Monday, March 16, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 176

மாணவனை கொன்ற அதே பாடசாலை மாணவர்கள்!

0

தனது பாடசாலையில் உயர் வகுப்பு மாணவர்கள் குழுவொன்றின் தாக்குதலுக்கு உள்ளாகி, கடுமையான காயங்களுடன் குருணாகலை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சுமார் 07 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த மாணவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் ரிதீகம – வெலெகெதர – ஷகரலிய வத்த பகுதியிலிருந்து பதிவாகியுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர், குருணாகலை – புலுவல மகா வித்தியாலயத்தில் 11ஆம் தரத்தில் கல்வி கற்ற மாணவன் ஆவார்.

கடந்த 16ஆம் திகதி, ரிதீகம – வெலெகெதர – அங்ஹந்திய பகுதியில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்பதற்காக, குருணாகலை – புலுவல மகா வித்தியாலயத்தில் 11ஆம் தரத்தில் கல்வி கற்ற திலிண விராஜ் என்ற மாணவன் சென்றிருந்தான்.

திலிண செல்லும் வழியில், அதே பாடசாலையில் இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் குழுவொன்றும், மற்றொரு வெளியாட்கள் குழுவும், தனிப்பட்ட பகைமையை காரணமாகக் கொண்டு அவனைத் தாக்கியுள்ளனர்.

இதன்போது, பாதுகாப்பு தலைக்கவசங்களால் மாணவனின் தலையில் தாக்கப்பட்டதால், அவர் மயக்கமடைந்து, முதலில் மாவத்தகம முதன்மை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருணாகலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

எனினும், குருணாகலை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் இன்று உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தெரியவந்ததும், வெளிநாட்டில் இருந்த திலிணவின் தாய் தற்போது வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

மாணவனைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதல் நடத்திய அனைத்து சந்தேக நபர்களையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, குருணாகலை – வெலெகெதர பொலிஸ் நிலையத்தின் முன்பாக ஷகரலிய தோட்ட பகுதி மக்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் டேன் பிரியசாத் பலி!

0

இன்றிரவு (22) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று இரவு 9.10 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வெல்லம்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மேல் மாடியில் வைத்து  அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் மற்றுமொரு நபர் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கைத்துப்பாக்கியில் இந்த துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாப்பரசர் எழுதிய காதல் கடிதம்!

0

உலக அமைதிக்காக பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டு, பல்வேறு முற்போக்கான முடிவுகளை எடுத்த கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிராசின்ஸ் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக நித்திய இளைப்பாறினார்.

அவருக்கு வயது 88 ஆகும். அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த இவர் தென் அமெரிக்காவை நாடுகளில் இருந்து முதன்முதலில் போப் ஆண்டவரானது இவர்தான். இவர் கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து கத்தோலிக்க திருச்சபையின் 266வது போப் ஆண்டவராக செயல்பட்டார். இவர் தனது 22 வயதில் இருந்து கிறிஸ்துவ சமூகத்திற்கான சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

போப் பிரான்சிஸின் இயற்பெயர் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ ஆகும். ஜார்ஜ் இறைவனுக்கு தன்னை அர்ப்பணிப்பதற்கு முன்பு, தனது 12 வயதில் அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் வசித்து வந்தார். அப்போது, ஜார்ஜ் அவரது பக்கத்துவீட்டு பெண்ணான அமாலியா டாமோன்ட் என்ற பெண்ணை காதலித்து, அவருக்கு காதல் கடிதமும் எழுதியுள்ளார்.

சிறுவயதில் அந்த பெண்ணுடனான நட்பு அவருக்கு ஆழமான காதலாக வளர்ந்திருக்கிறது. உடனே அந்த பெண்ணிடம் சென்று காதலை வெளிப்படுத்தியது மட்டுமின்றி திருமணம் செய்யும் விருப்பத்தையும் தெரிவித்திருக்கிறார்.

கடந்த 2013ஆம் ஆண்டு ஜார்ஜ், போப் ஆண்டவராக பொறுப்பேற்ற பின்னர் அவரது அமாலியா டாமோன்ட் என்ற அந்த பெண்மணி அந்த சம்பவத்தை நினைவுக்கூர்ந்து நேர்காணல் அளித்திருந்தார்.

அதில் அவர்,”ஜார்ஜ் என்னிடம்,’நீ என்னை திருமணம் செய்ய ஒப்புகொள்ளாவிட்டால், நான் பாதிரியராகி விடுவேன்’ என சொன்னான்.

அவன் அப்போது பெரியவனாக, முதிர்ச்சி பெற்றவனாக, அற்புதமான பையனாக இருந்தான். நாங்கள் நடைபாதைகளிலும் பூங்காக்களிலும் நடனமாடினோம், விளையாடினோம். அது மிகவும் அழகான நேரம். நாங்கள் இருவரும் பணிவாகவும் ஏழைகளை பற்றி அக்கறையுடனும் இருந்தோம்” என்றார்.

ஆனால், அந்த அமாலியாவின் வீட்டில் இவர்களின் காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். அந்த பெண்ணை கண்டித்த அவரது தந்தை,’எவ்வளவு தைரியம் இருந்தால் ஒரு ஆணுக்கு நீ கடிதம் எழுதுவாய்’ என்று கூறி அடித்துள்ளார்.

அதன்பின் அமாலியா – ஜார்ஜ் இருவரும் பல மாதங்களுக்கு சந்திக்கவே இல்லையாம். இறுதியில் ஜார்ஜ் பாதிரியாகும் நிகழ்வில்தான் அமாலியா அவரை பார்த்தாராம்.

இவரின் பாதையும் வெகு தொலைவில் சென்றவிட்ட பின்னரும், ஜார்ஜ் – அமாலியா இடையே ஒரு நட்பான, மரியாதையான உறவு நீடித்துள்ளது. இருவருக்கும் பல ஆண்டுகளாக கடித போக்குவரத்தும் இருந்திருக்கிறது. நல்ல வேளை அன்று நான் அவனுக்கு ஓகே சொல்லவில்லை என்றும் அமாலியா ஒருமுறை ஜோக் அடித்ததும் இங்கு நினைவுக்கூரத்தக்கது. 

சமையலறையில் பரிதாபமாக உயிரிழந்த தாய்!

சமையல் எரிவாயு கசிந்து தீவிபத்து ஏற்பட்டதன் காரணமாக குடும்பப் பெண் பலி!

கிளிநொச்சி மருதநகர் பகுதியில் 20.04.2025 அன்று சுமார் 3.30 மணியளவில், பரசுராமன் பரமேஸ்வரி 59 வயதுடைய பெண்ணேருவர் தனது வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, எரிவாயு சிலிண்டர் கசிவுகாரணமாக திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக உயிரிழந்தார்.

ஆடையில் தீப்பரவல் ஏற்பட்டதன் காரணமாக பலத்த காயங்களுடன் அவர் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று 22.04.2025 உயிரிழந்துள்ளார்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

உலகை விட்டு பிரிந்தார் பாப்பரசர் பிரான்சிஸ்!

0

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார். 

88 வயதான பாப்பரசர், வத்திக்கானில் உள்ள காசா செண்டா மார்த்தாவில் உள்ள தமது இல்லத்தில் இயற்கை எய்தியுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

சுவாசக் கோளாறு காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பாப்பரசர் பிரான்சிஸ், அதன் பின்னர் குணமடைந்து இல்லம் திரும்பியிருந்தார். 

நேற்று (20) வத்திக்கானில் உள்ள புனித பீட்டர்ஸ் பெசிலிக்காவில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு ஆராதனையிலும் அவர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் உள்ளே சென்ற சாமர சம்பத் எம்.பி!

0

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பதுளை நீதவான் நுஜித் டி சில்வா இன்று (21) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

மேலும் இதற்கு முன்னர் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

10ஜி சேவையை அறிமுகப்படுத்தியது சீனா!

10ஜி இணைய சேவையை சீனா அறிமுகம் செய்துள்ளது. பதிவேற்ற வேகம் 1008 Mbps ஆக இருக்கிறது.

இணைய சேவையின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒரு சில நிமிடங்கள் இணைய சேவை தடைபட்டாலே வேலைகள் அனைத்தும் நின்று போகும் அளவுக்கு, இணையம் உலகை ஆக்கிரமித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் அனைத்து வேலைகளுமே இணைய சேவையை நம்பியே இருக்கிறது.இணைய பயன்பாட்டை பொறுத்தவரை, அதன் வேகம் முக்கியமான ஒன்று. 2ஜி யில் தொடங்கிய இணைய சேவை, 3ஜி, 4ஜி என அதிகரித்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தற்போது 5ஜி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உலகெங்கும் இப்போது 5ஜி சேவை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் மூலை முடுக்கெல்லாம் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தும் பணி நடக்கிறது. இந்நிலையில்,ஹூவாய் தொழில்நுட்ப நிறுவனம், சீனா யூனிகாம் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து, ஹெபெய் மாகாணத்தின் சியோங்கான் நியூ என்ற பகுதியில் சீனாவின் முதல் 10ஜி ஸ்டாண்டர்ட் பிராட்பேண்ட் நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த பகுதி தலைநகர் பீஜிங்கிற்கு அருகில் அமைந்துள்ளது. இது சீனாவின் முக்கிய தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்த 10ஜி இணைய சேவையில், பதிவிறக்க வேகம் 9834 Mbps, பதிவேற்ற வேகம் 1008 Mbps ஆக உள்ளது. இந்த வளர்ச்சி சீனாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பிற்கு ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் 5ஜி சேவையே தற்போது தான் அறிமுகம் ஆகியுள்ள நிலையில், சீனாவில் 10ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் – வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு!

0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தொடர்பாக அறிக்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு….

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியின் பணிப்பில் சிஐடிக்கு கையளிக்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் ஆவணங்கள் அடங்கிய தொகுதிகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் இன்று (20) குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன், ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில், உயிர்த்த தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் துரிதமாகவும் புதிய திசையிலும் முன்னெடுக்கப்பட்டன.

அதன்படி, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் ஆறாவது ஆண்டு நிறைவில், இந்த மிலேச்சத்தனமான தாக்குதல் குறித்து சுயாதீனமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்வதில் அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது.

இந்தக் குற்றத்தை கால ஓட்டத்தில் மறைந்து விடாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என்று உத்தரவாதத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2025-04-20

வெப்பநிலை குறித்து முக்கிய தகவல்!

0

மத்திய மாகாணம் மற்றும் கேகாலை, பதுளை பிரதேசங்களில் நாளை (21) வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய அளவில் மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வட மத்திய, வடமேல், மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் இரத்தினபுரி, மொனராகல மாவட்டங்களிலும் மனித உடலுக்கு உணரும் அளவில் வெப்பநிலை 39 முதல் 45 செல்சியஸ் வரையில் அதிகரிக்க கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.  

இந்த சூழ்நிலையில், கடுமையான வெளிப்புற செயல்பாடுகளை மட்டுப்படுத்தவும், போதுமான அளவு தண்ணீர் குடித்தல் மற்றும் இயன்றளவு நிழல் பகுதிகளில் ஓய்வெடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

டிரம்பை கதறவிடவுள்ள அமெரிக்க போராட்டம்!

0

அதிபராக பொறுப்பேற்ற டிரம்புக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் வலுத்து வருகிறது.

அதிபர் டிரம்ப் இறக்குமதி ஏற்றுமதி வரி ஏற்றம், வெளிநாட்டவர்களை வெளியேற்றுதல், வரி உயர்வு, பல நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நிதி நிறுத்தம், காசா, உக்ரைன்போரில் அமெரிக்க நிலை, அரசு ஊழியர்கள் பணி நீக்கம் என கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார் டிரம்ப்.

அதிபர் டிரம்ப் பதவி ஏற்றது முதல் அரசு ஊழியர்கள் சுமார் 2,00,000 பேர் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இது போன்ற முடிவுகளுக்கு அமெரிக்க மக்கள் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். சர்வாதிகாரத்திற்கு எதிராக ஜனநாயகத்தை பாதுகாக்க போராட்டத்தை துவக்கி உள்ளதாகவும், மீண்டும் ஒரு சுதந்திர புரட்சியை உருவாக்குவோம் என்கின்றனர் போராட்டக்காரர்கள்.

நேற்று சனிக்கிழமை முதல் துவங்கிய போராட்டம் 50 மாகாணங்களில் 400 க்கும் மேற்பட்ட பேரணிகள் நடத்த திட்டமிட்டுள்ளனர். பலரும் டிரம்ப்பிற்கு எதிராக பதாகைகள் ஏந்து போராரடி வருகின்றனர். டவுண்டவுன், சான்பிரான்சிஸ்கோ, ஒரு கோடிக்கும் மேல் போராட்டக்காரர்கள் திரள இருப்பதாக ஒருங்கிணைப்பு கமிட்டியினர் தெரிவிக்கின்றனர். இன்னும் பலகட்ட போராட்டங்கள் நடக்கும் என்பதால் டிரம்ப் நிர்வாகம் அதிர்ந்து போய் உள்ளது.

வாஷிங்டன் டிசியில் உள்ள துணை அதிபர் மாளிகையை முற்றுகையிடும் பேரணி துவங்கி உள்ளாதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.