Monday, April 13, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 162

பாலாவியில் இடம்பெற்ற கோர விபத்து!

0

புத்தளம், பாலாவி – கற்பிட்டி வீதியில் நேற்று (20) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்ப பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழத்துள்ளார். 

பாலாவி பகுதியைச் சேர்ந்த அபூதாலிப் பாத்திமா ரிஸானா (வயது 40) எனும் ஒரு பிள்ளையின் தாயே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, 

பாலாவி ஊடாக கற்பிட்டி நோக்கி சென்று கொண்டிருந்த எரிபொருள் பவுசர் ஒன்று, வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த குறித்த பெண் மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த விபத்தில் குறித்த பெண் வீதியில் இழுத்துச் செல்லப்பட்டதுடன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். 

உயிழந்த பெண்ணின் ஜனாஸா புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிஸாம், சம்பவ இடத்திலும், வைத்தியசாலையிலும் மரண விசாரணையை நடத்தினார். 

இந்த விபத்துடன் தொடர்புடைய வாகன சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

விபத்துச் சம்பவம் தொடர்பில் புத்தளம் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேசத்தில் சாதிக்கவுள்ள கிளிநொச்சி மாணவர்கள்!

சர்வதேச ரோல் பந்து விளையாட்டில் கலந்து கொள்வதற்காக கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவர்கள் கென்யா பயணமாக உள்ளனர்.

கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் நடைபெறவுள்ள சர்வதேச ரோல் பந்து போட்டியில் இலங்கை அணியில் கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் இடம்பிடித்துள்ளனர்.

இவர்களை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வு இன்று காலை கல்லூரியின் முதல்வர் சவரி பூலோகராஜா தலைமையில் நடைபெற்றது.

சர்வதேச ரோல் பந்து போட்டி கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் 22ம் திகதி தொடக்கம் 29ம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த போட்டியில் கலந்துகொள்வதற்காக கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்து வெளிநாடு செல்லவுள்ள நிலையில் அவர்கள் பாடசாலை சமூகத்தினால் வாழ்த்தி வழியனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய அமைச்சர் இராஜினாமா!

0

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். 

இந்த ராஜினாமா ஜூன் 20 முதல் அமுலுக்கு வருவதாக பாராளுமன்ற செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. 

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தற்போதைய பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சராக பணியாற்றினார். 

அதன்படி, பிரதி அமைச்சரின் இராஜினாமாவை பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஏற்றுக்கொண்டுள்ளதுடன், பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர நடவடிக்கை எடுத்துள்ளார். 

இதற்கிடையில், நிதி அமைச்சின் செயலாளராக கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும நியமிக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நிதி அமைச்சின் செயலாளராக பணியாற்றிய மஹிந்த சிறிவர்தன இந்த மாத இறுதியில் அந்தப் பதவியில் இருந்து ஓய்வுப்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புத்தளம் பிரதேச சபை சுயேட்சை குழு1 வசம்!

0

மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட புத்தளம் பிரதேச சபையின் ஆட்சியை புத்தளம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ரதிகவின் தலைமையிலான சுயேச்சை குழு1 பிடித்துள்ளது.

இன்றைய தினம் இடம்பெற்ற புத்தளம் பிரதேச சபையின் கன்னி அமர்விலே சபைக்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

தவிசாளர் பதவிக்கு ஆளும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் அகில மற்றும் சுயேட்சை குழு1 உறுப்பினர் ரதிக சஞ்சீவ ஆகியோர் போட்டியிட்டனர்.

இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பின் மூலம் சுயேட்சை குழு1 உறுப்பினர் ரதிக 13 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் அகில 10 வாக்குகளையும் பெற்றுக்கொண்டதுடன், மேலதிக 3 வாக்குகளினால் சுயேட்சை குழு1 உறுப்பினர் ரதிக சஞ்சீவ புத்தளம் பிரதேச சபையின் தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார்.

இதேவேளை உப தவிசாளருக்காக பொதுஜன ஐக்கிய முன்னணியின் உறுப்பினர் பமுனு ஆராச்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் லரீப் காசிம் ஆகியோர் போட்டியிட்டனர்.

இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பின் மூலம் பொதுஜன ஐக்கிய முன்னணியின் உறுப்பினர் பமுனு ஆராச்சி 13 வாக்குகளையும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் லரீப் காசிம் 11 வாக்குகளையும் பெற்றுக்கொண்டதுடன், மேலதிக 2 வாக்குகளினால் பொதுஜன ஐக்கிய முன்னணியின் உறுப்பினர் பமுனு ஆராச்சி புத்தளம் பிரதேச சபையின் உப தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார்.

புகையிரத நிலைய அதிபர் – தரம் III ஆட்சேர்ப்பு!

0

இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் புகையிரத நிலைய அதிபர் பதவியில் காணப்படும் 106 வெற்றிடங்களை நிரப்புவதற்காக, 2025.07.14 ஆம் திகதியன்று 18 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 30 வயதுக்கு மேற்படாத இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. (அதன்படி, 2007.07.14 ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ மற்றும் 1995.07.14 ஆம் திகதியன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பிறந்தவர்கள் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும்.)

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 2025.07.14 ஆகும். இப்பரீட்சை 2025 செப்டம்பர் மாதம் நடத்தப்படும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்,
இலங்கை பரீட்சைகள் திணைக்களம்,
நிறுவன பரீட்சை ஏற்பாட்டுப் பிரிவு,
த.பெ. 1503, கொழும்பு.

பதவியின் கடமைப் பொறுப்புக்கள்

இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் கீழ் உள்ள புகையிரத நிலையங்களின் பணிகளுடன் தொடர்புடைய வகையில், புகையிரதப் பொது முகாமையாளரின் பிரதிநிதியாகச் செயற்பட்டு, புகையிரதப் பொது முகாமையாளரால் குறிப்பாக ஒதுக்கப்படும் ஆளணி நிர்வாகம், நிதி மற்றும் வர்த்தக நடவடிக்கைகள், ஒருங்கிணைப்புப் பணிகள், இயக்கப் பணிகள், பயணச்சீட்டு மற்றும் கணக்குப் பணிகள் உள்ளிட்ட பல்பணித் தன்மை வாய்ந்த கடமைகளையும் மேற்பார்வைப் பணிகளையும் நிறைவேற்றும் உத்தியோகத்தர் குழாம் ஆகும்.

சம்பள அளவுத்திட்டம் (Salary Scale)

புகையிரத நிலைய அதிபர் தரம் III இற்குரிய சம்பள அளவுத்திட்டம் (RA.P.C. 10/2025):

ரூ. 57,810 – 5×890 – 5×1030 – 5×1300 – 10×1340 – ரூ. 93,810/=

கல்வித் தகைமைகள் (Educational Qualifications)

I. க.பொ.த. (சாதாரண தரம்)

சிங்களம்/தமிழ்/ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகியவற்றுடன் மேலும் இரண்டு பாடங்களில் C சித்திகளுடன் ஒரே அமர்வில் 06 பாடங்களில் க.பொ.த. (சாதாரண தர) பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்;

மற்றும் (AND)

II. க.பொ.த. (உயர் தரம்)

க.பொ.த. (உயர் தர) பரீட்சையில் மூன்று (03) பாடங்களில் (பொதுப் பொதுப் பரீட்சை தவிர்ந்த) ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல். (பழைய பாடத்திட்டத்தின் கீழ் 03 பாடங்களில் சித்தியடைந்திருத்தல்)

பரீட்சை நடைபெறும் நகரங்கள்

விண்ணப்பப் படிவத்தில் நீங்கள் பரீட்சைக்குத் தோற்ற விரும்பும் நகரத்திற்குரிய இலக்கத்தைக் குறிப்பிடவும்.

நகரம்நகர இலக்கம்
கொழும்பு01
கம்பஹா02
களுத்துறை03
கண்டி04
மாத்தளை05
நுவரெலியா06
காலி07
மாத்தறை08
ஹம்பாந்தோட்டை09
யாழ்ப்பாணம்10
மன்னார்11
வவுனியா12
முல்லைத்தீவு13
கிளிநொச்சி14
மட்டக்களப்பு15
அம்பாறை16
திருகோணமலை17
குருநாகல்18
புத்தளம்19
அனுராதபுரம்20
பொலன்னறுவை21
பதுளை22
மொனராகலை23
இரத்தினபுரி24
கேகாலை25

இரகசிய வாக்கெடுப்புக்கு SLMC எதிர்ப்பாம்!

0

கொழும்பு மாநகர மேயர் தெரிவில் பகிரங்க வாக்கெடுப்பைத் தவிர்த்து இரகசிய வாக்கெடுப்பை நடாத்தியமை  சட்டப்படி தவறான நடவடிக்கையாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (18) இடம்பெற்ற வெளிநாட்டு தீர்ப்புகளை பரஸ்பரம் ஏற்று அங்கீகரித்தல், பதிவு செய்தல் மற்றும் வலுவுறுத்தல் சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

கொழும்பு மாநகர சபை மேயர், பிரதி மேயர் ஆகிய நியமனங்கள் தொடர்பில் பல்வேறு மாறுப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஆளும் தரப்பினர் தமக்கு ஏற்றால் போல் சட்ட ஏற்பாடுகளை குறிப்பிட்டு கருத்துக்களை முன்வைக்கின்றனர். 

2012 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க உள்ளூராட்சி சபை கட்டளை வாக்கெடுப்பு சட்டத்தின் 66 (ஈ) பிரிவில், பொதுக் கொள்கை அடிப்படையின்படி பகிரங்க வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த சட்டத்தின் 8 ஆம் பிரிவில் 66 (ஈ) 6 உப பிரிவில் இரகசிய வாக்கெடுப்புக்கு செல்வது அவசியமற்றது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி நோக்கும்போது பகிரங்க வாக்கெடுப்பைத் தவிர்த்து இரகசிய வாக்கெடுப்புக்கு செல்வது குறித்து சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. 

ஆகவே நாட்டு மக்களையும் சபையையும் தவறாக வழிநடத்துவதை ஆளும் தரப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் தேசி மக்கள் சக்தியை பல அரசியல் மேடைகளிலும், தேர்தல் பிரச்சார நேரங்களிலும் தாறுமாறாக விமர்சித்து வந்த ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், தற்போது ஒருசில உள்ளூராட்சி மன்றங்களில் தேசி மக்கள் சக்திக்கு பூரண ஆதரவை வழங்கி இணைந்து செயற்பட ஆரம்பித்துள்ளமை மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளதுடன், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியை பலரும் விமர்சித்து வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

கட்சியை விட்டு தூக்கிய இலங்கைத் தமிழரசுக் கட்சி!

0

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பிரதேச சபையின், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் பொன்னம்பலம் இராஜேந்திரம், உடன் அமுலாகும் வகையில் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். 

கட்சியின் தீர்மானத்தை மீறிச் செயற்பட்டதன் காரணமாக அவர் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தப்படுவதாக, இலங்கைத் தமிழரசுக் கட்சி கடிதம் மூலம் அறிவித்துள்ளது. 

நேற்று நடைபெற்ற வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவுகளின் போது கட்சியின் தெளிவான அறிவுறுத்தலுக்கு மாறாக அவர் நடுநிலை வகித்ததாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்பிட்டியில் இடம்பெற்ற கோர விபத்து!

0

கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டல்குடாவ குறுக்கு வீதியில் நேற்று (18) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

குறித்த பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி வீடொன்றின் தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

சம்பவத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். 

குறித்த விபத்தில் 20 வயதுடைய தலவில பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சடலம் தற்போது கற்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

16 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வாரம்!

0

எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் ஜூலை 5 ஆம் திகதி வரை 16 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு பருவமழை காரணமாக நுளம்புகளின் பரவல் அதிகரித்துள்ளதால், அதைக் கட்டுப்படுத்த இந்த டெங்கு ஒழிப்பு வாரத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் ஆலோசகரும், சமூக வைத்திய நிபுணருமான பிரஷிலா சமரவீர தெரிவித்தார். 

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய சமூக வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர இதனைத் தெரிவித்தார். 

நாடு முழுவதும் இதுவரை 26,000இற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இதுவரை ஒரு குழந்தை மரணம் பதிவாகியுள்ளது, மேலும் 45 வீதமான நோயாளிகள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சமூக வைத்திய நிபுணருமான பிரஷிலா சமரவீர தெரிவித்தார். 

இதேவேளை, நாடு முழுவதும் 26,775 டெங்கு நோயாளர்கள் மற்றும் 14 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன. மேல், கிழக்கு, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மயிலுடன் இணைந்த திசைகாட்டி!

0

எதிர்கட்சிகள் இணைந்து ஆட்சி அமைப்பதை விமர்சித்த ஆளும் கட்சி எதிர்கட்சிகளை இணைத்துக்கொண்டு அதிகாரத்தை கைப்பற்றுவது நியாயமான செயலா என முஜீபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார்.

எதிர்க்கட்சி கூட்டணியை கீரி, பாம்பு என விமர்சித்த ஆளும் தரப்பு தற்போது விமர்சித்த அணிகளிடன் ஆட்சி அமைக்க இணைந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

ரிஷாத் பதியுதீனை சொப்பின் பேக்குடன் வந்தவர் என பிரதி அமைச்சர் ஒருவர் கடுமையாக விமர்சித்தார், தற்போது குருநாகலை மற்றும் ஹொரவபத்தானையில் அவரது கட்சி உறுப்பினர்களோடு கூட்டணி வைத்துள்ளார்கள் இதில் யார் கீரி ? யார் பாம்பு ? பிள்ளையானை தீவிரவாதி என சிறையில் அடைத்துவிட்டு அவரின் கட்சியோடு இணைந்து அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கிறார்கள். இதில் யார் கீரி யார் பாம்பு என முஜீபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார்.