Home Blog Page 166

புத்தளம் மாவட்டத்தில் 155 குடும்பங்கள் பாதிப்பு!

தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் இதுவரை சுமார் 155 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் நிவாரண சேவைகள் மையம் (NDRSC) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் புத்தளம் மாவட்டத்தின் 14 கிராம சேவகர் பிரிவுகளில், சுமார் 155 குடும்பங்களைச் சேர்ந்த 562 பேர் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்டத்தின் 10 பிரதேச செயலகங்களுக்கு உற்பட்ட 155 குடும்பங்களை சேர்ந்த 562 பேர் இவ்வாறு சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிலாபம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட அம்பகந்ததவள மற்றும் சவரான கிராம சேவகர் பிரிவில் 6 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், மொத்தமாக 12 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாத்தாண்டிய பிரதேச செயலகத்தின் தெற்கு முது கட்டுவ பிரிவில் உள்ள கால்நடை அலுவலக வளாகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சிலாபம் சவாரான பகுதியில் உள்ள சமூக மண்டபம் ஒன்றும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் வெடித்த ஆசிரியர்கள் போராட்டம்!

2026ம் ஆண்டு வடமாகாண கல்வியமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட இடம்மாற்றத்தில் கிளிநொச்சி ஆசிரியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் ஒன்றிணைந்து கிளிநொச்சி தெற்கு வலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடமாகாணக் கல்வித்திணைக்களத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான சேவையின் தேவை கருதிய இடமாற்றத்தில், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளமையைச் சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட ஆசிரியர்களும் மாவட்டத்தில் பணிபுரியும் ஏனைய ஆசிரியர்களும் அதிபர்களும் கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகளும் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த முறையற்ற விதமாக மேற்கொள்ளப்பட்ட இடமாற்றத்தை உடணடியாக இரத்துச் செய்யுமாறு வலியுறுத்தி இன்று (2025.10.24) வெள்ளிக்கிழமை கிளிநொச்சி தெற்கு வலயக்கல்விப் பணிமனைக்கு முன்பாக ஒன்றுகூடி முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தின் மூலம் இடமாற்றத்தை இரத்துச் செய்வதற்கான பின்வரும் நியாயப்பாடுகளை போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் முன்வைத்துள்ளனர்.

1. போர் நிகழ்ந்த சூழலில் தங்கள் உயிர்களை துச்சமென எண்ணி பதுங்கு குழிகளுக்குள்ளும் குண்டுமழை நடுவினிலும் நின்று கடந்த காலங்களில் பணியாற்றிய பல ஆசிரியர்களின் பெயர்களும் இப்பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளமை.

2. போர்ச்சூழலால் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களதும், உடல் உறுப்புக்களை இழந்து அடைந்தவர்களதும் பெயர்களும் இப்பட்டியலில் விழுப்புண் உள்வாங்கப்பட்டுள்ளமை.

3. உயர்கல்வியை தொடர்வதற்கான வாய்ப்புக்கள் கிடைத்தும் போர் காரணமாக மிக சவால்களின் மத்தியில் உயர்கல்வியை நிறைவுசெய்து காலதாமதமாகி ஆசியர்சேவைக்குள் உள்வாங்கப்பட்டு இன்று பாரிய குடும்பச் சுமைகளோடு பணியாற்றிவருகின்ற ஆசிரியர்களுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை.

4. கிளிநொச்சி மாவட்டத்தின் புவிசார் கட்டமைப்புகளை புரிந்து கொள்ளாமல் மாவட்டத்திற்குள்ளே பல கிலோமீற்றர் தூரம் பாரிய போக்குவரத்து நெருக்கடிகளைச் சந்தித்து பணியாற்றிய ஆசிரியர்களுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை.

5. கிளிநொச்சி மாவட்டத்தின் பல பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்யாத சூழலில் பற்றாக்குறையாகவுள்ள எமது மாவட்டத்தின் ஆசிரியவளத்தை சிதைக்கும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை.

6. முறையான தரவுகளின்றி இடமாற்றப்பட்டியலில் ஆசிரியர்களின் பெயர் உள்வாங்கப்பட்டமை மற்றும் இடமாற்றம் வழங்கப்படும் ஆசிரியர்களுக்கு நிகரான ஆசிரியர்களை வழங்குவது தொடர்பாக நம்பகமான பொறிமுறை ஏதுமின்றி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள நியாயப்பாடுகள் எதனையும் கருத்தில் கொள்ளாமல் முன்னெடுக்கப்பட்ட இடமாற்றத்தால் எமது மாவட்டத்தின் கல்வி மேலும் பின்தள்ளப்பட்டு எமது மாணவர்களின் எதிர்காலம் இருள்மயமாகி பேராபத்து நிகழவுள்ளமையினை புரிந்து கொண்டு உடனடியாக சேவையின் தேவை கருதிய இடமாற்றத்தை இரத்துச்செய்யவேண்டும் என்ற கோரிக்கையினை பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பாக ஆசிரியர் சங்கத்தினர் முன்வைத்துள்ளனர்.

கோரிக்கையின் நியாயப்பாடுகளைப் புரிந்துகொண்டு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியில் அக்கறையுள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்விமான்கள் ஆகியோரும் எம்முடன் கைகோர்த்துள்ளார்கள் என குறித்த சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீரற்ற காலநிலையால் 16 மாவட்டங்கள் பாதிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 16 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மைத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் 106 பிரதேச செயலகங்களுக்குற்பட்ட 4,959 குடும்பங்களைச் சேர்ந்த 20,247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த நிலையம் தெரிவித்துள்ளது.

மேலம் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரை நான்கு ஓர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மைத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை சீரற்ற காலநிலையால் 2 வீடுகள் முற்றாக பாதிக்கப்பட்டுளளதுடன், 507 வீடுகள் பகுதியளவில் பதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 8 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 30 பேர் பாதுகாப்பான இடத்தில் தங்கிச வைக்கப்பட்டுள்ளதாகவும், அயல் வீடுகளில் சுமார் 43 குடும்பங்களைச் சேர்ந்த 180 பேர் தங்கியுள்ளதாகவும் குறித்த நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

போதைப்பொருட்கள் தொடர்பான திடுக்கிடும் தகவல்!

இவ்வருடம் ஜனவரி 1 முதல் இதுவரையான காலப்பகுதியில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நேற்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில் இவ்வருடம் ஜனவரி 1 முதல் இதுவரையான காலப்பகுதிகளில் 2539.5 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளும், 1481.4 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 32.6 கிலோ கிராம் கொக்கைன் போதைப்பொருளும், 14,419.4 கிலோ கிராம் கேரள கஞ்சா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை குறித்த காலப்பகுதிக்குள் 30 லட்சம் போதை மருந்துகளும், 6 லட்சம் போதை மாத்திரைகளும், 575 கிராம் ஹெரோயின் ஏனைய போதை பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

மேலும் போதை தொடர்பாக 1 லட்சத்து 87 ஆயிரத்து 862 வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பரவிய போலி ஆவணம்!

சமூக ஊடகங்களில் பரவி வரும் தேசிய கல்வி சீர்திருத்தங்களுக்கான போலி சட்டமூலம் தொடர்பான போலி ஆவணம் தொடர்பில் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ.

2026 ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வி சீர்திருத்தங்களுக்கான ஒரு சட்டமூலமாக தயாரிக்கப்பட்ட போலி ஆவணம் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது, மேலும் இது கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அல்லது அதனுடன் இணைந்த எந்தவொரு நிறுவனத்தாலும் வெளியிடப்படவில்லை என்று அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

இந்த போலி ஆவணம் தயாரிக்கப்பட்டது மற்றும் சமூக ஊடகங்களில் பரவியது குறித்து விசாரித்த பின்னர் எதிர்காலத்தில் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

தர்கா நகர் அல்-ஹம்ரா கல்லூரியின் 129வது ஆண்டு விழா இன்று!

களுத்துறை தர்கா நகரில் உள்ள அல்-ஹம்ரா கல்லூரியின் 129வது ஆண்டு விழா இன்று (23) இன்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

தர்கா நகரில் உள்ள அல்-ஹம்ரா கல்லூரியின் 129வது ஆண்டு விழாவில் மேல் மாகாண ஆளுநர் ஹனிஃப் யூசுப் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திமா ஹெட்டியாராட்சி ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

கல்வி மற்றும் சமூக சேவைக்கான கல்லூரியின் நீண்டகால அர்ப்பணிப்பு, கல்வியில் சிறந்து விளங்குவதற்காக குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களின் அசைக்க முடியாத முயற்சிகள் மற்றும் பல்வேறு சமூக அடுக்குகளைச் சேர்ந்த மாணவர்களிடையே நல்லிணக்கத்தை வளர்ப்பதில் கல்லூரியின் பங்கை ஆளுநர் பாராட்டினார்.

கல்வி என்பது ஆர்வம், அனுபவம் மற்றும் கற்பனை ஆகியவற்றின் வாழ்நாள் பயணம் என்றும், இது பொறுப்புள்ள, இரக்கமுள்ள குடிமக்களை வளர்க்கிறது என்றும் ஆளுநர் வலியுறுத்தினார்.

குழந்தைகளுக்கு அறிவை வழங்குவதற்கும், ஒழுக்கமான குழந்தையை வளர்ப்பதற்கும், ஒற்றுமையை வளர்ப்பதற்கும் பள்ளியின் உறுதியான அர்ப்பணிப்புக்கு ஆளுநர் நன்றி தெரிவித்தார், மேலும் சமூகத்திற்கு பெருமை சேர்க்கும் திறமையான நபர்களை உருவாக்குவதில் அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

இந்த மதிப்புமிக்க கல்வி நிறுவனத்தின் வெற்றி மற்றும் கூட்டு சாதனைகளுக்காக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஆளுநர் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

பிரான்ஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு சைக்கிள் பயணம்!

பிரான்ஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்ட இலங்கைத் தமிழர் ஒருவர் 3 மாதங்களில் 10 நாடுகளை கடந்து, நேற்று அதிகாலை, நாகையில் இருந்து கப்பல் மூலம் இலங்கை வந்தடைந்திருக்கிறார்.

இலங்கை, யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இனோசூரன் உள்நாட்டு போர் காரணமாக பிரான்ஸ் நாட்டில் குடியேறினார். போர் முடிவுக்கு வந்த நிலையில் பல ஆண்டுகள் கழித்து சொந்த நாட்டிற்கு சைக்கிளில் செல்ல முடிவெடுத்தார்.

கடந்த ஜூலை 9 ஆம் தேதி பிரான்சு நாட்டிலிருந்து கிளம்பிய அவர், ஜெர்மன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 நாடுகளை சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் கடந்து சாதனை படைத்துள்ளார். 3 மாத பயணத்தை நாகையில் முடித்த அவர் நாகை துறைமுகத்தில் இருந்து சிவகங்கை கப்பல் மூலம் இலங்கை யாழ்பாணம் வந்தடைந்தார்.

நேற்று அதிகாலை இந்திய துறைமுகம் வந்த அவருக்கு சுபம் நிறுவனத்தின் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பல நாடுகளின் கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்களை சைக்கிளில் சென்றதால் அறிய முடிந்தது என்று கூறியுள்ள இனோசூரண், பல ஆண்டுகள் கழித்து பூர்வீக நாடான இலங்கை செல்வது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சகல பாலர் பாடசாலைகளுக்கும் ஒரே பாடத்திட்டம்!

2026 ஆம் ஆண்டு முதல் நாடளாவிய ரீதியாக அனைத்து அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் ஒரே பாடத்திட்டம் அமுல்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சு முன்னர் அறிவித்திருந்தாலும், அது 2027 ஆம் ஆண்டுக்கு திருத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, திருத்தப்பட்ட அறிவிப்பு கீழே.. 

2027 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் ஒரே பாடத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 

கல்வி சீர்திருத்தங்களுக்கான பாராளுமன்ற துணைக்குழு நேற்று (22) பாராளுமன்றத்தில் கூடியபோது, ​​பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். 

ஆரம்பப் பிள்ளைப்பருவ பாடத்திட்ட கட்டமைப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாகவும், சுமார் 19,000 பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டம் 2025 நவம்பர் 25 ஆம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

ஒவ்வொரு மாகாணத்திலும் ஆசிரியர் பயிற்சி நடத்தப்படும் என்றும், புதிய பாடத்திட்ட கட்டமைப்பின் படி கற்பித்தல் செயல்முறை செயல்படுத்தப்படும் என்றும் பிரதமர் கூறினார். 

எந்தவொரு பாடசாலையும் மூடப்படாது என்றும், தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை பாடசாலைகளை ஒருங்கிணைத்து மேம்படுத்துவதாகும் என்றும் பிரதமர் மேலும் வலியுறுத்தினார். 

கல்வி முறையின் தரமான வளர்ச்சி மற்றும் அனைவருக்கும் சம வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இது மேற்கொள்ளப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

தூக்கு தண்டனை பட்டியலில் 5 பாடசாலை மாணவர்கள்!

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். 

போதைப்பொருள் இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினரை அழித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். 

நாவலப்பிட்டி பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் கருத்துக்களைத் தெரிவித்தார். 

“தூக்கிலிடப்பட 805 ஆண்கள் சிறையில் உள்ளதுடன், தூக்கிலிடப்பட 21 பெண்களும் உள்ளனர். 

இதேவேளை தூக்கிலிடப்பட உள்ள 805 பேரில் 5 பாடசாலை மாணவர்களும் அடங்கியுள்ளனர். 

தென் மாகாணம் தான் பாதாள உலக நடவடிக்கைகளில் முதலிடத்தில் உள்ளது. 

இவ்வளவு படித்த சமூகம் கூலிக்கு கொலை செய்யும் சமூகமாக எப்படி மாறியுள்ளது என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. 

எப்படி பாரிய அளவில் போதைப்பொருட்களை கொண்டு வந்து இந்த நாட்டை அழிக்கும் நிலைக்கு அவர்கள் கொண்டு வந்தார்கள். 

இதற்கெல்லாம் மூல காரணம் இந்த நாட்டில் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள். அவர்கள் நிச்சயமாக தூக்கிலிடப்பட வேண்டும். 

ஏனென்றால் அவர்கள் ஒரு தேசத்தை அழிக்கிறார்கள். 

எனவே, பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தூக்கிலிடப்பட வேண்டும். அது பாவம் அல்ல.” என்றார்.

கடலுக்குச் சென்ற மீனவர் உயிரிழப்பு!

வெற்றிலைக்கேணி பகுதியில் கடலுக்குச் சென்ற மீனவர் உயிரிழப்பு!

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (23.10.2025) அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று அதிகாலை வெற்றிலைக்கேணியில் இருந்து படகுமூலம் கடலுக்கு மீன்பிடி நடவடிக்கைக்காகச் சென்ற ஜோசேப் துரைராசா அன்ரனி ஜோசேப் என்னும் 44 வயதுடைய குடும்பஸ்த்தருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது.

குறித்த குடும்பஸ்தர் தனக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளதாக தனது மனைவிக்கு தொலைபேசி மூலம் தெரிவித்து உதவிக்கு சிலரை அழைத்துள்ளார்.

உடனடியாக இன்னொரு படகுமூலம் தரையில் இருந்து கடலுக்கு உதவிக்கு சென்றவர்கள் குறித்த மீனவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்ததுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

குறித்த நபரை பரிசோதித்த வைத்தியர் ஏற்கனவே மீனவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது

இரண்டு பிள்ளைகளின் தந்தையான மீனவரின் இழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது