Wednesday, March 18, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 143

அமெரிக்க ஜனாதிபதியின் அறிவிப்பால் அதிர்ச்சி!

0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மனிதாபிமான நிகழ்ச்சி திட்டங்களுக்கான நிதியுதவி குறைப்பானது, இலங்கை உள்ளிட்ட நாடுகளின் இறப்புகளில் அதிக தாக்கத்தைச் செலுத்தும் என ஆய்வொன்று கூறுகிறது. 

இதன்படி, குறித்த நிதி குறைப்பானது, 2030 ஆம் ஆண்டளவில் உலகளாவிய ரீதியில் 14 மில்லியனுக்கும் அதிகமான இயற்கைக்குப் புறம்பான இறப்புகளுக்கு வழிவகுக்கும் என அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

உலகின் மிகப் பழமைவாய்ந்த மருத்துவ இதழான தி லான்செட் (The Lancet) நடத்திய ஆய்வொன்றில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. 

இதன்படி, இறப்பு அபாயத்தில் உள்ளவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் சிறுவர்கள் எனவும், குறிப்பாக ஆண்டுக்கு 7 இலட்சம் வரையான சிறுவர்கள் உயிரிழக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் செயற்பட்டுவரும் யு.எஸ்.எய்ட் என்ற அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி முகவரகத்தின் திட்டங்களுக்கான நிதியுதவியில், 80 சதவீதத்துக்கும் அதிகமானவற்றை இரத்து செய்வதாக முன்னதாக ட்ரம்ப் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்தநிலையில், குறித்த செயற்பாட்டின் விளைவாக ‘குறைந்த மற்றும் நடுத்தர வருமானங்களைக் கொண்ட பல நாடுகளில், உலகளாவிய தொற்றுநோய் அல்லது ஒரு பெரிய ஆயுத மோதல் என்பவற்றுக்கு நிகரான தாக்கம் ஏற்படும்’ என்று தி லான்செட் கூறியுள்ளது. 

அத்துடன், அமெரிக்க நிதி உதவித் திட்டம் நிறுத்தப்பட்டமையினால், பாதிக்கப்படக் கூடிய மக்களின் சுகாதார ரீதியான முன்னேற்றம், இரண்டு தசாப்தகால பின்னடைவைக் காணும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மீண்டும் வெடித்துள்ள ட்ரம்ப்-மாஸ்க் மோதல்!

0

அரசின் மானியங்கள் இல்லாவிட்டால் டெஸ்லா சி.இ.ஓ. எலான் மஸ்க், அநேகமாக தென்னாப்பிரிக்கா திரும்பி விடுவார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டு வந்திருக்கும் வரி மற்றும் செலவு மசோதாவை உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் ஏற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்து அந்த மசோதாவுக்கு தமது எதிர்ப்பை அவர் பதிவு செய்து வருகிறார்.

இந்த மசோதா அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஆனால் இதை எலான் மஸ்க் எதிர்த்துள்ளார். இது குறித்து தமது அதிருப்தியை வெளியிட்டு இருந்த அவர், வரலாற்றில் மிக பெரிய கடன் அதிகரிப்புக்கு இந்த மசோதா வழி வகுக்கும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

பைத்தியக்காரத்தனமான இந்த மசோதா நிறைவேறினால் புதிய கட்சியை தொடங்குவேன் என்று மிரட்டல் விடுத்தார். இந் நிலையில் மஸ்கின் மிரட்டலுக்கு அதிபர் டிரம்ப் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் தமது சமூக வலைதள பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், மானியங்கள் நிறுத்தப்பட்டால் எலான் மஸ்க் தென்னாப்பிரிக்காவுக்கு திரும்புவார் என்றார்.

அமெரிக்க அரசிடம் இருந்து மானியங்கள் இல்லாவிட்டால் டெஸ்லா தலைமை அதிகாரி அநேகமாக தென்னாப்பிரிக்காவே திரும்புவார். நான் அதிபராக என்னை வலுவாக ஆதரித்ததற்கு முன்பே மின்சார வாகன ஆணையை கடுமையாக எதிர்த்தவன். இதை மஸ்க் நன்கு அறிவார்.

இனி ராக்கெட் ஏவுதல்கள், செயற்கைக்கோள்கள் அல்லது மின்சார கார்கள் உற்பத்தி இருக்காது. மின்சார கார்கள் பரவாயில்லை. ஆனால் எல்லாரும் ஒன்றாவது வைத்து இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது.

இவ்வாறு அதில் டிரம்ப் கூறி உள்ளார்.

தொழிலதிபரான எலான் மஸ்க் தென்னாப்பிரிக்காவில் பிறந்து, அமெரிக்காவில் குடியேறியவர். அதை குறிப்பிடும் வகையிலே தான் அவர் தென்னாப்பிரிக்கா சென்று விடுவார் என்று டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார்.

இன்று முதல் மீண்டும் பரேட் சட்டம்!

0

இன்று முதல் பரேட் சட்டம் மீண்டும் அமுலுக்கு வரவுள்ளமையினால் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்க உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார். 

இன்று முதல் இந்த தரப்பினரின் சொத்துக்கள் கடன் நிலுவையின் காரணமாக ஏலம் விடப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டார். 

இதனால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதத்துக்கு மேல் பங்களிக்கும் குறித்த தரப்பினரின் பங்களிப்பு குறைவடையும். 

அத்துடன், சுமார் 4 மில்லியன் பேருக்கு வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

எனவே, பரேட் சட்டத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்தி, நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்குக் கடன் மறுசீரமைப்பு, வட்டி சலுகைகள் உள்ளிட்ட நிவாரணங்களை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

முந்தைய அரசாங்கம் போலவே, தற்போதைய அரசாங்கமும் பொய்கள் மற்றும் தேர்தல் நோக்கான நடவடிக்கைகள் மூலம் குறித்த தரப்பினரை ஏமாற்றியுள்ளதாகவும், நீடித்த தீர்வுகள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். 

மூன்றிலிரண்டு பெரும்பான்மை மற்றும் நிறைவேற்று அதிகாரமுள்ள அரசாங்கம் இந்த பிரச்சினையிலிருந்து விலக முடியாது எனவும், அந்த தரப்பினருக்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

இந்நிலையில், பரேட் சட்டத்தை உடனடியாக இடைநிறுத்தி, நுண், சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில்முனைவோருக்கு மீண்டெழும் வாய்ப்பு தரும் வகையில் தீர்வுகள் வழங்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

காஸாவில் தொடரும் இஸ்ரேலின் அட்டூழித்தனம்!

காசாவில் இஸ்ரேல் தொடர்ச்சியாக தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளை நடத்தி வருகிறது. வைத்தியசாலைகள், பாடசாலைகள், வீடுகள் மற்றும் பிற மக்கள் நெரிசலான இடங்கள் நேற்று (30) கடுமையான தாக்குதலினால் பாதிக்கப்பட்டன.

காசாவின் கடற்கரையில் இஸ்ரேலின் ராக்கெட் தாக்குதலில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர். மத்திய காசாவில் உள்ள அல்-அக்ஸா வைத்தியசாலை மீது பெரிய அளவிலான தாக்குதல் நடத்தப்பட்டது.

மேலும் காசா நகரின் அல்-வஹ்தா வீதிகளில் பாதசாரிகளை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். கான் யூனிஸில் வீடுகள் பரவலாக அழிக்கப்படுவது தொடர்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலிய டாங்கிகள் வடக்கு காசாவில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றன, 18 பகுதிகளை காலி செய்ய இராணுவம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆயிரக்கணக்கான மக்கள் தங்கியிருந்த நான்கு பாடசாலைகள் நேற்று தாக்கப்பட்டன. கான் யூனிஸில் உள்ள உணவு விநியோக மையத்தின் மீது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 50 பேர் காயமடைந்தனர்.

காசாவில் மட்டும், நேற்று 85 பேர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டது, அவர்களில் 60 பேர் வடக்கு காசாவிலும் காசா நகரத்திலும் இருந்தவர்கள். காசாவின் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் இஸ்ரேலிய இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெருமளவு கேரள கஞ்சாவுடன் சிக்கிய குடும்ப பெண்!

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இன்றைய தினம் (30.06.2025) மயில்வாகனபுரம் கொழுந்துப்பிலவு பகுதியில் வீடொன்றின் பின்புறமாக மறைத்து வைத்திருக்கப்பட்டிருந்த 79 கிலோ 245 கிராம் நிறை கொண்ட கேரளா கஞ்சாவினை தர்மபுரம் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

வீட்டு உரிமையாளரான 55 வயதுடைய குடும்ப பெண் ஒருவரும் பொலிசாரால் குறித்த சோதனை நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான விசுவமடு கொழுந்து புலவு பகுதியை சேர்ந்தவர் 55 வயதுடைய பெண் ஒருவர் மற்றும் தடையப் பொருட்கள் நாளைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதி மன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி D.M.S.J. திஸ்ஷநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த கேரள கஞ்சாவானது இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணி!

0

“பாலஸ்தீனத்துக்கு சுதந்திரம் – யுத்தத்தை நிறுத்து” என்ற கருப்பொருளை வலியுறுத்தி, சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் பாலஸ்தீன ஐக்கிய மக்கள் இயக்கம் ஆகியன இணைந்து கொழும்பில் இன்று (30) ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை முன்னெடுத்தன. 

பெருந்திரளான மக்களின் பங்கேற்பில் கொழும்பு கொம்பனித் தெருவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பேரணி இஸ்ரேல், அமெரிக்காவுக்கு எதிரான ஆர்ப்பாட்டப் பேரணியாக அமைந்தது. 

கொழும்பு 3, கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்கிச் சென்ற இப்பேரணியினர், “கொல்லாதே கொல்லாதே குழந்தைகளை கொல்லாதே”, “இனப்படுகொலையை நிறுத்து” என கோஷமிட்டும் பதாதைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.  

பாலஸ்தீனில் இடம்பெற்றுவரும் இன அழிப்பில் இதுவரை 55ஆயிரத்திற்கும் அதிகளவான அப்பாவி பொது மக்கள் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பூனாகலயில் 51 குடும்பங்களுக்கு வீடுகள்!

0

பூனாகல, கபரகல தோட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை வழங்கும் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் ஆரம்பம்.

2023 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பூனாகல, கபரகல பகுதியில் வீடுகளை இழந்தவர்களுக்காக பூனாகலவில் கட்டப்படும் புதிய வீட்டுத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த (28) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஹல்தும்முல்ல பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பூனாகல, கபரகல பகுதியில் நிலச்சரிவு காரணமாக வீடுகளை இழந்த 51 குடும்பங்களுக்கு, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு ஆகியவற்றின் ஏற்பாடுகளின் கீழ் இந்த வீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மீண்டும் சாம்பியனான அஜித்குமார் அணி!

0

பெல்ஜியமில் நடந்த ஜிடி3 சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் அஜித்குமார் ரேஸிங் அணி முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித், தற்போது கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். குட் பேட் அக்லி பட வெற்றிக்குப் பிறகு, இன்னும் சில மாதங்களுக்கு கார் ரேஸில் மட்டுமே கவனம் செலுத்தப் போவதாகவும், சினிமாவில் இருந்து தற்காலிமாக விலகுவதாகவும் அஜித் கூறியிருந்தார்.

இதையடுத்து, மொட்டை அடித்தது போன்ற புது கெட்டப்பில் இருக்கும் அஜித், கார் ரேஸில் மும்முரம் காட்டி வருகிறார். அவரது போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், பெல்ஜியமில் நடந்த கிரவுட் ஸ்டிரைக் ஸ்பா ஜிடி3 சாம்பியன்ஷிப் போட்டியின் ப்ரோ ஏ.எம். பிரிவில் அஜித்குமார் கார் ரேஸ் அணி முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

இது குறித்து அஜித் குமார் ரேஸ் அணி வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில், ‘எங்கள் அணியின் பேபியன், மேதியூ அடங்கிய குழுவினர், மிகவும் கடினமான போட்டியில் முதலிடம் பிடித்துள்ளனர். அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்,’ என்று குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே, துபாயில் நடந்த ரேஸில் அஜித்தின் ‘அஜித்குமார் ரேஸிங்’ அணி 3வது இடம் பிடித்து சாதித்தது. இத்தாலி மற்றும் பெல்ஜியத்தில் நடந்த போட்டிகளிலும் பரிசுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

வடக்கில் சிக்கிய பெருமளவிலான கேரள கஞ்சா!

0

யாழ்ப்பாணம் காரைநகர் கோவிலான் பகுதிக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் கடந்த (2025 ஜூன் 27) அதிகாலை இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ரூபா 47 மில்லியனுக்கும் அதிகமான சுமார் இருநூற்று ஒன்பது (209) கிலோகிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற மூன்று (03) சந்தேக நபர்களும், ஒரு டிங்கி (01) படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

அதன்படி, காரைநகர் கோவிலன் பகுதிக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் வடக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் எலாராவுக்குச் சொந்தமான கப்பல்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, குறிப்பிட்ட கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்று பயணித்து வருவது கண்காணிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அங்கு, ஆறு (06) பைகளில் எழுபத்து மூன்று (73) பொதிகளில் பொதிச்செய்யப்பட்டிருந்த சுமார் இருநூற்று ஒன்பது (209) கிலோகிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சாவுடன், மூன்று (03) சந்தேக நபர்களையும் (01) டிங்கி படகையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த மதிப்பு நாற்பத்து ஏழு மில்லியன் (47) ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள் 26 முதல் 43 வயதுக்குட்பட்ட குருநகர் மற்றும் அனலைத்தீவு பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.

சந்தேக நபர்கள், கேரள கஞ்சா பொதிகள் மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

திடுக்கிடும் தகவல் வெளியிட்ட அர்ச்சுனா எம்.பி!

0

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பாக இன்று (30) பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

என்னை நீக்க வழக்கு தொடரப்பட்டுள்ளது. நான் அதை நீதிமன்றத்தில் கொண்டு செல்வேன். ஆனால் எனக்கு பயமாக இருக்கிறது. அந்த கொள்கலன்கள் 323க்குள் என்ன இருந்தது என்பதற்கான பட்டியலை நான் உங்களுக்கு வழங்க முடியும். அது எங்கே போனது, எந்த நாட்டிலிருந்து வந்தது? ஆனால் அவர்கள் என்னை எம்.பி. இருக்கையிலிருந்து நீக்க மாட்டார்கள் என்பதை எனக்கு நிரூபிக்கச் சொல்லுங்கள். அதை நான் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பேன்.

இல்லையெனில், நான் வேறு நாட்டிற்கு சென்று அதை வெளியிடுவேன். அந்த 320க்குள் என்ன இருந்தது என்பதை நான் பயமின்றி கூறுவேன். முழு விவரங்களையும் என்னால் உங்களுக்குச் சொல்ல முடியும், ஆனால் எனக்கு பயமாக இருக்கிறது. ஆனால் நான் கொல்லப்படுவேன் என்று பயப்படவில்லை. அவர்கள் என்னை மீண்டும் மீண்டும் தேவையற்ற வழக்குகளில் இழுக்கிறார்கள்.

இப்போது அவர்களிடம் பொலிஸின் அதிகாரம் உள்ளது. இப்போது அவர்கள் என்னை எம்.பி. பதவியிலிருந்து அகற்றுவதன் மூலம் உண்மை வெளிவருவதைத் தடுக்க முயற்சிக்கிறார்கள். என தெரிவித்துள்ளார்.