Wednesday, November 5, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 200

சேனல் Eye லைக்காவுக்கு விற்கப்பட்டதா?

0

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சேனல் ஐ (SLRC) லைக்கா குழுமத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

ரூபவாஹினி ‘சேனல் ஐ’ அலைவரிசையை லைக்கா நிறுவனத்திற்கு விற்பதற்கென ஊடகத்துறை அமைச்சர் பந்துலவினால் முன்வைக்கப்பட்ட யோசனை அமைச்சரவையில் இன்று நிராகரிக்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜூலை இறுதியில் இருவரும் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு மாதம் ஒன்றுக்கு 25 மில்லியன் அடிப்படையில் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாக செய்திகள் பரவின.

ஏற்கனவே ஜூலை மாத இறுதியில் ‘லைக்கா’ நிறுவனத்திற்கு ‘சேனல் ஐ’ நிறுவனத்தை வழங்க இரு தரப்பினரும் இணங்கியதாகவும், ஆனால் ரூபவாஹினி பணிப்பாளர் சபை அல்லது வெகுஜன ஊடக அமைச்சின் முன் அனுமதி இதற்காக பெறப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
எந்தவித வெளிப்படைத்தன்மையும் இன்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையை பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர்கள் பலர் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கடுமையாக விமர்சித்துள்ளதாக அறியமுடிந்தது.

அமைச்சின் ஒப்புதலின்படி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்தப் பின்னணியிலேயே ‘சேனல் ஐ’ அலைவரிசையை லைக்கா நிறுவனத்திற்கு வழங்கும் யோசனையை அமைச்சரவை நிராகரித்தது.

ஹவாய் தீவுகளில் காட்டு தீ – பலி எண்ணிக்கை 93

0

அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் காட்டு தீ பரவல் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 93 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், தீப்பரவலினால் ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர மவுயி (Maui) தீவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கடற்கரை நகரான லஹய்னாவின் 80 சதவீதமான பகுதிகள் தீயினால் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் ஆரம்பமான காட்டு தீயினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர தீயணைப்பு படையினர் முயன்று வருகின்றனர்.

குறித்த பிரதேசத்தில் கடுமையான புயல் வீசுவதனால், காட்டு தீ தொடர்ந்தும் புதிய பிரதேசங்களுக்கும் பரவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

GOLDEN MUG

சொக்லட்டுக்குள் மனித விரல்

0

மஹியங்கனை வைத்தியசாலையில் சேவையாற்றும் ஊழியர் ஒருவரால், வைத்தியசாலை சிற்றுண்டிச் சாலையில் வாங்கப்பட்ட சொக்லட்டுக்குள் (Chocolate) மனித விரலொன்று இருந்துள்ளது.

குறித்த ஊழியர் சொக்லட்டை வாங்கி, உண்ணும் போது மிகவும் கடினமான முறையில் வாயில் கடிபட்டதை தொடர்ந்து, அதை கழுவி பார்த்த போது நகத்துடன் கூடிய பெருவிரல் பகுதி காணப்பட்டள்ளது.

இதனையடுத்து, இது தொடர்பில் வைத்தியசாலை உயர் அதிகாரிகளிடம் முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை மஹியங்கனை பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

சொக்லட்டில் மீட்கப்பட்ட மனித விரல் - வாங்கியவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி - ஐபிசி தமிழ்

https://www.enews1st.lk/product/customized-magic-mug/

நிலவும் வெப்பநிலை சிறுவர்களுக்கு பேராபத்து

0
நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை காரணமாக சிறார்களிடையே நோய்கள் பரவக்கூடிய அதிக வாய்ப்புகள் உள்ளதாக சுகாதார துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக தாய்மார்கள் சிறார்கள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்த வேண்டும் என ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா கோரிக்கை விடுத்துள்ளார்.

தசைவலி, வாந்திபேதி, தூக்கமின்மை, அதிக தூக்க கலக்கம், மற்றும் பசியின்மை போன்றன ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், நீர் அருந்தாமல் சிறுவர்கள் பாடசாலை உள்ளிட்ட வெளியிடங்களுக்கு செல்லும் போது, அவர்கள் அசௌகரியத்துக்கு உள்ளாக நேரிடும்.

ஐ.தே. கட்சியின் யாப்பில் அதிரடி மாற்றம்

0

ஐக்கிய தேசிய கட்சியின் 77ஆவது கட்சி சம்மேளனத்தை நடத்துவது தொடர்பாகவும் கட்சியின் யாப்பை மாற்றுவது தொடர்பாகவும் கட்சியின் செயற்குழுவின்போது தீர்மானிக்கப்பட்டதாக கட்சியின் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு புதன்கிழமை (02) மாலை கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில்  கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் கூடியது. இதன்போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசிய கட்சியின் 77ஆவது கட்சி சம்மேளனத்தை நடத்துவது தொடர்பாகவும் கட்சியின் யாப்பை மாற்றுவது தொடர்பாகவும் கட்சியின் செயற்குழுவின்போது தீர்மானிக்கப்பட்டது.

அதன் பிரகாரம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கட்சி சம்மேளனத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் , போராட்டத்தின்போது மக்கள் தெரிவித்ததன் பிரகாரம் முறைமாற்றத்துக்கு ஏற்புடையதாக கட்சியின் யாப்பையும் அதற்கு இணையாக மாற்றத்துக்கு உட்படுத்த இருக்கிறோம்.

அதேபோன்று, கட்சியின் செயற்குழுவால் தடை செய்யப்பட்டிருந்த ஹிரன் பெர்ணான்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகிய இருவருக்கும் செயற்குழுவின் அங்கத்துவத்தை மீண்டும் வழங்குவதற்கு செயற்குழு இணக்கம் தெரிவித்தது.

செயற்குழுக்கு மேலதிகமாக  நிறைவேற்று குழுவை பலப்படுத்தவும் தீர்மானங்களை எடுக்கும் இடமாக நிறைவேற்றுக்குழுவை ஏற்படுத்தவும் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்காக வேறு குழுவொன்றை அமைப்பதற்கும் இணையவழி முறைமைக்கு ஒத்திசைவாக கட்சியை ஏற்பாடு செய்வது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

75 அரசியல் தொகுதி மாநாடுகளை நடத்துவதற்கே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எமக்கு ஆலோசனை வழங்கினார். என்றாலும் நாங்கள் தற்போது 132 அரசியல் தொகுதி மாநாடுகளை நடத்தி இருப்பதையிட்டு, தொகுதி மாநாடுகளை ஏற்பாடுசெய்த அனைவருக்கும் ஜனாதிபதி தனது நன்றிகளை இதன்போது தெரிவித்தார் என்றார்.

அதிகரித்த நீர் கட்டணம் – மக்கள் திண்டாட்டம்

0

நீர்க்கட்டணம் திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தல் 2 ஆம் திகதி புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

1974 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் சட்டத்தின் 84 ஆவது பிரிவின்படி இந்த வர்த்தமானி அறிவிப்ப வெளியாகியுள்ளது.

வர்த்தமானியில் வெளியான கட்டணங்கள் ஆகஸ்ட் 01, 2023 முதல் அனைத்து நுகர்வோரிடமிருந்தும் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வைத்தியசாலைகள், பாடசாலைகள், மதஸ்தலங்கள், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் சமுர்த்தி பயனாளிகள், அஸ்வெசும பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நீர்க்கட்டண அதிகரிப்பு தாக்கம் செலுத்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது

அண்மையில் மின்சார கட்டணம் 66 சதவீதத்தால் அதிகரித்தமையே நீர்கட்டணம் அதிகரிப்பிற்கு காரணம் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் தெரிவித்தார்.

இதற்கமைய, 0 முதல் 5 வரையான அலகொன்று 60 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் மாதாந்த கட்டணமாக 300 ரூபா அறிவிடப்படவுள்ளது.

அத்துடன், 06 முதல் 10 வரையான அலகொன்று 80 ரூபாவினால் அதிகரிக்கட்டுள்ளதுடன் மாதாந்த கட்டணமாக 300 ரூபா அறிவிடப்படவுள்ளது.

நீர்க்கட்டணம் தொடர்பான முழுமையான விபரங்களுக்கு 

https://cdn.virakesari.lk/uploads/medium/file/226919/2343-28_E.pdf

2024 இல் மூன்று தேர்தல்கள் இடம்பெறும்

0

2024 ஆம் ஆண்டு தேர்தல்கள் ஆண்டாக இருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் அடுத்த வருடம் நடத்தப்படும் என விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் பல தரப்பினர் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

“சமகி ஜன பலவேகய (SJB) மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உறுப்பினர்கள் ஏற்கனவே யூ.என்.பி.யுடன் உடன்பாடுகளை எட்டியுள்ளனர். அவர்கள் எங்களுடன் இணைந்து அடுத்த தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளனர்” என்று விஜேவர்தன தெரிவித்தார்.

பணவீக்கம் குறைந்துள்ள போதிலும், பொருட்களின் விலை உயர்வாகவே இருப்பது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

பொருட்களின் விலையை கட்டுப்படுத்த சில வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்துவது அவசியமாகும் என அவர் மேலும் தெரிவித்தார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் தொம்பே தொகுதிக் குழுக் கூட்டத்தில் நேற்று (30) பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார். 

பாக்கிஸ்தான் குண்டுவெடிப்பு- பாலி எண்ணிக்கை அதிகரிப்பு

0
வடமேற்கு பாகிஸ்தானில் பாஜூர் – கர் பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட அரசியல் பேரணியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 19 பேர், படுகாயங்களுடன் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், 100க்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் சிலர் சிகிச்சைகளுக்காக பாகிஸ்தானின், பெஷாவரில் உள்ள வைத்தியசாலைக்கு விமானம் ஊடாக அழைத்துச் செல்லப்பட்டதாக அந்தநாட்டு உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த தாக்குதலுக்கு எந்தவொரு தரப்பிரும் இதுவரையில் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலக வானிலை அமைப்பின் திடுக்கிடும் தகவல்

0

உலக வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகளின் நிறுவனமான உலக வானிலை அமைப்பு தகவலொன்றினை வெளியிட்டுள்ளது.

அவ்வகையில், 1.20 லட்சம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பூமி தற்போது வெப்பநிலையில் இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மனித செயல்பாடுகள் காரணமாக புவி வெப்பமயமாதல் அதிகரிப்பது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.

இருப்பினும், இதில் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்படவில்லை.

அண்டார்டிகா பகுதியில் வெப்பக் காற்று

இவ்வாய்விற்காக, பணிக்கட்டிகள், மரங்களின் வயது, பல ஆயிரம் ஆண்டுகளாக புவியின் வெப்பநிலை உள்ளிட்டவை ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக சீனாவில் ஒருமுறை 52.2 டிகிரி செல்சியஸ் அதாவது 126 ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும், கனடாவில் காட்டுத் தீ முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகம் காணப்படுகிறது.

இந்த நிலை தொடர்ந்து நீடிக்கும்போது பனிப்பாறைகள் மேலும் உருகி கடல்நீர் மட்டம் உயர்ந்து தாழ்வான பகுதிகள் மூழ்கக் கூடும் என்று அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இதேவேளை, கடல் நீரின் வெப்பநிலையும் அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகின் மிகவும் குளிர் நிலவக்கூடிய அண்டார்டிகா பகுதியிலும் வெப்பக் காற்றை உணர முடிவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிரான்சில் விருதை வென்ற யாழ்ப்பாண இளைஞர்

0
பிரான்சில் இடம்பெற்ற சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான ‘பாரிஸின் சிறந்த பாண்’ என்ற போட்டியில் இந்த ஆண்டுக்கான விருதை வென்ற இலங்கை – யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் இன்றைய தினம் (28) இலங்கை வரவுள்ளார்.

வருடாந்தம் பிரான்ஸில் நடத்தப்படும் ‘சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான போட்டியில், இந்த ஆண்டுக்கான விருதை யாழ்ப்பாணம் தெல்லிப்பளையைச் சேர்ந்த 37 வயதான தர்ஷன் செல்வராஜா வென்றிருந்தார்.

30 வது முறையாக இடம்பெறும் இந்தப் போட்டியில், இந்தமுறை 126 பேரில் வெற்றியாளராக அவர் தெரிவு செய்யப்பட்டு 4 ஆயிரம் யூரோவை பணபரிசாக பெற்றிருந்தார்

இதன்காரணமாக பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்னின் எலிசே மாளிகையில், அடுத்துவரும் ஓர் ஆண்டுக்கு பாண் தயாரிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது

இந்தநிலையில், இன்று நாட்டுக்கு வருகைத் தரும் அவர், அரச மட்டத்திலான அதிகாரிகள் மற்றும் பொது அமைப்புகளுடன் சந்திப்புகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம், பாணின் உற்பத்தி மற்றும் அதன் தனித்துவம் தொடர்பில் இளைஞர்கள் மத்தியில் தெளிவுபடுத்தி அது சார்ந்த கல்வி நிலையங்களை உருவாக்குவதே தமது இலக்காகும் என தர்ஷன் செல்வராஜா குறிப்பிட்டுள்ளார்.