முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் இப்ராஹிம் அன்ஸார் நியமிக்கப்பட உள்ளதாக அரச உயர்மட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.
அவரின் நியமனத்திற்கான அமைச்சரவை அங்கீகாரம் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக இப்ராஹிம் அன்ஸார் அவர்கள் விரைவில் தனது கடமைகளை பொறுப்பேற்க உள்ளார்.
இப்ராஹிம் அன்ஸார் இதற்கு முன்னதாக சவுதி அரேபியா ,மலேசியா உள்ளிட்ட நாடுகளின் உயர்ஸ்தாணிகராக பல ஆண்டுகள் சேவையாற்றிய மூத்த அரச உயரதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.