Thursday, June 25, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 195

கிளிநொச்சியில் மாஸ் காட்டிய தமிழரசுக் கட்சி!

தெரிவின்றி கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளராக சுப்பிரமணியம் சுரேன் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டார்.

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபு தலைமையில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது இலங்கை தமிழரசுக்கட்சி சார்ந்த சுப்பிரமணியம் சுரேன் பெயர் பரிந்துரைக்கப்பட்டபோது ஏனைய தெரிவு இல்லாத நிலையில் சுப்ரமணியம் சுரேன் தெரிவு செய்யப்பட்டார்.

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக 06 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தி சார்பாக 03 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி சார்பாக 03 உறுப்பினர்களும் அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் சார்பாக 01 உறுப்பினரும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உப தவிசாளராக சிவகுரு செல்வராசா தெரிவு செய்யப்பட்டார்.

சிரியாவில் தற்கொலை தாக்குதல்; 20 பேர் பலி!

0

சிரியா – டமாஸ்கசில் உள்ள கிரேக்க ஓர்தோடெக்ஸ் தேவாலயத்தில் (Orthodox church Damascus) தற்கொலை குண்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது. 

இத்தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததுடன் 63 பேர் காயமடைந்துள்ளனர். 

நேற்றையதினம் இடம் பெற்ற ஞாயிறு ஆராதனையின் போது குறித்த தற்கொலை குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலை மேற்கொண்ட தற்கொலை குண்டுதாரி ஜிஹாதி குழுவான இஸ்லாமிய அரசுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது. 

இதுவரையிலும் குறித்த குழு இந்த தாக்குதலுக்கு உரிமை கோரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை மாநகர சபை SJB வசம்!

0

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை பெற்றிருந்த ஹம்பாந்தோட்டை மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மேயர் பதவியைப் பெற்று அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. 

ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் முதலாவது அமர்வு இன்று நடைபெற்றது. 

இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் டி.ஏ.காமினி அதிகளவான வாக்குகளைப் பெற்று ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதேவேளை மாத்தளை மாநகர சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்டது.

தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் அசோக கொட்டச்சி 12 வாக்குகளைப் பெற்று மாத்தளை மாநகர சபையின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, அதன் பிரதி மேயராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் எம்.மோகன் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார். 

மாத்தளை மாநகர சபையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், மத்திய மாகாண உள்ளூராட்சி சபை ஆணையாளர் சமிலா அதபத்துவின் தலைமையில் மேயர் மற்றும் பிரதி மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு இன்று (23) மாத்தளை மாநகர சபை ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. 

வாக்களிப்பு தொடங்கிய சிறிது நேரத்திலேயே, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட 10 உறுப்பினர்கள் வாக்களிப்பைப் புறக்கணித்து, மண்டபத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். 

உள்ளூராட்சி சட்டத்தை மீறி பதவி வகிக்க தகுதியற்ற பெண் உறுப்பினருக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் சபையை விட்டு வௌியேறியதாகவும், இந்த வாக்கெடுப்பு சட்டவிரோதமானது எனவும் சபையிலிருந்து வௌிநடப்பு செய்த உறுப்பினர்கள் தெரிவித்தனர். 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மாத்தளை மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி கட்சி 10 உறுப்பினர்களை வென்றிருந்தது. 

மேலும், ஐக்கிய மக்கள் சக்தி 6 உறுப்பினர்களையும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 2 உறுப்பினர்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 1 உறுப்பினரையும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 1 உறுப்பினரையும், சர்வஜன பலய 1 உறுப்பினரையும், ஐக்கிய தேசியக் கூட்டணி 1 உறுப்பினரையும் கைப்பற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Click here to join our whatsApp group

கற்பிட்டி வீதியில் மற்றுமொரு கோர விபத்து!

0

கற்பிட்டி – பாலாவி வீதியில் ஏத்தாலை பிரதேசத்தில் பாலவியில் இருந்து கற்பிட்டி நோக்கிய பயணித்த லொறியொன்று அதே திசையில் பயணித்த முச்சக்கரவண்டியை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில், எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி இரு வாகனங்களும் வீதியில் கவிழ்ந்து விபத்துள்ளாகின. 

விபத்தில் மோட்டார் ஓட்டுநரும் லொறியின் சாரதியும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். 

விபத்தில் மரணித்தவர் 38 வயதுடைய தலவில பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். 

சடலம் கற்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மிக முக்கிய பாதையை மூடவுள்ள ஈரான்!

0

ஈரான் – இஸ்ரேல் நாடுகள் ஒரு வாரத்திற்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க இராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய பங்காக உள்ள ஹார்முஸ் ஜலசந்தி எனப்படும் ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் பாராளுமன்றம் அனுமதி அளித்துள்ளது. உலகம் முழுவதுக்குமான 20% கச்சா எண்ணெய் இந்த நீரிணை வழியேதான் பல்வேறு பகுதிகளுக்கு கப்பலில் கொண்டு செல்லப்படுவதால், கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் பெற்றோல், டீசல், விலைகளும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஹார்முஸ் ஜலசந்தி

ஹார்முஸ் ஜலசந்தி என்பது பாரசீக வளைகுடாவை ஓமன் வளைகுடா மற்றும் அரேபிய கடலுடன் இணைக்கும் ஒரு குறுகிய கடல்வழிப் பாதையாகும். இது உலக எரிசக்தி வர்த்தகத்தில் மகத்தான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இந்தக் குறுகிய நீர்வழிப்பாதை சுமார் 21 மைல் பரப்பளவைக் கொண்டுள்ளது. இரண்டு 2 மைல் அகல கப்பல் வழித்தடங்களை கொண்டுள்ளது. 

உலகின் எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் 26 சதவீத போக்குவரத்திற்கு இந்த வழித்தடத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் இது உலகளவில் மிக முக்கியமான எரிசக்தி மையங்களில் ஒன்றாக அமைகிறது. இந்த பாதையில் நடைபெறும் எண்ணெய் வர்த்தகத்தில் ஏற்படும் எந்தவொரு இடையூறும் சர்வதேச எரிசக்தி சந்தையில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என சர்வதேச எரிசக்தி அமைப்பு கூறியிருக்கிறது.

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு

0

ஈரானின் அணுசக்தி நிலையங்களைச் அண்டிய பகுதிகளில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை அடுத்து, இஸ்ரேலின் வடக்கு மற்றும் மத்திய நகர்ப்புறங்களில் ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் பல நடந்துள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். 

மத்திய கிழக்கு மோதல்கள் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு, அவர் குறிப்பிட்டுள்ளதாவது, இந்த நிலைமை நாள் முழுவதும் மோசமடையலாம் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 

அதன்படி, இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கையர்களும் இந்த நிலைமையில் ஏற்படக்கூடிய தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க, பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார, அங்கு வசிக்கும் அனைத்து இலங்கையர்களிடமும் கோரியுள்ளார். 

இதற்கிடையில், கடந்த 20ஆம் திகதி இரவு TABA எல்லை வழியாக இலங்கைக்குப் புறப்படுவதற்காக எகிப்திற்குள் நுழைந்த நான்கு இலங்கையர்களில், செல்லுபடியாகும் இஸ்ரேல் விசா இல்லாதவர்கள் சில மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். 

பின்னர், எகிப்தில் உள்ள இலங்கைத் தூதுவர் சிசிர செனவிரத்ன மற்றும் அவரது குழுவினர், எகிப்தின் பாதுகாப்பு மற்றும் எல்லைக் குழுக்களுடன் ஒருங்கிணைந்து, பாதுகாப்புப் படைகளின் உதவியுடன் அவர்கள் நேற்று (21) காலை கெய்ரோ விமான நிலையத்திற்கு வந்ததாக நிமல் பண்டார தெரிவித்தார். 

அவர்கள் இன்று காலை கெய்ரோ விமான நிலையத்திலிருந்து இலங்கைக்குப் புறப்படவிருந்ததாக தூதுவர் கூறினார். 

மேலும், நேற்றைய தினம் இலங்கைக்குப் புறப்பட எதிர்பார்த்த மூவர் வந்துள்ளதுடன், அவர்களுக்கு தேவையான ஆவணங்களைத் தூதரகம் தயார் செய்து வழங்கியதாகவும், அவர்களும் TABA எல்லை வழியாக கெய்ரோ விமான நிலையத்திற்கு சென்று இலங்கைக்கு வரவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

மீள் நுழைவு விசா காலத்தை நீட்டிக்க தூதரகத்தின் உதவி 

இதற்கிடையில், தற்போது இஸ்ரேலில் பணிபுரிந்து இலங்கைக்கு விடுமுறையாக வந்திருக்கும் மேலும் 119 பேர் கொண்ட குழுவொன்று இருப்பதாக தூதரகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு மேலதிகமாக துபாய் மற்றும் அபுதாபி விமான நிலையங்களில் தங்கியிருந்த 10 பேர் மீண்டும் இலங்கைக்கு புறப்பட்டுச் சென்றதாகவும் தூதுவர் குறிப்பிட்டார். 

அதன்படி, அவர்களின் மீள் நுழைவு விசா காலத்தை நீட்டிக்க PIBA நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கையர்களுக்கு மட்டுமல்லாமல், ஈரான் தாக்குதல்கள் தொடங்கியதால் மீள் நுழைவு விசா காலம் முடிவடைந்த அனைத்து வெளிநாட்டவர்களும் மீண்டும் இஸ்ரேலுக்கு வருவதற்கு வசதியாக, சர்வதேச விமான சேவைகள் மீண்டும் தொடங்கியவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்துள்ளதாகவும் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார் 

இதன்படி, இலங்கையர்களின் விசா காலத்தை நீட்டிக்க தேவையான அனைத்து உதவிகளையும் இலங்கைத் தூதரகம் வழங்கும் என்றும் அவர் கூறினார். 

மேலும், இந்திய அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இந்தியப் பிரஜைகளை தங்கள் நாட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக, ஜோர்தானின் அம்மான் நகரிலிருந்து புது டில்லி விமான நிலையம் வரை அவ்வப்போது விமானங்களை இயக்கியுள்ளதாக இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதுவர் தெரிவித்ததாகவும், இந்த விமானப் பாதையைப் பயன்படுத்தி அம்மான் மற்றும் புது டில்லி விமான நிலையங்கள் வழியாக இலங்கைக்கு புறப்பட விரும்புவோர் தூதரகத்திற்கு வந்து பதிவு செய்யுமாறும் இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் அங்கு வசிக்கும் இலங்கையர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

இதற்கிடையில், இஸ்ரேல் மற்றும் ஈரானில் உள்ள இலங்கை இராஜதந்திர தூதரகங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, ஈரானிலிருந்தும் இஸ்ரேலிலிருந்தும் புறப்பட்ட இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு இன்று (22) வெளியிட்டது. 

அதன்படி, இஸ்ரேலிலிருந்து இதுவரை புறப்பட்ட மொத்த இலங்கையர்களின் எண்ணிக்கை 5 பேர் என்றும், புறப்பட காத்திருக்கும் குழு 3 பேர் என்றும் அமைச்சு தெரிவித்தது. 

அதேபோல், ஈரானிலிருந்து புறப்பட்ட மொத்த இலங்கையர்களின் எண்ணிக்கை 4 பேர் என்றும், புறப்பட காத்திருக்கும் குழு 4 பேர் என்றும் அமைச்சு கூறியுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா அதிரடி தாக்குதல்!

0

ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். 

இந்நிலையில் தாக்குதல்களுக்குப் பிறகும் அமைதி ஏற்படாவிட்டால் மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். 

அமெரிக்காவின் தாக்குதல் குறித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த டொனால்ட் டிரம்ப் , “ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் திறனை அழிப்பதும், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் முதன்மையான அரசால் முன்வைக்கப்படும் அணுசக்தி அச்சுறுத்தலை நிறுத்துவதும் எங்கள் நோக்கமாகும். 

தாக்குதல்கள் அற்புதமானவை, இராணுவ வெற்றி. ஈரானின் முக்கிய அணுசக்தி செறிவூட்டல் வசதிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன. 

மத்திய கிழக்கின் மிரட்டலான ஈரான் இப்போது சமாதானத்தை ஏற்க வேண்டும், இல்லையென்றால், எதிர்கால தாக்குதல்கள் மிகப் பெரியதாக இருக்கும்” என்று கூறினார்.

முதல்முறை பரந்த ஸ்ரீலங்கன் விமானம்!

0

ஸ்ரீலங்கன் விமான சேவையால் புதிதாக வாங்கப்பட்ட எயார் பஸ் A330-200 விமானம் இன்று (21) மாலைதீவில் உள்ள மாலே சர்வதேச விமான நிலையத்திற்கு தனது முதல் விமானப் பயணத்தை முன்னெடுத்திருந்தது. 

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று பிற்பகல் 1.48 மணிக்கு விமானம் புறப்பட்டதாக ஸ்ரீ லங்கன் விமான சேவையின் நிறுவன தொடர்பு தலைவர் தீபால் பெரேரா தெரிவித்தார். 

இந்த விமானம் இன்று மாலே சர்வதேச விமான நிலையத்திலும் தரையிறங்கியுள்ளது. 

கடந்த 4ஆம் திகதி பிரான்ஸிருந்து கொண்டுவரப்பட்ட குறித்த விமானத்தின் பதிவு உட்பட பல முக்கியமான சர்வதேச சம்பிரதாயங்களை முடித்த பின்னர், விமானம் அதன் முதல் விமான பயணமாக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மாலே நோக்கி புறப்பட்டது.

49 வது தேசிய விளையாட்டு விழா காலியில்!

0

காலி மாவட்ட ஊடகப் பிரிவு இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டு அமைச்சுடன் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட 2025 – 49 வது தேசிய விளையாட்டு விழா காலி மாவட்டத்தில் நடாத்தப்படுவது தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் (18) காலி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, 2025ஆம் ஆண்டின் 49வது தேசிய விளையாட்டு விழா காலி மாவட்டத்தில் நடைபெறுவது, காலிக்குக் கிடைத்த விசேட சந்தர்ப்பமாக விளையாட்டு மற்றும் இளைஞர் அலுவல்கள் பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன இதன்போது சுட்டிக்காட்டினார்.

70 வருடங்களாக திருத்தப்படாத வீதி!

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடுநகர் ஏழாம் யூனிட் பகுதியில் அமைந்துள்ள 70 வருடங்களுக்கு மேலாக மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள வீதியை புனரமைக்கும் பணிகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டன.

பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வந்த மக்களுக்கு தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தினால் வீதி புனரமைப்பு பணிகள் இன்றைய தினம் 21.06.2025 தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் அவர்களினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இவ் வீதியானது 35 மில்லியன் ரூபா செலவில் நிரந்தர தார் வீதியாக அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு சம்பிரதாயபூர்வமாக இன்றைய தினம் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் மோகன் மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்கலத்தினர், கண்டாவலைப் பிரதேச செயலாளர், கிராம சேவையாளர், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், கிராம மக்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.