Sponsored Advertisementspot_img
HomeWorld Newsவெனிசுலாவைத் தொடர்ந்து கியூபாவா? டிரம்ப்பின் இலக்கு!

வெனிசுலாவைத் தொடர்ந்து கியூபாவா? டிரம்ப்பின் இலக்கு!

சர்வதேச அரசியல் சூழலில் நிலவும் அசாதாரண நிலையில், பல நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேலும் சிக்கலாக்கி வருகிறது. குறிப்பாக பொருளாதார தடைகள், எரிசக்தி விநியோக கட்டுப்பாடுகள் மற்றும் ஆட்சி மாற்றம் இணைந்து சில புதிய பதற்றங்களை உருவாக்குகின்றன. இத்தகைய சூழ்நிலையில், அமெரிக்கா மற்றும் கியூபா இடைய மீண்டும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

அமெரிக்கா வெனிசுலா நாட்டில் தாக்குதல் நடத்தி அந்நாட்டின் அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்து நாடு கடத்திய பின்பு, டிரம்ப் அடுத்த தாக்குதல் கியூபா மீது தான் பேசினார். ஆனால் அதன் பின்பு டிரம்ப்-ன் முக்கிய இலக்காக ஈரான் மாறியது. இந்த நிலையில் டிரம்ப் மீண்டும் கியூபா மீது கவனத்தை திருப்பியுள்ளார்.

அமெரிக்க பாதுகாப்புத் துறை பென்டகன், கியூபாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைக்கான முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

USA TODAY வெளியிட்ட அறிக்கையின் படி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டால் உடனடி தாக்குதலுக்கு தயாராக இருக்கும் வகையில் பல்வேறு சாத்தியமான சூழ்நிலைகளில் எப்படி தாக்குதல்களை மேற்கொள்ள முடியும் என்பது குறித்து ஆய்வுகளை பென்டகன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக, பாதுகாப்புத் துறை வெளியிட்ட விளக்கத்தில் “அனைத்து வகையான அவசர நிலைகளுக்கும் திட்டமிடுவது வழக்கமான செயல்முறை” என்று தெரிவித்துள்ளது. எனினும், கியூபா மீதான ராணுவ நடவடிக்கை திட்டங்கள் குறித்து வெளிப்படையான விபரங்களை கொடுக்கவில்லை. 2026 தொடக்கத்திலிருந்து அமெரிக்கா கியூபாவிற்கு செல்லும் எண்ணெய் விநியோகத்தை கட்டுப்படுத்தியதன் மூலம் இருநாடுகளுக்கிடையேயான உறவு மோசமடைந்தது.

மேலும், கியூபாவில் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அமெரிக்க நிர்வாகம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. அதே சமயம், பொருளாதார ஒப்பந்தங்கள் மூலம் பதற்றத்தை குறைக்க முயற்சிகளும் நடைபெறுகின்றன. ஆனால், இந்த பேச்சுவார்த்தைகள் எவ்வாறு முடியும் என்பது தெளிவாக இல்லை.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் கியூபாவை குறித்து வெளியிட்ட கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. தேவையானால் கியூபாவை கைப்பற்றலாம் அல்லது விடுவிக்கலாம் என்ற அவரது கருத்து, அரசியல் மற்றும் ராணுவ நடவடிக்கைகள் குறித்து சந்தேகங்களை அதிகரித்துள்ளது.

இதற்கு கியூபா அதிபர் மிகல் டியாஸ்-கானெல், அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கையையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக எச்சரித்துள்ளார். நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க போராடுவோம் என்று மிகல் டியாஸ் கூறியது இருநாடுகளுக்கிடையேயான பதற்றம் தீவிரமடைந்துள்ளதைக் காட்டுகிறது.

மேலும், கியூபா ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்ற அமெரிக்க குற்றச்சாட்டுகளும் ராணுவ தாக்குதலை சிக்கலாக்குகின்றன. அமெரிக்கா-கியூபா உறவில் தற்போது உருவாகியுள்ள இந்த பதற்றம், உலக அரசியல் சமநிலைக்கு முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.

குறிப்பாக தென் அமெரிக்காவில் உருவாகியுள்ள இந்த பதற்றம் மூலம் உலகம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை உருவாக்கியுள்ளதை காட்டுகிறது.

RELATED ARTICLES

ALTEC SOLUTION

Official Instagram

Most Popular

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular