Thursday, September 11, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 164

ஆளுனர் தலைமையில் புத்தளம் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்

0

புத்தளம் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று 12ஆம் திகதி வடமேல் மாகாண ஆளுனர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தலைமையில் புத்தளம் மாவட்ட செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அலி சப்ரி ரஹீம், சிந்தக அமல் மாயாதுன்ன, நீர்வழங்கள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பெரேரா ஆகியோர் கலந்துகொண்டனர்.

புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்களின் மீளாய்வுகளை அரச நிறுவனம் மற்றும் திணைக்களங்களின் பிரதானிகளால் முன்வைக்கப்பட்டது.

கடந்த காலங்களில் தடைப்பட்டுள்ள பாதை மற்றும் பாலங்களின் வேலைத்திட்டங்கள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களான அலி சப்ரி ரஹீம் மற்றும் சனத் நிஷாந்த ஆகியாரினால் கவனயீர்ப்பு செய்யப்பட்டது.

கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார பிரச்சினைக் காரணமாக பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்தமையால் இந்த வேலைத்திட்டங்கள் தடைப்பட்டதாகவும் அதனை மீள ஆரம்பிப்பதற்கான நிதித்திட்டமிடல் வேலைகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதகாவும் குறிப்பிடப்பட்டது.

விரைவில் அந்த திட்டங்களை மீள ஆரம்பிப்தற்கான தீர் மானம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மன்னம்பிட்டி விபத்து – பலி மேலும் அதிகரிப்பு

0
பொலனறுவை – மன்னம்பிட்டிய கொட்டலிய பாலத்தில் ஆற்றில் கவிழ்ந்து பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் விபத்தில் காயமடைந்த 41 பேர் மன்னம்பிட்டிய மற்றும் பொலனறுவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலனறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர் உட்பட 9 பேர் உயிரிழந்ததாக அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சம்பத் இந்திக்க தெரிவித்தார்.

அத்துடன் மன்னம்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவரும் உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கதுருவலையில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றே கொட்டலிய பாலத்தில் மோதி கொட்டலிய ஆற்றில் கவிழந்து விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பேருந்து விபத்துக்குள்ளான சந்தர்ப்பத்தில் அதில் 67 பேர் வரை பயணித்ததாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

https://youtube.com/shorts/GpnPQZwV41g?feature=share

 

மெட்டா நிறுவனம் மீது வழக்கு தொடரும் ட்விட்டர் நிறுவனம்

0

ட்விட்டருக்கு போட்டியாக த்ரெட்ஸ் செயலியை அறிமுகம் செய்து இருக்கும் மெட்டா நிறுவனம் மீது வழக்கு தொடர எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்திற்கு போட்டியாக நேற்று மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் த்ரெட்ஸ் செயலியை அறிமுகம் செய்தார். இந்த செயலியை பயன்படுத்தி ட்விட்டரை போல தகவல்கள், லிங்குகளை பரிமாற்றிக் கொள்ள முடியும்.

இந்த செயலி பயன்பாட்டிற்கு வந்த ஒரு நாளில் 3 கோடிக்கும் அதிகமானோர் பயனாளிகளாக இணைந்துள்ளனர். இந்த நிலையில் காப்புரிமை விதியை மீறி செயல்பட்டதாக த்ரெட்ஸ் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் மீது எலான் மஸ்க் வழக்கு தொடர முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கும் மஸ்கின் வழக்கறிஞர் அலெக்ஸ் பைரோ என்பவர் ட்விட்டரின் வர்த்தகம் உட்பட நிறுவனத்தின் ரகசிய தகவல்களை அறிந்தவர்களை பணிக்கு அமர்த்தி இருப்பதாக குற்றம் சாட்டி உள்ளார்.

அதுமட்டுமின்றி அறிவு சார்ந்த காப்புரிமை விதிகளை மீறி இருப்பதாக கூறி இருக்கும் அவர், ட்விட்டரின் வர்த்தக ரகசியங்களை பயன்படுத்தினால் வழக்கை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

இதனிடையே எலான் மஸ்கின் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள மெட்டா நிறுவனம், த்ரெட்ஸ் பொறியாளர்களில் ஒருவர்கூட ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றியவர் அல்ல என்று விளக்கம் அளித்துள்ளது.

சீரற்ற காலநிலையினால் 2242 பேர் பாதிப்பு

0
தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக, நாடளாவிய ரீதியில் 11 மாவட்டங்களில், 594 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 242 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்தங்களினால் இதுவரை 5 பேர் காயமடைந்துள்ளதுடன், 604 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

28 குடும்பங்களைச் சேர்ந்த 121 பேர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, திருகோணமலை, களுத்துறை, கம்பஹா, கண்டி, குருநாகல், புத்தளம் மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலயங்களுக்கு இன்றும், நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

வலய கல்வி பணிப்பாளர்களின் கோரிக்கைக்கு அமைய, இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மயக்க மருந்தினால் மற்றுமொரு பெண்ணும் மரணம்

0
தேசிய கண் வைத்தியசாலையில், சத்திரசிகிச்சைக்காக, மயக்க மருந்து செலுத்தப்பட்ட மற்றுமொரு பெண் ஒருவரும் உயிரிழந்ததாக சுகாதார தொழில் வல்லுனர்களின் தலைவர் ரவிகுமுதேஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், உயிரிழந்த பெண்ணின் உறவினர்களால் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மரணம் மயக்க மருந்தினால் ஏற்பட்டதா என்பது தொடர்பில், உடன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை

0

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமேல் மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப்பகுதிகளிலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மலையக பாடசாலைகளுக்கு விடுமுறை

0
நுவரெலியா கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளையும் (6) நாளை மறுதினமும் (7) மூடப்படும் என வலயக் கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

அசாதாரண காலநிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக அரச பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் நாட்களில் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஹட்டன் கல்வி வலயத்தைச் சேர்ந்த பாடசாலைகள் மாத்திரம் ஜுலை 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஐசிசி தர வரிசையில் முதலிடம் பிடித்த சிங்கப்பெண்

0

நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரண்டு சதங்களை விளாசி இலங்கை மகளிர் அணியின் தொடர் வெற்றிக்கு உதவிய இலங்கை துடுப்பாட்ட அணித் தலைவி சாமரி அத்தபத்து துடுப்பாட்ட வீராங்கனைகளுக்கான ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் பெத் மூனியை பின்தள்ளி சாமரி அதபத்து துடுப்பாட்ட வீராங்கனைகளுக்கான தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிராக நடைபெற்ற ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சமரி அதபத்து 3 போட்டிகளில் 2 சதங்களை பெற்றிருந்தார்.

முதல் போட்டியில் 108 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்ற அவர், இரண்டாவது போட்டியில் ஓட்டங்களின்றி ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெறும் 80 பந்துகளில் 140 ஓட்டங்களை பெற்று இலங்கை அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

வரலாற்றில் முதன்முறையாக நியூசிலாந்துக்கு எதிராக இலங்கை மகளிர் அணி ஒருநாள் தொடரை வெற்றிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஐ.சி.சியின் துடுப்பாட்ட தர வரிசையில் முதலிடம் பிடித்த இலங்கை வீராங்கனை..! | Sri Lankan Woman Cricketer 1St Place Icc Odi Rank

இதனடிப்படையில், இலங்கை மகளிர் கிரிக்கெட்டில் தரவரிசையில் முதலிடம் பிடித்த இலங்கை வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.

சனத் ஜயசூரியவை தொடர்ந்து ஐ.சி.சியின் துடுப்பாட்ட தர வரிசையில் முதலிடம் பிடித்த இரண்டாவது இலங்கையர் என்ற சாதனையை பதிவுசெய்துள்ளார்.

நாட்டில் விபத்து குறித்து அதிர்ச்சி தகவல்

0
ஒவ்வொரு மூன்று மணித்தியாலங்களுக்கும் நால்வர் இயற்கை மரணமின்றி விபத்துக்கள் காரணமாக மரணிக்கின்றனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய வருடத்திற்கு விபத்துக்களால் மாத்திரம் சுமார் 12 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகவும் அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

அதன்படி வருடத்திற்கு விபத்துக்களால் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் பேர் வரை உயிரிழக்கின்றனர்.

மேலும் இலங்கையில் ஐவரில் ஒருவருக்கு வருடாந்தம் விபத்து ஏற்படுவதுடன், மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன.

இதனால் அரசாங்கத்திற்கு பாரிய மருத்துவ செலவு ஏற்படுவதாகவும், விபத்துக்களை தவிர்த்துக்கொண்டால் பாரிய தொகையினை அரசாங்கம் சேமிக்கும் எனவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இலங்கையில் 15 வயது முதல் 44 வயதிற்கிடைப்பட்டவர்களே விபத்துக்களில் அதிகம் உயிரிழக்கின்றனர்.

இதனால் விபத்துக்களை குறைக்கும் வகையிலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் தேசிய விபத்துக்கள் தடுப்பு வாரம் கடந்த 03 ஆம் திகதி முதல் அமுல் படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

2023 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு இலங்கை தகுதி

0

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் ஜிம்பாப்வேயை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தனது இடத்தைப் பிடித்தது.

165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 32-வது ஓவரில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

இந்த வெற்றியானது 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கையின் தகுதியை உறுதி செய்துள்ளது. தகுதிச் சுற்றில் மீதமுள்ள ஒரு ஆட்டத்தில் அவர்கள் இதை அடைந்தனர்.

2023 கிரிக்கெட் உலகக் கோப்பை அக்டோபர் 7 முதல் நவம்பர் 14, 2023 வரை நடைபெற உள்ளது. இது 2011க்குப் பிறகு முதல் முறையாக இந்தியா போட்டியை நடத்துவதைக் குறிக்கும்.