Sponsored Advertisementspot_img
HomeLocal Newsகொட்டும் மழையிலும் வடக்கின் பசுமைப் புரட்சிக்காக களமிறங்கிய MSEDO!

கொட்டும் மழையிலும் வடக்கின் பசுமைப் புரட்சிக்காக களமிறங்கிய MSEDO!

  • கொட்டும் மழையிலும் ஓயாத உழைப்பு: வடக்கின் பசுமைப் புரட்சிக்காக களமிறங்கிய MSEDO!
  • 10,000 பனை விதைகள்: மன்னாரில் இயற்கை வேலி அமைக்கும் மாபெரும் முயற்சி!
  • யானைத் தொல்லைக்கு பனை மர தீர்வா? மன்னாரில் முன்னெடுக்கப்படும் விசேட திட்டம்!

அனஸ்தினா ஜெராட்

வானம் பார்த்த பூமிக்கு வான்மழை ஆசிர்வாதமாக அமைந்தாலும், மன்னாரின் களநிலவரம் அத்தனை எளிதானதாக இருக்கவில்லை. பாதகமான காலநிலையும் சேறும் சகதியும் நிறைந்த சூழலும் அன்றாட வாழ்வை முடக்கும் வேளையிலும், அங்கே ஒரு பசுமைப் புரட்சிக்கான விதை மிக அமைதியாகப் போடப்பட்டு வருகின்றது.

மன்னார் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் சிதறிக் கிடக்கும், முளைப்புத் திறன் மிக்க தரமான பனை விதைகளைத் தேடி MSEDO நிறுவனப் பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் களத்தில் இறங்கியுள்ளனர். வீசும் குளிர்காற்றையும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது அவர்கள் சேகரிக்கும் ஒவ்வொரு விதையும், எதிர்காலத்தில் வடக்கின் அடையாளத்தை மீளக்கட்டியெழுப்பும் பலம் கொண்டவை.

வட மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் சுமார் 10,000 பனை விதைகளை நட்டுப் பராமரிக்கும் பிரமாண்டமான பசுமைத் திட்டத்தின் ஒரு முக்கிய கட்டமாகவே இந்த விதை சேகரிப்புப் பணி தற்போது வேகமெடுத்துள்ளது. வெறும் மரங்களை நடுவதுடன் இந்தத் திட்டம் நின்றுவிடப்போவதில்லை என்பதில்தான் இதன் உண்மையான வியூகமே ஒளிந்துள்ளது.

நீண்டகாலமாக வடபகுதி மக்கள் எதிர்கொள்ளும் காட்டு யானைகளின் ஊடுருவலுக்கு ஓர் இயற்கையான மற்றும் பலமான தடுப்பு வேலியாக இந்த பனை மரங்களை உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகும். அத்துடன் கடலோர மற்றும் உள்நாட்டு நீர்நிலைகளைப் பாதுகாத்தல், கடுமையான மண்ணரிப்பைத் தடுத்தல் போன்ற சூழலியல் சமநிலையை பேணவும் இது வழிவகுக்கும்.

மண்ணையும் மனிதனையும் காக்கும் இந்த நீண்டகால சமூக அபிவிருத்திப் பணி, அடுத்த தலைமுறைக்கு ஓர் பசுமையான மற்றும் பாதுகாப்பான சூழலை கையளிக்கும் உன்னத நோக்கோடு மன்னார் மண்ணில் உறுதியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

RELATED ARTICLES

ALTEC SOLUTION

Official Instagram

Most Popular

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular