Sponsored Advertisementspot_img
HomeMuslim Worldபிரதி சபாநாயகரானார் பலஸ்தீனிய எம்.பி அஹ்மத் திபி!

பிரதி சபாநாயகரானார் பலஸ்தீனிய எம்.பி அஹ்மத் திபி!

  • இஸ்ரேல் பாராளுமன்றத்தில் அதிரடி திருப்பம்! நெதன்யாகு தரப்பின் எதிர்ப்பையும் மீறி பிரதி சபாநாயகரானார் பலஸ்தீனிய எம்.பி அஹ்மத் திபி!
  • யார் இந்த அஹ்மத் திபி? அரபாத்தின் ஆலோசகர் முதல் இஸ்ரேல் பாராளுமன்ற பிரதி சபாநாயகர் வரை – ஒரு நெருப்புப் பயணம்!
  • தீவிர வலதுசாரிகளுக்கு விழுந்த மரண அடி: இஸ்ரேல் பாராளுமன்றத்தின் உயர்பதவியில் அமர்ந்த அரேபிய தலைவர்!
  • பாராளுமன்றத்திற்குள்ளேயே ‘பாங்கு’ (அதான்) ஓதிய புரட்சியாளர்: இன்று இஸ்ரேல் சபையின் பிரதி சபாநாயகர்!

இஸ்ரேலிய அரசியல் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திருப்பமாக, அரேபிய புத்துயிர் இயக்கத்தின் (Ta’al) தலைவர் அஹ்மத் திபி, இஸ்ரேலிய பாராளுமன்றத்தின் (Knesset) பிரதி சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இஸ்ரேலிலுள்ள பலஸ்தீனிய குடிமக்களின் உரிமைகளுக்காகப் பல தசாப்தங்களாகத் துணிச்சலுடன் குரல் கொடுத்து வரும் ஒரு சிரேஷ்ட அரசியல்வாதிக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக இது பார்க்கப்படுகிறது.

தனது தெரிவுக்குப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட அஹ்மத் திபி, இஸ்ரேலிய அரசாங்கத்திலுள்ள தீவிர வலதுசாரி கட்சிகளுக்கு எதிரான ஒரு வரலாற்று வெற்றியாக இதனைப் பதிவு செய்துள்ளார். பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் (Likud) கட்சியும், தீவிர வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விரும் தமது தெரிவைத் தடுக்கப் பாரிய தூண்டுதல்களை மேற்கொண்ட போதிலும், 19 ஆசனங்களைப் பெற்றுள்ள ‘கூட்டுப் பட்டியல்’ (Joint List) கூட்டணியின் நியாயமான உரிமையை அவர்களால் தடுக்க முடியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யார் இந்த அஹ்மத் திபி? 1948 ‘நக்பா’ (Nakba) பேரழிவின் போது ஜாஃபா நகரிலிருந்து இடம்பெயர்ந்த குடும்பத்தில், 1958 டிசம்பர் 19 அன்று தைபே நகரில் இவர் பிறந்தார். 1983 ஆம் ஆண்டு ஜெருசலேம் ஹீப்ரு பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறையில் முதன்மைச் சித்தி பெற்றுப் பட்டம் பெற்ற இவர், மருத்துவத் தொழிலை விடவும் பலஸ்தீனிய மக்களுக்கான அரசியல் விடுதலைப் போராட்டத்தையே தனது வாழ்க்கைப் பாதையாகத் தேர்ந்தெடுத்தார்.

அன்றைய இஸ்ரேலிய சட்டங்கள் பலஸ்தீன விடுதலை இயக்கத்தை (PLO) ‘பயங்கரவாத அமைப்பு’ எனத் தடை செய்திருந்த காலத்திலேயே, 1984 இல் துனிசியாவுக்குச் சென்று அதன் தலைவர் யாசர் அரபாத்தைச் சந்தித்து அதிர்வலைகளை ஏற்படுத்தினார். பின்னர் 1993 முதல் 1999 வரை யாசர் அரபாத்தின் முக்கிய அரசியல் ஆலோசகராகப் பணியாற்றியதுடன், 1998 அமெரிக்காவின் ‘வை ரிவர்’ (Wye River) அமைதி உச்சிமாநாட்டில் பலஸ்தீனியப் பிரதிநிதிகளின் பேச்சாளராகவும் செயற்பட்டார்.

1996 இல் ‘தாஅல்’ (Ta’al) கட்சியைத் தொடங்கி 1999 இல் முதன்முறையாக பாராளுமன்றத்திற்குள் நுழைந்த திபி, தன்னை எப்போதும் “இஸ்ரேலிய குடியுரிமை கொண்ட அரேபிய பலஸ்தீனியன்” என்றே அடையாளப்படுத்துகிறார். இஸ்ரேலை ஒரு ‘யூத அரசு’ என அழைப்பதை நிராகரிக்கும் இவர், அதனை ஒரு ‘இனவொதுக்கல் அரசு’ (Apartheid state) என வெளிப்படையாக விமர்சித்து வருகிறார்.

இவரது அரசியல் பயணம் எப்போதும் முள் நிறைந்ததாகவே இருந்துள்ளது. 2000 ஆம் ஆண்டு இரண்டாம் ‘இன்டிபாடா’ எழுச்சியின் போது, அல்-அக்ஸா பள்ளிவாசல் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த ஏரியல் ஷரோனை எதிர்த்துப் போராடியதில் திபியின் வலது கை உடைக்கப்பட்டது. 2002 இல் ஜெனின் அகதி முகாமிற்குள் இராணுவத் தாக்குதலின் போது நுழைந்ததற்காக இவரது பாராளுமன்றச் சிறப்புரிமை பறிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, 2016 இல் ஒலிபெருக்கிகளுக்குத் தடை விதிக்கும் இஸ்ரேலின் சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இஸ்ரேலிய பாராளுமன்றச் சபைக்குள்ளேயே இஸ்லாமியர்களின் தொழுகை அழைப்பான ‘அதான்’ (பாங்கு) ஓதி உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் இந்த அஹ்மத் திபி என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

ALTEC SOLUTION

Official Instagram

Most Popular

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular