Monday, November 10, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 168

பட்டம் தேவையில்லை; விஷயம் தெரிஞ்சா கைல காசு!

0

சாப்ட்வேர் இன்ஜினியரிங் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறது. பள்ளி படிப்பு, பட்டம் உள்ளிட்டவை தேவையில்லை என எக்ஸ் சமூக வலைதள உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

உலகின் முன்னணி கோடீஸ்வரர் எலான் மஸ்க், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர். சமூக வலைத்தள நிறுவனமான எக்ஸ் தளத்தையும் நடத்தி வருகிறார். ‘டிக்டாக்’ செயலியை எலான் மஸ்க் வாங்க இருப்பதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சூழலில் வேலைக்கு ஆட்கள் பணியமர்த்தப் போகிறேன் என்று அறிவிப்பை எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார்.

அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: நீங்கள் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து, பல்வேறு விதமான செயலிகளை உருவாக்க விரும்பினால், உங்களின் விவரங்களை, code@x.comக்கு அனுப்புங்கள்.

எங்களது நிறுவனத்தில் இணைந்து விடுங்கள். நீங்கள் பள்ளிக்குச் சென்றீர்களா? நீங்கள் எந்த பெரிய பெயர் பெற்ற நிறுவனத்தில் பணிபுரிந்தீர்களா, பட்டம் படித்தீர்களா என்பது எங்களுக்கு கவலை இல்லை. உங்களது திறமையை காட்டுங்கள். இவ்வாறு எலான் மஸ்க் கூறியுள்ளார்.

திறமைசாலிகளுக்கு கை நிறைய சம்பளம் அள்ளித் தருவதில் எலான் மஸ்க் தாராளமாக நடந்து கொள்வார் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். மஸ்கின் இந்த அறிவிப்பு, அவர் டிக் டாக் சமூக வலைதளத்தை வாங்கி விட்டாரா என்ற சந்தேகத்தை கிளப்புகிறது என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.

நடிகர் சைஃப் அலிகானுக்கு சரமாரியாக கத்திக்குத்து!

0

மும்பையில் பிரபல நடிகர் சைஃப் அலிகானை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்தார்.

நடிகர் சைஃப் அலி கான் வியாழக்கிழமை பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில், மர்மநபர் ஒருவர் அதிகாலை 2.30 மணியளவில் கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளார். அதைத் தடுக்கவந்த சைஃப் அலிகானை அந்த மர்ம நபர் கத்தியால் தாக்கியுள்ளார். இதில், சைஃப் அலிகான் பலத்த காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

காயமடைந்த நடிகர் சைஃப் அலிகான் தற்போது மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாந்த்ரா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை காவல்துறை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

2012 ஆம் ஆண்டு பிரபல நடிகை கரீனா கபூரை திருமணம் செய்த சைஃப் அலிகான் மும்பையின் பாந்த்ரா மேற்கு பகுதியில் உள்ள சத்குரு ஷரண் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர்களுக்கு தைமூர், ஜெஹ் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

சைஃப் அலிகான் காயமடைந்தது பற்றி மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “சைஃப் அலி கான் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். கொள்ளையனுடன் ஏற்பட்ட மோதலில் அவர் கத்தியால் குத்தப்பட்டாரா? என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.

லீலாவதி மருத்துவமனையின் டாக்டர் நிரஜ் உத்தாமணி கூறுகையில், “காயமடைந்த சைஃப் அலிகான் அதிகாலை 3.30 மணியளவில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு 6 கத்திக்குத்து காயங்கள் இருந்தன. அவர் முதுகில் கத்திக்குத்து விழுத்துள்ளது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்து வருகிறோம். அறுவைசிகிச்சைக்குப் பிறகுதான் பாதிப்பு எவ்வளவு என்பது தெரியவரும்” என்றார்.

ஏற்கனவே, கடந்தாண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி பாந்த்ராவில் தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவாா்) கட்சியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் பாபா சித்திக்கை, பிரபல கொள்ளைக் கும்பல் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனா்.

அதன்பின்னர், நடிகர் சல்மான் கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வந்தது. அதன் ஒருபகுதியாக இந்தத் தாக்குதல் சம்பவம் இருக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

2000 ரூபா டிக்கட் 16000 ரூபாவிற்கு விற்பனை!

0

வெளிநாட்டினரின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வரும் மலையக ரயில் மார்க்கத்தின் எல்ல வரை செல்லும் ரயிலுக்கான இணையவழி பயணச்சீட்டுகள் (ஈ-டிக்கட்) இணையத்தில் வௌியிடப்பட்டு 42 வினாடிகளில் தீர்ந்துவிட்டதால், இதில் பாரிய அளவிலான மோசடி நடைபெற்று வருவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர், டிக்கட் விற்பனை மோசடி தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று (15) கண்டி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அதன் இணைத் தலைவர்களான அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இணையவழி ஊடாக அனைத்து இணையவழி பயணச்சீட்டுகளையும் (ஈ-டிக்கட்) வாங்கி, 2,000 ரூபா பெறுமதியான டிக்கெட்டை வெளிநாட்டினருக்கு 16,000 ரூபாவுக்கு விற்கும் குழுக்கள் பற்றிய தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு கோட்டை, கண்டி மற்றும் எல்ல ரயில் நிலையங்களை மையமாகக் கொண்டு அதிக விலைக்கு ரயில் பயணச்சீட்டுகளை விற்பனை செய்து வருவதாகவும், இந்த செயற்பாட்டிற்காக ரயில் நிலைய வளாகத்தில் முச்சக்கர வண்டிகளை நிறுத்தி வைத்திருப்பவர்களின் உதவி கிடைப்பதாகவும் தகவல்கள் இருப்பதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

ரயில்வே திணைக்களத்தின் ஊடாக தொடர்புடைய திகதிக்கு செல்லுபடியாகும் இணையவழி பயணச்சீட்டுகளை (ஈ-டிக்கட்) ஒரு மாதத்திற்கு முன்பே இணையத்தில் வெளியிடுவதாகவும், அவை வெளியிடப்பட்டு 42 வினாடிகளில் விற்றுத் தீர்ந்துவிடுவதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கணினிகள் தொடர்பான சிறப்பு அறிவைக் கொண்ட ஒரு நபர் அல்லது குழுவால் இது மேற்கொள்ளப்படுவதாக சந்தேகம் இருப்பதாகவும், குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அளிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பான அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என்றும், அவசர நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கையில் முறைப்பாட்டை வழங்கும் நபர் சட்ட நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும், அதிக விலைக்கு பயணச்சீட்டுக்களை வாங்குவோர் இது தொடர்பில் குற்றச்சாட்டுக்களை மாத்திரம் தெரிவிப்பதாகவும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக ஒத்துழைப்பு வழங்காமல் இருப்பது சிக்கல்களை ஏற்படுத்துவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விடுவிக்க முடியாமல் துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்கள்!

0

1,100 கொள்கலன் தாங்கிப் பாரவூர்திகள் துறைமுகம் மற்றும் சுங்கத்தில் தேங்கியுள்ளதாக அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள இதனைத் தெரிவித்துள்ளார். 

இதுதவிர, சீ.ஐ.சீ.டீ தளத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுடன் 400 கொள்கலன் தாங்கிகள் தேங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த கொள்கலன் தாங்கிப் பாரவூர்திகளை விடுவிப்பதற்கான உரிய நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் கொள்கலன்களை அனுமதிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக நாட்டிற்கு வந்த சுமார் 25 அல்லது 30 கப்பல்கள் திரும்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுவதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித் ருவான் கொடிதுவக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாகவில்லில் கலைகட்டிய கலை நிகழ்வு!

0

புத்தளம் எருக்கலம்பிட்டி கிட்ஸ் கெம்பஸ் பாலர் பாடசாலை மாணவர்களின் வருடாந்த கலை நிகழ்ச்சியும், பரிசளிப்பு வைபவமும் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

எருக்கலம்பிட்டி யாங் யுன்னைட்டட் கழகத்தின் பூரண அனுசரனையில் இயங்கிவரும் எருக்கலம்பிட்டி கிட்ஸ் கெம்பஸ் மாணவர்களின் கலை நிகழ்வுகள் மேடையை அலங்கரித்தன.

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த கலை நிகழ்வில் ஊரின் பெரும் திரலான மக்கள் கலந்துகொண்டனர்.

மாணவர்களின் மேடை நிகழ்வுகள் வருகை தந்தவர்களின் உள்ளங்களை குளிரச்செய்தன.

வர்ணமயமான மாணவர்களின் வினோத உடை நிகழ்வுகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தத்துடன், நடன நிகழ்ச்சிகள் பெரும் பாரட்டையும் பெற்றன.

2024ஆம் ஆண்டு பாலர் பாடசாலையை நிறைவுசெய்த மாணவர்களுக்கு சான்றிதல்களும், நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன், ஏனைய மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலை அதிபர் SM ஹுசைமத், முன்னாள் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் SM ரிஜாஜ், கல்விமான்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

முச்சக்கரவண்டிகாரர்களுக்கு ஹெப்பி நியூஸ்!

0

சட்டத்திற்கு இணங்க முச்சக்கர வண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக உதிரிபாகங்களை அகற்றுவதில்லை என பொலிஸ் தீர்மானித்துள்ளது.

அதன்படி, முச்சக்கர வண்டிகளில் மேலதிக உதிரிபாகங்களை பொருத்துவதில் உள்ள சட்ட கட்டமைப்பு மற்றும் வரம்புகளுக்கு ஏற்ப சட்டத்திற்கு இணங்க பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளின் உதிரிபாகங்கள் அகற்றப்படாமல் இருப்பதை உறுதி செய்ய பொலிஸ் இனிமேல் நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை முச்சக்கர வண்டி உதிரிபாக உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் இடையில் இன்று (15) நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், சட்டத்திற்கு இணங்காத ஆபத்தான முறையில் பொருத்தப்பட்ட உதிரிபாகங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டி உதிரிபாக உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் தொழிலை இல்லாதொழிக்க இலங்கை பொலிஸ் ஒருபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று பொலிஸ் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும், வீதியை பயன்படுத்துபவர்கள், முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் வீதியில் பயணிக்கும் பாதசாரிகளின் பாதுகாப்பிற்காக இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

இந்தக் கலந்துரையாடல் பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது.

நாகவில்லுவில் சிறப்பாக இடம்பெற்ற கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி!

0

புத்தளம் எருக்கலம்பிட்டியில் கடந்த மூன்று திங்களாக இடம்பெற்ற (12,13,14) கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் எருக்கலம்பிட்டி திகா53 அணியினர் சாம்பியன் பட்டம் வென்றனர்.

நீண்ட விடுமுறையை முன்னிட்டு மின்னொளியில் இரவு நேர போட்டிகளாக மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் சுமார் 20யிற்கும் அதிகமான அணிகள் பங்குபற்றின.

இளைஞர்கள் மத்தியில் அதிகமாக பரவிவரும் போதை பாவனையிலிருந்து விடுபடச் செய்யவும், கரப்பந்தாட்ட விளையாட்டை ஊக்குவித்து விளையாட்டின் பக்கம் இளைஞர்களை ஈடுபடுத்தும் நோக்கிலும் ஜனாப் BM ஹிலாலி மற்றும் நாசர் இன்ஸார் ஆகியோரின் ஏற்பாட்டில் குறித்த சுற்றிப்போட்டி நடைபெற்றது.

ஆரம்பம் முதல் இறுதிவரை மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற குறித்த போட்டியில் பல அணிகளை துவம்சம் செய்து ரக்கிட்ட மற்றும் திகா53 அணியினர் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தினர்.

மிகவும் சூடாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் ரக்கிட அணியை வீழ்த்தி திகா53 அணியினர் வெற்றி வாகை சூடினர்.

சாம்பியன் கிண்ணத்துக்கான அனுசரணையை அல்ஹாஜ் CM அஸீஸ் அவர்களும் இரண்டாம் இடத்தை பிடித்த அணிக்கான வெற்றிக்கிண்ணத்திற்கு ஜனாப் ஹனீபா சஜித் அவர்களும் அனுசரணை வழங்கி இருந்தனர். மேலும் ஏனைய பரிசில்களுக்கு ஊரின் முக்கியஸ்தர்கள் பலரும் அனுசரணை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களால் ஆபத்தா?

விண்வெளியில் பூமியை சுற்றி வந்துக்கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கொள்களை சீனா நினைத்தால் வெறும் 12 மணி நேரத்தில் தாக்கி அழித்துவிட முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்கிற செய்தி ஊடகத்தில் இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தற்போது சீனா 99 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இவை அனைத்தும் நான்ஜிங் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஆஸ்ட்ரோனாட்டிக்ஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளிக் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் வூ யுன்ஹுவா தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இவை அனைத்தும் எலான் மஸ்கின் 1400 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை வெறும் 12 மணி நேரத்தில் காலி செய்துவிடும். சீன செயற்கைக்கோளில் லேசர், நுண் அலைகளை உருவாக்கும் கருவி, உளவு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம். ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வெறுமென நெட்வொர்க் கொடுக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. தவிர, ராணுவ நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என சீனா குற்றம்சாட்டி வருகிறது.

அதாவது, உக்ரைன்-ரஷ்யா போரில், உக்ரைன் படைகளுக்கு தகவல்கள் கொடுக்கவும், ரஷ்ய எல்லையை துல்லியமாக கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 2022ம் ஆண்டு ரஷ்ய போரின்போது அப்போதைய உக்ரைனின் துணைப் பிரதமரான மைக்கைலோ ஃபெடோரோவ், “ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவையை உடனடியாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த மஸ்க், “உடனடியாக சேவை வழங்கப்படும்” என்று கூறியிருந்தார்.

உக்ரைன் போருடன் மட்டுமே ஸ்டார்லிங்க் நிற்காது, நாளை சீனாவுக்கும்-தைவானுக்கும் பஞ்சாயது ஏற்பட்டால் அப்போதும், தைவானுக்கு சப்போர்ட் செய்ய ஸ்டார்லிங்க் வரும். எனவே இந்த கூட்டு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க சீனா இந்த புதிய செயற்கைக்கோள்களை உருவாக்கியிருக்கிறது.

கடந்த 2023ம் ஆண்டு இதற்கான பணிகளை சீனா தொடங்கியது. இந்த திட்டத்திற்கு ‘கியான்ஃபான் மெகா-விண்மீன் திட்டம்’ (Qianfan mega-constellation project) என்றும் பெயரிட்டிருந்தது. நோக்கம் உலகம் முழுவதும் இணைய தொடர்பை வழங்குவதாகும். இதற்காக மொத்தம் 15,000 சிறிய ரக செயற்கைக்கோள்களை ஏவ சீனா முடிவெடுத்தது. இதன் முதல் தொகுப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்டது. இதில் 18 செயற்கைக்கோள்கள் இருந்தன.

ஒவ்வொன்றும் சுமார் 300 கி.கி எடையில் இருந்தது. இவை பூமியிலிருந்து 800 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது. இதேபோன்று 2024 டிசம்பரில் அடுத்து இரண்டு தொகுதி ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. தற்போது மொத்தம் 99 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் இருக்கின்றன. 15,000 செயற்கைக்கோள்களை 3 கட்டங்களாக ஏவ இருக்கிறது. முதல் கட்டத்தில் 1,296 செயற்கைக்கோள்கள் ஏவப்படும். இதில் 648 செயற்கைக்கோள்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏவப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பதுளை மாவட்டத்திற்கு கடும் எச்சரிக்கை!

0

உல்ஹிட்டிய – ரத்கிந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் மேலும் திறக்கப்படுகின்றன

அதிக மழைவீழ்ச்சி காரணமாக, நீர் மட்டத்தை கண்காணிக்கும் பொறியியலாளரின் ஆலோசனைப்படி, உல்ஹிட்டிய – ரத்கிந்த நீர்த்தேக்கத்தின் அதிகப்படியான நீரை வெளியேற்றுவதற்காக வெளியேற்றும் வாயில்கள் ஏழும் 0.5 மீட்டர் வரை திறக்கப்பட்டுள்ளன என்று பதுளை மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவிக்கிறது.

இதன் காரணமாக ரத்கிந்தையிலிருந்து கிராந்துருக்கோட்டை வரையிலான வழியில் “ரத்கிந்த கோசுவ” உட்பட தாழ்நிலப்பகுதிகள் நீரில் மூழ்கும் என்பதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு நீர்த்தேக்கத்தின் பொறுப்பதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.

பதுளை மாவட்ட ஊடகப் பிரிவு

இன்றைய திடீர் காலநிலை மாற்றம்!

0

இன்றையதினம் (15) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்பதோடு, அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கிழக்கு, ஊவா, மத்திய, தென் மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ. அளவான் பலத்த மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களிலும் மாத்தறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை வேளைகளில் ஏற்படும் தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

கடல் பகுதிகளில்
காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை , மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது . நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோமீற்றர் வரையில் வடகிழக்கு திசையாக வீசக்கூடும். நாட்டைச் சுற்றியுள்ள ஏனைய கடற்பரப்புகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45- 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம் .