Tuesday, May 5, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 220

உலமா சபையின் முக்கிய அறிவிப்பு!

0

2025ஆம் ஆண்டிற்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2025.03.17ஆம் திகதி தொடக்கம் மார்ச் 26ஆம் திகதி வரை நாடுபூராகவும் நடைபெறவுள்ளது.

அதனடிப்படையில் மார்ச் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை தினமாக இருப்பதனாலும் ஜுமுஆவுக்குப் பிறகும் பரீட்சைகள் நடைபெறவிருப்பதனாலும் மாணவர்களது செளகரியம் கருதி அன்றைய தினம் ஜுமுஆ பிரசங்கம் மற்றும் தொழுகையினை பிற்பகல் 1.00 மணியளவில் முடிவுறும் வகையில் அமைத்துக் கொள்ளுமாறு சகல கதீப்மார்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வேண்டிக் கொள்கிறது.

பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் இப்பரீட்சையினை சிறந்த முறையில் எதிர்கொண்டு அதிசிறந்த சித்திகளைப் பெற எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்பாலிப்பானாக!

அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்

பதில் தலைவர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை

அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம்

பதில் பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை

தோனி ஏன் விளையாடுகிறார் தெரியுமா?

0

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நட்சத்திர வீரர் தோனி தனது 43 வது வயதில் விளையாடுகிறார். 12 கோடி ரூபாய் சம்பளம் பெற்று வந்த தோனி மற்ற வீரர்களுக்கு பெரிய அளவு ஊதியம் கொடுக்க வேண்டும் என்பதற்காக தம்மை புதிய விதி மூலம் மாற்றிக்கொண்டு சம்பளத்தை வெறும் 4 கோடி ரூபாயாக குறைத்துக் கொண்டார்.

மேலும் தோனிக்கு இதுதான் கடைசி சீசன்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 43 வயது வீரர் ஒருவர் என் ஐபிஎல் போல் கடினமான தொடரில் விளையாட வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. இதுகுறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தான் இதை தோனியிடமே கேட்டு பதிலை வாங்கியதாக கூறினார்.

இது குறித்து பேசிய அவர்,”அண்மையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் நான் தோனியை சந்தித்தேன். அவர் நல்ல உடல் தகுதியுடன் இருக்கின்றார். உடலும் வலுவாகவே இருக்கின்றது. நான் அவரிடம் உனக்கு இது கடினமாக இல்லையா? ஏன் இதை செய்கிறாய் என்று கேட்டேன்.” “அதற்கு நிச்சயமாக எனக்கு இது கடினமாக தான் இருக்கின்றது. ஆனால் இதை செய்யும் போது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்த பயணத்தை நான் மகிழ்ச்சியாக செய்கின்றேன். மாலை நேரத்தில் மணி நான்கு அல்லது ஐந்தாக ஆனால் உடனே நான் பேட்டை எடுத்துக்கொண்டு விளையாட சென்று விடுகிறேன்.”

“என் வாழ்நாள் முழுவதும் நான் இதை தான் செய்து வருகின்றேன். உங்களுக்கு விளையாட வேண்டும் என்ற உத்வேகம் இருக்கும் வரை உங்களால் செய்ய முடியும் என்று தோனி எனக்கு பதில் அளித்ததாக ஹர்பஜன் சிங் கூறினார். மேலும் தோனி குறித்து பேசிய ஹர்பஜன், எந்த ஒரு கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல் திடீரென்று ஐபிஎல் போன்ற ஒரு தொடரில் விளையாடுவது என்பது மிகவும் கடினம்.”

“ஆனால் தோனி அதை எப்படி செய்ய வேண்டும் என்று மற்றவர்களுக்கு காட்டுகிறார். மற்றவர்களை விட இவர் ஏதோ வித்தியாசமாக செய்கின்றார். ஐபிஎல் விளையாட வேண்டும் என அவர் வந்து பிழைத்தால் போதும் என்று விளையாடவில்லை. மற்ற பவுலர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறார். பயிற்சியில் அதிக பந்துகளை அவர் எதிர்கொள்கிறார். ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு இரண்டு மூன்று மாதத்திற்கு முன்பு தோனி இதனை செய்கின்றார்” என்று ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார்.

சுனிதா வில்லியம்ஸை நிராகரித்த பைடன்!

0

விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பூமிக்கு அழைத்து வருவது தொடர்பாக முன்னாள் அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தோம். ஆனால், அரசியல் காரணங்களுக்காக அது நிராகரிக்கப்பட்டது,” என ஸ்பேஸ் எக்ஸ் சி.இ.ஓ., எலான் மஸ்க் கூறியுள்ளார்.

கடந்த 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியிருந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ‘ ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ‘டிராகன்’ விண்கலம் மூலம் பூமிக்கு திரும்பினர்.

இது தொடர்பாக ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் சி.இ.ஓ., எலான் மஸ்க் ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: விண்வெளி வீரர்களை பூமிக்கு பத்திரமாக அழைத்து வந்த ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் நாசா குழுவினருக்கு பாராட்டுகள். இந்த திட்டத்திற்கு முன்னுரிமை அளித்த அதிபர் டிரம்ப்புக்கு நன்றி. இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.

முன்னதாக டிவி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில் எலான் மஸ்க் கூறியதாவது: விண்வெளி வீரர்களை பத்திரமாக அழைத்து வர தயார் என முன்னரே கூறினோம். இதில் எந்த சந்தேகமும் இல்லை. 8 நாட்கள் மட்டுமே அவர்கள் விண்வெளியில் இருந்து இருக்கவேண்டும். ஆனால், 10 மாதங்கள் இருந்தனர். இதற்கு எந்த காரணமும் இருக்க முடியாது. சில மாதங்களுக்கு முன்னரே ஸ்பேஸ் எக்ஸ் மூலம் அவர்களை அழைத்து வந்திரப்போம். இதற்கான கோரிக்கையை ஜோ பைடன் நிர்வாகத்திடம் வைத்தோம். ஆனால், அரசியல் காரணங்களுக்காக அது நிராகரிக்கப்பட்டது. இது தான் உண்மை. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கடந்த ஜனவரி மாதமும், எலான் மஸ்க் வெளியிட்ட பதிவில், ‘ ஜூன் 2024 முதல் விண்வெளியில் சிக்கி உள்ள வீரர்களை மீட்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என டிரம்ப் கூறியிருந்தார். இத்தனை நாட்கள் அவர்களை விண்வெளியில் வைத்திருந்தது மோசமானது எனக்கூறியிருந்தார். இதனை டிரம்ப்பும் உறுதி செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

கழகங்களுக்கு வழங்கப்பட்ட 60 படகுகள்!

0
கடற்படை படகு உற்பத்தி முற்றத்தில் தயாரிக்கப்பட்ட 60 படகுகள் மற்றும் காயக் படகுகள் விளையாட்டுக் கழகங்களுக்கு வழங்கப்பட்டது.

சர்வதேச படகுகள் மற்றும் காயக் படகுகள் கூட்டமைப்பில் (International Canoe Federation – IFC) அனுசரணையுடன், இலங்கை தேசிய படகுகள் மற்றும் காயக் படகுகள் சங்கத்தால் (National Association for Canoeing and Kayaking in Sri Lanka – NACKSL) வெலிசறை கடற்படை படகுகள் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்ட படகுகள் மற்றும் காயக் படகுகள் கையளிக்கப்பட்டன.

தீவின் புகழ்பெற்ற விளையாட்டுக் கழகங்களுக்கு தயாரிக்கப்பட்ட குறித்த அறுபது (60) படகுகள் மற்றும் காயக் படகுகளை ஒப்படைக்கும் நிகழ்வு கடந்த 2025 மார்ச் 17 அன்று வெலிசறை கடற்படை படகுத் தளத்தில், கடற்படை தளபதியின் தலைமையில் நடைபெற்றது.

கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்புகளுடன் உயர் தரத்தினால், தயாரிக்கப்பட்ட முப்பது (30) படகுகள் மற்றும் முப்பது (30) காயக் படகுகள், தீவின் புகழ்பெற்ற நீர் விளையாட்டு கழகங்களுக்கு வழங்கப்பட்டன.

அதாவது; இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை Bolgoda Lake rowing club, Lanka Adventure, Adventure SEAL, North wing project in Jaffna, Diyawanna Water sports club ஆகிய விளையாட்டுக் கழகங்களினாலும், கொத்தலாவல பாதுகாப்பு அறிவியல் பீடம், திருகோணமலையில் உள்ள கடற்படை மற்றும் கடல்சார் அறிவியல் பீடம் மற்றும் தீவின் பல்வேறு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாடசாலை விளையாட்டுக் கழகங்களுக்குப் பொருட்களை விநியோகிப்பதன் மூலம் இது செய்யப்பட்டது.

பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள்!

0

9 மாதங்களாக விண்வெளியில் தங்கியிருந்த 9 மாதங்களாக விண்வெளியில் தங்கியிருந்த விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பாரி வில்மோர் ஆகியோரை ஏற்றிச் சென்ற காப்ஸ்யூல், சுமார் 17 மணி நேர விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு இன்று (19) காலை பூமிக்குத் திரும்பியது.

இவர்களை சுமந்து சென்ற ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் காப்ஸ்யூல் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திற்கு அருகிலுள்ள கடலில் வெற்றிகரமாக தரையிறங்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், இரண்டு விண்வெளி வீரர்களும் எட்டு நாள் பயணத்திற்காக விண்வெளிக்குச் சென்றனர், ஆனால் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாட்கள் தங்க வேண்டியிருந்தது. மற்றும் பாரி வில்மோர் ஆகியோரை ஏற்றிச் சென்ற காப்ஸ்யூல், சுமார் 17 மணி நேர விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு இன்று (19) காலை பூமிக்குத் திரும்பியது.

இவர்களை சுமந்து சென்ற ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் காப்ஸ்யூல் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திற்கு அருகிலுள்ள கடலில் வெற்றிகரமாக தரையிறங்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், இரண்டு விண்வெளி வீரர்களும் எட்டு நாள் பயணத்திற்காக விண்வெளிக்குச் சென்றனர், ஆனால் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாட்கள் தங்க வேண்டியிருந்தது.

சுகாதார துறையில் 3 தசாப்தமாக வடக்கில் பிரச்சினை!

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடக்கில் அமைக்கப்பட்டுள்ள 4 வைத்திய சிகிச்சை நிலையங்களின் செயற்பாடுகளையும் வினைத்திறனுடன் இயங்கவைப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் கடந்த திங்கட்கிழமை (17.03.2025) இடம்பெற்றது.

பருத்தித்துறை ஆதார மருத்துவமனை, கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை, மாங்குளம் ஆதார மருத்துவமனை, வவுனியா மாவட்ட மருத்துவமனை ஆகியனவற்றில் விசேட சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை கடந்த காலங்களில் திறந்து வைக்கப்பட்டாலும் அவற்றின் தேவைப்பாடுகள் முழுமைப்படுத்தப்படாமையால் வினைத்திறனுடன் செயற்படமுடியாத நிலைமை காணப்படுகின்றது.

ஆளணிப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் சவாலாக இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டதுடன் அவற்றை எவ்வாறு தீர்த்து இவற்றை இயங்க வைக்கலாம் என்பது தொடர்பில் ஆராயப்பட்டது.

அதேபோன்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் தேவைப்பாடுகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

3 தசாப்தங்களாக வடக்கு மாகாணத்தில் சுகாதாரத்துறையில் ஆளணி மறுசீரமைப்பு நடைபெறவில்லை என்றும், இதனைக் கருத்தில்கொண்டு ஆளணி மறுசீரமைப்பு, வெற்றிடமாகவுள்ள ஆளணிகளை நிரப்புவதற்கு மத்திய சுகாதார அமைச்சைக் கோருவதற்கும் இந்தக் கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையிலுள்ள பெண்கள் சுகாதாரப் பராமரிப்புக்கான சிறப்பு சிகிச்சை நிலையத்தை இயங்கச் செய்வதற்கான நிதிக்கான வாய்ப்புக்களை எவ்வாறு உருவாக்கிக்கொள்வது என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – நிர்வாகம், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர், வவுனியா மற்றும் மாங்குளம் மருத்துவமனைகளில் பொறுப்பு மருத்துவ அத்தியட்சகர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடாதிபதி, முன்னாள் மருத்துவபீடாதிபதி, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்

சரணடைந்த தேசபந்து தென்னகோன்!

0

நீதிமன்றத்தில் சரணடைந்த தேசபந்து தென்னகோன் தொடர்பாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (19) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றினார். 

பல நாட்களாக நாட்டில் தலைமறைவாக இருந்து சிறப்பு கவனத்தை ஈர்த்த தேசபந்து தென்னகோன், மாத்தறை நீதிமன்றத்தில் சரணடைந்ததாக அமைச்சர் தெரிவித்தார். 

நேற்று (18) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை சேர்ந்த ஒரு குழு ஹோகந்தர பகுதியில் உள்ள தேசபந்து தென்னகோனின் வீட்டை சோதனை செய்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

அங்கு 1009 மதுபான போத்தல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவற்றில் 795 வெளிநாட்டு மதுபான போத்தல்களும் 214 வைன் போத்தல்களும் அடங்கியுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால கூறினார். 

அத்துடன் ​அவரது துப்பாக்கி என்று சந்தேகிக்கப்படும் ஒரு பிஸ்டல் வகை ஆயுதத்தையும், இரண்டு நவீன கையடக்க தொலைபேசிகளையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 

இந்த கையடக்க தொலைபேசிகள் மூலம் அதிக அளவிலான தகவல்களை வெளிக்கொணர முடியும் என்றும் அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

எதிர்காலத்தில் இந்த விடயம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்கப்படவுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.

அர்ச்சுனா எம்.பி க்கு பாராளுமன்றம் தடை!

0

பாராளுமன்ற மரபுகளுக்கு மாறாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது தற்காலிகமாக தடை ஒன்றை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

இதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் வௌியிடும் கருத்துக்களை ஓடியோ, வீடியோ வடிவில் சமூக வலைத்தளங்களில் நேரடியாக ஒளிபரப்புவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

மேலும், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அவ்வப்போது தெரிவிக்கும் அவமதிக்கும், அநாகரீகமான மற்றும் இழிவான கருத்துக்கள் ஹன்சாட் பதிவுகளில் இருந்து நீக்கப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார். 

அதன்படி, நாளை (20) முதல் மே 8 ஆம் திகதி வரை நடைபெறும் பாராளுமன்ற அமர்வுகளில் அர்ச்சுனா தெரிவிக்கும் கருத்துக்கள் ஔிபரப்பப்படமாட்டாது. 

குறித்த காலகட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் நடத்தையின் அடிப்படையில் இந்தத் தற்காலிக தடை, நீக்கப்படுமா? இல்லையா? என்பது பரிசீலிக்கப்படும் எனவும் சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

இஸ்ரேல் வான் தாக்குதலில் 404 பேர் பலி!

0

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய மனிதாபிமானமற்ற வான்வழி தாக்குதலில், 404 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ரொய்ட்டர் செய்தி தளம் தெரிவித்துள்ளது.

புனித ரமலான் காலப்பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தெற்கு மற்றும் மத்திய காசா பகுதியில் உள்ள மவாரி, கான் யூனிஸ், அல் தராஜ், ராபா உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் படையினர் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் இதுவரை 404 பேர் கொல்லப்பட்டனர்.

இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்த குடியிருப்புப் பகுதிகளைத் தாக்கியதால், இறந்தவர்களில் பலர் குழந்தைகள் என்று பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கிடையான போர்நிறுத்த உடன்படிக்கை கடந்த ஜனவரி 19 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டதிலிருந்து நேற்றைய தினம் வரையில், இஸ்ரேல் பல தடவைகள் போர் நிறுத்தத்தை மீறியுள்ளதுடன், 170 க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்துள்ளனர்.

மார்ச் 2 அன்று, போர் நிறுத்தத்தின் முதல் கட்டம் காலாவதியான நிலையில், இஸ்ரேல் காசாவிற்கு அனைத்து மனிதாபிமான உதவிகளையும் தடுத்து நிறுத்தியதுடன், உணவு, மருந்து மற்றும் எரிபொருள் விநியோகத்தை துண்டித்தது.

இது உலகளாவிய ரீதியில் பெரும் கண்டனத்தை எழுப்பியதுடன்,இது சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறும் செயல் என ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்தன. காசாவிற்கு வெளியே மனிதாபிமான உதவிகளும் சென்ற லாரிகள் நிறுத்தப்பட்டதால் மனிதாபிமான நிலைமைகள் மோசமடைந்தன, இதன் விளைவாக பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிக்கும் அபாயம் அதிகரித்தது.

காசா மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான போரில் குறைந்தது 48,577 பாலஸ்தீனியர்கள் இறந்துள்ளதாகவும் 112,041 பேர் காயமடைந்துள்ளதாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பெப்ரவரி 3 ஆம் தேதி, பலஸ்தீன அரசாங்க ஊடக அலுவலகம் இறப்பு எண்ணிக்கையை 61,700 க்கும் அதிகமாகப் புதுப்பித்தது, இடிபாடுகளுக்கு அடியில் காணாமல் போன ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் இறந்துவிட்டதாகக் ஊடக அலுவலகம் உறுதிப்படுத்தியது.

கோத்தபாய குறித்து உயர்நீதிமன்றின் அறிவிப்பு!

0

2020 ஆம் ஆண்டு ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண்ணொருவரை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்காக அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவு முற்றிலும் சட்டவிரோதமானது என உயர்நீதிமன்றம் இன்று (18) தீர்ப்பளித்தது. 

இந்த அடிப்படை மனித உரிமைகளை மீறியமைக்காக, அரசாங்கம் மனுதாரருக்கு ஒரு இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. 

இந்த சம்பவம் தொடர்பாக பேலியகொட சிறப்பு விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்ட, ஹேனகம, பொகுனுவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் காஞ்சனா பிரியதர்ஷனி மதுரப்பெரும என்ற பெண்ணொருவர் சமர்ப்பித்த அடிப்படை உரிமைகள் மனுவின் தீர்ப்பை வழங்கி, உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.