Tuesday, July 14, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsபெற்றோரைக் கொடூரமாக வெட்டிச்சாய்த்த 26 வயது மகன்!

பெற்றோரைக் கொடூரமாக வெட்டிச்சாய்த்த 26 வயது மகன்!

எம்பிலாபிட்டிய, கிரலவெல்கடுவ பிரதேசத்தில் ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கிய கொடூரமான இரட்டைக் கொலைச் சம்பவமொன்று அரங்கேறியுள்ளது. பெற்ற கடனுக்காகவும் பாசத்திற்காகவும் உயிராய் வளர்த்த தாய், தந்தையை, அவர்களது சொந்த மகனே வெட்டிக்கொலை செய்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தவர்கள் 58 வயதுடைய தந்தை மற்றும் 54 வயதுடைய தாய் எனப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். குடும்பத்திற்குள் நீண்டநாட்களாக புகைந்துகொண்டிருந்த தனிப்பட்ட தகராறு ஒன்று, சம்பவ தினத்தன்று வாய்த்தர்க்கமாக மாறியுள்ளது. இந்த வாக்குவாதம் எல்லை மீறிச் சென்ற நிலையிலேயே, கோபத்தின் உச்சிக்குச் சென்ற மகன் இக்கொடூரச் செயலைச் செய்துள்ளார்.

அப்பகுதியையே உறைக்கச் செய்த இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில், தம்பதியரின் 26 வயதுடைய மகன் பொலிஸாரால் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான மகனிடம் கொலையின் பின்னணி குறித்துப் பொலிஸார் வாக்குமூலங்களைப் பெற்று வருகின்றனர்.

தற்போது இக்கோரச் சம்பவம் தொடர்பில் எம்பிலாபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளதுடன், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகின்றது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular