Saturday, November 15, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 112

வெளியாகிய தேர்தல் முடிவுகள்!

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான முதலாவது உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

அம்பாந்தோட்டை மாவட்டம் தங்காலை நகர வாக்களிப்பு முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.

அதன்படி, அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலை நகர சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தேசிய மக்கள் சக்தி (NPP) – 2,260 வாக்குகள் – 9 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1,397 வாக்குகள் – 5 ஆசனங்கள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 795 வாக்குகள் – 3 ஆசனங்கள்

ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 265 வாக்குகள் – 1 ஆசனங்கள்

சர்வஜன அதிகாரம் (SB)- 177 வாக்குகள் – 1 ஆசனங்கள்

சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்.

0

சீதுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லியனகேமுல்ல, சீதுவை பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவரை கைது செய்வதற்கு சீதுவை பொலிஸார்  பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர்  மாதம் 28 ஆம் திகதி சீதுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லியனகேமுல்ல, சீதுவை பிரதேசத்திற்கு காரில் சென்ற இனந்தெரியாத நபர்கள் சிலர் மூன்று நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்தார்.

இதனையடுத்து சீதுவை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

எவ்வாறிருப்பினும் சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரின் புகைப்படங்களை பொலிஸார் தற்போது வெளியிட்டுள்ளனர்.

சந்தேக நபரின் விபரங்கள் :

1.பெயர் – மொஹொமட் அஸ்மன் ஷெரிப்டின் 
2. தேசிய அடையாள அட்டை இலக்கம் – 911013363V
3. முகவரி – இரத்தொலுகம, கட்டுவன வீதி, ஹோமாகம

இந்த புகைப்படங்களில் உள்ள சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் சீதுவை பொலிஸ் நிலையத்தின் 071 – 8591637 அல்லது 011 – 2253522 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாக்குப்பதிவில் முன்னணயில் மன்னார்!

0

இன்று (06) மதியம் 12 மணி வரையான நிலவரப்படி, தேர்தல் மாவட்டங்கள் பலவற்றில் வாக்குப்பதிவு வீதம் 30% ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

இன்று மாலை 4 மணி அளவில் பொது மக்கள் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதுவரை பதிவாக வாக்குப்பதிவு வீதம் பின்வருமாறு,

கொழும்பு – 28%
கேகாலை – 33%
திகாமடுல்ல – 31%
புத்தளம் – 30%
அநுராதபுரம் – 30%
பொலன்னறுவை – 34%
பதுளை – 36%
இரத்தினபுரி – 30 %
மன்னார் – 40 %
திருகோணமலை -36%
காலி – 35%
மாத்தறை – 42%
கிளிநொச்சி 39.8%

வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு!

2025ம் ஆண்டுக்கான கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளுக்குமான தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவிக்கையில், மாவட்டத்தில் 102387பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதுடன், 108வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.

40 வாக்கெண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், 1450 உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை முதலாம் கட்ட வாக்குப் பெட்டிகளுடன் பேரூந்துக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு இன்று காலை அனுப்பிவைக்கப்பட்டன.

நாளைய தினம் (06.05.2025) நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பாக, சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் முழங்காவில் வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்லும் முதலாவது பேரூந்து இன்றைய தினம் (05.05.2025) காலை 08.30 மணிக்கு புறப்பட்டுச்சென்றது.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.S.முரளிதரன் அவர்களும், உதவித் தேர்தல் ஆணையாளர் திரு.வே. சிவராசா அவர்களும் இதன்போது இணைந்து அனுப்பிவைத்தனர்.

தொடர்ச்சியாக ஏனைய வாக்களிப்பு நிலையங்களுக்கான பேரூந்துகளை அனுப்பும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

8 வேட்பாளர்கள் கைது!

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணிநேரத்தில் 8 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

நேற்று (04) காலை 6 மணிமுதல் இன்று (05) காலை 6 மணி வரையான காலப்பகுதியிலேயே மேற்படி வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு, குறித்த காலப்பகுதியில் கட்சிகளின் ஆதரவாளர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதேவேளை, கடந்த மார்ச் 3 ஆம் திகதி முதல் இன்று வரை கைது செய்யப்பட்ட மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது. 

குறித்த காலப்பகுதியில் 204 கட்சி ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டனர். 

இதற்கிடையில், தேர்தல் சட்டங்களை மீறியதற்காக பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 46 ஆகும்.

ஆஸ்திரேலியா தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி!

0

ஆஸ்திரேலியாவில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில், பிரதமர் ஆன்டனி அல்பனீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது.

இதையடுத்து, ஆன்டனி அல்பனீஸ் மீண்டும் பிரதமராக உள்ளார். பசிபிக் தீவு நாடான ஆஸ்திரேலியாவில், பார்லிமென்ட் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது.

