Wednesday, March 18, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 141

செலுத்திய VAT வரியை மீள செலுத்த நடவடிக்கை!

0

வெளிநாட்டினர் செலுத்திய வரியை திருப்பிச் செலுத்துவதற்காக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஒரு கருமபீடம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. 

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்தவின் ஆகியோரின் தலைமையில் திறக்கப்பட்டது. 

தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை மற்றும் கைத்தொழில் அமைச்சு ஜனாதிபதியிடம் முன்வைத்த முன்மொழிவைத் தொடர்ந்து இது நிறுவப்பட்டுள்ளது. 

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் பொருட்களை கொள்வனவு செய்யும் போது செலுத்தும் பெறுமதி சேர் வரியை திரும்ப வழங்குவதே இதன் நோக்கமாகும். 

அதன்படி, 50,000 ரூபாவுக்கும் அதிகமான VAT வரியை செலுத்தி, 90 நாட்களுக்கு மேல் இலங்கையில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகள், இந்த கரும பீடம் மூலம் செலுத்திய VAT வரியைப் பெற முடியும். 

சுற்றுலாப் பயணிகள் இலங்கைப் பொருட்களை வாங்குவதை ஊக்குவிப்பதற்காகவும், இலங்கையில் வரி அறவிடுவதை நெறிப்படுத்துவதற்காகவும் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.

கல்பிட்டியில் சிக்கிய கடத்தல் பொருட்கள்!

0

கற்பிட்டி, வத்தலங்குண்டு பகுதிக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு, கடற்படையின் நடவடிக்கைகளினால் கடத்தல்காரர்களால் கடலில் கைவிடப்பட்ட தொண்ணூற்றொன்று (91) கிலோகிராம் உலர்ந்த இஞ்சி (ஈரமான எடை) மற்றும் இருநூற்று முப்பத்தெட்டு (238) ஜோடி காலணிகள் கடற்படையினரால் 2025 ஜூலை 03 அன்று கைப்பற்றப்பட்டன.

கடல் வழிகள் ஊடாக கடத்தல் உட்பட சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கடற்க்கரைகளை உள்ளடக்கி கடற்படை வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.

அதன்படி, கற்பிட்டி, வத்தலங்குண்டு பகுதிக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளையின் விரைவு நடவடிக்கை படை தலைமையகத்தால் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, குறிப்பிட்ட கடல் பகுதியில் இருந்த ஐந்து (05) சந்தேகத்திற்கிடமான பொதிகள் சோதனை செய்யப்பட்டன. கடற்படையினரால் மேற்கொள்ளபடும் நடவடிக்கையினால், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயற்சிக்கும் போது கடத்தல்காரர்களால் குறிப்பிட்ட கடல் பகுதியில் கைவிடப்பட்ட தொண்ணூற்று ஒரு (91) கிலோகிராம் (ஈரமான எடை) உலர்ந்த இஞ்சி மற்றும் இருநூற்று முப்பத்தெட்டு (238) ஜோடி காலணிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

மேலும், இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட உலர்ந்த இஞ்சி மற்றும் காலணிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

அமெரிக்க வெள்ளப்பெருக்கில் 24 பேர் பலி!

0

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் 24 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

டெக்சாஸில் நேற்றைய தினம் பெய்த பலத்த மழை காரணமாக, இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ள நிலையில் 20 சிறுவர்கள் உட்பட மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

‘சமூக சக்தி’ தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்!

0

கிராமப்புற ஏழை மக்களின் வாழ்க்கையை உயர்த்துவது தற்போதைய அரசின் முக்கிய பொறுப்பு என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். 

‘சமூக சக்தி’ தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, இலக்கு வைக்கப்பட்ட சமூகங்களுக்கு மானியங்களை முறையாக வழங்குவது தேசிய மக்கள் சக்தி அரசின் கொள்கையாகும் எனக் கூறினார். 

அதன்படி, கிராமப்புற வறுமையை ஒழிப்பது அவசியமானது என ஜனாதிபதி வலியுறுத்தினார். 

இதற்காக ஏராளமான முடிவுகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும், பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு தேவையான பல காரணிகள் கணிசமான அளவில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். 

மானியங்கள் பெற வேண்டிய மக்களை துல்லியமாக அடையாளம் காண ஒரு சிறந்த தரவு முறைமை தேவை எனவும், அதன் மூலம் கிராமப்புற மக்களுக்கு மானியங்கள் சரியான முறையில் வழங்கப்பட முடியும் எனவும், இதற்கு அரசு அதிகாரிகள் நேர்மையாக செயல்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறினார். 

கிராமப்புற மக்களுக்கு உதவி வழங்கும் அனைத்து வேலைத்திட்டங்களையும் ஒருங்கிணைக்க வேண்டும் எனவும், இந்தப் பணியை முறையாக செய்ய ‘பிரஜாசக்தி’ வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மேல் மாகாணத்தில் 12 மணி நேர நீர் விநியோகம் தடை!

0

கம்பஹாவில் பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடை!

இலங்கை மின்சார சபையின் சபுகஸ்கந்த உப மின் நிலையத்தின் ஊடாக மின்விநியோகிக்கப்படும் வழிகளில் அத்தியாவசியமான பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக ஜூலை 7ஆம் திகதி முற்பகல் 8.30 மணி முதல் பிற்பகல் 8.30 மணி வரை 12 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வழங்கப்படும் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதனால் இந்த குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அதன்படி பேலியகொடை, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க மற்றும் சீதுவ ஆகிய நகர சபை பிரதேசங்களுக்கு மற்றும் களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா – எல, கடான, மினுவாங்கொடை ஆகிய பிரதேச சபை பிரிவுகளுக்கும் மற்றும் கம்பஹா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் இந்த நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர் விநியோகம் தற்காலிகமாகத் துண்டிக்கப்படுவதனால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பாக தமது வருத்தத்தை தெரிவிப்பதுடன் நீரை பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

ஆப்கன் தலிபான் அரசை அங்கீகரித்த ரஷ்யா!

0

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசை ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. தலிபான் அரசாங்கத்தை முறையாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா மாறியது.

இது தொடர்பாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதற்கான செயல், பல்வேறு துறைகளில் நமது நாடுகளுக்கு இடையே உற்பத்தி ரீதியான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு உத்வேகம் அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலிபான்களால் நியமிக்கப்பட்ட புதிய ஆப்கானிஸ்தான் தூதர் குல் ஹசன் ஹாசனை ரஷ்ய அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. இந்த நடவடிக்கையின் மூலம், 2021ல் தலிபான் தலைமையிலான அரசாங்கம் பொறுப்பேற்றதிலிருந்து அதை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா ஆனது.

மாஸ்கோவில் நடந்த ஒரு சிறப்பு நிகழ்வில் ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி ருடென்கோ, ஆப்கானிஸ்தான் தூதர் குல் ஹசன் ஹாசனை சந்தித்தார். காபூலில் உள்ள தலிபான் அதிகாரிகள் ரஷ்யாவின் இந்த நடவடிக்கையைப் பாராட்டினர். மேலும் இது உறவுகளை வலுப்படுத்த உதவும். இது எங்கள் உறவுகளின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்’ என்று தலிபானின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் கூறினார்.

ஆகஸ்ட் 2021ல் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து ரஷ்யா காபூலில் தனது தூதரகத்தைத் திறந்து வைத்துள்ளது. தலிபான் தலைவர்களுடன், ரஷ்ய அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர்.இதுவரை, வேறு எந்த நாடும் தலிபான் அரசாங்கத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. சீனா, பாகிஸ்தான் நாடுகள், தலிபான் அரசின் துாதரை ஏற்றுக் கொண்ட போதிலும், இதுவரை தலிபான் அரசை அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கில் சிக்கிய பெருமளவு கஞ்சா!

யாழ்ப்பாணத்தில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு…..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மாமுனைபகுதியில் நேற்று இரவு 11:30 மணியளவில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

கடற்படையினர் மற்றும் மருதங்கேணி பொலிசார்க்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று இரவு ஓர் விசேட சுற்றிவளைப்பு ஒன்று மாமுனை பகுதி முழுவதும் மேற்கொள்ளப்பட்டது

இச் சுற்றி வளைப்பில் 38 பொதிகள் அடங்கிய 71.400kg கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரும் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட கேரளா கஞ்சா மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஜனாதிபதி நிதியத்திற்கு 100 மில்லியன் நன்கொடை!

0

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் 100 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின், இந்நாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் தீபக் தாஸ், இதற்கான காசோலையை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் இன்று (04) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளித்தார்.

இந்த நன்கொடை, லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் இலங்கையின் கல்வி, சுகாதாரம் மற்றும் கலாசார துறைகளுக்கு வழங்கும் நன்கொடைகளுக்கு மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே மற்றும் லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முன்னாள் அமைச்சர் கைது!

0

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது செய்யப்பட்டுள்ளார். 

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க வந்தபோதே அவர் கைது செய்யப்பட்டார்.

தூண்டில் மீன் பிடிக்க சென்றவர் உயிரிழப்பு!

கிளிநொச்சி மாவட்ட இரணைமடு குளத்தில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

கிளிநொச்சி, இரணைமடு குளத்தில் தூண்டில் மீன் பிடிப்பதற்காகச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தையான வேலாயுதம் ஜெயரூபன் உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று (03) மீட்கப்பட்டுள்ளார்.

தூண்டில் மீன் பிடிக்க சென்ற குடும்பஸ்தர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் குறித்த குடும்பஸ்தர் கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியை சேர்ந்தவர் எனவும், சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணம் குறித்த மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.