Thursday, May 7, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 272

ஜனவரி முதல் புதிய சட்டம். ஆப்பு ரெடி!

0

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 12 வயதுக்கும் கீழ்ப்பட்ட சிறுவர்களை, விளம்பரங்களுக்காக பயன்படுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் ஊடக பிரதி அமைச்சர் வைத்தியர் அசங்க விஜேமுனி இந்த விடயத்தை நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக 12 வயதுக்கும் குறைந்த சிறுவர் சிறுமியர் விளம்பர பிரசார நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்படுவதனை நாம் ஜனவரி மாதம் 1ம் திகதியுடன் நிறுத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த கால அரசாங்கங்கள் கடந்த 7 – 8 ஆண்டுகளாகவே இந்த நடைமுறையை நடைமுறைப்படுத்த காலம் தாழ்த்தி வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

எனினும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த நடைமுறையை எதிர்வரும் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் திகதி தொடக்கம் அறிமுகம் செய்வதாகத் பிரதி அமைச்சர் அசங்க விஜேமுனி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் சரமாரியாக கேள்வி எழுப்பிய கபீர் ஹாஷிம்!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு 2024 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகைக்கு நிகரான தொகையே 2025 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கும் இன்று சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால கணக்கறிக்கை ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அவ்வாறு ஒதுக்கப்பட்ட தொகை 1.4 டிரில்லியன் ரூபாவாகும் என சுட்டிக்காட்டினார்.

“2024ஆம் ஆண்டு ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்டத்தின்படி ரணில் விக்கிரமசிங்கவுக்கு 1.4 டிரில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது.

அதேபோன்று 2025ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான 4 மாதங்களுக்கு  இடைக்கால கணக்கறிக்கையில் 1.4 டிரில்லியன் ரூபா ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

எண் ஒன்றுதான், வித்தியாசம் இல்லை. எங்கே குறைக்கப்பட்டுள்ளது. சிஸ்டம் நோ சேன்ஞ், அநுர சேன்ஞ். எங்களுக்கு விளக்கவும்.

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை தடையின்றி நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்தார்.

அது நல்லது. IMF ஒப்பந்தத்தின் கட்டமைப்பை நாங்கள் ஏற்றுக்கொண்டாலும், அதன் உள்ளடக்கங்களில் சிலவற்றை மாற்றுவோம் என்று கூறியிருந்தோம்” என்றார்

பார் அனுமதி இரத்து செய்யப்படுமா, இல்லையா?

0

சட்ட விரோதமான முறையில் வழங்கப்பட்டுள்ளBar Permit களை உடன் இரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்றத்தில் நேற்று (04) சாணக்கியன் தெரிவித்தார்.

Bar Permit பெற்றுக் கொண்டமை தொடர்பான தகவல்களை வழங்குமாறு தான் எழுப்பிய கேள்விக்கு அமைய Chief Government Whips அவர்கள் கடந்த 03 ஆம் திகதி மாலை அந்த தகவல்களை வெளியிடுவதாக கூறியிருந்தார். அதற்கமைவாக ஆளும் கட்சியினுடைய சபைக்குரிய தலைவர் பிமல் ரத்னாயக்க அவர்கள் நேற்று மாலை வேளையில் அப் பட்டியலினை வெளியிட்டிருந்தார். 

அந்தப் பட்டியலில் Bar Permit பெற்றுக் கொண்டோருடைய பெயர்கள் மாத்திரம் காணப்பட்டதே தவிர வேறு தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆகவே இவ்வாறான விண்ணப்பங்கள் வருகின்ற பொழுது பாராளுமன்ற உறுப்பினர்களால் வழங்கப்பட்ட சிபார்சு கடிதங்கள், ஏனைய விண்ணப்ப விடயங்கள் தற்போது எங்கே உள்ளதென்பதை கண்டறிவதற்கான விசாரணைகள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அல்லது CID அல்லது ஜனாதிபதி செயலகத்தினால் மேற்கொள்ளப்படுகின்றதா? என்பது தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் 18 Bar Permits வழங்கப்பட்டுள்ளது. அங்கு ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் காணப்படுகின்றனர். ஆகவே 5,000 வாக்காளர்களுக்கு 1 Bar எனும் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு வழங்கப்பட்டுள்ள Bar Permit களை இரத்து செய்துள்ளீர்களா? இல்லையா? என்பதற்கான பதிலை கூறுவதுடன் அவ்வாறு இரத்து செய்யாதுவிடின் வழங்கப்பட்ட Bar Permit களை உடன் இரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். Bar Permit தொடர்பிலான இந்த கேள்வியை எழுப்புமாறு மக்கள் என்னிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே இச் சபையிலே இக் கேள்வியை தொடுத்தேன் எனவும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

கனடாவை விட்டு வௌியேறுமாறு அதிரடி அறிவிப்பு!

0

கனடாவில் 2025 ஆம் ஆண்டு இறுதியில் பாரிய அளவிலான புலம்பெயர்ந்தவர்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் அந்நாட்டு புலம்பெயர்தல் துறை அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் வெளியேற வேண்டிய நிலைக்கு அவர்களுக்கு வழங்கப்பட்ட பல மில்லியன் தற்காலிக அனுமதிகள் காலாவதியாக உள்ளமையே காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற புலம்பெயர்தல் குழு முன் விளக்கமளித்த மார்க் மில்லர்,

தற்காலிக அனுமதிகள் காலாவதியாகும் பெரும்பாலானோர் கனடாவில் இருந்து தாமாகவே வெளியேறக்கூடும் என கூறிய நிலையில், கொன்சர்வேட்டிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான ரொம், சுமார் 4.9 மில்லியன் பேரின் தற்காலிக அனுமதிகள் காலாவதி ஆகும் நிலையில், அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதை கனடா அரசு எப்படி உறுதி செய்ய உள்ளது என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த மில்லர்,

நமது நாட்டுக்குள் வருவோரில் பெரும்பாலானோர் தற்காலிகமாக வந்துள்ளதால், அவர்களுடைய அனுமதிகள் காலாவதியானபின் இங்கு தங்க அவர்களுக்கு உரிமை இல்லை, ஆகவே அவர்கள் தாமாகவே வெளியேறிவிடுவார்கள் என்றார்.

அப்படி தாமாக வெளியேறாதவர்களை புலம்பெயர்தல் அமைச்சகம் எப்படி கையாளப்போகிறது என ரொம் விடாமல் கேட்க, அவர்களை வெளியேற்ற கனடா எல்லைப் பாதுகாப்பு ஏஜன்சிக்கு உரிமை உள்ளது என்றார் மில்லர்.

இந்த நிலையில் தற்காலிக அனுமதி பெற்று கனடாவில் வசிக்கும் புலம்பெயர்ந்தவர்களுக்கு பெரும் சிக்கல் ஏற்படப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோட்டாவை காப்பாற்றிய தற்போதைய அரசாங்கம்!

0

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச காரணமல்ல என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதாக பலர் கூறுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சத்துரங்க அபேசிங்க பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், அந்த கூற்றுகள் தவறானவை என்று அவர் கூறியுள்ளார். 1977 ஆம் ஆண்டு முதல் எடுக்கப்பட்ட மோசமான பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாகவே பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்குள் இலங்கை ஏற்கனவே திவாலாகி விட்டதாக அவர் கூறியுள்ளார்.

இந்தநிலையில், 2022 இல் ஆயிரக்கணக்கானோர் வீதியில் இறங்கி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி அவரை பதவியில் இருந்து வெளியேற்றினர்.

இலங்கையில் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சவே முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டு இன்றும் சுமத்தப்பட்டு வருகிறது.

கடும் குற்றச்சாட்டுகள் கொண்ட அதிகாரிகள் ஏன் உயர் பதவிகளில்?

0

கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ள அதிகாரிகளை உயர் பதவிகளில் நியமித்து எப்படி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட முடியும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற முஜுபுர் ரஹ்மான் (Mujibur Rahman) கேள்வியெழுப்பியுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டாவறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அங்கு தெரிவித்துள்ளதாவது,
“ஒரு நாடாக, நாம் இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம், சுதந்திரத்திற்குப் பிறகு  இலங்கை என்ற அடையாளத்தைக் கட்டியெழுப்பி முன்னோக்கிச் செல்ல முடியவில்லை.

இந்தியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற அண்டை நாடுகள் அவற்றின் பன்முகத்தன்மை மற்றும் மரியாதை காரணமாக முன்னேறியுள்ளன.

76 ஆண்டுகளாக தேசிய ஒருமைப்பாடு பற்றி பேசி வருகிறோம், நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒவ்வொரு அரசியல் கட்சியும் இந்த விடயத்திற்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பொறுப்பேற்க வேண்டும்.

அரசாங்கம் மிகவும் அரிதான மக்கள் ஆணையைப் பெற்றுள்ளது, ஜனாதிபதித் தேர்தலின் போது சந்திரிகாவுக்கு இவ்வாறானதொரு மக்கள் ஆணை கிடைத்தது.

ஆனால் அவராலும் இந்த பன்முகத்தன்மையைப் புரிந்துகொண்டு முன்னேற முடியவில்லை, நீங்கள் ஒரு நல்ல பயணத்தை நடத்த சட்டத்தின் ஆட்சியை நிறுவ தயாராகி வருகிறீர்கள்.

ஆனால், உயர் பதவிகளில் கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ள அதிகாரிகளை நியமித்து எப்படி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட முடியும்.” என்றார்.

இன்று இரவு 9.30 மணிவரை பாராளுமன்ற சபை விவாதம்!

0

அனர்த்த நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை இன்று (04) பி.ப 5.30 மணி முதல் பி.ப 9.30 மணி வரை நடத்துவதற்குக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிலவிய மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை இன்றைய தினம் (04) பி.ப 5.30 மணி முதல் பி.ப 9.30 மணிவரை நடத்துவதற்கு சபாநாயகர் கௌரவ கலாநிதி அசோக ரன்வல தலைமையில் நேற்று (03) நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி, முன்னர் தீர்மானிக்கப்பட்டபடி, கௌரவ ஜனாதிபதி அவர்களினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான விவாதம் இன்று காலை 9.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து இது தொடர்பான வாக்கெடுப்பு பி.ப 5.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. வாக்கெடுப்பு முடிவடைந்ததும் பி.ப 5.30 மணிக்கு எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் அனர்த்த நிலைமைகள் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாவீரர் தின காணொளிகள் பொய்யானவையே!

0

வடக்கில் மாவீரர் தின வைபவங்கள் நடைபெற்றதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரசாரம் செய்யப்பட்டு வரும் காணொளிகளானது கடந்த காலங்களில் வௌிநாடுகளில் நடைபெற்ற வைபவங்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இன்று (04) பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை வௌியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் வடக்கில் புலிகளின் கொண்டாட்டங்களுக்கு அனுமதியளித்ததாக சிலர் நம்ப வைக்க முயற்சிப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

விசாரணையில் குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சி இது போன்ற செயல்களில் ஈடுபட்டது உறுதியானது என்றும், இது தொடர்பாக பலரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தேங்காய் பிரச்சினை தீர்வுக்கு இவ்வளவு காலமா?

0

அடுத்த ஆறு மாதங்களில் தேங்காய் விலை அதிகரிப்பு பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சமன் தேவகே குறிப்பிட்டுள்ளார்.

அண்மைக்காலமாக சந்தையில் தேங்காய் விலை வேகமாக அதிகரித்து வருகின்றது.

பல பகுதிகளில் தேங்காய் ஒன்று 180 முதல் 200 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

சில இடங்களில் தேங்காய் ஒன்று 220 ரூபாய் வரை அதிக விலைக்கு விற்கப்படுகின்றது.

தென்னை ஏற்றுமதி மற்றும் பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக சுமார் 100 கோடி தேங்காய் அறுவடையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தென்னை பயிர்ச்செய்கை சபை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

54 சிரேஷ்ட அதிகாரிகளுக்கு இடமாற்றமா?

0

உடன் அமுலாகும் வகையில் பிரதி காவல்துறைமா அதிபர்கள், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்கள், காவல்துறை அத்தியட்சகர்கள் உள்ளிட்ட 54 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. 

தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பணிப்பாளராகச் செயற்பட்ட மகளிர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஐ.எஸ் முதுமால அந்த திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

அத்துடன் 5 பிரதி காவல்துறை மா அதிபர்களுக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.