Sponsored Advertisementspot_img
HomeLocal Newsவனாத்தவில்லுவில் சாம்பலாக்கப்பட்ட கஞ்சா மற்றும் மாத்திரைகள்!

வனாத்தவில்லுவில் சாம்பலாக்கப்பட்ட கஞ்சா மற்றும் மாத்திரைகள்!

  • நீதிமன்ற உத்தரவில் தகனம் செய்யப்பட்ட 2 லட்சத்துக்கும் அதிகமான போதை மாத்திரைகள்!
  • கடும் பாதுகாப்புக்கு மத்தியில் வனாத்தவில்லுவில் சாம்பலாக்கப்பட்ட கஞ்சா மற்றும் மாத்திரைகள்!

ஜுட் சமந்த

நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த பாரிய அளவிலான கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைத் தொகுதி ஒன்று, கடந்த 6 ஆம் திகதி வனாத்தவில்லு பகுதியில் வைத்து முற்றாகத் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது. சிலாபம் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த வழக்கு விசாரணைகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்தே, இந்த அதிரடி நடவடிக்கை நீதிமன்ற உத்தரவுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்ற சிலாபம் மாவட்ட நீதிபதி ஐ.பி.ஐ.விமல் வீரசிங்க அவர்களின் நேரடி மேற்பார்வையிலும் முன்னிலையிலும், வனாத்தவில்லு – லேக்டோ தோட்டத்தில் அமைந்துள்ள பிரத்தியேக தகனசாலையில் இந்த போதைப்பொருட்கள் ஒவ்வொன்றாக எரிக்கப்பட்டன.

நீதிமன்றப் பெட்டகத்திலிருந்து குறித்த போதைப்பொருட்களை மாவட்ட நீதிபதியின் கண்காணிப்புக்கு மத்தியில், சிறப்புப் பொலிஸ் பாதுகாப்புப் பிரிவினரின் பலத்த ஆயுதப் பாதுகாப்புடன், சிலாபம் நீதிமன்றத்திலிருந்து லேக்டோ தோட்டம் வரை வாகனத் தொடரணியாக இவை கொண்டு செல்லப்பட்டன.

சுமார் 201 கிலோகிராமும் 200 கிராமும் எடையுடைய கஞ்சா பொதிகள் மற்றும் சமூகத்தில் பெரும் சீரழிவை ஏற்படுத்தக்கூடிய 2,16,000 ‘ப்ரிகாபலின்’ (Pregabalin) போதை மாத்திரைகள் என்பன தகன உலைக்குள் இடப்பட்டு முழுமையாகச் சாம்பலாக்கப்பட்டன.

இந்நிகழ்வில் நீதிபதியுடன் இணைந்து, வனாத்தவில்லு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பி.குமாரதாச, சிலாபம் தலைமையகப் பொலிஸ் பரிசோதகர் அசேல ஹேரத் மற்றும் வனாத்தவில்லு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உபுல் செனவிரத்ன உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகள் பலரும் நேரில் கலந்துகொண்டு மேற்பார்வை செய்தனர்.

RELATED ARTICLES

ALTEC SOLUTION

Official Instagram

Most Popular

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular