Wednesday, November 12, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 152

போதைக்காக சித்தியிடம் கை வைத்த மகன்!

0

போதைப்பொருளை வாங்குவதற்காக சித்தியின் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் 21 வயது இளைஞன் உட்பட  திருட்டுக்கு உடந்தையாக செயற்பட்ட 3 இளைஞர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது, 

திருநெல்வேலி பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த 03 ஆம் திகதி தங்க நகை திருடப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. 

முறைப்பாட்டின் அடிப்படையில்  கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். 

விசாரணைகளின் அடிப்படையில், முறைப்பாட்டாளரின் வீட்டில் வசித்து வந்த, முறைப்பாட்டாளரின் அக்காவின் மகனே திருட்டில் ஈடுபட்ட சந்தேகத்தில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.  

மேலும் சந்தேகநபரிடமிருந்து, திருடப்பட்ட நகையில் ஒரு தொகுதியும், ஒரு தொகை பணம் மற்றும்  2 கிராம் 400 மில்லி கிராம்  ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன. 

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் திருட்டுக்கு உடந்தையாக செயற்ப்பட்ட குற்றச்சாட்டில் மேலும் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

திருட்டில் ஈடுபட்டவர்கள், போதைக்கு அடிமையானவர்கள் எனவும், போதைப்பொருட்களை கொள்வனவு செய்யவே திருட்டில் ஈடுபட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

Click here to join our whatsApp group

சரமாரியாக தாக்கப்பட்ட SLMC எம்.பி!

0

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் மீது இன்று (08) காலையில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் ஸ்ரீலங்கா மக்கள் கட்சி ஆதரவாளர் ஒருவர்  தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்நிலையில் அவர் காயமடைந்து ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இது தொடர்பாக காயமடைந்த பாராளுமன்ற உறுப்பினர்  முகம்மது சாலி நழீம் எமது செய்திளாரிடம் தெரிவிக்கையில்,

அரசியல் பிரச்சினை காரணமாக பள்ளிவாசல் ஒன்றின் முன்னாள் எனது தந்தைக்கும் சகோதரர் மீதும் இன்று அதிகாலை 6.00 மணியளவில்  கலீல் என்பர் தாக்குதல் நடத்தினார்.

இதனால் காயமடைந்த சகோதரன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதையடுத்து காலையில் கொழும்பில் இருந்து வந்த தாம் வைத்தியசாலைக்கு சென்ற நிலையில், ஸ்ரீ லங்கா மக்கள் கட்சி  ஆதரவாளர் காதர் என்பவர் வைத்தியசாலையில் வைத்து என்னை தரக்குறைவான வார்தைகளால் பேசினார்.

இதனையடுத்து நான் பொலிஸ் நிலையத்துக்கு சென்று வாகனத்தைவிட்டு இறங்கி உள்ள சென்ற போது, பின்னால் வந்த காதர் என்மீது மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தால் தாக்கியுள்ளதுடன், பொலிஸ் நிலையத்துக்குள்ளும் தாக்க முற்பட்டபோது பொலிசார் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர் என்றார்.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் அப்படி ஒன்றும் நடக்கவில்லை இருவரும் முரண்பட்டு கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Click here to join our whatsApp group

நாகவில்லு பாடசாலையில் பரிசளிப்பு விழா!

0

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் திரு S.M. ஹுசைமத் தலைமையில் நேற்று (06.02.2025) பாடசாலை பிரதான மண்டபத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.

இதன்போது 2024 இல் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பு சித்தியடைந்த 9 மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.

பாடசாலை அதிபர் திரு S.M. ஹுசைமத் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் பாராட்டி கெளரவிக்கப்பட்டதுடன், பாடசாலையின் அனுசரணையுடன் பெறுமதிமிக்க பரிசில்களும் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டனர்.

மேலும் மாணவர்களின் குறித்த வெற்றிக்காக பாடுபட்ட அதிபர், ஆசிரியர்கள், மற்றும் மேலதிக வகுப்புகள் மேற்கொண்ட ஆசிரியர்களுக்கு பெற்றோர்களினால் பெறுமதிமிக்க பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவித்திச் சங்க உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

என்னது 1800 கோடி வசூலா??

0


சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் நடிப்பில் கடந்த டிசம்பர் 5ம் தேதி திரைக்கு வந்த படம் ‘புஷ்பா-2’. இந்த படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை செய்தது. புஷ்பா படத்தின் முதல் பாகம் 400 கோடி வசூல் செய்த நிலையில் இந்த புஷ்பா-2 படமோ உலக அளவில் 1800 கோடி வசூல் செய்து இந்திய அளவில் 2024ம் ஆண்டில் அதிக வசூல் செய்த படமாக முதலிடம் பிடித்தது.

அதையடுத்து இப்படம் திரைக்கு வந்து ஒரு மாதத்திற்கு பிறகு ஓடிடியில் வெளியிடப்பட்ட போதும், உலக அளவில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்ததோடு, தற்போது ஓடிடி தளத்திலும் உலக அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இதன் மூலம் புஷ்பா-2 படம் இந்திய ரசிகர்களை மட்டுமின்றி சர்வதேச அளவிலும் ரசிகர்களை கவர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது என்று அப்படக்குழு ஒரு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

மத்திய வங்கி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

0

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2025 ஜனவரி மாத இறுதியில் 6.06 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த 2024 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது இது 0.9% வீழ்ச்சியாகும்.

கடந்த 2024 டிசம்பரில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 6.12 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்ததாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

நிதி பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் சீனா வழங்கிய 1.4 பில்லியன் டொலர்களும் இதில் உள்ளடங்குவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மனைவியை போட்டுத்தள்ளிய கணவன்!

0

வாத்துவை, வேரகம பகுதியில் கணவர் ஒருவர் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

கொலை செய்யப்பட்டவர் வாத்துவ, வேரகம பகுதியைச் சேர்ந்த இஷாரா நிஷாதினி சல்காது என்ற 29 வயதுடைய பெண் ஆவார்.

உயிரிழந்த பெண்ணுக்கு 6 மாதம் ,3 வயது மற்றும் 6 வயதுடைய மூன்று குழந்தைகள் உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்தக் கொலை தொடர்பாக அவரது 37 வயது கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கூரிய ஆயுதத்தையும் பொலிசார் மீட்டுள்ளனர்.

வாக்குவாதத்தைத் தொடர்ந்து சந்தேக நபர் இந்தக் கொலையைச் செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்தியாவுக்கு பச்சை கோடி காட்டிய பாகிஸ்தான்!

0

காஷ்மீர் உட்பட இந்தியாவுடனான அனைத்துப் பிரச்சனைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். 

காஷ்மீர் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு காஷ்மீர் நாடாளுமன்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

காஷ்மீரில் உள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ‘காஷ்மீர் ஒற்றுமை தினம்’ கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. 

அத்துடன், காஷ்மீர் மக்களுக்கு அனைத்து விதமான ஆதரவையும் பாகிஸ்தான் தொடர்ந்து வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அதேநேரம், ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கிய உறுதிமொழிக்கு அமைய, பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையை இந்தியா ஆரம்பிக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

இன்றுமுதல் புதிய சேவை ஆரம்பம்!

0

அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக ‘GovPay’ வசதியை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு இன்று (7) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது.

பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான டிஜிட்டல் முறை மூலம் தடையின்றி கொடுக்கல் வாங்கல் செய்யக்கூடியவாறு, இத்திட்டத்தின் ஊடாக அரச நிறுவனங்களுடனான கொடுக்கல் வாங்கல்களை சீரமைத்து நவீனமயப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

இது அரச வருமான சேகரிப்பில் வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துகிறது. தரவு சார்ந்த முடிவெடுப்பதை ஊக்குவிப்பதோடு, மிகவும் திறமையான மற்றும் குடிமக்களுக்கு ஏற்ற அரசு சேவை வழங்கலுக்கு வழிவகுக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரவித்துள்ளது.

இது தொடர்பாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன கருத்து வௌியிடுகையில்,

“இந்தக் கட்டண வசதி தற்போது 16 அரச சேவைகளுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. ஏப்ரல் மாதத்திற்குள் மேலும் 30 சேவைகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமென எதிர்பாரக்கிறோம். எதிர்காலத்தில், இந்த முறை மூலம் பணம் செலுத்துவதற்கான செலவை 15 ரூபாவினால் குறைக்கவும் நாங்கள் நடவடிக்கை மேற்கொள்வோம்.”

பனாமாவிடம் வாங்கிக்கட்டிய அமெரிக்கா!

0

பனாமா கால்வாயை அமெரிக்கா கைப்பற்றும் என்று அதிபர் டிரம்ப் விடுத்த மிரட்டலுக்கு பனாமா நாடு பணிந்தது என்று அமெரிக்கா வெளியுறவுத்துறை அறிவித்தது. இந்த தகவலை பனாமா அரசு மறுத்துள்ளது.

மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் அமைந்துள்ளது பனாமா கால்வாய். கரீபியன் கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலை இணைக்கும் வகையில், 82 கி.மீ., துாரத்துக்கு அமைந்துள்ளது இந்த கால்வாய். உலகின் கடல்சார் வணிகத்தில், 5 சதவீதமும், அமெரிக்காவின் வர்த்தகத்தில், 50 சதவீதமும், இந்த கால்வாய் வழியாகவே நடக்கின்றன. உலகின் முக்கிய கடல்சார் வணிகத்துக்கான இணைப்பாக இந்த கால்வாய் உள்ளது. அமெரிக்காவால் வெட்டப்பட்ட இந்த கால்வாய், நீண்ட காலம் அமெரிக்காவால் நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது.

கடந்த, 1977ல் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இந்த கால்வாயை நிர்வகிக்கும் உரிமையை 1999ல் பனாமாவுக்கு அமெரிக்கா வழங்கியது. ஒவ்வொரு ஆண்டும் 14 ஆயிரம் கப்பல்கள் இந்த பனாமா கால்வாய் வழியாகச் செல்கின்றன. அமெரிக்காவின் கப்பல்களில் சுமார் 75 சதவீதம், பனாமா கால்வாய் வழியாகதான் சென்று வருகின்றன. இதற்காக பனாமா பெரும் கட்டணத்தை அமெரிக்காவிடம் வசூலிக்கிறது; அமெரிக்க கடற்படை கப்பல்கள் இடம் கூட கட்டணம் வசூலிக்கின்றனர் என்பது தான் டொனால்டு டிரம்பின் குற்றச்சாட்டாக உள்ளது.

அமெரிக்க மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்டது இந்த கால்வாய் என்று டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வந்தார். சீனாவின் ஆதிக்கத்தில் இருக்கும் பனாமா கால்வாயை அமெரிக்கா கைப்பற்றும் என்றும் அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்தார். இதன் தொடர்ச்சியாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ, பனாமா சென்று அந்த நாட்டு அரசுடன் பேச்சு நடத்தினார்.

இதையடுத்து, ‘இனி அமெரிக்க அரசு கப்பல்கள் அனைத்தும் கட்டணம் இன்றி, பனாமா கால்வாய் வழியாக செல்ல அந்நாட்டு அரசு ஒப்புக்கொண்டது. இதனால் அமெரிக்காவிற்கு பல கோடி ரூபாய் செலவு மிஞ்சமாகும்’ என்று அமெரிக்கா வெளியுறவுத்துறை அறிவித்தது.

ஆனால், கட்டணம் ரத்து செய்வதாக கூறவில்லை என பனாமா அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கூறினோம் எனவும் தெரிவித்துள்ளது.

ஆரம்பமாகியது பேர வாவித் திட்டம்!

0

“வளமான நாடு – அழகான வாழ்வு” என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள க்லீன் ஶ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கொழும்பு மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகாரசபையின் ஏற்பாட்டில் பேர ஏரியை மாற்றுவதற்கான பூர்வாங்க செயற்திட்டம் இன்று (2025 பெப்ரவரி 06) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்காக கடற்படை படகுகள் மற்றும் உழைப்பையும் வழங்க கடற்படை ஏற்பாடு செய்தது.

அதன்படி, இரண்டு நாட்களாக பேர ஏரியை சுத்தப்படுத்தும் திட்டத்தில் இரானுவப்படை, கடற்படை மற்றும் விமானப்படை மற்றும் சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று, தூய்மைப்படுத்தும் திட்டத்தின் மூலம், பேர ஏரியின் உயிரியல் பன்முகத்தன்மையைக் காப்பாற்றவும், அதன் அழகை அதிகரிக்கவும், கழிவுகளை முறையாக அகற்றுவதன் மூலம் சுற்றுலாவின் ஈர்பு தன்மையை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தேசிய பணிகளில் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவமான பங்களிப்பை வழங்க இலங்கை கடற்படை எப்போதும் தயாராக உள்ளது.