Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஆணமடுவையில் போதைப்பொருள் மையம்: எட்டியும் பார்க்காத பொலிஸ்!

ஆணமடுவையில் போதைப்பொருள் மையம்: எட்டியும் பார்க்காத பொலிஸ்!

  • ஆணமடுவ மகாவாவியில் போதைப்பொருள் மையம்: சொகுசு வாகனங்களில் வந்து பகிரங்க டீல்!
  • தகவல் கொடுத்தும் 3 மணிநேரமாக எட்டிக்கூட பார்க்காத பொலிஸ்: ஆணமடுவவில் பரபரப்பு!
  • குளக்கரையில் நடக்கும் கறுப்பு வியாபாரம்: மக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு பறந்த முறைப்பாடு!

ஜுட் சமந்த

சுற்றுலாப் பயணிகள் வந்துபோகும் அமைதியான நீர்நிலைப் பகுதியொன்று, இன்று பாதாள உலகக் கும்பலின் போதைப்பொருள் பரிமாற்றத் தளமாக மாறியுள்ள அதிர்ச்சித் தகவல் ஆணமடுவவில் இருந்து வெளியாகியுள்ளது.

ஆணமடுவ, கொட்டுகச்சிய மகாவாவி மற்றும் அதனைச் சூழவுள்ள ஆள்நடமாட்டமற்ற பகுதிகள் தற்போது பாரியளவிலான போதைப்பொருள் விநியோக இடைத்தங்கல் வலயமாக மாற்றப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் வெளிப்படையாகக் குற்றம் சுமத்துகின்றனர். ஆனால், கண்முன்னே நடக்கும் இந்த விபரீதத்தைக் கண்டும் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் கைகட்டி வேடிக்கை பார்ப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

வெளிமாவட்டங்களில் இருந்து வரும் மர்மக் கும்பல்கள், தமது கள்ள வியாபாரத்திற்கான முக்கிய சந்திப்புப் புள்ளியாக இந்தக் குளக்கரையையே தெரிவுசெய்துள்ளன. பகல் வேளைகளில் விலையுயர்ந்த அதிசொகுசு வாகனங்களில் வந்து இறங்கும் நபர்கள், குளத்தில் நீராடுவது போலவும் உல்லாசப் பொழுதைப் போக்குவது போலவும் பாசாங்கு செய்துவிட்டு, இறுதியாகத் திட்டமிட்டபடி போதைப்பொருள் பொதிகளைப் பரிமாறிக்கொண்டு மிக லாவகமாகத் தப்பிச் செல்கின்றனர்.

இந்த நிலையில்தான், கடந்த செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி பெருமளவிலான போதைப்பொருள் தொகை கொட்டுகச்சிய மகாவாவியின் அணைக்கட்டுப் பகுதிக்குக் கொண்டுவரப்பட்டு, கைமாற்றப்படவிருந்த அதிர்ச்சித் திட்டம் ஒன்று அரங்கேறியுள்ளது. குளத்தில் தொழிலில் ஈடுபட்டிருந்த கிராமத்து மீனவர் ஒருவர் இதனைச் சந்தேகத்துக்கிடமான முறையில் அவதானித்து, உடனடியாக ஆணமடுவ பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்கியுள்ளார்.

தகவல் கிடைத்து அடுத்த சில நிமிடங்களில் அதிரடி நடவடிக்கை பாயும் என்று கிராம மக்கள் எதிர்பார்த்திருந்த வேளையில், பெரும் ஏமாற்றமே எஞ்சியது. தகவல் வழங்கி சுமார் 3 மணித்தியாலங்கள் கடந்தும், வெறும் 9 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள பொலிஸ் நிலையத்திலிருந்து ஒரு அதிகாரிகூட அந்த இடத்திற்கு வரவில்லை என ‘ஜனமதய சுரெகீமே யுக்திய ஹண்ட’ அமைப்பு பகிரங்கமாகச் சாடியுள்ளது.

பொலிஸாரின் இந்த மர்ம மௌனத்தைத் தொடர்ந்து, விவகாரம் புத்தளம் பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதுடன் அங்கு உத்தியோகபூர்வ முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெளிமாவட்டங்களிலிருந்து திட்டமிட்டு கடத்தி வரப்பட்டு, இப்பிரதேசத்தின் முக்கிய போதைப்பொருள் புள்ளிகளுக்கு விநியோகிக்கப்படும் இந்த பாரிய கடத்தலைத் தடுத்து நிறுத்தவும், கடத்தல்காரர்களைக் கைது செய்யவும் பொலிஸார் ஏன் இவ்வளவு தயக்கம் காட்டுகிறார்கள் என்ற அடுக்கடுக்கான சந்தேகங்களை மக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு அனுப்பியுள்ள அவசர கடிதத்தில் ‘ஜனமதய சுரெகீமே யுக்திய ஹண்ட’ அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

RELATED ARTICLES

ALTEC SOLUTION

Official Instagram

Most Popular

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular