கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தில் செயலக சேவை நடைமுறை தொடர்பான செயலியை அங்குரார்பணம் செய்யும் நிகழ்வு இன்று (13-06-2025) நடைபெற்றுள்ளது.
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தின் மக்களுக்கான சேவை இலகுவாக வழங்கும் வகையில் நடைமுறைப் படுத்தும் செயலியை அங்குராணம் செய்யும் நிகழ்வு இன்று பகல் 10 மணிக்கு கண்டாவளை பிரதேச செயலாளர் த. பிருந்தாகரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெ. ரஜீவன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் முரளீதரன், மற்றும் துறை சார்ந்த திணைக்களின் தலைவர்கள், பிரதேச மட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இலங்கையின் முதலாவது பொதுமக்கள் சேவையை வழங்கும் இந்த செயலி கண்டாவளை பிரதேச செயலகத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கண்டவளை பிரதேச செயலகத்தினால் இணைய வழி பங்கீட்டு அட்டையும் வழங்கி வழங்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் கடந்த 15 வருட காலமாக தொடர்ச்சியாக மணல் அகழ்வு இடம் பெற்று வருவதாகவும், பல ஆட்சிகள் மாறிவந்த போதிலும் சட்டவிரோத மணல் அகல்வுக்கு நிரந்தர தீர்வு காண முடியாத நிலையில் காணப்படுவதாகவும் அங்குள்ள மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு மத்தியில் கடல்தொழில் அமைச்சரும் கிளிநொச்சி, யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் முரளிதரன், கண்டாவாளை பிரதேச செயலாளர் பிருந்தகன் மற்றும் நீர் பாசன தினைக்களத்தின் குழுவினர்கள் குறித்த பகுதிக்கு சென்றிருந்தனர்.
கல்லாறு பகுதியில் காணப்பட்ட பறவைகள் சரணாலயம் முற்றாக அளிக்கப்பட்டு உள்ளதுடன், கடல் நீர் மக்கள் குடியிருப்பு பகுதிக்கு உள்வரும் அபாய நிலையில் தோன்றியுள்ளதாகவும் கண்டறியப்பட்டது.
தொடர்ச்சியாக மணல் அகழ்வு இடம் பெற்று வருவதால் அப்பகுதியில் உள்ள வனப்பகுதி முற்று முழுதாக அழிவடைந்து வருவதாகவும், இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் கல்லாறு பகுதியில் மீண்டும் இராணுவ காவலர் அமைத்து இங்கு இடம் பெறுகின்ற சட்ட விரோத மணல் அகல்வினை முற்றாக கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கடத் தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
2020 ஒக்டோபரில் சீனி மீதான ஐம்பது ரூபாய் வரியை 25 சதங்களாக குறைத்தது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் எந்த குற்றவியல் குற்றமும் கண்டறியப்படவில்லை என்று சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான முறைப்பாடு நேற்று (12) கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, குறித்த விசாரணைகளை முடிக்க அனுமதி வழங்கிய நீதவான், இந்த சம்பவத்தில் ஏதேனும் ஊழல் அல்லது இலஞ்சம் வெளிப்பட்டால், வழக்கு கோப்புகளை விசாரணைக்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பலாம் என்று தெரிவித்தார்.
2020 ஒக்டோபர் 13 நள்ளிரவு முதல் சீனி மீதான செஸ் வரியை ரூ.50-ல் இருந்து 25 சதங்களாக குறைக்க அரசாங்கம் எடுத்த முடிவின் விளைவாக அரசுக்கு ஏதேனும் இழப்பு ஏற்பட்டதா என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தக் கோரி முறைப்பாடு அளிக்கப்பட்டது.
அப்போது, சீனி வரியைக் குறைக்கும் முடிவால் அரசுக்கு 1,600 மில்லியன் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டதாகவும், வரி குறைப்பின் பலனை மக்கள் பெறாமல் மிகப்பெரிய சீனி வரி மோசடி நடந்துள்ளதாகவும் பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டியிருந்தனர்.
அதன் பின்னர், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இது தொடர்பில் விசாரணைகளை நடத்தி, அனைத்துப் பகுதிகளையும் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சமர்ப்பித்தது.
அவற்றைப் படித்த பிறகு, இந்த விசாரணையின் மூலம் எந்தவொரு குற்றவியல் குற்றமும் அடையாளம் காணப்படவில்லை என்று சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு தெரிவித்திருந்தார்.
சீனி வரியைக் குறைப்பதன் மூலம் எந்தவொரு தரப்பினரோ அல்லது தனிநபரோ தேவையற்ற இலாபத்தைப் பெற்றுள்ளனரா அல்லது ஊழல் குற்றத்தைச் செய்துள்ளனரா என்பதை விசாரிக்கவும், சீனி வரியைக் குறைப்பதன் மூலம் ஏதேனும் இலஞ்சம் அல்லது பிற பரிவர்த்தனை நடந்துள்ளதா என்பதை மேலும் விசாரித்து கண்டறியவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சட்டமா அதிபர் மேலும் அறிவுறுத்தியுள்ளதாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த மேலதிக நீதவான், சீனி வரி குறைப்பு செயல்முறை தொடர்பான விசாரணை அறிக்கைகளை மேலும் விசாரிக்கவும், தேவைப்பட்டால் வழக்கு கோப்புகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பி குற்றவாளிகளைக் கண்டறியவும் உத்தரவிட்டார்.
அனுராதபுர மாவட்டத்தின் கெபித்திகொல்லேவ பிரதேச சபையில் பெரும்பான்மை ஆதரவை பெற்று ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கிறது.
இன்று (13) நடைபெற்ற தவிசாளர் தேர்வு வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றிப் பெற்று இவ்வாறு ஆட்சியமைக்கிறது.
இதன்போது, பெரும்பான்மை வாக்குகளை பெற்று, ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் வேட்பாளரான ரணசிங்க வனிகசேகரலாகே தர்மதாச கெபித்திகொல்லேவ பிரதேச சபையின் தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், கெபித்திகொல்லேவ பிரதேச சபையில் வெற்றியை பெற்றது தேசிய மக்கள் சக்தியாகும், ஆனால் பெரும்பான்மை உறுப்பினர்களை பெற தவறியது.
அந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 7 உறுப்பினர்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 6 உறுப்பினர்களையும் வென்றன.
மேலும், பொதுஜன பெரமுனவிற்கு 3 உறுப்பினர்களும், பொதுஜன ஐக்கிய முன்னணி மற்றும் சுயாதீன குழு (எண் 1) தலா ஒரு உறுப்பினரையும் பெற்றன.
மன்னார் மாவட்டத்தில் செளத்பார் தொடக்கம் தாழ்வுபாடு உட்பட பல்வேறு கடற்கரையோர பகுதிகளில் நுண்ணிய பிளாஸ்டிக் போன்ற சிறிய அளவிலான உருண்டைகள் இலட்சக்கணக்கில் கரை ஒதுங்கியுள்ளன.
முன்னதாக இலங்கை கடற்பரப்பில் பற்றியெறிந்த எவர் கிறீன் கப்பலில் இருந்து வெளியேறிய அதே போன்ற வடிவமுடைய பொருளே மேற்படி தொடர்ச்சியாக கரையொதுங்கி வருகிறது.
இவ்வாறான பின்னனியின் இன்றைய தினம் (3) கரையோர காவல் திணைக்களம், கடற்படை, இராணுவம் இணைந்து முதற்கட்டமாக கடற்கரை ஓரங்களில் ஒதுங்கியுள்ள குறித்த பிளாஸ்டிக் மாதிரி பொருட்களை அகற்றியுள்ளனர்.
குறிப்பாக கடற்கரையோரங்களில் இலட்சக்கணக்கில் இவ்வாறான ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நுண்ணிய பொருட்கள் காணப்படுகின்றமையினால் முழுமையாக குறித்த பொருட்களை அகற்ற முடியாத நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்று (13) நள்ளிரவு முதல் நுரைச்சோலை 3வது மின் பிறப்பாக்கியின் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த பராமரிப்பு பணிகள் 25 நாட்களுக்கு நடைபெறும் என்றும் அந்த சபை தெரிவித்துள்ளது.
இதனால், தேசிய மின் கட்டமைப்பிற்கு 300 மெகாவோட் மின்சாரம் இழக்கப்படும்.
எனினும், 2 மின் பிறப்பாக்கிகள் செயல்பாட்டில் உள்ளதால் மின்சக்தி விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்துள்ளார்.
3வது மின் பிறப்பாக்கி மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட பின்னர், நுரைச்சோலை மின்நிலையத்தின் 1வது மின் பிறப்பாக்கி பராமரிப்பு பணிகளுக்கு அனுப்பப்பட உள்ளது.
இதேவேளை, கடந்த ஒன்றரை மாத காலமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம், அடுத்த சில நாட்களில் மின்சக்தி உற்பத்திக்காக மீண்டும் இணைக்கப்பட உள்ளது.
இதன் மூலம் தேசிய மின் கட்டமைப்பிற்கு 165 மெகாவோட் மின்சாரம் சேர்க்கப்படும்.
இஸ்ரேலின் தாக்குதலில் ஈரான் ஆயுத படைகளின் தலைமைப் அதிகாரி மொஹமட் பாகெரி கொல்லப்பட்டுள்ளார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
இன்று (13) காலை, இஸ்ரேல் தனது “எதிரியை முடக்கும் தாக்குதல்கள்” என்று அழைக்கப்படும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஈரானின் பல்வேறு இராணுவ மற்றும் அணு ஆராய்ச்சி தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
இதில், ஈரானின் ஆயுத படைகளின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் மொஹமட் ஹொசைன் பாகெரி கொல்லப்பட்டதாக ஈரான் அரசு ஊடகங்கள் அறிவித்துள்ளன.
பாகெரி, 2016 ஆம் ஆண்டு முதல் ஈரானின் மிக உயரிய இராணுவ பதவியை வகித்து வந்தவர் ஆவார் மற்றும் அவர் ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டத்தின் முக்கிய கட்டமைப்பாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
இந்த தாக்குதலின் போது, ஈரானின் தலைநகர் தெஹ்ரான உட்பட பல்வேறு நகரங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் பாகெரியுடன் சேர்ந்து மூத்த இராணுவ அதிகாரிகள் மற்றும் அணு ஆராய்ச்சி விஞ்ஞானிகள் சிலர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேல் இந்த தாக்குதலின் நோக்கம் ஈரான் அணு ஆயுதத்தை பெறுவதைத் தடுப்பதாகவும், தங்கள் மக்களுக்கு ஏற்படும் உயிரியல் அச்சுறுத்தலை நீக்குவதற்காகவும் உள்ளதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், இந்த தாக்குதல் முதல் கட்டமாகும் மற்றும் தேவைப்பட்டால் பல நாட்கள் தொடரும் என அறிவித்துள்ளார்.
இதேவேளை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல் தொடரில் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல்படை (IRGC) தளபதி ஜெனரல் ஹுசைன் சலாமி உயிரிழந்துள்ளார்.
இருப்பினும், மொஹமட் பாகெரியின் மரணம் தொடர்பாக ஈரான் அரசு மற்றும் இஸ்ரேல் ஆகியவை இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. சில ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் இது தொடர்பான தகவல்கள் முரண்பாட்டுடன் உள்ளன. ஈரான் தனது வான்வெளியை மூடியுள்ளதுடன், இஸ்ரேலின் தாக்குதலுக்கு கடுமையான பதிலடியை அளிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. இந்த நிலைமை மத்திய கிழக்கில் மேலும் பதற்றத்தை அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
தொழில் அதிபர் எலான் மஸ்கின் வருத்தத்தை டிரம்ப் ஏற்றுக்கொண்டதாகவும், அவர் நன்றி தெரிவிப்பதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நெருங்கிய நண்பராக இருந்தவர் தொழிலதிபர் எலான் மஸ்க். அரசின் செயல்திறன் மேம்பாட்டு துறையின் தலைவராகவும் இருந்தார். சமீபத்தில் அந்த பதவியில் இருந்து விலகினார். அதன் பின் டிரம்ப் அரசு புதிய செலவு மசோதாவை அறிமுகப்படுத்தியது. இந்த மசோதாவை எதிர்க்கட்சியை காட்டிலும் எலான் மஸ்க் கடுமையாக விமர்சித்தார். அருவருப்பானது என்றார்.
இதனால் கோபமடைந்த டிரம்ப், எலான் மஸ்க் நிறுவனத்துக்கு செல்லும் மானியங்களை நிறுத்த போவதாக மிரட்டல் விடுத்தார். இந்நிலையில், டிரம்ப் குறித்த தன் சமூக வலைதள பதிவுகளுக்கு எலான் மஸ்க் நேற்று வருத்தம் தெரிவித்தார். அதில் தான் எல்லை மீறிவிட்டதாகவும் கூறியிருந்தார். இது குறித்து அதிபர் டிரம்ப் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், அவரை எதற்கும் குறை கூறவில்லை. நான் சற்று ஏமாற்றமடைந்தேன், என்றார்.
இந்நிலையில், டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்கின் வருத்தத்தை டிரம்ப் ஏற்றுக்கொண்டார். இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறியதாவது: தொழில் அதிபர் எலான் மஸ்கின் அறிக்கையை அதிபர் டிரம்ப் ஏற்றுக்கொண்டார், அதைப் பாராட்டுகிறார். அவருக்கு நன்றி தெரிவித்தார். அமெரிக்க மக்களின் வணிகத்தில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த வாரம் மாறி, மாறி விமர்சனம் செய்து சண்டை போட்டு கொண்ட டிரம்ப், மஸ்க் ஆகிய இருவரும் இந்த வாரம் நண்பராக மாறி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகளை ஈர்க்கும் பிரபல லபுபு (Labubu) பொம்மை நான்கு கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போய் பிரமிப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவின் ஹாங்காங்கில் பிறந்த கலைஞர் கேசிங் லங். இவர் எழுதிய, நோர்டிக் நாட்டுப்புறக் கதைகளால் ஈர்க்கப்பட்ட, விசித்திரக் கதை படப் புத்தகத் தொடரான தி மான்ஸ்டர்ஸின் நட்சத்திர கதாபாத்திரம் லபுபு. அகன்ற கண்கள், முயல் போன்ற காதுகளுடன், சிரிக்கும் பற்கள் என குழந்தைகளை வெகுவாக கவரும் இந்த பொம்மை மேற்கத்திய நாடுகளில் மிக பிரபலம்.
இந்நிலையில் ஏறக்குறைய 4 அடி உயரம் உள்ள லபுபு பொம்மையை Bloomberg நிறுவனம் ஏலமிட்டது. இதில் பல நாடுகளை சேர்ந்தவர்கள் ஆன்லைன் மூலமும் பங்கேற்றனர். இறுதியில் இந்த பொம்மை ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 324 டாலருக்கு ஏலம் போனது. இலங்கை மதிப்பு சுமார் நான்கு கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன இந்த லபுபு பொம்மை உலகிலேயே அதிக விலைக்கு ஏலம் போன பொம்மை என்கிறது இந்த ஏலத்தை நடத்திய நிறுவனம்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட விமானம் சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து மதியம் 1.17 மணிக்கு நிகழ்ந்துள்ளது. விபத்தில் சிக்கிய விமானம் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமானது.
இந்த விமானத்தில் பயணிகள் 242 பேர் பயணம் செய்துள்ளனர். விழுந்து நொறுங்கிய விமானத்தில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. விமானத்தில் பயணம் செய்த பயணிகளையும் தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் விண்ணை முட்டும் அளவுக்கு கரும் புகைகள் சூழ்ந்துள்ளது. ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கி தீ பற்றி எரியும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.
Update 05.40
குறித்த விமானத்தில் 169 இந்தியர்களும், 53 பிரித்தானியர்களும், 7 போர்த்துக்கேய வர்களும், ஒரு கனேடிய பிரஜையும், விமானிகள் உட்பட 12 விமான ஊழியர்களும் பயணம் செய்துள்ளனர்.
மீற்புப்பணிகள் துரிதமாக இடம்பெற்று வருவதுடன் இதுவரை சுமார் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக ரொய்ட்டர் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் ஏர் இந்தியா விமானம் ஆமதாபாத்தில் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், விமானம் புறப்பட்ட சிறிது நிமிடத்திலேயே விமானியிடமிருந்து மே டே கால் எனப்படும் அவசர அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால், அழைப்பில் யாரும் பேசவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, அவசர அழைப்பு விடுக்கப்பட்டதும், விமான நிலைய கட்டுப்பாட்டு அறையிலிருந்து விமானத்தைத் தொடர்புகொள்ள முயன்றபோது, அது அமைதியாகஇருந்ததாகவும், அதற்குள் விமானம் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
முதற்கட்டமாக விமான விபத்து நேரிட்டது ஏன் என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இரண்டு விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட 242 பேருடன் லண்டன் புறப்பட்ட விமானம் வானத்தில் பறக்கத் தொடங்கும் முன்பே, 825 அடி உயரத்திலிருந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
விமானம் புறப்பட்ட உடனேயே, அதன் வழித்தடத்திலிருந்து தடம்புரண்டு, குடியிருப்புப் பகுதிக்கு அருகே வினாடிக்கு 475 அடி வேகத்தில் விழுந்துள்ளது.
17 வினாடிகள் ஓடும் அந்த விடியோ, விமானம் எவ்வாறு விழுந்து நொறுங்கிய வேகத்தில் தீப்பிடித்து எரிந்தது. விமானம் விழுந்த போது, வானில் கரும்புகை மேலெழும்பிய காட்சிகளும் வெளியாகியிருக்கிறது.
விமானத்தை இயக்கிய விமானி சுமித் சபர்வால் 8,200 மணி நேரம் விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர் என்றும், துணை விமானி கிளைவ் குந்தர் 1,100 மணி நேரம் விமானங்களை இயக்கிய அனுபவம் பெற்றவர் என்றும் கூறப்படுகிறது.
விமானத்தில் பயணித்தவர்களின் 7 குழந்தைகள் என்றும், அதில் 2 கைக்குழந்தைகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 130 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அகமதாபாத் பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி மீது விமானம் விழுந்து நொறுங்கியதில் 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 40 மாணவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மாணவர்கள் உணவு அருந்திக் கொண்டிருந்தபோது விமானம் விழுந்து நொறுங்கியது.
அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்திய விமான விபத்தில் பல உயிர்கள் பலியானது குறித்து, இலங்கை மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த அனர்த்தம் குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.