மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கலாசார நிகழ்ச்சித்திட்டத்தின் “சித் ரூ 2025 (நடனப்போட்டி) வடமாகாண மட்ட போட்டி கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
ஐந்து மாவட்டங்களின் மாற்றுத்திறனாளிகள் குழுவினர் குறித்த போட்டியில் பங்குபற்றியிருந்தன.
குறித்த போட்டி நிகழ்வினை கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்கதிபர் நளாயினி இன்பராஜ் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
வடமாகாண போட்டியில் கிளிநொச்சி மாவட்டம் முதலாம் இடத்தினையும், இரண்டாம் இடத்தினை யாழ்ப்பாண மாவட்டமும், மூன்றாம் இடத்தினை வவுனியா மாவட்டமும் பெற்றுக்கொண்டது.
முதலாம் இடத்தினைப்பெற்ற கிளிநொச்சி மாவட்டம் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை காவல்துறை மற்றும் சிறப்பு போதை ஒழிப்பு பிரிவால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் தேடுதல் நடவடிக்கையில் கடந்த 2025 ஜூன் மாதம் 16 ஆம் தேதி அதிக அளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
04 கிலோ கிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப் பொருளுடன் பொலிசாரின் சமிக்ஞையை மீறி சென்ற வாகனத்தைப் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
பதில் பொலிஸ்மா அதிபரின் கட்டளைக்கிணங்க நாடுபூராகவும் நடைமுறைக்கு வரும் வகையில் குற்றங்கள் மற்றும் போதைப் பொருள்களை கட்டுப்படுத்துவதற்காக, இலங்கை பொலிசாரால் மேற்கொள்ளப்படும் சுற்றிளைப்புகளின் போது 16.06.2025 ஆந் திகதி இரவு வேளையில் கடலோர பொலிஸ் பிரதேசத்தில் பொலிசார் இரவு நேர மோட்டார் சைக்கிள் ரோந்து கடமைகளில் ஈடுபட்டிருந்த வேளை ஹெட்டியாவத்தை சந்திக்கு அருகாமையில் அதிக வேகத்தில் செலுத்திய காரை நிறுத்துமாறு பொலிசார் சமிக்ஞையிட்டனர்.
அவ்வேளையில், கார் பொலிசாரின் சமிக்ஞையை மீறி பயணித்த போது இரவு நேர ரோந்து கடமையிலிருந்த பொலிசாரால் மோட்டார் சைக்கிளில் அந்த காரை பின்தொடர்ந்து புறக்கோட்டை, ரெக்லமேஷன் வீதி, கடலோர வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரை பரிசோதனைக்குற்படுத்தினர்.
அவ்வேளையில் காரைச் செலுத்திய சாரதி தப்பிச் சென்றுள்ளதுடன், காரில் 04 ப்ளாஸ்டிக் பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 04 கிலோகிராம் 112 கிராம் எடைக் கொண்ட ஐஸ் போதைப் பொருள் மற்றும் காரையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த தினத்தில் நாடுபூராகவும் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின்போது, தெஹிவளை பகுதியில் 105500 மில்லி கிராம் ஐஸ் மற்றும் 5430 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், பேலியகொட பகுதியில் 15.75 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், காங்கேசன்துறை பகுதியில் 12.4 கிராம் ஐஸ் போதைப்பொருளும், மெதிரிகிரிய பகுதியில் 315 கிராம் ஹெரோயின் மற்றும் 2.3 கிராம் ஐஸ் போதைப்பொருளும், அம்பாறை பகுதியில் 11.52 கிராம் ஹெரோயின் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கொலன்னாவ நகரசபைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு அதிக வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட நாரஹேன்பிகே சுசில் குமார கொஸ்தாவின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
கொலன்னாவ நகர சபையின் தலைவர் மற்றும் பிரதித் தலைவரை நியமிப்பதில் ஐக்கிய மக்கள் சக்தியின் நிர்வாகக் குழு மற்றும் கட்சி செயற்குழுவின் முடிவுக்கு இணங்கச் செயல்படாததால், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருளைப் பெறுவதற்காக நுகர்வோர் தன்னிச்சையாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கூடி, தேவையற்ற நெரிசல் மற்றும் வரிசைகளை உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டுகிறது.
அதன்படி, மேற்கண்ட முடிவு எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு மாறாகச் செயல்பட்டால், கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
போதுமான எரிபொருள் இருப்பு இருந்தபோதிலும், நுகர்வோர் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தி இவ்வாறு செயல்படுவதால், பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை திரிபோஷா லிமிடெட்டின் புதிய தலைவர் திரு. அமல் நிரோஷன அத்தநாயக்க நேற்று (16) காலை கந்தானையில் உள்ள இலங்கை திரிபோஷா லிமிடெட் வளாகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
உள்ளூர் மற்றும் சர்வதேச வணிகத் துறைகளில் விரிவான அனுபவமும் நிபுணத்துவமும் கொண்ட திரு. அமல் நிரோஷன அத்தநாயக்கவை இலங்கை திரிபோஷா லிமிடெட்டின் புதிய தலைவராக நியமிக்க சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ சமீபத்தில் நடவடிக்கை எடுத்தார்.
25 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளூர் மற்றும் சர்வதேச வணிகத் துறைகளில் விரிவான அனுபவத்தைக் கொண்ட திரு. அமல் நிரோஷன அத்தநாயக்க, கண்டி தர்மராஜா கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.
பல உள்ளூர் மற்றும் சர்வதேச பிராண்டுகளின் வடிவமைப்பாளரான திரு. அத்தநாயக்க, தெற்காசியாவிலும் இலங்கையிலும் பல சர்வதேச கண்காட்சிகளை இயக்கி நிர்வகித்துள்ளார். நவீன தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கலைப் பயன்படுத்துவதில் அவருக்கு விரிவான அனுபவமும் உள்ளது.
இந்த நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத் துணை அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி, திரிபோஷா லிமிடெட்டின் செயல்பாட்டு மேலாளர் சம்பிகா சல்காடு, தர உத்தரவாத மேலாளர் அஜித் திசாநாயக்க, மனிதவளம் மற்றும் சட்ட மேலாளர் தனுஜா அல்விஸ், தரக் கட்டுப்பாட்டாளர் நெலம் மெண்டிஸ், உற்பத்தி மேலாளர் தசநாயக்க மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
குறிப்பாக யாழ் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று எரிபொருளைப் பெறுகின்றனர்.
இதேவேளை, எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை. மக்கள் தாமாகவே எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் கூடி எரிபொருளைப் பெற முயற்சிக்கின்றனர் என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடக்கு மாகாண பிராந்திய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறுகையில், “வட மாகாணத்தில் எரிபொருள் இருப்பு உள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வழமையான முறையில் செயல்பட்டு எரிபொருள் விநியோகத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, போதிய அளவு எரிபொருள் உள்ளதாகவும், செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்க வேண்டாம் என்று அரசாங்க அதிபர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை, மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர்க்களப் போக்கு எரிபொருள் விநியோகத்தில் தடையை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.
இதனால், நாடு முழுவதும் எரிபொருளுக்காக மக்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருப்பதை பரவலாகக் காண முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ் மாவட்டத்தின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருளைப் பெறுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிகிறது.
குறிப்பாக யாழ் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று எரிபொருளைப் பெறுகின்றனர்.
இதேவேளை, எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை. மக்கள் தாமாகவே எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் கூடி எரிபொருளைப் பெற முயற்சிக்கின்றனர் என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடக்கு மாகாண பிராந்திய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறுகையில், “வட மாகாணத்தில் எரிபொருள் இருப்பு உள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வழமையான முறையில் செயல்பட்டு எரிபொருள் விநியோகத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, போதிய அளவு எரிபொருள் உள்ளதாகவும், செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்க வேண்டாம் என்று அரசாங்க அதிபர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை, மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர்க்களப் போக்கு எரிபொருள் விநியோகத்தில் தடையை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.
இதனால், நாடு முழுவதும் எரிபொருளுக்காக மக்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருப்பதை பரவலாகக் காண முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட 2,433 வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் தங்கள் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை என இலங்கை தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக குறித்த வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஆணையத்தின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், “2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க செலவின ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ், வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டிய 78,725 வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களில் 76,292 பேர் தங்கள் அறிக்கைகளை உரிய தேர்தல் அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளனர்.
இருப்பினும், 2,433 பேர் உரிய காலக்கெடுவிற்குள் இவற்றை சமர்ப்பிக்கவில்லை. இதனையடுத்து, அவர்களின் விபரங்களை அந்தந்த மாவட்ட பொலிஸ் நிலையங்களில் சமர்ப்பிக்குமாறு தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பின்னர், சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று, அவர்கள் மீது வழக்குத் தொடர தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.
புத்தளம் மாநகர சபையின் ஆட்சி அதிகாரத்தை ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.
இதன் பிரகாரம் புத்தளம் மாநகர சபையின் மேயராக தேசிய மக்கள் சக்தியின் முதலாம் வட்டார வேட்பாளரான முஹம்மது பாரூக் ரின்சாத் அஹ்மத் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் மாநகர சபையின் முதலாவது பிரதி மேயராக ஐக்கிய மக்கள் சக்தியின் ஏழாம் வட்டார வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற நுஸ்கி நிசார் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் வாழ் பொதுமக்கள் அனைவராலும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட புத்தளம் மாநகர சபைக்கான முதலாவது கன்னி அமர்வு மாநகர சபையின் பொது நூலகத்தில் அமையப்பெற்றுள்ள மாநகர சபையின் சபா மண்டபத்தில், இன்று (16) இடம்பெற்றது.
சபைக்கு தெரிவாகியுள்ள தேசிய மக்கள் சக்தியின் 07 உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் 04 உறுப்பினர்கள், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 03 உறுப்பினர்கள், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கட்சியின் 03 உறுப்பினர்கள், ஐ.தே.கட்சியின் 01 உறுப்பினர் மற்றும் பந்து சின்னம் சுயேட்சை குழுவின் 01 உறுப்பினர் என மொத்தமாக 19 உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகி இருந்தனர்.
பிரதி மேயருக்கு விஜித பிரசன்ன மற்றும் நுஸ்கி நிசார் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன. இதனையடுத்து நடைபெற்ற பகிரங்க வாக்களிப்பில் நுஸ்கி நிசார் 10 வாக்குகளையும், விஜித பிரசன்ன 6 வாக்குகளையும் பெற்றுக் கொண்டதுடன் நுஸ்கி நிசார் வெற்றி பெற்று பிரதி மேயராக தெரிவானார்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கட்சியின் 03 உறுப்பினர்களும் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட வட்டக்கச்சி பத்துவீட்டுத்திட்ட குடியிருப்புக்கு அண்மையில் நீர்ப்பாசன வாய்க்காலினுள் இனந்தெரியாத நிலையில் ஆணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இறந்த நபர் கல் மடோ நகர் சம்பு குளம் பகுதியை பதிவிடமாகவும், ஆறுமுகம் வீதி வட்டக் கட்சியை தற்காலிக வதிவிடமாக கொண்ட தனபால சிங்கம் குமாரதாஸ் (54) என்ற குடும்பஸ்தரின் சடலமே இவ்வாறு இனம் காணப்பட்டுள்ளது.
இறந்தவரின் சடலம் கிளிநொச்சி பதில் நீதவான் முன்னிலையில் இருந்து எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக இராமநாதபுர போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.