Friday, April 17, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஎரிசக்தி அமைச்சர் ஜனாதிபதிக்கு எழுதிய உருக்கமான கடிதம்!

எரிசக்தி அமைச்சர் ஜனாதிபதிக்கு எழுதிய உருக்கமான கடிதம்!

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு அனுப்பிய கடிதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

“நிலக்கரி விநியோகம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமிக்க எடுத்த தீர்மானத்தையும், 2009ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி இறக்குமதிகள் குறித்து முறையான விசாரணையை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி செயலாளர் ஊடாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்தமையையும் நான் பெரிதும் பாராட்டுகிறேன். இதன் மூலம் ஊழலுக்கு எதிராகவும், மக்கள் ஆணையை நிறைவேற்றுவதிலும் உங்களுக்கு இருக்கும் துணிச்சலான உறுதிப்பாட்டை இது வெளிப்படுத்துகிறது.

எவ்வாறாயினும், இனிவரும் காலங்களில் மேற்கொள்ளப்படவுள்ள விசாரணை நடவடிக்கைகள் மிகவும் சுதந்திரமாகவும், எந்தவொரு பக்கச்சார்பின்றியும் முன்னெடுக்கப்பட வேண்டும் என நான் நம்புகிறேன். இந்த விசாரணைகள் இடம்பெறும் காலப்பகுதியில் நான் இப்பதவியில் நீடிப்பது அதற்கு ஒரு தடையாக அமையக்கூடும் என்ற நிலப்பாட்டில் இருந்து, 17.04.2026 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிசக்தி அமைச்சர் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளேன்.

இந்த விசாரணை நிறைவடைந்து உண்மை மக்களுக்குத் தெளிவுபடுத்தப்படும் வரை நான் இத்தீர்மானத்தில் உறுதியாக இருப்பேன். அத்துடன், இந்த விசாரணைகளின் மூலம் கிடைக்கப்பெறும் எந்தவொரு முடிவையும் நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வேன். தூய்மையான அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்காக நீங்களும் அரசாங்கமும் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டங்களுக்கு எனது ஆதரவு எப்போதும் இருக்கும்.”

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular