Home Blog Page 288

பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 90 பேர் பலி!

பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினர் சென்ற பஸ்சில் குண்டு வெடித்ததில், 90 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயம் அடைந்தனர். பலூசிஸ்தான் விடுதலை படை இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள நுஷ்கி என்ற இடத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த பஸ்சில் குண்டு வெடித்தது. இதில் சம்பவ இடத்திலேயே, 90 பேர் உயிரிழந்தனர். மேலும் பல பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பலுசிஸ்தான் முதல்வர் சர்ப்ராஸ் புக்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய இறைவனை வேண்டிகொள்கிறேன்’ என கூறியுள்ளார்.

பலூசிஸ்தான் விடுதலை படை இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. சமீபத்தில், பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டாவில் இருந்து, கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள பெஷாவர் நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் இருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட, 450 பயணியரை பயங்கரவாதிகள் சிறைபிடித்தனர்.

அதன்பிறகு, பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்று விட்டு, மக்களை அந்நாட்டு ராணுவத்தினர் மீட்டனர். இந்த சம்பவம் நடந்து பரபரப்பு ஓயவில்லை. அதற்குள் தற்போது மீண்டும் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் அரங்கேறி உள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.

வடக்கு கிழக்கில் தமிழரசுக்கட்சியின் நிலைப்பாடு!

வடக்கு கிழக்கில் தமிழரசுக்கட்சி உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

தமிழரசுக் கட்சியானது தமிழ் பிரதேசங்களில் உள்ள பிரதேச சபைகளில் போட்டியிடுகின்றது. தனித்தே போட்டியிடுகின்றது. ஏனைய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதற்கான இணைப்பு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதும் சாதகமான இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் தனித்து போட்டியிடுகினேறோம்.

தேர்தல் நிறைவடைந்ததும் ஆட்சியமைகும் சூழல் ஏற்படும் போது தமிழ்த்தேசியத்துடன் பயணிக்கும் கட்சிகளை ஒன்றிணைத்து ஆட்சியமைக்க முடியும். தென்னிலங்கையை தலைமையகமாக கொண்ட கட்சிகளுக்கு மக்கள் வாக்களிப்பதை தவிர்க்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

அவசர சிகிச்சை பிரிவில் ஏ.ஆர்.ரஹ்மான்!

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சென்னையில் உள்ள அப்பல்லோ வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 

58 வயதான அவர் தற்போது வைத்தியர்களின் குழுவின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். 

ஏ.ஆர்.ரஹ்மான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் அறிந்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு தெரிவித்ததை தொடர்ந்து பல சர்ச்சைகள் ஏற்பட்டது. 

இதை அடுத்து உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு பிரிவதாக சாய்ரா பானு தெரிவித்து இருந்தார். 

மேலும் சாய்ரா பானுவுக்கு நடைபெற்ற அறுவை சிகிச்சைக்கு ஏ.ஆர்.ரஹ்மான் உதவியதாக தகவல்கள் வெளியானது.

பட்டலந்த குறித்து வாய் திறக்கும் ரணில்!

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (16) விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். 

கடந்த வாரம், சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். 

அந்த அறிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை, கொள்கை முடிவை எடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். 

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை எதிர்காலத்தில் சட்டமா அதிபருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது 

ஆணைக்குழு அறிக்கை தொடர்பான மேலதிக நடவடிக்கைகளுக்கான ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குவதற்காக ஒரு சிறப்பு குழுவை நியமிக்கவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். 

அந்த அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டினார். 

அதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக இன்று விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தார்.

Click here to join our whatsApp group

இஸ்ரேல் தாக்குதலில் 6 பேர் பலி!

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தியுள்ள டிரோன் தாக்குதலில் 6 பேர் பலியாகினர்.

காஸாவின் வடக்கு பகுதியிலுள்ள பீய்ட் லஹியாவில் பொது இடத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான் வழியாக நடத்திய டிரோன் தாக்குதலில் பத்திரிகையாளர் ஒருவர் உள்பட மொத்தம் 6 பேர் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படைப் பிரிவுக்குமிடையே உடன்பாடு ஏற்படுத்தப்பட்டு காஸாவில் தற்காலிகப் போர் நிறுத்தம் ஏற்பட்ட நிலையில், அதனை ஏப்ரல் வரை நீட்டிக்க அமெரிக்கா முயற்சி மேற்கொண்டுள்ளது.

இதனிடையே, இஸ்ரேல் ராணுவம் மிலேச்சத்தனமாக காஸாவில் தாக்குதலை நடத்தி அப்பாவி பொதுமக்களை கொன்று வருவது போர் நிறுத்த முயற்சியை அப்பட்டமாக மீறும் செயல் என உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது.

கைகோர்த்த பிள்ளையான் மற்றும் வியாழேந்திரன்!

பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துறை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையினால் முற்போக்கு தமிழர் கழகத்துக்கு இடையில் புதிய கூட்டணிக்கான உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

எதிர்வரும் தேர்தல்களை இலக்காகக் கொண்டு கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்ற பெயரிலான இந்த கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டக்களப்பிலுள்ள தனியார் விடுதியொன்றில் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

Click here to join our whatsApp group

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதிரடி அறிவிப்பு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். நழீம் தன்னுடைய பதவியை இராஜினாமாச் செய்தது முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் சரித்திரத்தில் மாத்திரம் அல்ல. இலங்கை முஸ்லிம் அரசியல் சரித்திரத்திலும் ஒரு தாக்கத்தை உருவாக்கிய நிகழ்வாகும். இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார். 

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், கட்சிக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றியது சம்பந்தமாக, முன்னுதாரணமாக இருந்தது மாத்திரமல்ல ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சரித்திரத்தில் அக்கட்சியின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு தனக்கு வழங்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியை நான்கு மாதங்களுக்குள் இராஜினாமா செய்த வரலாற்றில் இது முதல் தடவையாகும் 

இக்கட்சியின் செயலாளர் என்ற வகையில் நான் மிகவும் பெருமிதமும், மகிழச்சியும் அடைந்துள்ளேன். கட்சி சார்பாக என்னுடைய நன்றிகளை அவருக்கு தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். 

மேலும், இந்த வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவியை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடியும் வரை எவருக்கம் வழங்கப்பட மாட்டாது. மாறாக இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முக்கியமாக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தங்களது பிரதேசத்துக்கு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தங்களுடைய செல்வாக்கை பயன்படுத்தி தமது சபைகளை கைப்பற்றி ஆட்சியை அமைக்க வேண்டும். அதற்கான சகல எற்பாடுகளையும் செய்து பணியாற்ற வேண்டும் என எதிர்பார்க்கின்றோம். 

இந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவி சுழற்சி முறையில் ஒரு வருடத்திற்கென்ற முறையில் பகிர்ந்தளிக்கப்படும். அதனை கட்சி தீர்மானித்துள்ளது. அந்த வகையில் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் தவிசாளர்கள், உயர்பீட உறுப்பினர்கள் தங்களது சபைகளை வெல்ல வைத்தால் கட்சி உங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத்தந்து உங்களையும், உங்களது பிரதேசத்தையும் கௌரவப்படுத்தும் எனவும் தெரிவித்தார்.

சாணக்கியன் எம்.பி வெளியிட்ட முக்கிய செய்தி!

முன்னணி சோசலிசக் கட்சிக்கு அச்சமடைந்து தற்போதைய அரசாங்கம் படலந்த ஆணைக்குழு அறிக்கையை தாக்கல் செய்ததாக பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். 

மக்கள் விடுதலை முன்னணியின் சில தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். 

பாராளுமன்றத்தில் இன்று (15) நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கோர விபத்தில் வாலிபர் பரிதாபமாக பலி!

பளை போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பளைகரந்தாய் பகுதியில் நேற்றைய தினம் 14.03.2025. நள்ளிரவு11.50 மணியலவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த பார ஊர்தியும் கிளிநொச்சி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று நேரடியாக மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவத்தின் தொடர்புடைய பார ஊர்தியின் சாரதி பளை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பளை வடக்கு கொடிகாமத்தை சேர்ந்த 23 வயதுடைய மகேந்திரன் நிசாந்தன் என்னும் இளைஞனே குறித்த விபத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவுகளிடம் ஒப்படைக்க பளை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பாக பளை போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்

ஆரம்பமானது வன உயிரினங்கள் கணக்கெடுப்பு!

விவசாயப் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் வன உயிரினங்கள் பற்றிய தேசிய கணக்கெடுப்பு இன்று (15) காலை 8.00 – 8.05 மணிக்கு ஆரம்பமானது.

உங்கள் தோட்டம், விவசாய நிலம், பாடசாலை, வழிபாட்டுத் தலம் அல்லது நிறுவனத்தில் இருக்கும் குரங்குகள், அணில்கள் மற்றும் மயில்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவத்தில் பதிவு செய்து உங்கள் பிரதேச கிராம அலுவலர் அல்லது பொருளாதார மேம்பாட்டு அலுவலர் அல்லது சமுர்த்தி மேம்பாட்டு அலுவலர் அல்லது விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளரிடம் கையளிக்குமாறு விவசாய, கால்நடை வளர்ப்பு, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு அறிவித்துள்ளது. 

மேலும், இன்று நடைபெறவிருக்கும் வன உயிரினங்கள் பற்றிய தேசிய கணக்கெடுப்புக்குத் தேவையான துண்டுப் பிரசுரங்கள் தற்போது நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் ஜீ.ஜீ.வீ. ஷியாமலி தெரிவித்தார். 

உணவுப் பாதுகாப்பு மற்றும் பயிர் இழப்புகளைக் குறைத்தல் ஆகிய முதன்மை நோக்கங்களுடன் இந்த கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

அதற்கமைய கிளிநொச்சி மாவட்டத்தில் கிராம சேவையாளர்கள் மூலம் வழங்கப்பட்ட படிவங்களுக்கு அமைய பயிர்நிலங்கள், வழிபாட்டு தலங்கள், பாடசாலைகள் பொது இடங்களில் இன்றைய தினம் கணக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை இந்த கணக்கெடுப்பு விடயம் நாடு பூராகவும் பேசும் பொருளாக மாறி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்

Click here to join our whatsApp group