Sunday, April 19, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsவடக்கில் இடம்பெற்ற சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம்!

வடக்கில் இடம்பெற்ற சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம்!

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு விளையாட்டுத் திணைக்களத்துடன் இணைந்து நடத்திய ‘வடக்கு மாகாண சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம் – 2026’, கரவெட்டி இமையாணன் மத்திய விளையாட்டுக் கழக மைதானத்தில் கடந்த (17.04.2026) அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வில் விழா மைதானத்துக்கு வருகை தந்த விருந்தினர்கள் பாரம்பரிய முறைப்படி கௌரவமாக வரவேற்று அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த தமிழ் மற்றும் சிங்களப் பாரம்பரியக் குடில்களை விருந்தினர்கள் பார்வையிட்டனர்.

மேலும் மைதானத்தில் மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், உள்ளூர் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகள் அடங்கிய கண்காட்சிக்கூடங்களையும் விருந்தினர்கள் பார்வையிட்டனர்.

மேடை நிகழ்வுகளாக, வரவேற்பு நடனம், பேடிக்கூத்து, கண்டிய நடனம், கண்ணன் நடனம், பாரம்பரிய சிங்கள நடனம், புத்தாக்க நடனம், பாம்பு நடனம், தில்லானா நடனம் ஆகியனவும் இடம்பெற்றன.

அதேநேரம், பாரம்பரிய விளையாட்டுக்களான வழுக்கு மரம் (கிறீஸ் மரம்) ஏறுதல், தலையணைச் சண்டை உள்ளிட்ட பல கிராமிய விளையாட்டுப் போட்டிகளும் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular