Sponsored Advertisementspot_img
HomeLocal Newsநவீன பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகும் அநுராதபுரம்!

நவீன பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகும் அநுராதபுரம்!

  • அநுராதபுரத்தின் பிரசித்தி பெற்ற இரு பூங்காக்களுக்கு புதிய பொலிவு: மாநகர சபை அதிரடி திட்டம்!
  • வரலாற்றுப் பின்னணியை சிதைக்காமல் நவீன மயப்படும் ரன்மசு உயன, ஒட்லி சேனாநாயக்க பூங்காக்கள்!
  • உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் நவீன பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகும் அநுராதபுரம்!

ஜுட் சமந்த

வரலாற்றுப் பெருமைமிக்க புனித பூமியான அநுராதபுரத்திற்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு புதியதோர் அனுபவத்தை வழங்கும் நோக்கில், நகரிலுள்ள முக்கிய இரண்டு பொதுப் பூங்காக்களை நவீன தரத்திற்கு உயர்த்த அநுராதபுரம் மாநகர சபை அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

கும்பிச்சன்குளம் குளத்தை நோக்கியுள்ள இயற்கை எழில் கொஞ்சும் ‘ரன்மசு உயன’ மற்றும் புகையிரத நிலைய நகர்ப் பகுதியில் அமைந்துள்ள ‘ஒட்லி சேனாநாயக்க பூங்கா’ ஆகியவையே இவ்வாறு முழுமையான புனரமைப்புக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன. எனினும், இப்பகுதிகளின் தனித்துவமான சுற்றாடல் சமநிலையோ அல்லது அதன் தொல்பொருள் வரலாற்றுப் பின்னணியோ துளியளவும் பாதிக்கப்படாத வகையிலேயே இந்த அபிவிருத்திகள் திட்டமிடப்பட்டுள்ளன.

இதன் மூலம் வெறும் பார்வைத் தலங்களாக மட்டும் நின்றுவிடாமல், அனைத்து வயதினரையும் கவரும் பன்முகப் பொழுதுபோக்கு மையங்களாக இவை உருவெடுக்கவுள்ளன. இளைஞர்களைக் கவரும் சாகச விளையாட்டுக்கள், குடும்பத்தோடு மகிழ்ந்திருக்கக்கூடிய எளிய நீர்சார் விளையாட்டுக்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிரத்தியேக திறந்தவெளி பொழுதுபோக்கு அம்சங்கள் இங்கு கட்டமைக்கப்படவுள்ளன.

சுற்றுலாப் பயணிகளின் ரசனையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், வாராந்த உள்ளூர் பாரம்பரிய உணவுத் திருவிழாக்கள், நவீன கஃபே (Café) வசதிகள், கண்கவர் இரவு நேர மின்விளக்கு அலங்காரங்கள் மற்றும் திறந்தவெளி இசை/கலை நிகழ்ச்சிகளுக்கான விசேட தளங்களும் உருவாக்கப்பட உள்ளன. அத்துடன், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் காணொளிப் பதிவாளர்களை (Vloggers) கவரும் வகையிலான பிரத்தியேக படப்பிடிப்பு இடங்களும் நவீன சுகாதார வசதிகளும் சர்வதேச தரத்தில் நிறுவப்படவுள்ளன.

புனித நகரத்தின் வரலாற்றுப் பெருமைக்கு எவ்வித பங்கமும் நேராத வகையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த நவீன வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதே இந்த வேலைத்திட்டத்தின் பிரதான இலக்கு என அநுராதபுரம் மாநகர ஆணையாளர் என்.எச்.ஆர். நிஷாந்த உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

ALTEC SOLUTION

Official Instagram

Most Popular

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular