Thursday, May 7, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 253

கடந்த ஆண்டு உயிரிழந்த யானைகள் இத்தனையா?

0

கடந்த 2024 ஆம் ஆண்டில் 386 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீனராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 81 யானைகளும், மின்சாரம் தாக்கி 56 யானைகளும், ரயிலில் மோதி 11 யானைகளும், நீரில் மூழ்கி 10 யானைகளும், கிணற்றில் தவறி விழுந்து 07 யானைகளும்,  யானை வெடி வெடித்ததில் 51 யானைகளும் உயிரிழந்துள்ளன.

இளம் வயதுடைய யானைகளே அதிகளவில் உயிரிழந்துள்ளதாக வனஜீனராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.  

இந்நிலையில், யானைகளின் தாக்குதல்களினால் 154 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2023 ஆம் ஆண்டில் 488 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீனராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.  

டிரம்ப் விழாவில் இந்தியாவுக்கு முன்னுரிமை!

0

டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வாகை சூடிய டொனால்டு டிரம்ப், அதிகாரப்பூர்வமாக நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். வாஷிங்டனில் உள்ள கேப்பிடல் ஒன் உள் அரங்கத்தில் இந்திய நேரப்படி நேற்று இரவு (ஜன.20) 10.30 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

மிக பிரமாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் உலக நாடுகளின் தலைவர்கள், முக்கிய தொழிலதிபர்கள் என பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் சிறப்பான வரவேற்பும், உபசரிப்பும் அளிக்கப்பட்டது.

பதவி ஏற்பு விழாவில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அவருக்கு முதல் வரிசையில், முதல் இருக்கை அளிக்கப்பட்டது. அவருக்கு அருகில் ஈக்வடார் அதிபர் டேனியல் நொபோ அமர்ந்திருந்தார்.

2 வரிசைகள் பின்தள்ளி ஜப்பான் வெளியுறவு அமைச்சர் டகேஷி ஐவாயா, ஆஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் ஆகியோருக்கு இடம் தருவிக்கப்பட்டு இருந்தது.

இன்ஸ்டாகிரம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

0

இன்ஸ்டாகிராமில் இனி 3 நிமிடங்கள் வரை ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடலாம் என்ற புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

உலகில் அதிகம் பேரை கவர்ந்துள்ள சமூக வலைதளம் என்ற பெயர் பெற்றது இன்ஸ்டாகிராம். இளையதலைமுறையினர், திரையுலகத்தினர், பிரபல விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலரும் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சமூக வலைதளத்தில் பயனர்கள் 90 விநாடிகள் கொண்ட ஒரு ரீல்ஸ் வீடியோ பதிவை வெளியிடலாம். அதற்கு மேலான கால அளவு கொண்ட ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட முடியாது.

ஆனால் இனி அந்த கட்டுப்பாடு கிடையாது. 3 நிமிடங்கள் வரை கால அளவு கொண்ட ரீல்ஸ் வீடியோக்களை பதிவிடலாம், பகிரலாம் என்று இன்ஸ்டாகிராம் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை அதன் தலைமை செயல் அதிகாரி ஆடம் மொசைரி வெளியிட்டு உள்ளார்.

அவர் மேலும் கூறி இருப்பதாவது; இனி பயனர்கள் அதிகபட்சம் 3 நிமிடங்கள் கால அளவு கொண்ட வீடியோக்களை பதிவிடலாம். இதற்கு முன்னர் இந்த அளவு 90 விநாடிகள் கொண்டதாக இருந்தது. கால அளவை நீடிக்க வேண்டும் என்று பயனர்களின் கோரிக்கையை தொடர்ந்து 3 நிமிடங்களாக நீடிக்கப்படுகிறது என்றார்.

இன்ஸ்டாகிராம் பயனர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வண்ணம் இப்படிப்பட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

துருக்கியில் ஏற்பட்ட துயரம் – 66 பேர் பலி!

0

துருக்கியின் வட மேற்கு பகுதியில் அமைந்துள்ள ரிசார்ட்டில் இருந்த ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 66 பேர் உயிரிழந்துள்ளனர். 51 பேர் காயமடைந்துள்ளனர்.

போலு மாகாணத்தின் கர்தல்கயா நகரில் உள்ள பொழுதுபோக்கு இடத்தில் உள்ள 12 மாடிகள் கொண்ட ஓட்டல் ஒன்றின் உணவகத்தில் தீவிபத்து ஏற்பட்டு மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இங்கு 234 பேர் தங்கியிருந்த நிலையில், தீவிபத்தில் 66 பேர் உயிரிழந்தனர். அதில் இருவர் பயத்தில் மாடியில் இருந்து கீழே குதித்ததால் உயிர் பறிபோனது. மேலும் 51 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

தீவிபத்து ஏற்பட்ட போது சிலர் தூங்கிக் கொண்டு இருந்தனர். இதனால், பலர் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரு சிலர், மாடி அறைகளில் இருந்து துணி மற்றும் போர்வை மூலம் கீழே இறங்க முயற்சித்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர். அங்கிருந்தவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். தீவிபத்திற்கான காரணம் குறித்து தெரியவிலலை. இது குறித்து விசாரணை நடத்த 6 பேர் கொண்ட குழுவை துருக்கி அரசு அமைத்து உள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாதணி!

0

தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகள் மற்றும் மத குருமார் கல்விகற்கும் பாடசாலை மாணவர்களுக்கு ஒரு ஜோடி காலணிகள் வாங்குவதற்கான சுமார் 3,000 ரூபாய் வவுச்சர்கள் வழங்க அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 

பிரதமர் ஹரிணி அமரசூரிய சமர்ப்பித்த முன்மொழிவின்படி குறித்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அதன்படி, 250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 6,000 பாடசாலைகளில் கல்விகற்கும் 650,000 மாணவர்களுக்கும் , 250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட தெரிவு செய்யப்பட்ட பாடசாலையின் 140,000 மாணவர்களுக்கும் இந்த வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளது. 

கூடுதலாக, இந்தச் சான்றிதழ்கள் சிறப்புத் தேவைகள் உள்ள மாணவர்கள் கல்விகற்கும் 28 பாடசாலையைச் சேர்ந்த 2,300 மாணவர்களுக்கும், பிரிவேனாக்களில் கல்விகற்கும் 30,000 சாதாரண மற்றும் துறவியர் மாணவர்களுக்கும் வழங்கப்பட உள்ளன. 

மேலும், பாடசாலை மாணவர் ஊட்டச்சத்து திட்டத்தை 2025 ஆம் ஆண்டிலும் தொடர அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இணையவுள்ள ரணில் – சஜித்!

0

பொதுக்கூட்டணியை அமைத்து அடுத்துவரும் தேர்தல்களை முகம் கொடுக்க ஐக்கிய தேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணங்கியுள்ளன. 

இதுதொடர்பாக இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகளும் நேற்றிரவு கலந்துரையாடினர். 

இதன்போது ஐக்கிய மக்கள் சக்தி மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைய வேண்டும் என்ற யோசனை ஐக்கிய தேசிய கட்சியால் முன்வைக்கப்பட்டது. 

இதனை ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்தது. 

இந்தநிலையில் இரண்டு கட்சிகளும் இணைந்து பொதுக்கூட்டணி ஒன்றை அமைக்க இணக்கம் காணப்பட்டது. 

இது தொடர்பான மேலதிக கலந்துரையாடல் நாளை இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கண்டி – மஹியங்கனை வீதிக்கு பூட்டு!

0

கண்டி – மஹியங்கனை வீதி இன்று (21) மாலை 6:00 மணி முதல் மூடப்படவுள்ளது.

மறு அறிவித்தல் வரை நாளாந்தம் மாலை 6.00 மணிமுதல் மறுநாள் அதிகாலை 6.00 மணிவரை இவ்வாறு மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக கண்டி – மஹியங்கனை வீதியின் கஹடகொல்லவுக்க அருகிலுள்ள 18 வளைவுப் பகுதியில் பாறைகள் இடிந்து விழும் அபாயம் இருப்பதன் காரணமாக இவ்வாறு மூடப்படுவதாக கண்டி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, தொடர்ந்து தெரிவித்த மாவட்ட செயலாளர், 

“கஹட்டகொல்ல பகுதியில் உள்ள பிரதான வீதியில் தற்போது பாறைகள் வீழ்ந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் பாறைகள் விழும் அபாயம் இருப்பதால், வீதியை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆபத்தான பாறைகள் அகற்றப்பட்ட பிறகு வீதியை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இருப்பினும், பகல் வேளைகளில் கூட வீதியில் பாறைகள் விழுவதற்கான அபாயம் காணப்படுவதால், பகலில் இந்த வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் மிகவும் அவதானமாக செயற்படவும்” என்றார்.

குற்றம் நடந்தது என்ன – அர்ச்சுனா எம்.பியின் புதிய அப்டேட்!

0

போக்குவரத்து பொலிஸாரின் உத்தரவுகளை புறக்கணித்து, செயற்பட்டமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக கொழும்புக்கு வருகைதரும் சந்தர்ப்பத்தில், அனுராதபுரம் பகுதியில் போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதன்படி, சம்பவம் தொடர்பான விடயங்கள் இன்று (21) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்தானது, இனங்களுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தியதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

WHO இருந்து அதிரடியாக வெளியேறும் அமெரிக்கா!

0

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறியது என அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.

பதவியேற்ற பின், அதிபர் டொனால்டு டிரம்ப் முதல் நாள் பிறப்பித்த உத்தரவின் முக்கிய அம்சங்கள்:

*அமெரிக்கா பார்லிமென்ட் கலவர வழக்கில், தொடர்புடைய 1,500 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் ட்ரம்ப் ஆதரவாளர்கள்.

* உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. கோவிட் தொற்று உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவிய போது, உலக சுகாதார அமைப்பு தனது கடமையை செய்யவில்லை.

* கோடிக்கணக்கான அமெரிக்கர்கள் பயன்படுத்தும் தகவல் தொடர்புத் தளத்தை திடீரென நிறுத்துவதை தவிர்க்க நடவடிக்கை எடுப்பேன். டிக் டாக் செயலி மீதான தடையை 75 நாட்களுக்கு தாமதப்படுத்தும் நிர்வாக நடவடிக்கை எடுப்பேன்.

* அமெரிக்க – மெக்சிகோ எல்லையில் அவசரநிலை பிரகடனம்.

* சட்ட விரோத அகதிகளின் ஊடுருவல் தடுத்து நிறுத்தப்படும்.

* பனாமா கால்வாயில், அமெரிக்க கப்பல்களுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது. இதனால், அந்த கால்வாய் அமெரிக்காவோடு மீண்டும் இணைக்கப்படும்; அதை சீனா நிர்வகிக்க தேவையில்லை.

* மின் வாகனம் கட்டாயம் என்ற உத்தரவு வாபஸ்; விரும்பிய வாகனங்களை பயன்படுத்தலாம் இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் உறுதி செய்யப்படும்.

* துப்பாக்கி கலாசாரத்துக்கு முடிவு கட்டப்படும்.

* கொரோனா தடுப்பூசி போட மறுத்ததற்காக ராணுவத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட வீரர்களை, ஊதியத்துடன் மீண்டும் பணியில் அமர்த்துவேன். இவ்வாறு டிரம்ப் அறிவித்துள்ளார்.

தேசிய இளைஞர் படையணிக்கு புதிய பணிப்பாளர்!

0

தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் நாயகமாக காமினி விக்ரமபால நேற்று (20) இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சில், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேயிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

இலங்கை திட்டமிடல் சேவையில் விசேட தர அதிகாரியாக முப்பது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்ட இவர், முன்னர் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் பணிப்பாளராகவும், சுகததாச உள்ளக விளையாட்டரங்க அதிகாரசபையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

அத்துடன், அவர் சிறிது காலம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பிரதித் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.

தேசிய இளைஞர் படையணியின் புதிய பணிப்பாளர் தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட நிகழ்வில் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.