, கொட்டாரமுல்ல கிராமங்களைச் சூழ்ந்த பதற்றம் – களமிறங்கிய இராணுவம்!
  • ரூ. 3.5 கோடி திட்டத்திற்கு ஆப்பு வைத்த பெருவெள்ளம்! ரத்மல்ஓயாவைக் காக்க இராணுவமும் மக்களும் மும்முரம்
  • நள்ளிரவுப் பெருவெள்ள அச்சுறுத்தல்: நாத்தாண்டியவில் மூழ்கவிருந்த கிராமங்களை மீட்கும் தீவிர நடவடிக்கை!

ஜுட் சமந்த

நாத்தாண்டிய, நாராவில பகுதியினூடாகப் பாயும் ரத்மல்ஓயாவின் நீர்மட்டம் திடீரென உயர்ந்து கரையோரங்களை அரிக்கத் தொடங்கியுள்ளமை அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. பல நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்களுக்கும் கிராமங்களுக்கும் வரப்பிரசாதமாகத் திகழ்ந்த இந்த ஆறு, தற்போது பெய்துவரும் அடைமழையினால் தனது கோர முகத்தைக் காட்டத் தொடங்கியுள்ளது.

நாராவில பகுதியில் ரத்மல்ஓயாவை மறித்துக் கட்டப்பட்டுள்ள ‘கதுருகஸ்பெம்ம’ அணைக்கட்டின் ஊடாகப் பெறப்படும் நீரைக் கொண்டே இப்பகுதியில் சுமார் 450 ஏக்கர் விவசாய நிலங்கள் நீண்டகாலமாகப் பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில்தான், அப்பிரதேசத்தின் விவசாய நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் வடமேல் மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் நீர் வழிந்தோடும் விசேட வான்பாயும் (spillway) கட்டமைப்பு ஒன்று அமைக்கப்பட்டு வந்தது.

வளர்ச்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக இடம்பெற்றுக் கொண்டிருந்த அதேநேரம், எதிர்பாராத விதமாகப் பொழிந்த கடும் பெருமழை நிலைமையை தலைகீழாக மாற்றியது. பெருக்கெடுத்து ஓடிவந்த கட்டுக்கடங்காத வெள்ள நீர், கதுருகஸ்பெம்ம அணைக்கட்டிற்கு அருகாமையிலுள்ள ஆற்றுப் படுக்கையை மிக வேகமாக அரிக்கத் தொடங்கியதில் பெரும் ஆபத்து முளைத்தது.

கரையின் இந்த அரிப்பு தீவிரமடைந்து ரத்மல்ஓயா அணைக்கட்டு உடையும் பட்சத்தில் நாராவில, தும்மோதர, கொட்டாரமுல்ல உள்ளிட்ட பல கிராமங்கள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதை புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு உடனடியாகக் கண்டறிந்தது. விபரீதம் நிகழ்வதற்கு முன், அணைக்கட்டைக் காப்பாற்றி மக்களின் குடியிருப்புகளைப் பாதுகாக்க அவசர அவசரமாக மணல் மூட்டைகளை அடுக்கும் வியூகம் வகுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நேரடி மேற்பார்வையில் மாதம்பை இராணுவ முகாமின் 57 ஆவது படைப்பிரிவுக்குட்பட்ட 7 ஆவது கஜபா படையணிச் சிப்பாய்கள் உடனடியாகக் களத்தில் குதித்தனர். அவர்களோடு உள்ளூர் கிராம மக்களும் கைகோர்த்து இரவுபகலாக மணல் மூட்டைகளை அடுக்கி வெள்ளத்தின் ஆக்ரோஷத்தைத் தடுத்து நிறுத்தும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இராணுவத்தினதும் மக்களினதும் இந்தத் துரித முயற்சியால் கிராமங்கள் உடனடி வெள்ளப் பெருக்கிலிருந்து தற்காலிகமாகப் பாதுகாக்கப்பட்டுள்ள போதிலும், மக்களின் அடிவயிற்றுப் பயம் இன்னும் அகலவில்லை. வானம் மீண்டும் இருண்டு பெருமழை தொடருமாயின், இந்த மணல் மூட்டைக் கரைகளையும் தாண்டி ஆற்று நீர் பாயக்கூடும் என அஞ்சும் மக்கள், இடிந்து விழும் தருவாயிலுள்ள இந்த அணைக்கட்டுக்கு உடனடியாக நிரந்தரக் கொங்கிரீட் தடுப்புச் சுவர் அமைக்கப்பட வேண்டும் என எச்சரிக்கையுடன் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

RELATED ARTICLES

ALTEC SOLUTION

Official Instagram

Most Popular

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular