Thursday, January 22, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 257

முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் பணிப்பாளராக அன்ஸார்

0

முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் இப்ராஹிம் அன்ஸார் நியமிக்கப்பட உள்ளதாக  அரச உயர்மட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.

அவரின்  நியமனத்திற்கான அமைச்சரவை அங்கீகாரம் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக இப்ராஹிம் அன்ஸார் அவர்கள் விரைவில் தனது கடமைகளை பொறுப்பேற்க உள்ளார்.

இப்ராஹிம் அன்ஸார் இதற்கு முன்னதாக சவுதி அரேபியா ,மலேசியா உள்ளிட்ட நாடுகளின் உயர்ஸ்தாணிகராக பல ஆண்டுகள் சேவையாற்றிய மூத்த அரச உயரதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னார் புதிய தவிசாளருக்கு ஏற்பட்ட சிக்கல்!

0

மன்னார் பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் ஒருவரை நியமிப்பது தொடர்பான  வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதை தவிர்க்குமாறு வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மன்னார் பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் ஒருவரை நியமிப்பதற்கு தடையுத்தரவு பிறப்பிக்குமாறுகோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும், மன்னார் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ஷாஹுல் ஹமீட் மொஹமட் முஜாஹீர் என்பவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதில் பிரதிவாதிகளாக வடக்கு மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் உள்ளூராட்சி  ஆணையாளர், செயலாளர் உள்ளிட்ட 7 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.

அத்துடன், தாம் ஒழுக்க விதிகளை மீறியதாக குற்றஞ்சாட்டி தனக்கு எதிரான ஒழுக்காற்று  விசாரணைகளை நடத்தி தன்னை பிரதேச சபை தவிசாளர் பதவியில் இருந்து நீக்கியதாகவும், குறித்த விசாரணைகளின்போது தனது தரப்பு நியாயங்களை முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவும் மனுதாரர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஷாஹுல் ஹமீட் மொஹமட் முஜாஹீர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதையடுத்து, அவரை பதவி நீக்கம் செய்யும் வகையில் கடந்த 13ஆம் திகதி வட மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் பிரதேச சபை முதலாவது தவிசாளராக எருக்கலம்பிட்டி மகன்.

0

எருக்கலாம்பிட்டியின் முதலாவது தவிசாளருக்கு வாழ்த்துக்கள்

எருக்கலம்பிடி வரலாற்றின் முதலாவது தவிசாளராக மன்னார் பிரதேச சபையில் இன்று மகுடம் சூடுகின்றார் இஸ்மாயில் இஸ்ஸதீன்

மன்னார் பிரதேச சபை முன்னாள் தலைவர் முஜாஹிர் அவர்களின் பதவி நீக்கத்தை தொடர்ந்து இன்றைய தினம் 29.09.2021 வாக்கெடுப்பின் மூலம் இஸ்மாயில் இஸ்ஸதீன் மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

தமிழ் கூட்டமைப்பின் சார்பில் ஒருவரும் இவருடன் தவிசாளர் பதவிக்கு போட்டியிட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு மன்னார் பிரதேச சபை தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்ற இஸ்ஸதீன் பிரதேச சபை உப தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

அதனை தொடர்ந்து மன்னார் பிரதேச சபை தவிசாளர் பதவியில் ஏற்பட்ட வெற்றிடத்திற்காக இன்றைய தினம் வாக்கெடுப்பு இடம்பெற்றது.

இதில் இஸ்மாயில் இஸ்ஸதீனுக்கு சார்பாக 9 வாக்குகளும், எதிராக 8 வாக்குகளும், நடுநிலையாக 3 வாக்குகளும் அளிக்கக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை முன்னாள் மன்னார் பிரதேச சபை தலைவர் முஜாஹிர் அவர்களினால் தவிசாலர் இடை நிறுத்தம் மற்றும் உறுப்புரிமை நீக்கத்திற்கு எதிராக கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட (writ) மனுவை விசாரித்த நீதிமன்றம் புதிய தவிசாளரை வர்த்தமானிப்படுத்த தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மன்னார் பிரதேச சபைக்கான புதிய தலைவர் நியமனத்தை தடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வட மாகாண உள்ளூராட்சிமன்ற ஆணையாளருக்கு குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாலளர் இஸ்மாயில் இஸ்ஸதீனுக்கு eNews1st யின் வாழ்த்துக்கள்.

பு/எருக்கலம்பிட்டியில் இரண்டாவது முறையும் உலர் உணவு விநியோகம்!

0

பு/எருக்கலம்பிட்டி கிராமத்தில் இன்று, ஞாயிற்றுக்கிழமை, 19.09.2021, பு/எருக்கலம்பிட்டியில் வசிக்கும் சுமார் 700 குடும்பங்களுக்கு உலர் உணவு விநியோகம் செய்யப்பட்டது.

எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த, வவுனியா ‘நியூ லக்கி டெக்ஸ்’ வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளலர் அல்ஹாஜ் ஜுனைத் பாஹிம் ( பபா ஹாஜியார்) அவர்களினால் புஎருக்கலம்பிட்டியில் வசிக்கும் எமது மக்களுக்காக குறித்த உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 5 கிலோ அரிசியும், 5 கிலோ கோதுமை மாவும் பு/எருக்கலம்பிட்டி ஜும்மா பள்ளிவாசல் நிர்வாக சபை ஊடாக இன்றைய தினம் பகிர்ந்தளிக்கப்பட்டது.

இந்த உணவுப் பொருட்களைப் பெறத் தகுதியானவர்களை அடையாளம் கண்டு, அவர்களது வீடுகளுக்குச் சென்று அடையாள இலக்கங்களை ( Token Number) விநியோகித்து, ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் சுகாதார வழிமுறைகளைப் பேணி மேற்படி உலர் உணவுப்பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.

பொருட்களின் விநியோகத்தை சீராகவும், ஒழுங்கு முறையிலும் பகிர்ந்தளிக்க உள்ளூர் நம்பிக்கையாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, கடந்த சில தினங்களாக, இராப்பகலாக பாடுபட்டு அர்ப்பனிப்புடன் செயற்பட்டமை மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும்.

இப் பாரிய அன்பளிப்பை வழங்கிய, அன்புக்குரிய ஜனாப். ஜுனைத் பாஹிம் ஹாஜியார் அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், இதனை ஏற்பாடு செய்த நம்பிக்கையாளர் சபைக்கும், நமது ஊர் மக்கள் சார்பாக நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கும் அதேவேளை, அந்த பெருந்தகைக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் சந்தோஷத்தையும், சௌபாக்கியத்தையும், சுபீட்சத்தையும் வழங்க வேண்டுமென இருகரமேந்திப் பிரார்த்திக்கிறோம்.

கடந்த ஜூலை மாத முதல் வாரத்தில், பு/எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை, நமது ஊர் வர்த்தகப் பிரமுகர்களும், தொழில்சார் நிபுணர்களும் மனமுவந்து வழங்கிய நன்கொடைப் பணமான, ஏறத்தாழ, 49 லட்சம் ரூபா பணத்தை, தலா 21 கிலோ எடையுள்ள, உலர் உணவுப் பொருட்களை பு/எருக்கலம்பிட்டியிலும், கரம்பையிலும் வாழும் 1350 எருக்கலம்பிட்டி குடும்பங்களுக்கு முன்னெப்போதும் இல்லாத முறையில் முன்மாதிரியாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் வழங்கி வைத்தமை அனைவராலும் பாராட்டப்பட்ட விடயமாகும்.

அவர்களது இத்தகைய நற்பணி, சிறப்புடனும் நேர்த்தியுடனும், நமது் ஊர் மக்களின் நல்லாதரவுடனும் தொடர, நாம் அவர்களை வாழ்த்துகிறோம். எல்லாம் வல்ல அல்லாஹ், இவர்களது இத்தகைய சேவைகளப் பொருந்திக் கொள்வானாக! ஆமீன்.

மேலும் இன்றை இந்த விநியோக நிகழ்வில், நிர்வாக சபையின் தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட உள்ளூர் மற்றும் வெளியூர் நம்பிக்கையாளர்கள் கலந்து சிறப்பித்தமை விஷேட அம்சமாகும்.

பு/எருக்கலம்பிட்டி வைத்தியசாலைக்கு பிராணவாயு அன்பளிப்பு

0

புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமத்தில் அமைந்துள்ள வைத்தியசாலைக்கு இலவச பிராணவாயு மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

சில பரோபகாரிகளின் உதவியுடன், முன்னாள் பு/எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினரும், கம்பகா மாவட்ட மனித உரிமை சமாதான தூதுவரும், அகில இலங்கை சமாதான நீதவானுமாகிய ஜனாப் MAC கமால்தீன் அவர்களினால் இன்று (02.08.2021) புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமிய வைத்தியசாலையின் வைத்தியர் Dr. தஸ்லீம் அவர்களிடம் இவ் மருத்துவ உபகரணம் கையளிக்கப்பட்டது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் அசாதாரண சூழ்நிலை காரணமாக வைத்தியசாலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்ற நிலை உருவாகி பிராணவாயு விற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கொவிட் தொற்று ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவுகளில் செயற்கை சுவாசத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் புத்தளம் எருக்கலம்பிட்டி வைத்தியசாலைக்கு இவ் பிராணவாயு உபகரணம் வழங்கி வைக்கப்பட்டுள்ளதானது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும்.

மேலும் சில மருத்துவ உபகரணங்களுக்கு இவ் வைத்தியசாலையில் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும், முடியுமானவரை அவைகளை பெற்றுத்தருமாறும் இதன்போது ஜனாப் MAC கமால்தீன் அவர்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டதுடன், அவற்றுக்கான தீர்வினை முடிந்த வரை செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் புத்தளம் தள வைத்தியசாலையின் சிரேஸ்ட வைத்தியர் Dr.K அஸ்பர், பள்ளிவாசல் நிர்வாகசபை உறுப்பினர்கள் மற்றும் ஊர் ஜமாத்தார்கள் கலந்து சிறப்பித்தமை சிறப்பம்சமாகும்.

நாகவில்லுவில் தடுப்பூசி செலுத்தும் வேளைத்திட்டம் நிறைவு!

0

நேற்று புதன்கிழமை 28.07.2021 புத்தளம் MOH பிரிவுக்குட்பட்ட 607/D கிராம சேவகர் பிரிவில் உள்ள புத்தளம் எருக்கலம்பிட்டி (நாகவில்லு), றஸூல்நகர், பொத்துவில், அக்கர காள ஆகிய கிராம மக்களுக்கு கொரோனா தடுப்பூசி காலை 08:00 மணிதொடக்கம் இரவு11:00 வரை செலுத்தப்பட்டது.

சுமார் இரண்டாயிரம் பேருக்கு நேற்றைய தினம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக புத்தளம் பொது சுகாதார பரிசோதகர் திரு. சேனநாயக்க தெரிவித்தார்.

அமெரிக்காவில் இருந்து தறுவிக்கப்பட்ட பைசர் தடுப்பூசிகளே முதல் கட்டமாக புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் வைத்து நேற்றைய தினம் செலுத்தப்பட்டது.

தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்காக மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டியதுடன், நீண்ட வரிசையில் நிதானமாக நின்று இரவு 11.00 மணி வரை தங்களுக்கான தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டதற்காக eNews1st குழுமம் எமது மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.

இதேவேளை நேற்றைய தடுப்பூசி செலுத்தும் நிகழ்வுகளை முகப்புத்தகம் வாயிலாக மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்ததன் ஊடாக, தடுப்பூசி செலுத்துவதற்கு தயங்கிய மக்களும் தாமாக முன் வந்து தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டதாக சமூக ஆர்வளர்கள் eNews1st குழுமத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வுக்கு பாரிய ஒத்துழைப்பு வழங்கிய சமூக ஆர்வலர் அல் ஹாஜ் C.M.அஸீஸ் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும், பாடசாலைஅதிபர், ஆசியர்கள், eNews1st குழுமத்தினர், EPD குழுவினர், மற்றும் பெயர் குறிப்பிடப்படாத Volantier சேவையில் ஈடுபட்ட முதியவர்கள் இளைஞர்கள் என அணைவருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக புத்தளம் தள வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்தியரும், பு/எருக்கலம்பிட்டி நம்பிக்கையாளர் சபை உப தலைவருமான அல்ஹாஜ் Dr. K.Asfar (MBBS) எமது இயைத்திற்கு தெரிவித்தார்.

அத்தோடு எமது பிரதேசத்துக்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி அதிகாரி, புத்தளம் பிரதேச செயலக அதிகாரிகள், இராணுவத்தினர், பொலிஸ் அதிகாரிகள் என அனைவரும் தனது விசேடமான நன்றிகளைத் தெறிவித்துக்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்றைய தினம் முதல் கட்டமாக தடுப்பூசிகள் பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்டமாக எதிர்வரும் மாதம் தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாகவில்லுவில் பாதை அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்!

0

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்க்ஷ அவர்களின் தலைமையில் கௌரவ பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ அவர்களின் வழிகாட்டலில் விஷேட வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படுகின்றன 1 லட்சம் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மற்றுமொரு வேளைத்திட்டம் புத்தளம் எருக்கலம்பிட்டியில் இடம்பெற்றது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களின் வேண்டுகோளின் பேரில், மன்னார் மாவட்டத்தில் இருந்து யுத்தம் காரணமாக புத்தளத்தில் இடம்பெயர்ந்து புத்தளம் எருக்கலம்பிட்டியில் வாழும் மக்களின் நன்மை கருதி சீரற்ற போக்குவரத்து பாதையை புனரமைக்கும் பணி கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

புத்தளம் எருக்கலம்பிட்டியின் A,B,C பகுதியில் உள்ள சீரற்ற சில போக்குவரத்து பாதையை புனரமைக்கும் திட்டத்தில், C பகுதியில் அமைந்துள்ள மையவாடி வீதி 650 மீற்றர் வரையிலும், B பகுதியில் அமைந்துள்ள வைத்தியசாலை வீதி 650 மீற்றர் வரையிலும், மற்றும் A பகுதியில் ஐந்து உள்ளக வீதிக்கான 1250 மீற்றர் பாதையும் உள்ளடங்களாக சுமார் 55.6 மில்லியன் ரூபாய் செலவில் குறித்த பாதை அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்களினால் கடந்த ஞாயிறு (24) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ அலி சப்ரிரஹீம், முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினுடைய முஸ்லீம் பிரிவிற்கான அமைப்பாளருமான ஜனாப் ரியாஸ் அவர்களும், புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் எஸ்.எம். ரிஜாஜ் அவர்களும், பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

புத்தளம் எருக்கலம்பிட்டியின் ஏனைய குறுக்கு வீதிகள் காபட் வீதிகளாக மாற்றப்படும் என புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ அலி சப்ரிரஹீம் தெரிவித்ததுடன், இடம்பெயர்ந்த மக்களின் வாக்குகளே தனத வெற்றிக்கு காரணம் எனவும் தெரித்தமை குறிப்பிடத்தக்கது.

புத்தளம் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு பாராட்டு!

0

முழு உலகையும் ஆட்டிப்படைக்கும் கொரொனா பெருந்தொற்று எம் நாட்டிலும் பாரிய இழப்புக்களை ஏற்படுத்திவருகிறது. இவ்வாரானதொறு நெருக்கடியான நிலையில் நாட்டில் அனைத்து அரச பணியாளர்களும் பல தியாகங்களுக்கு மத்தியில் தங்கள் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அவ்வகையில் வைத்தியர்கள், இராணுவத்தினர், பொலிசார், என பலதரப்பட்ட அரச தரப்பினரும் தியாகங்களை செய்துவருகின்ற நிலையில், பொது சுகாதார பரிசோதகர்களின் தியாகங்கள் இங்கு உற்றுநோக்கப்படவேண்டியுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் புத்தளம் பொது சுகாதார பரிசோதகர்களின் சேவைகளும் தியாகங்களும் இங்கு நினைவுகூறத்தக்கது.

இலங்கை திருநாட்டில் ஏற்பட்டுள்ள கொரொனா இரண்டாம் அலை தற்போது பெறும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், லட்சக்கனக்கான மக்களின் வாழ்வாதாரங்களும், பொருளாதாரமும் முடங்கி காணப்படுகினறது. இந்நிலையில் இரவு பகல் பாராது கலப்பணியில் ஈடுபட்டுள்ள பொது சுகாதார பரிசோதகர்களுக்கு நன்றி தெரிவிக்கவேண்டியது பொதுமக்களாகிய எம் அனைவரினதும் கடமையாகும்.

புத்தளம், கல்பிட்டி, வணாத்தவில்லு பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய பகுதிகள் புத்தளம் பொது சுகாதார பரிசோதகர்களினால் கண்கானிக்கப்படுகிறது. தலைமை பொது சுகாதார பரிசோதகர் திரு என். சுரேஷ் அவர்களின் தலைமையில் இயங்கும் இக்குழுவில் 8 பொது சுகாதார பரிசோதகர்கள் கடமையாற்றுகின்றனர்.

சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் தொகையை கொண்ட குறித்த பிரதேசங்களை, குறுகிய எண்ணிக்கையுடைய பொது சுகாதார பரிசோதகர்களே கண்கானித்து கடமைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஒரு சுகாதார பரிசோதகருக்கு சுமார் 12 ஆயிரம் தொடக்கம் 15 ஆயிரம் மக்கள் தொகையை கொண்ட பகுதியே பொறுப்பாக இருக்கும்பட்சத்தில், தற்போது ஒரு சுகாதார பரிசோதகருக்கு 30 ஆயிரம் மக்கள் தொகையை கொண்ட பகுதியை கண்கானிக்கவேண்டிய ஒரு கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொது சுகாதார பரிசோதகர்கள் நல்லிரவு வரை தங்கள் பணியை செய்வதாக அறியக்கிடைத்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலையில் புத்தளம், கல்பிட்டி, வணாத்தவில்லு பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய பகுதிகளில் இதுவரை 492 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 13 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

புத்தளம் பொது சுகாதார பரிசோதகராக சுமார் 22 வருடங்கள் கடமையாற்றும் தலைமை பொது சுகாதார பரிசோதகர் திரு என். சுரேஷ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இயங்கும் ஏனைய அனைத்து பரிசோதகர்களின் நடவடிக்கைகளுக்கு நாம் மிகவும் ஒத்துழைத்து, நாட்டிலிருந்து இக் கொரோனா பெருந்தொற்றை விரட்டியடிக்க அனைவரும் முன் வரவேண்டும்.

உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடமைபுரியும் நாட்டின் அனைத்து பொது சுகாதார பரிசோதகர்களின் சேவையினை பாராட்டி நன்றி தெரிவிப்பதில் மகிழ்வுகொள்கிறது eNews1st குழுமம்.

நாகவில்லு பகுதியில் உலர் உணவு வினியோகம்!

0

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து மக்களும் பொருளாதார ரீதியில் பெரும் இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இவ்வாறான ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் புத்தளம் எருக்கலம்பிட்டியில் வறுமையில் வாடும் மக்களுக்கு பு/எருக்கலம்பிட்டி ஜும்மா பள்ளிவாசல் நிர்வாக சபையின் ஏற்பாட்டில் உலர் உணவுப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக தொழில்களையும் வருமானங்களையும் இழந்து கஷ்டப்படும் பு/எருக்கலம்பிட்டி மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் பள்ளிவாசல்
நிர்வாக சபைத் தலைவர் அல்ஹாஜ் I. அன்சார், (முன்னாள் இலங்கைத் தூதுவர்) அவர்களின் தலைமையில் அனைத்து பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களின் பங்களிப்புடன்,
விநியோக்கப்பட்டன.

சுமார் 4,000/- ரூபா பெறுமதியான , அரிசி, கோதுமை மா, சீனி, பருப்பு, கடலை, பால்மா, தேயிலை, பப்படம் போன்ற 21 கிலோ எடை கொண்ட உணவுப் பொருட்கள் 1092 குடும்பங்களுக்கு இவ்வாறு வழங்கிவைக்கப்பட்டன.

இந்த முயற்சிக்காக, கொழும்பிலும் இதர நகரங்களிலும் வசிக்கும் எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த வர்த்தக பிரமுகர்களும், தொழில்சார் நிபுணர்களும், அரச மற்றும் தனியார் துறைகளில் உயரிய பதவிகளை வகிப்பவர்களும் தாராளமாக தங்களது பங்களிப்பினை வழங்கியிருந்தனர்.

உலர் உணவு நன்கொடையாளர்களின் வேண்டுகோளின் பேரில் வருமானமின்றி் கஷ்டப்படும் மக்கள் மாத்திரமே அடையாளம் காணப்பட்டு உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்படடன. இம்முறை நிரந்தர வருமானம் பெறும் அரசாங்க, தனியார் துறை உத்தியோகத்தர்களுக்கும் சொந்தமாக கடைகளை வைத்திருக்கும் தனவந்தர்களுக்கும், பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்களுக்கும், இந்த பணிக்காக நிதி உதவி செய்தவர்களுக்கும் இம்முறை உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படவில்லை.

நிர்வாக சபை உறுப்பினர்கள் அனைவரும் கடந்த பல நாட்களாக இந்த நற்பணியில் ஈடுபட்டு இதன் வெற்றிக்காகவும் நேர்மையான – நீதியான முறையில் பொருட்களை பகிர்ந்தளிப்பதற்காகவும் அரும் பாடுபட்டுள்ளனர்.

இத்தகைய அளப்பரிய சேவையை ஆற்றிய பள்ளிவாசல் நிர்வாக சபையினருக்கும் இதற்காக நிதி உதவியளித்த எருக்கலம்பிட்டி பரோபகாரிகளுக்கும் எருக்கலம்பிட்டி மக்கள் தமது நன்றியைத் தெரிவித்தனர்.

புத்தளம் மனித உரிமை மேம்பாட்டாளர், சகோதரி ஜுவைரியா அவர்கள் இது பற்றி கருத்து தெரிவிக்கையில்,

நாகவில்லு-எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாக சபை புத்தளம் மாவட்டத்தில் உள்ள மற்ற பள்ளிவாசல்களுக்கு ஒரு முன்மாதிரியாக இந்தப் பணியை திறம்பட ஆற்றியுள்ளதாகவும், மற்ற பள்ளிவாசல்கள் இவர்களின் இத்தகைய முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டுமெனவும் அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்த அளப்பரிய சேவைக்கு ஒத்துழைப்பு வழங்கிய நன்கொடையாளர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் கொரோனா பயணத்தடை நீங்கியதும் விசேட துவா பிரார்ந்தனை ஒள்றை நாகவில்லு – எருக்கலம்பிட்டி ஜும்மா பள்ளிவாசலில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகசபையினர் தெரிவித்தனர்.

இவர்களது இதுபோன்ற நற்பணிகளும் மக்களுக்கு பயன்தரும் வேலைந்திட்டங்களும் மென்மேலும் தொடர வேண்டுமென நமதூர் மக்கள் சார்பாக வாழ்த்துகிறோம்.

புத்தளம் நகராதிபதி KA பாயிஸ் திடீர் மரணம்!

0

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தற்போதைய புத்தளம் நகர சபை தலைவருமான KA பாயிஸ் அவர்கள் இன்று இரவு 7 மணியளவில் தனது 52ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

அன்னாரின் ஜனாஸா தற்பொழுது புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்க விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.