Wednesday, June 3, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய உள்ளிட்ட மூவருக்கு பயணத்தடை!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய உள்ளிட்ட மூவருக்கு பயணத்தடை!

கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கையில் நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் வெளிநாட்டுப் பயணத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.​

ஈஸ்டர் ஞாயிறு தொடர் தற்கொலைத் குண்டுத்தாக்குதல்கள் குறித்து தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விரிவான விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்த அதிரடி உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.​

இத்தாக்குதல்களின் பின்னணியில் உள்ள சூழ்ச்சிகள் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) தீவிர விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ள நிலையிலேயே, சம்பந்தப்பட்டவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதைத் தடுக்கும் நோக்கில் இப்பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.​

இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் அரசியல் நோக்கம் மற்றும் சதி இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ச்சியாக மறுத்து வரும் நிலையில் குறித்த தீர்ப்பு வெளியாகியுள்ளமை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

​உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தரும் வகையில், தற்போதுள்ள அரசாங்கம் இந்த விசாரணைகளை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ள சூழலில், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular