Friday, March 20, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 114

மன்னாரில் இடம்பெற்ற கலை பண்பாட்டு பெருவிழா!

பண்பாடு தொலைந்துபோகின்ற இந்தக் காலத்தில்தான் பண்பாட்டு விழாக்கள் தேவை. காலத்தின் தேவையறிந்து இந்தப் பண்பாட்டு விழாக்களை தொடர்ந்து நடத்தவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில் மன்னார் மாவட்டச் செயலகமும், மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவையும் இணைந்து நடத்திய மன்னார் மாவட்ட கலை பண்பாட்டு பெருவிழா – நேற்று வியாழக்கிழமை காலை (28.08.2025) மன்னார் நகர மண்டபத்தில் மன்னார் மாவட்டச் செயலாளர் க.கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக, மன்னார் மாவட்டச் செயலக நுழைவாயிலிலிருந்து கலாசார ஊர்திகளுடன் விருந்தினர்கள் மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

மன்னார் மாவட்ட குரு முதல்வர் அருட்திரு தமிழ்நேசன் அடிகளார், மன்னார் மாவட்ட இந்துமத பீடத்தின் தலைவர் சிவஸ்ரீ மஹா தர்மகுமாரக் குருக்கள், மன்னார் மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி அஷ்ஷேக் அஸ்லம் ஆகியோரின் முன்னிலையில் நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் தனது உரையில், தமிழர்களுக்கென்று தனித்துவமான பண்பாடு, கலாசாரம் உண்டு. ஆனால் இன்று அவை மறக்கப்பட்டு அல்லது மாற்றப்பட்டுக்கொண்டு வருகின்றன. அவற்றை நாம் மறக்கக் கூடாது. நல்ல மாற்றங்களை உள்வாங்கி அவற்றை மேம்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

பலனை எதிர்பாராமல் இந்தச் சமூகத்துக்காக எமது பண்பாடு, கலாசாரத்தை பேணிப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட மூத்த கலைஞர்களை கௌரவிப்பது சிறப்பானது. மூத்த கலைஞர்களை கௌரவிப்பதுடன் அவர்களின் அனுபவங்களை எமது அடுத்த தலைமுறைக்கும் பெற்றுக்கொடுக்கவும் வேண்டும் என்றார்.

இந்த நிகழ்வில் மன்னெழில் நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது. அத்துடன் மன்இளம் கலைச்சுடர் விருது 6 பேருக்கும், மன்கலைத்தென்றல் விருது 5 பேருக்கும், மன்கலைச்சுரபி விருது 5 பேருக்கும் ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டன.

பண்பாட்டு பெருவிழாவில், பல்வேறு கலைஞர்களால் பல நிகழ்வுகளின் ஆற்றுகைகள் இடம்பெற்றன.

நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப் பணிப்பாளர் திருமதி லாகினி நிருபராஜ் மற்றும் மூத்த சட்டத்தரணி ஜனாப் மு.மு சபுறுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு

முன்னாள் அமைச்சர் ராஜித நீதிமன்றில்!

0

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன,  கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை ஓகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடந்த 20 ஆம் திகதி அழைப்பாணை விடுத்திருந்தது.

கையுட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவின் கோரிக்கையை பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 60(1) இன் கீழ் இந்த அழைப்பாணையை விடுத்திருந்தார்.

இதேவேளை சந்தேக நபருக்காக நேற்று கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ, வழங்கப்பட்ட அறிவிப்பின்படி அவர் இன்று  நீதிமன்றத்தில் முன்னிலையாவார் என்று அறிவித்திருந்தார்.

14,834 குழந்தைகள் குறித்து திடுக்கிடும் தகவல்!

0

நாடு முழுவதும் சுமார் 14,834 குழந்தைகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

கொழும்பு மாவட்ட செயலகத்தில் நேற்று (28) நடைபெற்ற மாவட்ட பல்துறை போதைப்பொருள் தடுப்பு, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு நிகழ்ச்சியில் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள்  திணைக்கள அதிகாரி ஒருவர் கூறியதாவது: 

“குழந்தை உரிமைகள் மேம்பாட்டு அதிகாரிகள் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளுக்காகப் பணியாற்றி வருகின்றனர். பொலிஸ் நிலையங்களால் அடையாளம் காணப்பட்டு எங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட பல குழந்தைகள் உள்ளனர். ஆனால், மிகப்பெரிய பிரச்சனை எல்லா இடங்களிலும் ஒருங்கிணைப்பு இல்லாததுதான். குறிப்பாக, போதைப்பொருள் தொடர்பான விவகாரங்களில், அதிகாரிகளால் படோவிட்ட மற்றும் பிற பகுதிகளுக்கு செல்ல முடியவில்லை. குழந்தைகளை மீட்பது மட்டுமல்லாமல், குடும்பத்தை மையமாகக் கொண்ட பராமரிப்பு மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை உருவாக்கி, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என பரிந்துரைக்கிறேன்.

“இந்நிகழ்வில் பேசிய பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, 

“பொலிஸ் கூறும் தகவல்களை யாரும் சென்று ஆராய்ந்து பார்ப்பதில்லை. அந்தக் கதையை நான் ஏற்கமாட்டேன். இந்த மக்கள் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். இதற்கு ஒரு சுழற்சி முறையிலான வேலைத்திட்டம் தேவை. இங்குதான் பாதாள உலகம் உருவாகிறது. 15 வயது சிறுவர்கள் கூட பாதாள உலகில் உள்ளனர். குழந்தைகள் பாடசாலைக்கு செல்லாதபோது, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அவர்களைக் கடத்துகின்றனர். நாட்டில் குழந்தைகளுக்காகப் பணியாற்றும் பல நிறுவனங்கள் உள்ளன. ஆனால், பிரச்சனையை அடையாளம் காண்பது மட்டும் போதாது; உரிய நடவடிக்கைகள் இல்லை. இதற்கு ஒரு குறிப்பிட்ட நிறுவனமும், நிதியும் தேவை. ஜனாதிபதியிடம் கோரினால், அவர் போதுமான நிதியை வழங்குவார்.” என்றார்.

பிரதி அமைச்சர் நளின் ஹேவகே வவுனியா விஜயம்!

0

வவுனியாவிற்கு வருகை தந்த தொழில் கல்விப் பிரதி அமைச்சர் நளின் ஹேவகே, வவுனியா மாவட்டங்களில் உள்ள தொழிற்கல்வி நிலையங்களுக்கு விஜயம் செய்து அதனை பார்வையிட்டுள்ளார்.

வவுனியாவிற்கு வருகை தந்த தொழில் கல்வி பிரதி அமைச்சர் தொழில் கல்வி நிலையங்களை பார்வையிட்டதுடன், அதன் தேவைப்பாடுகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்.

குறித்த அரச தொழில் கல்வி நிலையங்களில் கற்கும் மாணவர்களுடனும் கலந்துரையாடியுள்ளார்.

திறந்து வைக்கப்பட்ட வீதி

அந்தவகையில், நைற்றா, வீற்றா, ஏரிஐ ஆகிய தொழில் கல்வி நிலையங்களை பார்வையிட்டதுடன், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இங்கு காணப்படும் குறைபாடுகளுக்கான நிதிகளைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாக இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, கனகராயன்குளம் மகா வித்தியாலயத்தையும் பார்வையிட்டதுடன் புதிதாக காபட் இடப்பட்ட 2 கிலோ மீற்றர் நீளமான கனகராயன்குளம் – விஞ்ஞானம் குளம் வீதியையும் திறந்து வைத்துள்ளார்.

இதன்போது, தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன் மற்றும் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

நாகவில்லுவில் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ்வின் நினைவுதினம்!

பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று நாகவில்லுவில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு!

இலங்கை திருநாட்டில் பெளதீக ரீதியான பல வேலைத்திட்டங்களையும், இடம்பெயர்வு மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பான பறந்துபட்ட அறிவினையும் கொண்டிருந்த எருக்கலம்பிட்டியை சேர்ந்த மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது வருட நினைவு தின நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

அந்த வகையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் நினைவுப் பேருரையும், புத்தக வெளியீடு நிகழ்வும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் ஏற்பாட்டில் நேற்று 25.08.2025 புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய அதிபர் ஜனாப் S.M. ஹுஸைமத் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், புத்தி ஜீவிகள் மற்றும் குடும்பத்தார்கள் கலந்தகொண்டமை விஷேட அம்சமாகும்.

சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் பொருளாளர் ஜனாப் ஏ.ஜி. அனீஸ் (Bsc.Agri) அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

மேலும் இஸ்லாமிய கற்கை அறபு மொழிப் பீட, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களினால் நூல் அறிமுக உரையும், நினைவுப் பேருரையும் மிகவும் உணர்வுபூர்வமாக நிகழ்த்தப்பட்டது.

கிழக்கு மற்றும் தென் கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பங்களிப்பு அளப்பெரியது என நினைவு கூறிய பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன், வடக்கில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் முஸ்லிம்களின் இடம்பெயர்வு குறித்து அதீத அக்கறையுடன் செயற்பட்ட மிக முக்கியமானவர் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்கள் எனவும் எடுத்துரைத்தார்.

வடக்கு முஸ்லிம்களின் இடம்பெயர்வு மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பில் அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுடன் பலதரப்பட்ட கலந்துரையாடல்களை நடத்தி, சர்வதேசம் வரை இவ்விடயங்களை கொண்டுசென்ற மகான் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் என பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் தனது உரையில் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் புதல்வி சட்டத்தரணி எப்.சப்னா ஹஸ்புல்லாஹ் அவர்களினால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டதுடன், நூல் வெளியீடு நிகழ்வும் இடம்பெற்றது.

நூலின் முதற்பிரதியை ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தரும், புத்தளம் எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாக சபையின் முன்னாள் உறுப்பினருமான ஜனாப் ரஹ்மத்துல்லாஹ் (GS) அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

மேலும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் செயலாளர் ஜனாப் எஸ்.எச்.எம். றிஸ்னி அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டதுடன், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பாரியாருக்கும் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில், பேராசிரியர்கள், கல்விமான்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், பாடசாலைச் சமூகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் குடும்பத்தார்கள் என பலரும் கலந்து சிறப்பித்ததுடன், ஈ நியூஸ் பெஸ்ட் ஊடக நிறுவனம் ஊடக அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முடிவுக்கு வந்த போராட்டம்!

0

தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு உடன் அமுலாகும் வகையில் நிறைவுக்கு வந்துள்ளது. 

அமைச்சருடனான கலந்துரையாடலுக்கு பின்னர் ஏற்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமைய, இதுவரை முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு வந்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணைப்பாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார். 

19 கோரிக்கைகளை முன்வைத்து தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கங்கள் உட்பட பல தொழிற்சங்கங்கள் கடந்த 17 ஆம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்திருந்தன. 

இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டதுடன் இலட்சக்கணக்கான கடிதங்கள் தேங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

முல்லைத்தீவு முக்கிய பாலத்தின் புனரமைப்பு பணி ஆரம்பம்!

பல ஆண்டுகளின் பின்பு பரந்தன் முல்லைத்தீவு A35 வீதியின் புளியம்பொக்கணை சந்தி பாலத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்.

பரந்தன் முல்லைத்தீவு வீதியின் புளியம்பொக்கணை சந்தியிலுள்ள பிரதான பாலமானது பல வருடங்களின் பின்பு புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

2019ம் ஆண்டு குறித்த பாலம் புனரமைப்பு பணிகளுக்காக ஏற்கனவே இருந்த பழைய பாலத்தை உடைத்து தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட கொரோனா பேரிடர் காரணமாகவும், நாட்டின் பொருளாதார சிக்கல் நிலை காரணமாக ஏற்பட்ட நிதியின்மை காரணமாகவும் குறித்த புனரமைப்பு கைவிடப்பட்டிருந்தது.

மேலும் குறித்த பாலத்தில் இரவு நேரங்களில் அதிக விபத்துக்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், இதுவரை இரண்டு இளைஞர்கள் கூட விபத்தில் உயிரிழந்திருந்தனர்.

தொடர்ந்து கிராம மக்கள் மற்றும் பல அமைப்புக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, புனரமைப்பு பணி முன்னெடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட நிலையில் தற்போது குறித்த பாலத்திற்கான புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ரணிலுக்காக ஒன்று திரண்ட அரசியல் தலைவர்கள்!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விசாரணை கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது, நாட்டின் அடிப்படை ஜனநாயக நிறுவனங்களின் வலிமை குறித்து கடுமையான கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் விளைவுகள் ஒரு தனிநபரின் அல்லது எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலைவிதியையும் விட, சமூகத்தின் உரிமைகளுக்கான பிரச்சினைகளை தோற்றிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் தலைவர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது மற்றும் விளக்கமறியலை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து நடத்திய விசேட ஊடக சந்திப்பில் பங்கேற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் அறிக்கையை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை வரலாற்றை மாற்றி எழுதிய நாள்!

0

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்ததன் காரணமாக வைத்திய ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டுப் பயணத்தின் போது அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22) மதியம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அவர் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டபோது இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

அதன்படி, ரணில் விக்ரமசிங்க பிற்பகல் 03.00 மணியளவில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தற்போது சட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

இலங்கை வரலாற்றில் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பதவிக் காலத்தில், 2023 செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் நியூயோர்க்கிற்குச் சென்றிருந்தார். சுற்றுப்பயணத்தை முடித்து நாட்டிற்குத் திரும்புவதற்கு முன்பு, முன்னாள் ஜனாதிபதி தனது மனைவி மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள லண்டன் சென்றிருந்தார். இங்கிலாந்தின் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஜான் ராஃப்டர், லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் மூலம் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது மனைவிக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பிதழ் வழங்கியிருந்தார்.

இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட சுற்றுப்பயணத்தின் போது அரசாங்க நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி ஒரு நபர் சமீபத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்ததாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

அதன்படி, விசாரணை தொடங்கப்பட்டு, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க மற்றும் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட உதவியாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமிருந்து சமீபத்தில் அந்தத் திணைக்களம் வாக்குமூலங்களைப் பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து, விக்ரமசிங்கவை இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, அவர் இன்று காலை 9.00 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார். சுமார் 4 மணி நேரம் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி பிற்பகல் 1.15 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் இன்று பிற்பகல் 3.00 மணியளவில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அந்த நேரத்தில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட அவரது ஆதரவாளர்கள் பலர் நீதிமன்ற வளாகத்திற்கு வந்திருந்தனர்.

அதன்படி, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி தொடர்பான சட்ட நடவடிக்கைகள் கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. சந்தேகநபரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, முறைப்பாட்டாளர் தரப்பு சார்பாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் விளக்கமளித்தார்.

வி.எஸ். கருணாரத்ன என்ற நபர் 17.03.2025 அன்று ஜனாதிபதியிடம் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்தில் உள்ளக விசாரணை நடத்தப்பட்டதாகவும், பின்னர் 23.05.2025 அன்று ஜனாதிபதியின் செயலாளரால் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக இருந்த காலத்தில், 13.09.2023 முதல் 20.09.2023 வரை கியூபா மற்றும் அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட பின்னர், 22 மற்றும் 23.09.2023 ஆகிய திகதிகளில் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்வதாகக் கூறி தனிப்பட்ட பயணத்தில் ஈடுபட்டதன் மூலம் அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதன்படி, தொடர்புடைய சம்பவம் தொடர்பாக 33 சாட்சிகளிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், நாட்டின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவை சந்தேகநபராகப் பெயரிட்டு கைது செய்ததாக திலீப பீரிஸ் தெரிவித்தார்.

300 மில்லியன் பெருமதியுள்ள கட்டிடத்தின் அவல நிலை!

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் சுமார் 300 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட பெண் நோயியல் வைத்திய  சிகிச்சை பிரிவினை உடனடியாக இயங்க வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளர் நலன்புரி சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இன்றைய தினம் (22-08-2025) கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே மேற்படி கோரிக்கையினை  விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் நெதர்லாந்து அரசினுடைய நிதியொதுக்கீட்டின் கீழ் சகல வசதிகளையும் கொண்ட 160 இற்கும் மேற்பட்ட நோயாளர்களுக்கான படுக்கை வசதிகளுடன் பெண் நோயியல் வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டு இன்றுவரை இயங்காத நிலையில் காணப்படுகிறது.

இந்த நிலையில் குறித்த வைத்தியசாலையில் உள்ள சில வைத்திய உபகரணங்களை வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் திரை மறைவில் மேற்கொள்ளப்படுவதாகவும் இது தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக சுகாதார உயர் மட்டங்களிலும் பல கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இவ்வாறானதொரு தேவை கருதி  நவீன வசதிகளுடன் கூடிய இந்த பெண் நோயியல் வைத்திய சாலையை இயங்க வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று நோயாளர் நலன்புரி சங்கத்தின் தலைவர் க.விஜயசேகரன் அவர்கள் ஊடக சந்திப்பை மேற்கொண்டு இருந்தார்.

குறித்த ஊடக சந்திப்பில்;

வைத்தியசாலையிலுள்ள பெண் நோயியல் சிகிச்சைப்பிரிவை  இயங்க வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இங்கிருந்து மருத்துவ உபகரணங்களை  மாற்றுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க போவதில்லை என்றும், அதற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.