Tuesday, July 14, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஇராணுவத் தளபதி நியமனத்தின் பின்னணியில் கர்தினால்?

இராணுவத் தளபதி நியமனத்தின் பின்னணியில் கர்தினால்?

இலங்கை அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், இராணுவத்தின் மிக உயரிய பதவியான இராணுவத் தளபதியின் பதவிக்கால நீடிப்பு விவகாரத்தில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலையிடுவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தாசனாயக்க அதிரடி குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

தற்போதைய இராணுவத் தளபதியின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் கடந்த ஜூலை 2 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ள பின்னணியில், அவரது பதவிக்காலத்தை மேலும் 2028 ஜனவரி வரை நீடிப்பதற்கான இரகசிய நகர்வுகள் அரசாங்கத்திற்குள் அரங்கேறி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தன்னிச்சையான பதவிக்கால நீடிப்பு காரணமாக, இராணுவத்தில் அடுத்த கட்ட உயர் பதவிகளுக்கு வர வேண்டிய நிலாந்த பிரேமரத்ன உள்ளிட்ட பல தகுதியான சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதாகவும் சாமர சம்பத் சாடியுள்ளார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “அரசாங்கத்தில் உள்ளவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மகாநாயக்க தேரர்களைச் சந்திப்பது வழக்கம். ஆனால், தற்போதைய சூழலில் இராணுவத் தளபதி மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) பணிப்பாளர் போன்ற மிக முக்கிய பதவிகளுக்கு யாரை நியமிப்பது என்பதை கர்தினாலே தீர்மானிக்கிறார் போல தெரிகிறது. இலங்கையின் கர்தினால் ஒருவேளை போப் ஆண்டகையாகத் தெரிவு செய்யப்படாமல் இருந்தது நல்லது, இல்லையெனில் இலங்கை மற்றொரு வத்திகானாக மாறியிருக்கும்” என மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அத்தோடு, கத்தோலிக்க மதகுருமார் சிலர் மட்டக்களப்பில் உள்ள இராணுவத்தின் விடுதி உல்லாச மையங்களில் தங்கி ஆடம்பரங்களை அனுபவித்துள்ளதாகவும் அவர் இதன்போது அம்பலப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, நாட்டு மக்கள் அதிகளவு சோறு உட்கொள்வதாகக் குறிப்பிட்டிருந்த அமைச்சர் லல்காந்தவின் கருத்துக்குப் பதிலளித்த சாமர சம்பத், “சோற்றுக்கு பதிலாக நாம் என்ன சாப்பிட வேண்டும் என்று அமைச்சர் விரும்புகிறார்?” என நகைச்சுவையாகக் கேள்வி எழுப்பினார்.

மறுபுறம், இந்த அரசியல் அடக்குமுறைகளுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும் தனது கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், பயங்கரவாத தடுப்புச் சட்டம் (PTA) மற்றும் பொதுச் சொத்துக்கள் சட்டத்தைப் பயன்படுத்தி எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை அரசாங்கம் வேட்டையாடி வருவதாகக் குற்றம் சாட்டினார். அரசாங்கம் இந்த அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்தத் தவறினால், ஒன்றிணைந்த எதிர்க்கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மிக விரைவில் கொழும்பு வீதிகளில் இறங்கிப் போராடுவது உறுதி எனவும் அவர் தனது உரையில் சூளுரைத்தார்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular