Sponsored Advertisementspot_img
HomeLocal Newsதந்தை நலம் விசாரிக்க வந்த மகளுக்கு அதிர்ச்சி: பூட்டிய அறைக்குள் நடந்தது என்ன?

தந்தை நலம் விசாரிக்க வந்த மகளுக்கு அதிர்ச்சி: பூட்டிய அறைக்குள் நடந்தது என்ன?

  • தந்தையின் நலம் விசாரிக்க வந்த மகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி: வீட்டிற்குள் சடலமாக மீட்பு!
  • பூட்டிய அறைக்குள் நடந்தது என்ன? மாதம்பே பகுதியில் மூத்த பிரஜையின் மர்ம மரணம்!
  • சில நாட்களுக்கு முன்னரே பிரிந்த உயிர்: காகாப்பள்ளியில் தீவிரமடையும் பொலிஸ் விசாரணை!

ஜுட் சமந்த

மாதம்பே: தந்தையின் நலம் விசாரிக்க ஆசையோடு வீட்டிற்குள் நுழைந்த மகளுக்கு, வாழ்நாளில் மறக்க முடியாத பேரதிர்ச்சி காத்திருந்த சம்பவம் மாதம்பே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காகாப்பள்ளிய – மனக்குளம், கொஹோம்பவத்தை பகுதியைச் சேர்ந்த விதான ஆரச்சிலாகே ஹரிஸ்சந்திர என்ற 72 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளர்.

கடந்த முதலாம் திகதி மாலை வேளையில், தனிமையில் வசித்து வந்த தந்தையின் சுகதுக்கங்களை விசாரிப்பதற்காக அவரது மகள் வீட்டிற்கு வந்துள்ளார். எனினும், வீட்டின் பிரதான அறைக்குள் சென்று பார்த்தபோது தந்தை அசைவற்று கிடந்ததைக் கண்டு அவர் நிலைகுலைந்து போயுள்ளார்.

பதறிப்போன மகள் உடனடியாக மாதம்பே பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு அளித்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிஸார் சடலத்தை பார்வையிட்டபோது, இந்த மரணம் நிகழ்ந்து சில நாட்கள் கடந்திருக்கலாம் என்பதற்கான தடயங்கள் தெரியவந்துள்ளன.

உயிரிழந்த நபர் அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானவர் என பிரதேசவாசிகள் மத்தியில் கூறப்படும் நிலையில், இந்த மரணத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பது மர்மமாகவே நீடிக்கிறது.

சம்பவ இடத்திற்கு வருகை தரும் நீதவானின் ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் கொண்டு செல்லப்படவுள்ளதுடன், மாதம்பே பொலிஸார் இது கொலையா அல்லது இயற்கையான மரணமா என்ற பல கோணங்களில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

ALTEC SOLUTION

Official Instagram

Most Popular

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular