அல் ஜசீரா ஊடக நிறுவனம் நடத்தும் சர்வதேச செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (03) லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ஜனாதிபதியாக அவர் பதவியேற்றதன் பின்னர் நாட்டில் இருந்த கடுமையான பொருளாதாரத் திட்டம் இலங்கையை சரிவிலிருந்து காப்பாற்றியதா? அல்லது அது வரவிருக்கும் பெரிய துன்பத்திற்கு வழி வகுத்ததா? என்பதை பற்றிய முழுமையான கருத்துரைப்பும் இடம்பெறவுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் ஈஸ்டர் தாக்குதல்களின் போது பிரதமராக தனது அனுபவங்கள் குறித்தும் அவர் தனது கருத்துக்களை வெளியிட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
யுத்தத்தின் போர்வையில் நாட்டில் தோன்றியுள்ள சர்வாதிகார வெறி, நாட்டின் ஜனநாயகத்திற்கு ஒரு மரண அடி என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
எனவே, தற்போதுள்ள ஊழல் நிறைந்த அமைப்பை மாற்றி, நாட்டிற்கு உண்மையான சுதந்திரத்தை கொண்டு வர, தற்போதைய அரசியலமைப்பை உடனடியாக ரத்து செய்து, புதிய அரசியலமைப்பை கொண்டு வருமாறு ஜனாதிபதியிடமும், தற்போதைய அரசாங்கத்திடமும் கேட்டுக்கொள்வதாக ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (04) காலை பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் நடைபெற்ற தேவ ஆராதனையில் பங்கேற்ற போதே பேராயர் இவ்வாறு தெரிவித்தார்.
அரசியலமைப்பு எனப்படும் சர்வாதிகார அமைப்புக்கு வழி வகுத்த சட்ட கட்டமைப்பிற்குள் தலைவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட அதீத அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக குறிப்பிட்ட கர்தினால், இதன் விளைவாக இனங்களுக்கு இடையே எளிதில் தீர்க்கப்படக்கூடிய கருத்து வேறுபாட்டை போராக மாற்றி,, நாட்டில் ஒரு பயங்கரமான சூழ்நிலையை உருவாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பின்னர் நியமிக்கப்பட்ட ஆட்சியாளர்கள் 1990 களில் இருந்து ஊடக ஒடுக்குமுறை, ஊடகவியலாளர்களை காணாமல் ஆக்குதல், வெள்ளை வேன் கலாச்சாரம் மற்றும் எதிரிகளை சிறையில் அடைத்தல் போன்ற பயங்கர செயல்களைச் செய்ததாகவும் பேராயர் கூறினார்.
பேரழிவு தரும் போரினால் தாயகம் ஆழமான பொருளாதார வீழ்ச்சியில் மூழ்கியதாக சுட்டிக்காட்டிய பேராயர், கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்தப் போக்கு தீவிரமடைந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டார்.
“கடந்த காலத்தை பார்த்து சுதந்திர தினத்தை கொண்டாடாமல், இம்முறை எதிர்காலத்தை நோக்கியதாகதாக சுதந்தர தினத்தை கொண்டாடுகிறோம்”
இந்த பூமியில் பிறந்த மனிதர்கள் என்ற வகையில், இந்த உலகில் உயர்ந்த மனித நேயம் மிக்க இடமாக மாற்றும் பொறுப்பு நமக்கு உள்ளது. அந்த உயர்ந்த மனித நேயத்தை அனைத்து மக்களும் சமமாக உள்வாங்குவதற்கான வாய்ப்புகளை வழங்க வேண்டும். சுதந்திரத்திற்கான போராட்டம் இந்த பரந்த நோக்கங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
எனவே, சுதந்திரக் கனவை ஒன்றாகப் காண்போம், அந்தக் கனவை ஒன்றாக நனவாக்கிகொள்வோம்.
அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதி இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு
புதிய வரி திருத்திற்கமைய, முச்சக்கர வண்டி மற்றும் உந்துருளிகளை அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டியேற்படும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிலோன் மோட்டர் டிரேடர்ஸ் ஒழுங்கமைப்பின் தலைவர் என்ரூ பெரேரா எமதுச் செய்திச் சேவையுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி 3 லட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட உந்துருளி ஒன்று இறக்குமதி தடை தளர்த்தப்பட்டதுடன் விதிக்கப்பட்ட வரி காரணமாக 7 இலட்சம் ரூபாயாக அதிகரிக்கும் என குறிப்பிட்டார்.
அத்துடன் இறக்குமதி செய்யப்பட்ட முச்சக்கர வண்டி ஆறரை இலட்சம் ரூபாவால் அதிகரிக்கக் கூடும். அதேநேரம், இரண்டு அல்லது 3 மில்லியன் ரூபாய்களுக்கு இருந்த வாகனங்கள், 7 மில்லியன் ரூபாய் வரைக்கும் அதிகரித்துள்ளது.
இறக்குமதி தடை நீக்கப்பட்டதன் பின்னர் பல்வேறு வகையான வரிகள் அமுலாக்கப்படுகின்றன.
இதன் காரணமாக வாகனங்களின் விலைகள் 160 முதல் 260 சதவீதம் வரையில் அதிகரிப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும் தற்போதைய நிலையில் வாகனங்களைக் கொள்வனவு செய்வது தொடர்பாகப் பொதுமக்கள் தங்களது நிதிநிலைமைகளைக் கருத்திற் கொண்டே தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வரி அதிகரிப்பானது தற்போதைக்கு குறைக்கப்படாது என்று அரசாங்கம் தங்களிடம் தெரிவித்திருப்பதாகவும் சிலோன் மோட்டர் டிரேடர்ஸ் ஒழுங்கமைப்பின் தலைவர் என்ரூ பெரேரா கூறியுள்ளார்.
நாட்டிற்கு புதிய மகிழுந்து, முச்சக்கர வண்டி, உந்துருளி, பாரவூர்தி, பேருந்து ஆகியவற்றை இறக்குமதி செய்யும் டொயோட்டோ லங்கா, ஸ்டேன்டர்ஸ் மோட்டர்ஸ், யுனைட்டட் மோட்டர்ஸ், கியா மோட்டர்ஸ், டி.வி.எஸ் லங்கா, லங்கா அசோக் லேலண்ட், டேவிட் பீரிஸ் ஆகிய 24 நிறுவனங்கள் சிலோன் மோட்டர் டிரேடர்ஸ் ஒழுங்கமைப்பிற்குள் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுதந்திர தினம் தமிழர் தேசத்தின் கரிநாள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (03) மாலை நடாத்திய ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிறிலங்காவின் சுதந்திர தினத்தை தமிழ்த் தேசிய மக்கள் சுதந்திர தினமாக கருதுவது கிடையாது. சிறிலங்காவிற்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் கொண்டு வரப்பட்ட புதிய அரசியலமைப்பை தமிழ் மக்கள் நிராகரித்தே வந்திருக்கின்றனர்.
அந்த அரசியலமைப்புக்கள் மூன்றும் ஒற்றையாட்சி அரசியலமைப்பின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டதை தமிழ் மக்கள் நிராகரித்திருந்தனர்.
அதேபோன்று, இப்போதும் புதிய அரசியலமைப்பு கொண்டு வரும் நடவடிக்கைகள் தான் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான ஒற்றையாட்சி அரசியலமைப்பை தமிழ் மக்கள் எப்போதும் நிராகரிப்பார்கள்.
அடிமை சாசனத்தின் அடையாளமாக இருக்கின்ற ஒற்றையாட்சி அடையாளங்களை நிராகரிக்கிற அதேவேளையில் தமிழில் தேசிய கீதம் பாடுவதால் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை.
இவ்வாறான நிலைமையில் சிறிலங்காவின் சுதந்திர தினத்தை கரிநாளாக பார்ப்பது எம்முடைய மரபாக இருக்கிறது.
அந்த வகையில் சிறிலங்காவின் சுதந்திர தினத்தை தமிழ் மக்கள் கரிநாளாக அனுஷ்டித்து வருவதுடன், தமிழர் தாயக நிலப்பரப்பில் நாளை கரிநாள் போராட்டங்கள் நடைபெறவுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை திருநாட்டின் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு, தேசியத்தை அவமதிக்கும் வகையில் இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் பெரும் கோபத்தை உண்டுபண்ணியுள்ளதுடன், இனங்களுக்கிடையில் மேலும் முருகளை உண்டுபண்ணும் செயற்பாடாகவே பார்க்கப்படுகின்றது.
77 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் முகமாக இன்று (04) வெள்ளவத்தை ஜும்மா பள்ளிவாசலில் தேசிய கொடியேற்றத்துடன் இஸ்லாமிய சமய நிகழ்வுகள் இன்று அதிகாலை இடம்பெற்றது.
இதில் தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் மற்றும் பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி ஆகியோர் விஷேடமாக பங்கேற்றனர்.
குறித்த நிகழ்வில் விஷேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றதுடன், 77 ஆவது சுதந்திர தினத்தை மையப்படுத்தி நாட்டின் ஒருமைப்பாடு, எதிர்கால முன்னெடுப்பு மற்றும் சுபீட்சம் ஆகியன பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவலகள் திணைக்கள பணிப்பாளர் எம். எஸ். எம் நவாஸ் உட்பட திணைக்கள உத்தியோகத்தர்கள், ஜம்மிய்யதுல் உலமா சபை அங்கத்தவர்கள், வெள்ளவத்தை ஜும்மா பள்ளிவாசலின் நிர்வாகிகள் மற்றும் பலர் பங்குபற்றியிருந்தனர்.
கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த ஜெர்மன் நாட்டு பிரஜையும் திடீரென ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயம் இன்று (03) உயிரிழந்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பிரிட்டிஷ் பெண் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
குறித்த விடுதியில் தங்கியிருந்த ஒரு பிரித்தானிய பெண் மற்றும் ஜெர்மன் தம்பதியினருக்கும் திடீரென வாந்தி ஏற்பட்டதால், அவர்களை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் 24 வயதான பிரித்தானிய பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம், உணவு விஷமானதால் ஏற்பட்டதா? அல்லது கொலையா? என்பதை அறிய அடுத்தக்கட்ட விசாரணைகள் நடைபெற்று வருவதுடன், அதற்காக மேலும் சில வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்ற நிலையில் ஜெர்மன் நாட்டு பிரஜையும் இன்று உயிரிழந்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாடசாலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய 8 வயது சிறுமி ஒருவரை கேக் கொடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவமொன்று இந்தியாவில் பதிவாகியுள்ளது.
இந்தியாவின் கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் புறநகர் பகுதியில் வசித்து வருபவர் 8 வயது சிறுமி.
மேலும் அந்த பகுதியில் உள்ள அரசாங்க பாடசாலையில் 3-ம் வகுப்பு படித்து வரும் குறித்த சிறுமி கடந்த 31-ஆம் திகதி பாடசாலை முடிந்து வீட்டுக்கு புறப்பட்ட போது, பாடசாலை வளாகத்துக்குள் புகுந்த 3 மர்ம நபர்கள், சிறுமிக்கு சாப்பிட கேக் கொடுத்துள்ளனர். பின்னர் சிறிது நேரம் சிறுமியுடன் விளையாடிய அவர்கள், திடீரென கத்தியை காட்டி சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதனால் பயந்துபோன சிறுமி செய்வதறியாது திகைத்து நின்றாள். அப்போது அந்த மர்ம நபர்கள் 3 பேரும் சிறுமியை பாடசாலை வளாகத்தில் உள்ள மறைவான இடத்துக்கு தூக்கிச்சென்று அங்கு வைத்து கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்தனர்.
பின்னர் நடந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என்றும், சொன்னால் கொன்று விடுவோம் என்றும் மிரட்டி சிறுமியை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் பயந்து போன அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை யாரிடமும் கூறாமல் இருந்துவிட்டாள்.
இந்த நிலையில் நேற்று காலையில் சிறுமிக்கு பயங்கர வயிற்று வலியும், இரத்தப்போக்கும் ஏற்பட்டது. இதனால் பதறிப்போன சிறுமியின் சித்தி, அவளிடம் விசாரித்தார். அப்போது சிறுமி தன்னை 3 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துவிட்ட கொடுமையை கண்ணீர் மல்க கூறினாள்.
அதையடுத்து சிறுமியின் சித்தி உடனடியாக இதுபற்றி மண்டியா டவுனில் உள்ள மகளிர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் பொலிசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மண்டியா மிம்ஸ் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அந்த மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இசை உலகில் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் கிராமி விருதுகள் 1959-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விருதானது உலகம் முழுவதும் சிறந்த பாடல், ஆல்பம், இசையமைப்பாளர்கள், பாடல் ஆசிரியர்கள் உள்ளிட்ட இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 67-வது ஆண்டு கிராமி விருது வழங்கும் விழா லோஸ் ஏஞ்சல்சில் நடைபெற்றது.
இதில் பாடகர் கன்யே வெஸ்ட் மற்றும் அவரது மனைவி பியான்கா சென்சோரி உடன் கலந்து கொண்டார். அப்போது மிகவும் மெல்லிதாக உடல் பாகங்கள் முழுவதுமாக வெளியே தெரிய கூடிய உடையை பியான்கா சென்சோரி அணிந்து வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பியான்கா சென்சோரி கிட்டத்தட்ட நிர்வாணமாக காட்சியளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கிட்டத்தட்ட நிர்வாணமாக வந்ததற்காக பியான்கா சென்சோரி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
நாட்டின் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகளுக்காக முதலீடு செய்வதற்கு தயாராக இருப்பதாக இலங்கையின் ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதுவர் ஹாலித் அல் அமீரி தெரிவித்தார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் இலங்கையின் ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதுவருடன் அண்மையில் துறைமுக வளாகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இது தொடர்பாக குறிப்பிட்டார்.
இதன்போது தூதுவர் நாட்டின் புதிய சிட்டி டெர்மினல் (கொழும்பு துறைமுக நகரத்தில் நிர்மாணிக்கப்படக் கூடிய விமான நிலைய முனையத்தின்) முதலீட்டிற்கு இணக்கம் தெரிவித்தார்.