Sunday, March 15, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 188

மியன்மர் நிலநடுக்கம்-1600ஐ கடந்த உயிரிழப்பு!

0

மியான்மர் நாட்டில் நேற்று முன்தினம் (மார்ச்-28) இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவாகின. இது, தாய்லாந்திலும் மிகப் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது.

பாங்காக் நகரில் சில வானுயர்ந்த கட்டடங்கள் சரிந்து விழுந்தன. நில நடுக்க இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1644 ஐ தாண்டியுள்ளது. 3,400 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். மேலும் உயிர்ப்பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இதனிடையே நேற்று ( மார்ச் 29) மாலை ரிக்டர் அளவில் 5.1 என்ற அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து நய்பிடாவ், மண்டாலே உட்பட ஆறு பிராந்தியங்களில் அவசரநிலையை மியான்மர் ராணுவ அரசு அறிவித்தது. மண்டாலே நகரத்தின் அருகே இர்ரவாடி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த, 90 ஆண்டுகள் பழமையான பாலம் உடைந்தது.

இந்த அதிர்வுகளால் கட்டடங்கள் சரிந்ததில், மியான்மரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1644 ஐ தொட்டது. 3,400 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மேலும் உயிர்ப்பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

பெயரை மாற்றியமைக்காக கொதித்த சிறீதரன் எம்.பி!

0

ஆனையிறவு உப்பின் அடையாளப் பெயரை உறுதிசெய்க. : சிறீதரன் எம்.பி கோரிக்கை.

ஆனையிறவு உப்பு என்னும் அடையாளப் பெயரை உறுதிசெய்யுமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வடக்கு மாகாணத்தின் கைத்தொழிற் பொருளாதார அடையாளங்களுள் ஒன்றான ஆனையிறவு உப்பளத்தை மீள ஆரம்பித்தமை காலத்தேவையான செயற்பாடாகும். 1937ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஆனையிறவு உப்பளத்தில் 1938 ஆம் ஆண்டில் உப்பு உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் ஏறத்தாழ ஒன்பது தசாப்த பாரம்பரியம் மிக்க ஆனையிறவு உப்பளத்தின் செயற்பாடுகள் இன்றுமுதல் (29) மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளித்தாலும், ‘ஆனையிறவு உப்பு’ என்ற அடையாளப் பெயர் ‘ரஜ லுணு’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கிடைக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

வடக்கு மாகாணத்தின் கைத்தொழிற் பேட்டைகளுள் முதன்மையானதும், முக்கியத்துவம் மிக்கதுமான ஆனையிறவு உப்பளம் என்பது எமது மக்களின் அடிப்படை வாழ்வியலோடு இணைந்த ஓர் அடையாளம் ஆகும். அத்தகையதோர் கைத்தொழிற் கட்டமைப்பை மீள ஆரம்பிக்கும் போது அதன் அடிப்படை அடையாளத்தை மாற்றம் செய்கின்றமை தங்கள் அரசாங்கத்தின் மீதான அபிமானத்தையும், இன நல்லிணக்கம் குறித்த தங்களின் சிந்தனைப் போக்கையும் கேள்விக்குட்படுத்துவதாக அமைந்துள்ளது.

குறிப்பாக, கடந்த காலங்களில் இனத்துவ அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அடையாளத் திணிப்புகளைப் போலவே, எமது மொழியியல் அடையாளத்தை சிதைத்து, பெரும்பான்மையினத்தின் தனித்துவத்தை வலிந்து புகுத்தும் இன மேலாதிக்கச் செயற்பாடாகவே இதனையும் கருத வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

கடந்த 2025.03.18 ஆம் திகதி, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22.7 இன் கீழ், ஆனையிறவு உப்பளம் குறித்து பாராளுமன்றில் நான் கேள்வி எழுப்பியபோது வலியுறுத்தியதற்கு அமைவாகவும், எமது மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்பவும் ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பினை ‘ஆனையிறவு உப்பு’ என்ற பாரம்பரிய பெயருடனேயே விற்பனை செய்வதை உறுதிசெய்யுமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன் – என்றுள்ளது.

சாலை விபத்தை தடுக்க விஷேட விழிப்புணர்வு!

0

சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பேரணி இன்று இடம்பெற்றது.

நாட்டில் ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கும் ஒரு சாலை விபத்தில் ஒரு விலைமதிப்பற்ற மனித உயிர் இழக்கப்படுவதாகவும், அது இப்போது கட்டுப்படுத்த முடியாத சவாலாக மாறிவிட்டது என்றும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

வீதிப் பாதுகாப்பு மற்றும் விபத்துத் தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இலங்கை மருத்துவ சங்கம் (SLMA) இன்று (29) கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த நடைபயணத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.

சாலை விபத்துகளைத் தடுப்பதற்கான முறையான மற்றும் நிலையான வேலைத்திட்டம் இல்லாததால், சாலை விபத்துகளால் விலைமதிப்பற்ற உயிர்கள் அகால மரணம் அடைவது மிகவும் வருந்தத்தக்கது என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் கல்வி, சுகாதாரம் மற்றும் சாலை அமைப்பு மிகவும் முன்னேறிய நிலையை எட்டியுள்ள இந்த நேரத்தில், சாலை விபத்துகள் மற்றும் சாலை விபத்துகளைத் தடுப்பது குறித்து எந்த அறிவியல் விசாரணையும் நடத்தப்படவில்லை. மேலும் நாட்டில் இது தொடர்பான ஆராய்ச்சித் திட்டங்களோ அல்லது ஆய்வுகளோ நடத்தப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது என்றும் அமைச்சர் கூறினார்.

“சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு” என்ற கருப்பொருளின் கீழ் நடத்தப்பட்ட இந்த நடைபயணம். இன்று (29) காலை கொழும்பு காலி முகத்திடலில் இருந்து தொடங்கி, லிபர்ட்டி சுற்றுவட்டம் வழியாக விஹாரமஹாதேவி பூங்காவை அடைந்த பின்னர், பொதுமக்கள் விழிப்புணர்வு விழாவுடன் நிறைவடைந்தது.

இந்த பேரணியை சுகாதார மற்றும் ஊடக அமைச்சகம், இலங்கை மருத்துவ சங்கம், சாலை போக்குவரத்து விபத்து தடுப்பு தொடர்பான SLMA நிபுணர் குழு பாதுகாப்புப் படைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சகம் உட்பட பல நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

கடந்த ஆண்டு சாலை விபத்துகளால் கிட்டத்தட்ட 2,200 இறப்புகள் ஏற்பட்டுள்ளது. விபத்துகளில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை, வாகன விபத்துகளின் செலவு, சுகாதார சேவையில் ஏற்படும் சிரமம் மற்றும் பிரச்சினைகள் போன்ற இந்த அனைத்து காரணிகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும்போது, நாட்டின் செலவினங்களில் சுமார் 3.7 சதவீதம் இதற்காக செலவிடப்படுகிறது.

இது சர்வதேச நாணய நிதியத்திலிருந்து பெறப்பட்ட தொகையை விட மூன்று மடங்கு அதிகம் என்று கூறப்பட்டது.

இந்த பேரணிக்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர், சிறப்பு மருத்துவர் அனில் ஜாசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், டாக்டர் அசேல குணவர்தன. இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் சிறப்பு மருத்துவர் சுரந்த பெரேரா, செயலாளர் ஆசிரி ஹேவமவகே. இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த ரொட்ரிக் உலக சுகாதார அமைப்பின் நாட்டு பிரதிநிதி டாக்டர் அழகா சிங் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் செயலாளர், மூத்த பேராசிரியர் கபில் சி. ஆகியோர் தலைமை தாங்கினர்

கே. பெரேரா, மூத்த கிரிக்கெட் வீரர்கள் சனத் ஜெயசூரிய, அரவிந்த டி சில்வா, மோட்டார் பந்தய சாம்பியன் டிலந்த மலகமுவ பொது பிரதிநிதிகள், சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சகம் உள்ளிட்ட இராஜாங்க அமைச்சகங்கள் முப்படைகள் மற்றும் காவல்துறை, அரசு சாரா நிறுவனங்கள், சமூக அடிப்படையிவான அமைப்புகள், தனியார் துறை மற்றும் வணிக சமூகம், கலைஞர்கள் மற்றும் பல தரப்பினர் கலந்து கொண்டனர்.

ஆனையிறவில் உப்புத் தொழிற்சாலை!

0

தேசிய உப்புக் கம்பனியுடன் இணைந்த ஆனையிறவு உப்புத் தொழிற்சாலை இன்று மக்கள் பாவனைக்கு.

தேசிய உப்புக் கம்பெனியின் கீழ் இயங்கும் ஆனையிறவு உப்பளத்தின்  தேசிய உப்புத் தொழிற்சாலையை தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி இன்று (29) முதல் மக்கள் பாவனைக்கு திறந்துவைத்தார்.

“ரஜ லுணு” எனும் பெயரில் சமையல் உப்பு வர்த்தக பேருடன் அறிமுகப்படுத்தப்படுவதுடன் அந்த தொழிற்சாலை ஊடாக மிகவும் சாதாரண விலையில் சமையல் உப்பு சந்தைக்கு வழங்கப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக தொழிற்சாலையின் தலைவர் கயான் வெள்ளால தெரிவித்தார்.

தொழிற்சாலை ஊடாக இப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படுவதற்கும் எதிர்பார்ப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

குறித்த நிகழ்வில்  கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

சுகாதார அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

0

நாட்டில் ஆண்டுதோறும் ஏற்படும் மொத்த மரணங்களில் 83% தொற்றா நோய்களால் ஏற்படுவதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

சுகாதார தரவுகளுக்கு அமைய, 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 35 சதவீதமானோர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அவர்களில் உயர் இரத்த அழுத்தம் இருப்பது தெரியாமல் இருப்பதால், ஆண்டுதோறும் சுமார் 60,000 பேர் பக்கவாதத்திற்கு ஆளாகின்றனர். இதில் சுமார் 4,000 பேர் ஆண்டுதோறும் உயிரிழப்பதாகவோ அல்லது ஊனமுற்ற நிலைக்கு ஆளாவதாகவோ சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அதேபோல், நாட்டின் சிரேஷ்ட பிரஜைகள் மக்கள்தொகையில் 20% பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 41% பேர் சிகிச்சை பெறுவதில்லை என அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டின் முதன்மை சுகாதார சேவை முறைமையின் தரம் மற்றும் அணுகலை மேம்படுத்துவதற்காக உலக வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படவுள்ள “முதன்மை சுகாதார சேவை முறைமை அபிவிருத்தி திட்டத்தை” அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வில் பங்கேற்றபோதே சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ இந்த தகவல்களை வெளிப்படுத்தியிருந்தார்.

தலைமன்னாரில் சிக்கிய 46 கஞ்சா பொதிகள்!

0

தலைமன்னார் மணல் திட்டு 1 மற்றும் 2 க்கு இடைப்பட்ட கடற் பகுதியில் கடற்படையினர் நேற்று (28) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அந்தக் கடற்பகுதியில் மிதந்து கொண்டிருந்த பெருமளவான கேரள கஞ்சா பொதிகளை கடற்படையினர் மீட்டுள்ளனர். 

சுமார் 124 கிலோ 392 கிராம் ஈரமான எடையுடன் மீட்கப்பட்டுள்ளது. 

தலைமன்னார், மணல் திட்டு 1 மற்றும் 2 இற்கு இடையிலான கடல் பகுதியில், வட மத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்மென்னாவுடன் இணைக்கப்பட்ட சிறப்பு கப்பல் ரோந்து குழுவை நிலைநிறுத்தி விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டது. 

இதன் போது குறித்த கடல் பகுதியில் மிதந்து கொண்டிருந்த 46 சந்தேகத்திற்கிடமான பொதிகளை அவதானித்து சோதனை செய்தபோது, அந்தப் பொதிகளில் பொதிச் செய்யப்பட்டிருந்த சுமார் 124 கிலோ 392 கிராம் கேரள கஞ்சாவை (ஈரமான எடையுடைய) கடற்படையினர் கைப்பற்றினர். 

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகையானது, கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் தேடுதல் நடவடிக்கையினால் கரைக்கு கொண்டு வர முடியாததால் கடலில் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படகின்றதுடன், இதன் மதிப்பு 49 மில்லியன் ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகையானது மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

நிலநடுக்கத்தினால் ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு!

0

மியான்மரில் நேற்று ஏற்பட்ட 7.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரையில் 1,002 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 

மேலும், குறித்த நிலநடுக்கத்தில் சிக்கி 2,300 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 
 
மியான்மர் மற்றும் தாய்லாந்தில் நேற்று அடுத்தடுத்து கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் மாண்டலே அருகே முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியிருந்தது. சிறிது நேரத்தில் 6.4 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அண்டை நாடுகளான வியட்நாம், மலேசியா, பங்களாதேஷ் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் இதன் தாக்கம் உணரப்பட்டது. 

நிலநடுக்கம் காரணமாக, மியான்மர் மற்றும் தாய்லாந்தின் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகி உள்ளன. 

தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் மிகப்பெரிய கட்டிடம் சரிந்து விழுந்துள்ளது. புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருந்த அந்த கட்டிடம் இடிந்து விழுந்ததால், இடிபாடுகளில் ஏராளமான ஊழியர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மியான்மரின் மாண்டலே நகரில் உள்ள ஒரு மசூதி இடிந்து விழுந்ததில் சுமார் 20 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. 

கட்டிடங்கள் இடிந்து விழுந்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுவீச்சில் மீட்பு பணிகள் நடைபெறுகின்றன.

மரத்திலிருந்த விழுந்தவனை மாடு குத்தியதா போச்சு!

ஏ 35 பிரதான வீதியா புளியம்பொக்கனை பகுதியில் பயணித்த பெண்ணிடம் தங்கச் சங்கிலி அபகரிப்பு

கிளிநொச்சி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏ35 பிரதான வீதி ஊடாக பரந்தன் பெரியகுளம் கிராம அலுவலர் பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணிடம், அதே பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தங்கச் சங்கிலியை அறுத்த சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.

குறித்த பெண் அணிந்திருந்த மூன்று லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலி அபகரித்து தப்பிச் சென்றுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பாக தருமபுர போலீசாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய விரைவாக செயல்பட்ட தர்மபுர போலீசார் சந்தேக நபரை துரத்திச் சென்று இராமநாதபுரம் பகுதியில் வைத்து இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து குறித்த பெண்ணிடம் அபகரிக்கப்பட்ட தங்கச் சங்கிலியை மீட்டதுடன், அவர்களிடமிருந்து 2.25 மில்லிகிராம் ஹெராயின், 20 கிராம் கேரளா கஞ்சா மற்றும் திருட்டில் ஈடுபடுவதற்காக பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தடையப் பொருட்கள் மற்றும் சந்தேக நபரை இன்றைய தினம் 28.03.2025 கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது மேலதிக விசாரணைகளுக்காக இரண்டு சந்தேக நபர்களையும் மீண்டும் தர்மபுரம் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்

மியான்மர் நிலநடுக்கத்தில் 150 பேர் பலி!

0

மியான்மரில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் தாய்லாந்தின் பாங்காங்கிலும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுக்குமாடி கட்டடம் தரைமட்டமானதில் 40 பேர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மியான்மரில் 150 பேர் உயிரிழந்து உள்ளனர். தாய்லாந்தில் கட்டடங்களுக்கு மத்தியில் ஏராளமானோர் சிக்கி உள்ளனர்.

மியான்மரின் வடகிழக்கு நகரமான சகாய்ங்கில் இருந்து 16 கி.மீ., தொலைவில் 10. கி.மீ., ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவானது. தொடர்ந்து, மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 பதிவாகியது. ஒரே சமயத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் அண்டை நாடுகளிலும் உணரப்பட்டது. இந்தியாவின் உத்தரகண்ட்டிலும், வங்கதேசம், லாவோஸ், தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளிலும் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, கட்டடங்கள் குலுங்கியதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. குறிப்பாக, தாய்லாந்தின் பாங்காங்கில் அடுக்குமாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து தரைமட்டமானது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த கட்டடத்தின் கீழே இருந்த மக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.

இந்த கட்டிட இடுபாடுகளில் 40 ஊழியர்கள் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது. அதேபோல, பல இடங்களிலும் கட்டடங்கள் சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால், அங்கு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தில் 4 பலியானதாக தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

கண்டி குரங்குகளுக்கு நேர்ந்த சோகம்!

0

கண்டி மாவட்டத்தில் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் குரங்குகளைப் பிடித்து ஒரு தீவு ஒன்றில் விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

மேற்படி மாவட்டத்தில் பயிர்களுக்கு குரங்குகளால் ஏற்பட்ட சேதம் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட விசேட குழு நேற்று (27) கூடியபோது இந்த முடிவு எட்டப்பட்டது. 

கண்டி மாவட்டத்தில் வாழும் யானைகளை ரந்தெனிகல நீர்த்தேக்கத்தின் நடுவில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட தீவுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ஹேவாஹெட்ட தேர்தல் தொகுதியில் 15 கிராமங்களில் செயல்படுத்தப்படும் இந்த முன்னோடித் திட்டத்திற்கு ஏற்கனவே 10 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தின் தலைவரான சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தலைமையிலான குறித்த குழுவுடன், ஏற்றுமதி விவசாய திணைக்களம், வன விலங்குகள் மற்றும் வன பாதுகாப்பு திணைக்களம், கடற்படை, விவசாயத் திணைக்களம் உள்ளிட்டவற்றைக் கொண்ட தொடர்புடைய குழு இந்த முடிவுகளை எடுத்துள்ளது.

Click here to join our whatsApp group