மொத்தம் 150 தொகுதிகளுக்கான தேர்தலில், ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஆன்டனி அல்பனீஸ் தலைமையில்ஆளுங்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும், பீட்டர் டட்டன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சிக்கும் கடும்போட்டி நிலவியது.

ஏராளமானோர் ஆர்வத்துடன் ஓட்டளித்த நிலையில், பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில், ஆளுங்கட்சி பெரும்பான்மை இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சி, சொற்ப இடங்களையே கைப்பற்றியது.

இதன் வாயிலாக, ஆஸ்திரேலிய பிரதமராக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆன்டனி அல்பனீஸ் பதவியேற்க உள்ளார். இது, அந்நாட்டில் 21 ஆண்டுகளுக்குபின் நடைபெறும் நிகழ்வாக கருதப்படுகிறது.

இதற்கிடையே, ஆதரவாளர்களிடையே ஆன்டனி அல்பனீஸ் பேசுகையில், ”நாட்டின் எதிர்காலத்தை கட்டமைக்கும் பணியை நாம் மேற்கொள்ள வேண்டும்.

”நாங்கள் யாரிடமும் கையேந்த வேண்டிய அவசியம் இல்லை. நம் உத்வேகத்தை வெளியே தேடவேண்டியதில்லை; நம் மக்களிடமே அதை காணலாம்,” என்றார்.

பார்லிமென்ட் தேர்தலில் வெற்றி பெற்ற ஆன்டனி அல்பனீசுக்கு, நம் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்த தயார்!

0

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகவுள்ளது என, மேலதிக தேர்தல் ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன் தெரிவித்துள்ளார். 

சூரியனின் செய்திப் பணிப்பாளர் பரமேஷ்வரன் விக்னேஷ்வரனின் நெறியாள்கையில் ஒலிபரப்பான விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அவர் இதனைக் குறிப்பிட்டார். 

எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்படாமையினால் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் சட்டச் சிக்கல் காணப்படுகிறது. 

பழைய முறையிலாவது மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

எனவே, நாடாளுமன்றத்தில் இது தொடர்பான சட்டம் நிறைவேற்றப்படுமாயின், எந்த நேரத்திலும் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் என மேலதிக தேர்தல் ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பான முழுமையான காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையகத்தின் மிக முக்கிய அறிவிப்பு!

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று (03) நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைந்தது. 

அதன்படி, இன்று தொடங்கும் அமைதி காலத்தில் வேட்பாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் எந்தவித பிரச்சார நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவுறுத்தியுள்ளார். 

339 உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக நடைபெறும் இந்தத் தேர்தல், நாளை மறுநாள் காலை 7.00 மணிக்கு தொடங்க உள்ளதுடன், 17,156,338 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 

அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களில் இருந்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 75,589 என்று தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார். 

இதற்கிடையில், உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள் முடிவடைந்த இன்றுடன் தொடங்கும் அமைதி காலத்தில் சட்டத்தை மீறும் அனைவருக்கும் எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அமைதி காலத்தில் சட்டவிரோதமாக சுவரொட்டிகள், பதாகைகள் அல்லது கட்அவுட்களை யாராவது காட்சிப்படுத்தியிருந்தால், அவை அகற்றப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 65,000க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

வியட்நாம் பறந்த ஜனாதிபதி அனுர!

0

வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இன்று (04) அதிகாலை வியட்நாமில் உள்ள நொய் பாய் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். 

ஜனாதிபதி இன்று முதல் 6 ஆம் திகதி வரை வியட்நாமுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். 

வியட்நாம் ஜனாதிபதி லுவாங் குவோங்கின் அழைப்பிற்கு அமைய இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது. 

நொய் பாய் சர்வதேச விமான நிலையத்தில், இலங்கை ஜனாதிபதி மற்றும் குழுவினரை வியட்நாமின் வெளியுறவு பிரதி அமைச்சர் நுயென் மன் குவோங், இன மற்றும் மத விவகார பிரதி அமைச்சர் நோங் தி ஹா, இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் டிரின் தி டம் மற்றும் வியட்நாமிற்கான இலங்கை தூதுவர் ஆகியோர் வரவேற்றனர். 

இலங்கை ஜனாதிபதியின் வருகை, இரு நாடுகளுக்கும் நன்மைகளைத் தருவதுடன், விரிவான இருதரப்பு ஒத்துழைப்பின் புதிய கட்டத்தின் தொடக்கத்தைக் குறிப்பதோடு, பிராந்தியத்திலும் உலகிலும் அமைதி, ஒத்துழைப்பு, வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு பங்களிக்கும் என்று வியட்நாம் தூதுவர் அந்நாட்டு ஊடகங்களுக்குத் கருத்து தெரிவித்துள்ளார்.