Sponsored Advertisementspot_img
HomeWorld Newsநிலத்தைக் கொடுத்துட்டு நேட்டோவுல சேரச் சொல்லும் அமெரிக்கா!

நிலத்தைக் கொடுத்துட்டு நேட்டோவுல சேரச் சொல்லும் அமெரிக்கா!

  • நிலத்தைக் கொடுத்தால் நேட்டோ உறுப்புரிமை! உக்ரைனுக்கு அமெரிக்கா வைத்த அதிரடி ‘டீல்’!
  • அபுதாபியில் ரகசிய சமாதானப் பேச்சு: ரஷ்யாவுக்காக டொன்பாஸை விட்டுக்கொடுக்க மறுத்த ஸெலென்ஸ்கி!
  • ட்ரம்பின் சமாதானத் திட்டம்: புடினுக்கும் ஸெலென்ஸ்கிக்கும் இடையே முட்டுக்கட்டையான நேட்டோ விவகாரம்!

ரஷ்ய – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தலையீட்டில் முன்னெடுக்கப்படும் சமாதானப் பேச்சுவார்த்தைகளில், சர்வதேச அரசியலையே அதிரவைக்கும் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள கிழக்கு உக்ரைனின் டொன்பாஸ் (Donbas) மாகாணத்தை ரஷ்யாவிடம் கையளிக்க உக்ரைன் சம்மதித்தால், உக்ரைனுக்கு நேட்டோ (NATO) அமைப்பின் உறுப்புரிமையைப் பெற்றுத் தர முடியும் என அமெரிக்கா யோசனை முன்வைத்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி ஊடகவியலாளர் சந்திப்பில் பகிரங்கப்படுத்தியுள்ளார்.

டொன்பாஸ் பிராந்தியத்திலிருந்து உக்ரைன் படைகளைத் திரும்பப் பெறுவதற்குப் பதிலாக நேட்டோ உறுப்புரிமையை வழங்க முடியுமா என அமெரிக்கப் பிரதிநிதிகள் வினவிய முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். எனினும், இந்த அதிரடி யோசனைக்குப் பதிலளித்த ஜனாதிபதி ஸெலென்ஸ்கி, தமது நாட்டின் இறைமையை ரஷ்யாவிடம் அடகு வைக்க உக்ரைன் பிரஜைகள் எவரும் தயாராக இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி நகரில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் நடைபெற்று வரும் இந்தப் பேச்சுவார்த்தைகளில், ட்ரம்பின் பிரதிநிதிகளான ஜாரெட் குஷ்னர் மற்றும் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இவர்கள் இருவரும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை நேரில் சந்தித்து இந்தத் திட்டம் குறித்து விரிவாகக் கலந்துரையாடியுள்ளனர். இதில் சுவாரசியமான விடயம் என்னவென்றால், டொன்பாஸ் மாகாணத்தை ரஷ்யாவுடன் இணைத்துக் கொள்வதில் புடினுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லாத போதிலும், அதற்குப் பிரதியீடாக உக்ரைனுக்கு நேட்டோ உறுப்புரிமை வழங்கப்படுவதை அவர் கடுமையாக எதிர்க்கிறார் என்பதாகும்.

அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் துருக்கி ஆகியவற்றை உள்ளடக்கிய ‘நேட்டோ’ இராணுவக் கூட்டணியானது, ரஷ்யாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நோக்கிலேயே உருவாக்கப்பட்டது. ரஷ்யாவின் மிக நெருங்கிய அயல்நாடான உக்ரைன் இந்த நேட்டோ கூட்டணியில் இணைவது, தமது தேசிய பாதுகாப்பிற்குப் பாரிய அச்சுறுத்தலாக அமையும் என்பதாலேயே ஜனாதிபதி புடின் உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்திருந்தார். அதன் விளைவாகவே டொன்பாஸ் உள்ளிட்ட கிழக்கு உக்ரைனின் பல மாகாணங்களை ரஷ்யப் படைகள் கைப்பற்றியுள்ள நிலையில், அபுதாபி பேச்சுவார்த்தையின் அடுத்தகட்ட நகர்வுகள் உலக நாடுகளின் உன்னிப்பான கவனத்தைப் பெற்றுள்ளன.

RELATED ARTICLES

ALTEC SOLUTION

Official Instagram

Most Popular

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular