- நள்ளிரவில் கணவன் என நினைத்து ஏமாந்த அரசு ஊழியர்: தங்க நகையுடன் தப்பியோடிய மர்ம நபர்!
- கட்டிலில் இருந்து பாய்ந்தோடியது யார்? தங்கொட்டுவையில் உறைய வைக்கும் நள்ளிரவு அதிர்ச்சி!
- சமையலறை ஜன்னல் வழியாக ஊடுருவிய நிழல்: தூக்கத்தில் இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!
ஜுட் சமந்த
தங்கொட்டுவை: இரவு உணவு முடிந்து வழமைபோல் தூங்கச் சென்ற ஒரு பெண்ணின் வாழ்வில், அதிகாலைப் பொழுதில் இடி விழுந்தது போல் நிகழ்ந்த கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தங்கொட்டுவை – கட்டுகெந்த பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய அரச பெண் ஊழியர் ஒருவரே இந்த எதிர்பாராத துயரத்திற்கு முகங்கொடுத்துள்ளார். கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி இரவு உணவு உட்கொண்டு விட்டு அவர் நிம்மதியாக உறங்கச் சென்றுள்ளார்.
அடுத்த நாள் (நவம்பர் 01) அதிகாலை வேளையில், நபர் ஒருவர் தன்னுடன் உறவில் ஈடுபட்டபோது, அது தன் கணவர்தான் என முழுமையாக நம்பியுள்ளார். அதனால் எவ்வித சந்தேகமும் இன்றி அமைதியாக இருந்துள்ளார்.
ஆனால், சில கணங்களிலேயே நிகழ்ந்த ஒரு திருப்பம் அந்தப் பெண்ணின் வாழ்க்கையையே உலுக்கியுள்ளது. சம்பந்தப்பட்ட நபர் திடீரென படுக்கையிலிருந்து பாய்ந்து கொண்டு நள்ளிருளில் தப்பியோடியுள்ளார். பதறியடித்துக்கொண்டு எழுந்து பார்த்தபோது, அவரது உண்மையான கணவர் வீட்டின் மற்றுமொரு அறையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த அதிர்ச்சி காட்சி தெரியவந்துள்ளது.
கணவனை எழுப்பி நடந்தவற்றை கூறி உடனடியாக வீட்டை சோதனை செய்தபோதுதான், அங்கிருந்த 3 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க மோதிரமும் மாயமாகியிருந்த உண்மை அம்பலமானது. நள்ளிரவு அமைதியை பயன்படுத்தி திட்டமிட்டு வந்த கொள்ளையனின் வக்கிர புத்தி இதில் தெளிவாகியுள்ளது.
வீட்டின் சமையலறை ஜன்னல் வழியாகவே அந்த மர்ம நபர் சத்தமின்றி உள்ளே நுழைந்து இக்கொடூர குற்றத்தையும் திருட்டையும் அரங்கேற்றியுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
தப்பியோடிய அந்த அடையாளம் தெரியாத நபரை வலைவீசித் தேடி வரும் தங்கொட்டுவை பொலிஸார், சம்பவ தொடர்பில் மேலதிக தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


