இலங்கையின் பல மாவட்டங்களில் இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதானிப்பு நிலையம் அறிவித்துள்ளது.
பல பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்கள், பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்கள் மேலும், தென் மாகாணத்தின் கரையோரப் பகுதிகள் மற்றும் களுத்துறை, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகாலை வேளையில் பயணங்களை மேற்கொள்பவர்கள் மற்றும் மலையகப் பகுதிகளில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்கள், அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் அதிக பனிமூட்டம் நிலவக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். அத்துடன் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய அபாயமும் காணப்படுவதால், பொது மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


