Thursday, August 6, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsக.பொ.த உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அதிரடி அறிவிப்பு!

க.பொ.த உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அதிரடி அறிவிப்பு!

அனர்த்த முகாமைத்துவ மையம் (DMC), பரீட்சைத் திணைக்களம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மற்றும் முன்னணி அரச நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் பங்கேற்ற அவசரக் கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இடம்பெற்றது. இக்கூட்டத்திலேயே பரீட்சைகளை எவ்வித தடையுமின்றி நடத்துவதென ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

மாணவர்களினதும் பெற்றோர்களினதும் கவனத்தை ஈர்த்துள்ள இந்த தீர்மானத்திற்குப் பின்னணியில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் நம்பிக்கை தரும் கணிப்புகளே பிரதான காரணமாக அமைந்துள்ளன. பரீட்சை காலத்தில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய மோசமான காலநிலை எதுவுமில்லை என வானிலை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஆனாலும், மாணவர்களின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்ய அதிகாரிகள் தயார் இல்லை. தற்போதைய காலநிலை சீராக இருந்தாலும், நிலைமைகளை தொடர்ச்சியாக 24 மணிநேரமும் தீவிரமாகக் கண்காணிக்க சிறப்பு பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை எதிர்பாராத விதமாக காலநிலை மாறினால், மாணவர்களுக்கு எவ்வித அசௌகரியமும் ஏற்படாத வகையில் உடனடியாக மாற்று நடவடிக்கைகள் எடுக்கத் தயாராக இருப்பதாகவும் பரீட்சைத் திணைக்களம் உறுதியளித்துள்ளது. எனவே, வதந்திகளை நம்பாமல் மாணவர்கள் தங்களது பரீட்சைக்கான ஆயத்தங்களை நம்பிக்கையுடன் தொடர முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Shaahy Products - ABC Malt

Official Instagram

Most Popular

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular