Wednesday, March 18, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 142

EFC கழகத்திற்கு கால்ப்பந்துகள் வழங்கிவைப்பு!

புத்தளம் எருக்கலம்பிட்டி உதைப்பந்தாட்ட கழகத்திற்கு (EFC) உயர் தரத்திலான கால்ப்பந்துகள் வழங்கும் நிகழ்வு பு/எருக்கலம்பிட்டி உதைப்பந்தாட்ட கழக காரியாலயத்தில் EFC யின் தலைவர் திரு இம்ரான் தலைமையில் இன்று இடம்பெற்றது.

புத்தளம் பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், பொத்துவில்லு வட்டார உறுப்பினர் ஜனாப் ஷாஹீன் ரீசா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில், புத்தளம் எருக்கலம்பிட்டி உதைப்பந்தாட்ட கழகத்திற்கு (EFC) உயர் தரத்திலான 10 கால்ப்பந்துகள் EFC யின் தலைவர் திரு இம்ரான் அவர்களிடம் வழங்கிவைக்கப்பட்டது.

புத்தளம் மண்ணில் உதைப்பந்தாட்ட துறையில் புதிய சரித்திரம் படைத்துவரும் EFC அணியின் வளர்ச்சிக்கும், நேர்த்தியான பயிற்சிக்கும் வலு சேர்க்கும் வகையில், உயர் தரத்திலான 10 கால்ப்பந்துகள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது.

EFC அணியின் முக்கிய தேவைகள் அறியப்பட்டு, அவர்களுக்கான கால்ப்பந்துகள் முதல் கட்டமாக ஜனாப் ஷாஹீன் ரீசா அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டதுடன், பாடசாலை மைதானத்தின் சில குறைபாடுகள் குறித்து EFC யின் தலைவர் திரு இம்ரான் அவர்களினால் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் ஷாஹீன் ரீசா அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

மைதானத்தின் தற்போதைய குறைபாடுகளை கேட்டறிந்துகொண்ட பிரதேச சபை உறுப்பினர், அவற்றுக்கு தேவையான நடவடிக்கைகளை முதல் கட்டமாக தாம் செய்து தருவதாக தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் புத்தளம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜனாப் சதக்கத்துல்லா ரிஜாஜ், ஓய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தரும், வட மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினருமான ஜனாப் M.S.நாசர், ஓய்வுபெற்ற ஆசிரியர் நஜீம், EFC அணியின் பயிற்றுவிப்பாளர், EFC நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாகவில்லு கிளை உறுப்பினர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

சிறுபோக நெல் கொள்வனவு இன்றுமுதல்!

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு இன்றுமுதல் (03) ஆரம்பிக்கப்படவுள்ளது.

நாட்டரிசி நெல் 1கிலோகிராம் 120 ரூபாவிற்கும் சம்பா நெல் 1 கிலோகிராம் 125 ரூபாவிற்கும் கீரிசம்பா நெல் 1 கிலோகிராம் 132 ரூபாவிற்கும் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்தார்.

இதற்காக கடந்த வரவு செலவுத் திட்டத்தில் 06 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நெல் அறுவடை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை குறிப்பிட்டுள்ளது.

முதற்கட்டமாக இந்த மாவட்டங்களுக்கான நெற்கொள்வனவை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபை மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கிளிநொச்சியிலுள்ள வடமாகாணத்திற்குரிய நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சிய சாலை துப்பரவு பணியில் உத்தியோகத்தர்கள் தீவிரமாக ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் வயல் அறுவடை விழா

விவசாயிகளிடத்தே நெற்ச்செய்கையில் நவீன தொழில்நுட்பத்தை வழங்கி நெல் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் வடமாகாண விவசாயத்திணைக்களம் மேற்கொண்டு வருகின்ற வயல் அறுவடை விழா கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் நேற்று நடைபெற்றது.

நெல் விதைப்பு நவீன முறையான பரசூட் முறையில் விதைக்கப்பட்ட AT 307 என்ற வெள்ளை நெல் அறுவடை விழா நடைபெற்றது.

பாடவிதான உத்தியோகத்தர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண மேலதிக விவசாயப்பணிப்பாளர் தட்சணாமூர்த்தி யோகேஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட விவசாயப்பணிப்பாளர் வி.சோதிலட்சுமி, பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.

கல்பிட்டியில் சிக்கிய கடத்தல் பொருட்கள்!

0

கடற்படையினர் கடந்த 2025 ஜூலை 01 அன்று, கல்பிட்டி, ஏத்தாலை களப்பு பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வர முயன்ற (979) கிலோகிராம் உலர் இஞ்சியை ஏற்றி வந்த(03) மூன்று டிங்கிகளுடன் சந்தேகநபர்கள் (03) மூவரும் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

கடல் வழிகள் ஊடாக கடத்தல் உட்பட சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கடற்க்கரைகளை உள்ளடக்கி கடற்படை வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் விஐய நிறுவனத்தினால் கல்பிட்டி ஏத்தாலை களப்பு பிரதேசத்தில் கடந்த 2025 ஜூலை 01 ஆம் திகதி மாலை மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான 03 டிங்கி படகுகள் சோதனையிடப்பட்டது.

அங்கு டிங்கி படகுகளில், சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட் (33) பைகளில் பொதிச்செய்திருந்த தொள்ளாயிரத்து எழுபத்தொன்பது (979) கிலோகிராம் உலர் இஞ்சிகளுடன் மூன்று (03) சந்தேகநபர்கள் கடற்படையினரால் இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர்.

மேலும், இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள் 25 முதல் 41 வயதுக்குட்பட்ட கல்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், மூன்று சந்தேக நபர்கள், மூன்று டிங்கி படகுகள் மற்றும் உலர்ந்த இஞ்சியை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வென்னப்புவில் சிக்கிய 900 கிலோ கேரள கஞ்சா!

0

வென்னப்புவவில் 202 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இலங்கை கடலோர காவல்படை, இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்துடன் இணைந்து, வென்னப்புவ போலவத்த பகுதியில் நேற்று (2) விசேட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது. 

இதன்போது, 900 கிலோகிராமுக்கும் அதிகமான கேரள கஞ்சா, இரண்டு வெளிநாட்டு கைத்துப்பாக்கிகள், 4 மகசின்கள், 40 தோட்டாக்கள் ஆகியவற்றை ஏற்றிச்சென்ற ஒரு கெப் மற்றும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கார் ஒன்றுடன் சந்தேகநபர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். 

அதன்படி, இலங்கை கடலோர காவல்படைக்கு கிடைத்த நம்பகமான இரகசிய தகவலின் அடிப்படையில், வென்னப்புவ, போலவத்த பகுதியில் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, அந்த பகுதி வழியாக பயணித்த சந்தேகத்திற்கிடமான ஒரு கெப் வாகனத்தை சோதனை செய்த போதே மேற்படி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். 

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 44 முதல் 51 வயதுக்குட்பட்ட உலுக்குளம், போத்தானேகம மற்றும் அனுராதபுரம், இஹலகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். 

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா, கைத்துப்பாக்கிகள், மகசின்கள் மற்றும் தோட்டாக்கள், போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் ஆகியவற்றுடன் சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பா.உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வின் தனிநபர் பிரேரணை!

0

“இலங்கை பைத்துல்மால் நிதியம்” என்ற பெயரில் நிதியமொன்றை அமைக்க அங்கிகாரம் தாருங்கள்.

கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தனிநபர் பிரேரணை சமர்ப்பிப்பு..!

இலங்கையில் பைத்துல்மால் நிதியமொன்றை உருவாக்க அங்கிகாரம் தருமாறு தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இன்று (2) ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘பைத்துல்மால் நிதியம்’ என்ற பெயரிலான நிதியம் உலகிலுள்ள முஸ்லிம் நாடுகள் மற்றும் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்கின்ற நாடுகளிலும் பல ஆண்டுகாலமாக இயங்கிவருகிறது.

இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களின் கல்வி, கலாச்சாரம், தொழில் மற்றும் இனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மற்றும் அன்றாட வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்வதற்கான ஒரு நிதியம் தற்சமயம் முஸ்லிம் சமய, கலாச்சார அலுவலக திணைக்களத்தில் இல்லாமல் உள்ளது.

இங்கையிலும் இவ்வாறானதொரு நிதியம் ஆரம்பிக்கப்படுமானால் பல்வேறு உதவித்திட்டங்களை வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ளமுடியும்.

முஸ்லிம் சமய, கலாச்சார அலுவல்கள் திணைக்களதின் கீழ் “இலங்கை பைத்துல்மால் நிதியம்” என்ற பெயரில் நிதியம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், நிதியத்தை ஆரம்பிப்பதற்கு தேவையான நிதியினை வெளிநாடுகளிலிருந்து பெற்றுத்தர தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதேபோன்று, பா.56/2025 இலக்க பாராளுமன்ற விஷேட ஒழுங்குப் பத்திரத்தின் மூலமும் இது அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதுடன், இப்பிரேரணைக்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இன, மத, கட்சி வேறுபாடுகளுக்கப்பபால் ஆதரவளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

பேருந்து கட்டணத்தில் மாற்றம்!

0

எதிர்வரும் 4ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த பேருந்து பயணக் கட்டணத்தில், திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதன்படி, பேருந்து பயணக் கட்டணம் 0.55 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

அத்துடன் புதிய பேருந்து கட்டண திருத்தத்துக்கு அமைய, ஆரம்ப பேருந்து பயணக் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த கட்டணத் திருத்தத்துக்கு அமைய, 2.5 சதவீதத்தால் பேருந்து பயணக் கட்டணம் திருத்தப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

எனினும் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 274 ரூபாவிலிருந்து 289 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமையினால், 0.55 சதவீதத்தால் மாத்திரம் பேருந்து பயணக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. 

இதற்கு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதன்படி, ஆரம்ப பேருந்து பயணக் கட்டணமாக 27 ரூபாய் அறவிடப்படவுள்ளது.

இதேவேளை பேருந்து கட்டணத்தில் 2.5 வீத குறைப்பு இடம்பெற கூடாது என்பதற்காகவா டீசலின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது என்றும், அனைத்து வழிகளிலும் அரசிற்கே வருமானம் செல்வதாகவம், இதனால் மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

0

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மீனின் கொம்பு குற்றியதில் மீனவர் மரணம்!

0

கொப்புரு மீனின் கொம்பு குற்றியதில் மீனவர் மரணம்.

ஆழ்கடலில் வைத்து மீன் கொம்பு குற்றியதில் ஏற்பட்ட காயத்தினால் ஒருவர் மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை துறைமுகத்தில் இருந்து கடந்த 24.06.2025 அன்று ஆழ்கடலுக்கு தொழிலுக்காக மூன்று பேர் படகில் சென்றுள்ளனர்.

அவர்கள் கடந்த (29.06.2025) ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் மீன் பிடித்து கொண்டு இருக்கும் போது வலையில் சிக்கிய பெரிய மீனை தூக்குவதற்கு முயற்சி செய்யும் போது தவறி கடலில் விழுந்த ஒருவர் மீது கொப்புரு மீனின் கொம்பு வயிற்றுப்பகுதியில் குற்றியதால் குறித்த மீனவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மீனின் கொம்பு வயிற்றுப்பகுதியில் குற்றியதால் காயத்துடன் படகில் ஏறியவர் தனக்கு மீன் குற்றிவிட்டது, வலி அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளதுடன், மற்ற இருவரும் அவரை கரைக்கு கொண்டுவரும் வழியில் மதியம் 12 மணியளவில் அவரது உயிர் பிரிந்துள்ளது.

நேற்று இரவு 11 மணியளவில் இறந்தவரின் உடல் வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்தது.

குறித்த மரணம் தொடர்பான விசாரனைகளை வாழைச்சேனை பொலிஸாரும் மீன்பிடி துறைமுக கடல் ஓர பாதுகாப்பு படையினரும் நடாத்தி வருகின்றனர்.

திரைப்பட பாணியில் வர்த்தகர் மர்ம கொலை!

0

“வீடு கட்டும் ஒப்பந்தத்தை ஒப்படைக்க  வர்த்தகரை அழைத்துச் சென்று, அவரை ஒரு கேபிளால் கழுத்தை நெரித்து, அவர் அணிந்திருந்த தங்க நகைகளையும், அவர் வைத்திருந்த பணத்தையும் கொள்ளையடித்தனர். தங்க நகைகளையும் பணத்தையும் கொள்ளையடிக்கவே இந்தக் கொலையைச் செய்தோம்,” என்று குருநாகல் வர்த்தகர் கொலையில் முக்கிய சந்தேக நபராகக் கூறப்படும் 29 வயது இளைஞர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருடப்பட்ட சொத்துக்களில், 4.8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், 1.4 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் ஒரு மொபைல் போன் ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குருநாகல் மாவட்டம் மில்லாவ பகுதியில் ஜூன் 25 ஆம் திகதி அன்று வர்த்தகர் ஒருவரை கடத்தி, கழுத்தை நெரித்து கொலை செய்து, அவரது உடலை ஜீப்பில் வீசி எரித்து, 5 இலட்ச ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள தங்க நகைகள் உள்ளிட்ட விலைமதிப்பற்ற பொருட்களை கொள்ளையடித்த 19 மற்றும் 29 வயதுடைய இரண்டு முக்கிய சந்தேக நபர்களை திங்கட்கிழமை (30) அன்று பொலிஸார் கைது செய்து விசாரித்துள்ளனர்.

இந்தக் குற்றத்தைச் செய்த 29 வயது முக்கிய சந்தேக நபர், கொலை செய்யப்பட்ட கமல் சம்பத் குருப்புவின் ஹோட்டலின் முன்னாள் ஊழியர் ஆவார், மேலும் அவர் அங்கிருந்து வெளியேறிச் சென்றுள்ளார்.

விசாரணையில், தொழிலதிபரின் தங்க நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடிக்கும் நோக்கில் இது நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

இங்கு கைது செய்யப்பட்ட 29 வயது பிரதான சந்தேக நபர், 5 மாதங்களுக்கு முன்பு சம்பத் குருப்புக்குச் சொந்தமான ஹோட்டலில் பணிபுரிந்து வந்தார். பின்னர் அவர் வெளியேறிவிட்டாலும், தொழிலதிபருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார்.

கந்துபோட பிலெஸ்ஸ பகுதியைச் சேர்ந்த பிரதான சந்தேக நபர், மஹாவா பகுதியைச் சேர்ந்த 19 வயது நண்பருடன் சேர்ந்து வர்த்தகரை கொலை செய்து அவரது தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்தார்.

25ஆம் திகதி காலை, 29 வயது சந்தேக நபர் தொழிலதிபரின் தொலைபேசியில் அழைத்து, ஒரு நண்பருக்குச் சொந்தமான நிலத்தில் வீடு கட்ட விரும்புவதாகக் கூறி, அதை ஆய்வு செய்ய வருமாறு கேட்டுக் கொண்டார்.

ஒப்பந்த வீடு கட்டும் தொழிலையும் ஒரு தொழிலாக நடத்தி வந்த சம்பத் குருப்பு, அன்று காலை தனது தலைமுடியை வெட்டி 29 வயது இளைஞரைச் சந்திக்க வந்தார்.

கந்துபோடை பகுதியில், சந்தேக நபர்கள் இருவரும் தொழிலதிபரின் ஜீப்பில் ஏறி, வெறிச்சோடிய நிலம் உள்ள ஒரு பகுதிக்குச் சென்றுள்ளனர்.

அப்போது, ஜீப்பின் பின்னால் இருந்த 19 வயது இளைஞர் வர்த்தகரின் கழுத்தில் நைலான் கயிற்றைக் கட்டியுள்ளார், மேலும் முக்கிய சந்தேக நபர் அவரை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். 

அந்த நேரத்தில், தொழிலதிபர் “நீ என்ன செய்கிறாய்?” என்று கூச்சலிட்டுள்ளார், ஆனால் சந்தேக நபர்கள் தொழிலதிபரை கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர்.

அதே நாள் பிற்பகலில், தொழிலதிபரின் உடலை ஜீப்பில் வைத்து மஹாவா பகுதிக்கு கொண்டு சென்று, அவர் அணிந்திருந்த தங்க நெக்லஸ், வளையல்கள், பணம் மற்றும் மொபைல் போன் ஆகியவற்றை கொள்ளையடித்து, அவரது உடலை வாகனத்தில் போட்டு தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றனர்.

இந்த மர்ம மரணம் குறித்த விசாரணைகள் வடமேற்கு மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த டி.ஐ.ஜி.அஜித் ரோஹணவின் முழு மேற்பார்வையின் கீழ் தொடங்கப்பட்டன.

குருநாகல் டி.ஐ.ஜி. சரத்குமார மற்றும் மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் திஸ்ஸ விதானகே ஆகியோர் மாவதகம காவல் நிலையப் பொறுப்பதிகாரி தலைமை ஆய்வாளர் ஹெட்டியாராச்சி, குருநாகல் குற்றப்பிரிவு காவல் நிலையப் பொறுப்பதிகாரி சுமனவீர மற்றும் மகாவ காவல் நிலையப் பொறுப்பதிகாரி குலதுங்க ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் நடத்திய விசாரணையின் போது, இரண்டு சந்தேக நபர்களும் டோரடியாய மற்றும் மகாவ பகுதிகளில் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து திருடப்பட்ட தங்க வளையல்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், அடகு வைக்கப்பட்ட தங்க நெக்லஸும் மீட்கப்பட்டுள்ளது. திருடப்பட்ட கிட்டத்தட்ட 1.4 மில்லியன் ரூபாய் பணமும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கொலையில் பயன்படுத்தப்பட்ட நைலான் கயிற்றையும் பொலிஸாரார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்தக் கொலையில் தொடர்புடைய இரண்டு முக்கிய சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, விசாரணைக்காக 48 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவு பெறப்படும் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.