Saturday, November 15, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 119

தபால் மூல வாக்களிப்பு தினத்தில் திருத்தம்!

0

2025 மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை அளிப்பதற்கான திகதிகள் திருத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

அதற்கான திகதிகள் ஏப்ரல் மாதம் 24, 25, 28 மற்றும் 29 என திருத்தப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

“அதன்படி அனைத்து அரச நிறுவனங்கள், பொலிஸார், முப்படையினர், பாடசாலைகள், கூட்டுத்தாபனங்கள், அரசியலமைப்பு சபை உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுக்காக ஏப்ரல் 24, 25, 28 மற்றும் 29 ஆகிய 4 தினங்கள் தபால் மூல வாக்குகளை அளிக்க ஒதுக்கப்பட்டுள்ளது. 

“எந்த மாற்றங்களும் இல்லாமல், அனைத்து அரசு நிறுவனங்கள் மற்றும் பிற அனைத்து நிறுவனங்களிலும் உள்ள தபால் மூல வாக்காளர்கள் இந்த 4 நாட்களில் தங்கள் அலுவலகங்களில் தபால் மூல வாக்குகளை அளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.” 

“மேலும், கண்டி ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரைக்காக விசேட பணிகளில் ஈடுபடும் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் கண்டி பெண்கள் உயர்நிலைப் பாடசாலையில் ஒரு விசேட தபால் மூல வாக்களிப்பு நிலையம் நிறுவப்படும்.” 

அதேபோன்று முப்படையினருக்காக அந்தந்த இராணுவ முகாம்களில் நியமிக்கப்பட்ட சான்றளிக்கும் அதிகாரி முன்னிலையில் இந்த 4 நாட்களுக்குள் தபால் மூல வாக்குகளை பதிவு செய்ய தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.” என்றார். 

தேர்தல்கள் நடைபெற உள்ள 339 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான அனைத்து வாக்காளர்களுக்கும் விநியோகிக்கப்பட வேண்டிய அதிகாரப்பூர்வ வாக்காளர் அட்டைகள் நேற்று (16) சம்பந்தப்பட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளால் தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டன. 

அதன்படி, அதிகாரப்பூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகம் ஏற்கனவே ஆரம்பமாகியுள்ளன. 

அதிகாரப்பூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகம் ஏப்ரல் 29 வரை தொடரவுள்ளது. 

ஏப்ரல் மாதம் 29 திகதிக்கு பிறகு எவரேனுக்கும் அதிகாரப்பூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்கவில்லை என்றால், அவர்கள் சம்பந்தப்பட்ட தபால் நிலையத்தில் அது குறித்து விசாரிக்கலாம் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

படகில் பற்றி தீ: 50 பேர் உயிரிழந்த சோகம்!

0

காங்கோவில் படகில் தீ விபத்து ஏற்பட்டதில் 50 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில் உள்ள ஆறுகளில் படகு போக்குவரத்து முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அங்கு வசிக்கும் மக்கள் படகு போக்குவரத்தை விரும்புகின்றனர். இந்நிலையில், வடமேற்கு காங்கோவில் உள்ள மடான் குமு துறைமுகத்தில் இருந்து போலோம்பா பகுதிக்கு ஒரு மோட்டார் படகில் 400க்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டனர்.

பன்டாக்கா பகுதியில் படகு சென்று கொண்டிருந்த போது பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. படகில் பயணம் செய்தவர்கள் தீ விபத்தில் இருந்து தப்பிக்க ஆற்றில் குதித்தனர். இதில் படகு ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி 100க்கும் மேற்பட்டவர்களை லேசான காயத்துடன் மீட்டனர்.

இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. படகில் பெண் ஒருவர் சமையல் செய்த போது தீ விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

ஈஸ்டர் தாக்குதலில் திடீர் திருப்பம்!

0

ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னணியில் நாட்டின் புலனாய்வுத்துறையினர் இருப்பது தெரியவந்துள்ளதாக சமூக மற்றும் சமாதான நிலையத்தின் பணிப்பாளர் ரொஹான் சில்வா தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். 

நாட்டின் புலனாய்வுத்துறையினர் ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னணியில் இருக்கின்றார்கள், தாக்குதல்களை மேற்கொண்டவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணினார்கள் என்பது விசாரணை அறிக்கைகள் ஊடாக எமக்குத் தெரியவந்துள்ளது. 

தாக்குதலின் பின்னணியிலிருந்த பிரதான சூத்திரதாரி யார் என்பதை அடையாளம் காண முடியாதளவிலேயே நாட்டின் பாதுகாப்புத்துறை காணப்படுவதாக சமூக மற்றும் சமாதான நிலையத்தின் பணிப்பாளர் ரொஹான் சில்வா தெரிவித்துள்ளார்.

VAT வரி தொடர்பில் வௌியான முக்கிய தகவல்!

0

பெறுமதி சேர் வரி (VAT) திருத்தச் சட்டமூலத்தின் படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் திரவப் பால் மற்றும் தயிர் ஆகியவை வெட் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு வருவாய்த் துறை தெரிவித்துள்ளது. 

அதற்கமைய, ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் திரவ பால் மற்றும் தயிர் மீதான வெட் வரி நீக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் ஒரு அறிக்கையை வெளியிட்டு சுட்டிக்காட்டுகிறது. 

உள்நாட்டு வருவாய்த் துறை வெளியிட்டுள்ள அறிவுப்புக்கு அமைவாக, புதிய பால் குறைந்தபட்சம் நூற்றுக்கு 50 சதவீதம் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

வெட் வரி திருத்த மசோதா ஏப்ரல் 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன ஏப்ரல் 11 ஆம் திகதி கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்தார். 

அதன்படி, தொடர்புடைய சட்டம் குறித்த திகதியில் அமுலுக்கு வந்ததிலிருந்து, உள்நாட்டு வருவாய்த் துறை பல வரித் திருத்தங்களைச் செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. 

திரவ பால் மற்றும் தயிர் தவிர, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தால் மின்சார உற்பத்திக்காக இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்படும் நாப்தா மீதான வெட் வரியும் நீக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு வருவாய்த் துறை தெரிவித்துள்ளது. 

புதிய வரி திருத்தத்திற்கு அமைவாக, வெளிநாடு வாழ் தனிநபர்கள் வழங்கும் டிஜிட்டல் சேவைகளுக்கு வெட் வரியை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், வெளிநாட்டு நபர்கள் இலங்கை தனிநபர்களுக்கு மின்னணு தளங்கள் மூலம் வழங்கும் சேவைகளுக்கு வெட் வரி பொருந்தும் என்று உள்நாட்டு வருவாய்த் துறை தெரிவித்துள்ளது. 

மேலும், வணிக நோக்கங்களுக்காக பொருட்களை இறக்குமதி செய்யும் அல்லது ஏற்றுமதி செய்யும் அனைத்து நபர்களும் பெறுமதி சேர் வரி (வெட் வரி) திருத்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

உடப்புவில் சிக்கிய கடத்தல் பொருட்கள்!

0

கடந்த 2025 ஏப்ரல் 13 ஆம் திகதி உடப்புவ, கருகப்பனே கடல் பகுதி மற்றும் அதனை அண்டிய கடலோரப் பகுதியிலும் கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடத்த முயன்ற சுமார் 145 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளை ஏற்றிச் சென்ற டிங்கி படகுடன் ஆறு (06) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கடல் வழியாக மேற்கொள்ளும் கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களை ஒடுக்கும் வகையில், தீவைச் சுற்றியுள்ள கடற்கரையை உள்ளடக்கி வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை கடற்படை மேற்கொண்டபோதே சட்டவிரோதமாக கடத்த முயன்றபோதே உலர்ந்த மஞ்சளை ஏற்றிச் சென்ற டிங்கி படகுடன் ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும், இந்த கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு (02) நபர்கள் மற்றும் இரண்டு (02) மோட்டார் சைக்கிள்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

மேலும், இந்த நடவடிக்கைகளின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ஆறு (06) சந்தேக நபர்களும் 22 முதல் 52 வயதுக்குட்பட்ட பங்கதெனிய, வைக்கால மற்றும் கல்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஆறு சந்தேக நபர்கள், உலர்ந்த மஞ்சள் பொட்டலம், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

வடக்கில் சிக்கிய போதைப்பொருட்கள்!

கிளிநொச்சி புளியம்பொக்கனை பகுதியில் 85 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் ஒருவர் கைது.

இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைவாக சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் கிளிநொச்சி போலீசார், தர்மபுரம் போலீசார் இணைந்து புளியம்பொக்கனை கிராம அலுவலர் பிரிவு உட்பட்ட பகுதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 85 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் பளை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புளியம்பொக்கனை நாகேந்திரபுரம் பகுதியில் தனியார் ஒருவரது வீட்டை வாடகைக்கு பெற்று அங்கிருந்து கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் பெரும் எதிர்ப்பை தெரிவித்துள்ள நிலையில், தமது பகுதியில் இப்படியான சம்பவங்கள் எதுவும் இடம்பெறுவதில்லை எனவும், இவர்கள் இங்கு குடியிருப்பது இதுவரையில் தமக்கு தெரியாது எனவும், இது தொடர்பாக கிராம சேவையாளருக்கும் எந்தவித பதிவுகளோ அல்லது விவரமும் கிடைக்கப்பெறவில்லை எனவும் குறித்த கிராமத்துக்கு பொறுப்பான கிராம சேவையாளர் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கைது செய்யப்பட்ட சந்தேக நபர், தடையப் பொருட்கள் அனைத்தும் கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி போலீசார் தெரிவித்துள்ளனர்.

கண்டியில்​ 50 பாடசாலைகளுக்கு பூட்டு!

0

கண்டி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 50 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குவது குறித்து மத்திய மாகாண கல்வி செயலாளர் மாதுபானி பியசேன விசேட அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளார்.

அதற்கமைய, ஏப்ரல் 21 தொடக்கம் ஏப்ரல் 25 வரையான காலப்பகுதியில் மேற்குறிப்பிட்ட 49 பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 18 முதல் 27 வரையான காலப்பகுதியில் விசேட தலதா கண்காட்சி இடம்பெறவுள்ளதன் காரணமாகவே இவ்வாறு பாடசாலைகள் மூடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மூடப்படவுள்ள பாடசாலை விபரங்களை கீழே காணலாம்

கண்டி வலயம்

குருதெணிய மகா வித்தியாலயம் 
வித்தியா லோக மகா வித்தியாலயம் 
தென்னெகும்புர தர்மராஜ வித்தியாலயம் 
டீ.எஸ்.சேனாநாயக்க மகா வித்தியாலயம் 
மஹாஓயா மகளிர் வித்தியாலயம் 
பெரவட்ஸ் வித்தியாலயம் 
அம்பிடிய சித்தார்த வித்தியாலயம் 
தம்பவெல கனிஷ்ட வித்தியாலயம் 
கோதமீ மகளிர் வித்தியாலயம் 
ஶ்ரீ ராஹூல தேசிய பாடசாலை 
புனித அந்தோனி ஆண்கள் பாடசாலை 
புனித அந்தோனி மகளிர் பாடசாலை 
வித்யார்த வித்தியாலயம் 
தக்‌ஷிலா வித்தியாலயம் 
ஹேமமாலி மகளிர் வித்தியாலயம் 
புனித சில்வெஸ்தர வித்தியாலயம் 
கண்டி வாரியபொல ஶ்ரீ சுமங்கல வித்தியாலயம் 
விவேகானந்தர் வித்தியாலயம் 
புஷ்பதான மகளிர் வித்தியாலயம் 
யஹபத் எடேராகே கன்யாராமய 
இந்து சிரேஷ்ட வித்தியாலயம் 
மத்தும பண்டார வித்தியாலயம் 
விஹாரமகாதேவி மகளிர் வித்தியாலயம் 
உயர் மகளிர் வித்தியாலயம் 
சுவர்ணமாலி மகளிர் வித்தியாலயம் 
சித்திலெப்பை மகா வித்தியாலயம் 
தர்மவிக்ரம மகளிர் வித்தியாலயம் 
சீதாதேவி மகளிர் வித்தியாலயம் 
கிங்ஸ்விட் வித்தியாலயம் 
மகாநாம மகா வித்தியாலயம் 
ரணபிம ரோயல் வித்தியாலயம் 
சரசவி உயன மகா வித்தியாலயம் 
பேராதனை மத்திய மகா வித்தியாலயம் 
பேராதனை கனிஷ்ட இரண்டாம் நிலை வித்தியாலயம் 
பேராதனை இந்து வித்தியாலயம் 
லும்பினி ரோயல் வித்தியாலயம் 
விமலபுத்தி வித்தியாலயம் 
ராசீன்தேவி வித்தியாலயம்
செங்கடகல விரோதார வித்தியாலயம் 
பத்துத்தின் மகளிர் வித்தியாலயம்
தர்மாஷோக வித்தியாலயம் 
சங்கமித்தா வித்தியாலயம் 
கெப்பெட்டிபொல வித்தியாலயம் 

வத்தேகம கல்வி வலயம் 

மகாவெலி மகா வித்தியாலயம் 
கண்டி முன்னோடி வித்தியாலயம் 
சமுத்ராதேவி மகளிர் வித்தியாலயம் 

தெனுவர கல்வி வலயம் 

ஈரியகம புஷ்பதான வித்தியாலயம் 
கன்னோருவ கனிஷ்ட வித்தியாலயம்

தலைக்கு எண்ணெய் வைக்கும் அரச விழா!

0

தலைக்கு எண்ணெய் வைக்கும் அரச விழா கண்டி ஸ்ரீ மஹா நாத விகாரையில்..

தலைக்கு எண்ணெய் வைக்கும் அரச விழாவானது, சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் பங்கேற்புடன் கண்டி ஸ்ரீ மஹா நாத விகாரையில் இன்று (16) காலை இடம்பெற்றது.

சியம் மஹா நிக்காயவின் மல்வத்த மற்றும் அஸ்கிரி பீடங்களின் அனுநாயக்க தேரர்களின் ஆசீர்வாதங்களுடன், காலை 9.04 மணிக்கு சுப நேரத்தில் வடக்கு திசையை நோக்கி தலைக்கு எண்ணெய் வைக்கும் அரச விழா நடைபெற்றது.

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சும், ஆயர்வேதத் திணைக்களமும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

ஸ்ரீ தலதா மாளிகையின் பர்மா ராஜா மற்றும் மிஹார யானைகளுக்கு எண்ணெய் தடவி உணவளிக்கும் நிகழ்வும் வெகுஜன ஊடக அமைச்சரின் பங்கேற்புடன் நடைபெற்றது.

பொலிஸாரால் தாக்கப்பட்ட அரச ஊழியர்!

கிளிநொச்சியில் அரச உத்தியோகத்தரை தாக்கிய பொலீஸாரை விசாரணைக்கு அழைத்த மனித உரிமைகள் ஆணைக்குழு.

நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பணியாற்றிய சாந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர் ஒருவரை கிளிநொச்சியில் கடந்த வாரம் தாக்கிய பொலீஸாரை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம் விசாரணைக்கு அழைத்துள்ளது.

கிளிநொச்சி சாந்தபுரத்தைச் சேர்ந்த அரச உத்தியோகத்தரான குறித்த இளைஞனை
கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலீஸ் உத்தியோகத்தர்கள் காரணமின்றி தன்னை தாக்கி கைவிலங்கிட்டதாக குறித்த இளைஞன் முறைப்பாடு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் வருகின்ற 21 ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்திற்கு சம்பந்தப்பட்ட
பொலீஸ் உத்தியோகத்தர்கள், கிளிநொச்சி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி, மற்றும் கிளிநொச்சி மாவட்ட சிரேஸ்ட பொலீஸ் அதிகாரி ஆகியோரை விசாரணைக்கு வருமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பானை விடுத்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ் தெரிவித்துள்ளார்.

ரணிலின் அபாய எச்சரிக்கை!

0

அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கையால் இந்த நாட்டில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் தொழில்வாய்ப்புகளை இழக்கும் அபாயம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

இன்று (16) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்ட ரணில் விக்ரமசிங்க, இதை அவசரநிலையாகக் கருத வேண்டும் என்றும் தெரிவித்தார். 

புதிய அமெரிக்க வரிக் கொள்கை தொடர்பாக அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.