Friday, June 26, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 203

2025 ஹஜ் ஏற்பாடு மிகச் சிறப்பு-ஹாஜிகள் வாழ்த்து!

2025 ஹஜ் ஏற்பாடு மிகச் சிறப்பு – சவூதி அரசின் அர்ப்பணிப்புக்கு முழு முஸ்லிம் சமூகமும் வாழ்த்து.

ஆக்கம் – ஊடகவியலாளர் எஸ். சினீஸ் கான்

ஹஜ் என்பது இஸ்லாத்தின் ஜந்தாவது கடமையும் வசதி படைத்தவர்கள் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய ஆன்மீக கடமையாகும். வருடாவருடம் பல நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் அல்லாஹ்வின் பாதையில் இறையருளை பெறும் நோக்கில் இவ் யாத்திரையை மேற்கொள்கின்றனர். இம்முறையும் சுமார் இரண்டு மில்லியன் மக்கள் ஹஜ் யாத்திரையில் பங்கேற்றனர்.

2025 ஆம் ஆண்டு ஹஜ் ஏற்பாடு உலகமெங்கும் கவனத்தை ஈர்க்கும் விதமாக மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆண்டு சவூதி அரேபியா அரசு ஹஜ் யாத்திரைக்கு அளித்திருக்கும் ஏற்பாடுகள் முன்பை விட அதிக உன்னதமான நவீன முறையில் காணப்பட்டது.

சவூதி அரேபிய அரசு கடந்த சில ஆண்டுகளாக ஹஜ் ஏற்பாடுகளை மேம்படுத்த, யாத்திரையாளர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் வசதிகளுக்கு மிகுந்த கவனம் செலுத்தி வந்ததுடன் இம்முறை உயர் தொழில்நுட்பம் மற்றும் நவீன வசதிகள் உருவாக்கப்பட்டு உயர்ந்த சேவை வழங்கப்பட்டது. ஹஜ் யாத்திரிகள் எதிர்நோக்கும் சிரமங்களை குறைத்து, அவர்கள் ஆன்மிக பயணத்தை அமைதியானதும் பாதுகாப்பானதுமாக மேற்கொள்ள சவூதி அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை பாராட்டத்தக்கது.

உயர்தரமான சுகாதார வசதிகள்

லட்சக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் கூடும் சூழ்நிலையில், நோய்கள் பரவாமல் இருக்க சுகாதார வசதிகள் மிக மிக அவசியமானவை. இந்த ஆண்டில், சவூதி அரசு அனைத்துப் புனித தலங்களிலும் நவீன மருத்துவ நிலையங்கள், அவசர சிகிச்சை, வைத்திய முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டதுடன் 24 மணிநேர டிஜிட்டல் மதுத்துவ சேவையும் மேற்கொள்ளப்பட்டது.

பாதுகாப்பு நடவடிக்கை

மக்கள் ஒரே இடத்தில் கூடும்போது ஏற்படக்கூடிய நெருக்கடிகளைத் தடுக்க, பாதுகாப்பு படைகளின் பங்கு இவ்வாண்டு மிக முக்கியமானதாக இருந்தது. மனிதக் கூட்டங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் நுட்பம் மற்றும் அனுபவம் கலந்து செயல்பட்டனர். பயணிகள் சுதாரிக்கக்கூடிய இடர்பாடுகளை முன்னிலையே அறிந்து தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதுடன் நவீன தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டது.

நவீன தொழில்நுட்பம்

தொடர்புத் தகவல், தரவுகளின் பகிர்வு, வழிகாட்டல், குழுக்களை ஒழுங்குபடுத்தல் ஆகியவற்றில் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகித்தது. ஹஜ் பயணிகளுக்கான மொபைல் செயலிகள் போன்ற வழிகாட்டும் உபகரணங்கள் ஆகியவை பயணிகளின் அனுபவத்தை எளிமையாக்கின.

நிர்வாக ஒழுங்குமுறை

புனித மஸ்ஜிதுகள், மினா, அறஃபா, முஸ்தலிபா போன்ற இடங்களில் தங்கும் வசதிகள் மற்றும் போக்குவரத்து வழிகள் உள்ளிட்ட அனைத்தும் முன்நோக்கிப் பரிசீலிக்கப்பட்டு மிகச் சிறப்பாக நவீன அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பயணியும் அந்த பயணத்தின் புனிதத்தையும் அமைதியையும் உணரக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டது.

இவ்வாண்டுக்கான ஹஜ் யாத்திரை யாத்திரிகள் உட்பட முழு முஸ்லிம் சமூகத்தினதும் பாராட்டை பெற்றதற்கு காரணம் சவூதி அரேபிய அரசாங்கத்தின் திறமையான திட்டமிடலும், பல்துறை ஒத்துழைப்புக்கள் தான் எனலாம்.

நாடு முழுவதும் 19,185 போசன் தன்சல்!

0

போசன் பண்டிகைக்காக நாடு முழுவதும் 19,185 போசன் தானம்.

2025 ஆம் ஆண்டு பொசன் பண்டிகைக்காக நாடு முழுவதும் 19,185 பொசன் டன்சல்கள் வழங்கும் நிகழ்வு பதிவுசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் (பொது சுகாதார சேவைகள்) மேலதிக செயலாளர் டாக்டர் லக்ஷ்மி சோமதுங்க குறிப்பிட்டார்.

பதிவு ஆவணத்தின் பிரகாரம், 944 கொழும்பு, 1792 கம்பஹா, 977 களுத்துறை, 1264 கண்டி, 812 மாத்தளை, 352 நுவரெலியா, 1186 காலி, 1021 மாத்தறை, 533 ஹம்பாந்தோட்டை, 03 யாழ்ப்பாணம், 03 கிளிநொச்சி, 17 முல்லைத்தீவு, 21 வவுனியா, 2 மன்னார், 09 மட்டக்களப்பு, அம்பாறை 584, 14 கல்முனை, 152 திருகோணமலை, 2114 குருநாகல், 731 புத்தளம், 731, அனுராதபுரம், 2301 பொலன்னறுவை, 968 பதுளை, 716 மொனராகலை, 1097 இரத்தினபுரி, 922 கேகாலை ஆகிய இடங்களில் நாடளாவிய ரீதியில் டன்சல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சுகாதார இயக்குநர் ஜெனரல் 2025.05.06 தேதியிட்ட “பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான தன்சலை ஏற்பாடு செய்வதற்கான விரிவான வழிகாட்டுதல்கள்” என்ற சிறப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார்.

வழிகாட்டுதல்கள் தொடரில் சுகாதார அதிகாரிகளுடன் தன்சலை பதிவு செய்தல், பொது சுகாதார ஆய்வாளர்களால் தகவல்களைச் சேகரித்தல், உணவு தயாரிப்பவர்களின் தனிப்பட்ட சுகாதாரத்தை உறுதி செய்தல், உணவு கையாளுபவர்கள் பின்பற்ற வேண்டிய கைகளை சுத்தமாக வைத்திருத்தல், உணவு கையாளுபவர்களின் சுகாதார நிலை, பயன்படுத்தப்படும் பொருட்கள், உணவு தயாரித்தல், கழிவுகளை அகற்றுதல், உணவு சுகாதார விழிப்புணர்வு, உணவு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு சோதனை போன்றவை அடங்கும்.

மனைவியை கோடரியால் போட்டுத்தள்ளிய கணவர்!

0

குடும்பத் தகராறு தீவிரமடைந்ததன் காரணமாக, கணவன் ஒருவர் தனது மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்துள்ளார். 

இந்தச் சம்பவம் நேற்று (09) ஹெட்டிபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டுபிடிய, உடவெலவத்த பிரதேசத்தில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். 

உடவெலவத்த, ஹட்டுபிடிய பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். 

மரணமடைந்தவரின் உடல், நீதவான் பரிசோதனைக்காக பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சம்பவ இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. 

சந்தேகநபரான கணவனை கைது செய்வதற்காக ஹெட்டிபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்து 8 நிமிடங்கள் கழித்து உயிரோடு வந்த பெண்!

0

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் சுமார் 8 நிமிடங்கள் உயிரிழந்த நிலையில், மீண்டும் அவர் உயிர் பெற்றார். இதற்கிடையே உயிரிழந்த போது தனது உடலுக்கு என்ன நடந்தது. அப்போது என்ன உணர்ந்தேன் என்பது உள்ளிட்ட தகவல்களை அந்த பெண் பகிர்ந்துள்ளார்.

இந்த உலகில் மிக அரிதாகச் சிலருக்கு மட்டும் தற்காலிகமாக உயிர் பிரிந்து மீண்டும் உயிர் வரும். அப்படி தான் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் ஒருவர் சுமார் எட்டு நிமிடங்கள் உயிரிழந்த நிலையில் மீண்டும் உயிர் பெற்றார். அந்த எட்டு நிமிடங்கள் என்ன நடந்தது.. உடலும் மனதும் எப்படி இருந்தது என்பது குறித்த அனுபவத்தை அவர் இப்போது பகிர்ந்துள்ளார்.

அமெரிக்காவின் கொலராடோவைச் சேர்ந்த பிரியானா லாஃபெர்டி அந்த பெண் சொன்ன தகவல் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது. தனது உடலுக்கு மேலே தானே மிதந்தது போலவும், டைம் என்ற ஒன்றே இல்லாத ஒரு உலகத்திற்குள் நுழைந்தது போலவும் உணர்ந்ததாகக் கூறியுள்ளார். 33 வயதான இவர், மயோக்ளோனஸ் டிஸ்டோனியா என்ற ஆபத்தான நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது உடல் திடீரென மொத்தமாகச் செயலிழந்துவிட்டது.

அப்போது உயிர் பிரியும் தருணம் ‘ரெடியாக இருக்கிறீர்களா?’ என்று ஒரு குரல் கேட்டதாகவும் அவர் கூறுகிறார். அந்த குரல் கேட்ட அடுத்த நொடி எல்லாம் இருண்டுவிட்டதாகவும் லாஃபெர்டி தெரிவித்தார். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள், மருத்துவ ரீதியாக இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இருப்பினும், அப்போதும் உணர்வு தன்னுடன் தொடர்ந்தது என்று அவர் கூறினார்.

லாஃபெர்டி மேலும் கூறுகையில், “மரணம் என்பது ஒரு மாயை. நமது ஆன்மா ஒருபோதும் இறப்பதில்லை. நமது உணர்வு உயிருடன் தான் இருக்கிறது. நாம் உருமாற மட்டுமே செய்கிறோம். என் எண்ணங்கள் அப்படியே இருந்தது உணர முடிந்தது. அங்கு நடந்தது ஒரு மாயை போல இருந்தது. அது ஒரு ஆசீர்வாதம் என்று சொல்லலாம். மிதப்பது போல நான் திடீரென எனது உடலில் இருந்து பிரிந்து தனியாக மிதப்பது போல உணர்ந்தேன்.

எனது மனித உருவத்தைப் பார்க்கவும் முடியவில்லை. அதை நினைவில் கொள்ளவும் முடியவில்லை. ஆனால் நான் முழுமையாக விழிப்புடன் இருந்தேன், நான் உயிருடன் இருப்பது போலவே உணர்ந்தேன். உடலில் எந்த வலியும் இல்லை.. அமைதி மற்றும் தெளிவு மட்டுமே இருந்தது.

அப்போது தான் பூமியில் வாழும் வாழ்க்கை மட்டும் இறுதியானதோ முடிவானதோ இல்லை என்பதை உணர முடிந்தது. நமக்கு மேலான ஒரு அறிவு இருக்கிறது.. அது நிபந்தனையற்ற அன்புடன் நம்மை வழிநடத்துகிறது. அது நம்மைக் கண்காணிக்கவும் செய்கிறது. அங்கு நேரம் இல்லாதது போல் இருந்தாலும் எல்லாம் சரியாக நடப்பது போலவே இருந்தது” என்றார். Also Read

மரணத்திற்கு அருகிலுள்ள சென்றுவிட்டுத் திரும்புவோரின் அனுபவங்கள், அதாவது Near-death experiences, சிக்கலானவை மற்றும் விளக்கக் கடினமானவை. ஆய்வாளர்கள் அவற்றைப் புரிந்து கொள்ளத் தொடர்ந்து முயன்று வருகின்றனர். 2022ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், மனித மூளை இறக்கும் தறுவாயில் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளை விரைவாக நினைவு கூரும் என்பது கண்டறியப்பட்டது.

பலர் இதைத் தான் ‘வாழ்க்கை கண் முன் வந்து செல்வது’ என்று விவரிக்கின்றனர். கனடாவின் கல்கரி பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் நடந்த ஆய்வில், உலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒரு மங்கலான ஒளியை வெளியிடுகின்றன என்றும் இறக்கும் போது மட்டுமே அந்த ஒளி மறைந்துவிடுகிறது என்றனர்.. இந்த மங்கலான ஒளியை அல்ட்ராவீக் ஃபோட்டான் எமிஷன் (Ultraweak photon emission – UPE) என்றும் குறிப்பிடுகிறார்கள்.

டெங்கு தொற்று தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

0

இந்த வருடத்தின் நேற்றைய தினம் வரை 25,055 டெங்கு நோயாளர்கள், அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. 

அதேநேரம், டெங்கு நோயினால் 13 பேர் உயிரிழந்ததாகவும் அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது. 

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

கடந்த காலங்களில் நிலவிய மழையுடனான காலநிலையை அடுத்து நுளம்புகளின் பெருக்கமும் அதிகரித்துள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. 

ஒவ்வொரு வருடமும் டெங்கு நோயினால் 25 சதவீதமான, மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். 

இந்தநிலையில், காய்ச்சல், வாந்திபேதி ஏற்படுமிடத்து வைத்திய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

பாடசாலைகளில், டெங்கு பெருக்கம் உள்ள இடங்களைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு, உரியப் பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரவி குமுதேஷ் பணி இடைநீக்கம்!

0

மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் ரவி குமுதேஷ் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

இந்த இடைநீக்கம் 2024 ஒக்டோபர் 10 ஆம் திகதி முதல் அமலுக்கு வருகிறது. 

இதன்படி, இடைநீக்க காலத்தில் அவருக்கு சம்பளம் அல்லது வேறு எந்தக் கொடுப்பனவுகளும் வழங்கப்படாது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

மேலும், ஒழுங்கு நடவடிக்கைகள் முடியும் வரை அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ரவி குமுதேஷ், நிறுவன விதிகளை மீறி 2024 பொதுத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டதால் இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

காசா சென்ற மனிதாபிமான கப்பலை கடத்திய இஸ்ரேல்!

கிரெட்டா துன்பர்க் உள்ளிட்ட சமூக செயற்பாட்டாளர்களுடன் சென்ற காசாவுக்கான மனிதாபிமான கப்பலை இஸ்ரேல் படையினர் சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், காசா பகுதிக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகள் கொண்டு சென்ற ‘மட்லீன்’ என்ற கப்பலை சர்வதேச கடல்பரப்பில் வைத்து இஸ்ரேல் படையினர் சிறைபிடித்தனர். மேலும், அந்தக் கப்பலில் பயணித்த காலநிலை செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பர்க் மற்றும் ஐரோப்பிய பார்லிமென்ட் உறுப்பினர் ரிமா ஹசன் உள்ளிட்டோரை கைது செய்தனர்.

சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதாக ப்ரீடம் ப்ளோடில்லா அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ், ‘மல்டீன் கப்பலை காசாவுக்கு செல்ல அனுமதிக்க மாட்டோம். தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் விநியோகம் செய்வதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,’ என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கப்பலில் இருந்தவர்கள் கைகளை உயர்த்திய நிலையில் அமர்ந்திருக்கும் போட்டோ வெளியாகி சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் அதிகரித்துவரும் கொவிட் தொற்று!

0

இந்தியாவில் இதுவரை 6,491 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 358 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

டில்லி, மஹாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் மீண்டும் புதிய கொரோனா வகை தொற்று பரவ ஆரம்பித்துள்ளது. தினமும் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 358 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை 6,491 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதித்து யாரும் உயிரிழக்கவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 1950 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தியா முழுவதும் நேற்று 624 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் மாஸ்க் அணியும் படி மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

கூட்டுறவு சங்கங்களில் பாரிய நிதி மோசடி!

0

கூட்டுறவுத் துறைகள் மற்றும் சங்கங்களில் நடந்த மில்லியன் கணக்கான ரூபாய் ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து முறையான விசாரணைகள் தொடங்கப்படும் என்றும், அவை காலத்தின் மணலில் மூழ்க அனுமதிக்கப்படாது என்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்தார்.

மத்திய மாகாண ஆளுநரின் கேட்போர் கூடத்தில் சமீபத்தில் நடைபெற்ற மத்திய மாகாண கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.

தற்போது இயங்கும் கூட்டுறவு சங்கங்களை தற்போதைய சமூகத் தேவைகளுக்கு ஏற்ப மாற்றுவது மற்றும் பொது தொழில்முனைவோரின் கீழ் நாட்டிற்குள் நாட்டிற்குத் தேவையான உணவை உற்பத்தி செய்வது மற்றும் மதிப்பு கூட்டல் மற்றும் விநியோகம் குறித்து கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளுக்குக் கல்வி கற்பிப்பதே இந்தக் கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என குறிப்பிட்டார்.

இதற்காக, வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்ட எதிர்கால வேலைத் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, ​​சங்கங்களின் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் மற்றும் பரிந்துரைகள் மற்றும் நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை வலுப்படுத்த கூட்டுறவு இயக்கம் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பது குறித்தும் விரிவாக விளக்கப்பட்டது.

தற்போதைய கூட்டுறவு இயக்கம் எதிர்கொள்ளும் சவால்களை துணை அமைச்சர் சுட்டிக்காட்டி கூறினார்:

“இதுவரை, ஒரு கூட்டுறவு சங்கம் அல்லது வங்கி சரிந்தால் யாரும் பொறுப்பேற்கவில்லை. அவர்கள் அதற்கான ஒரு வகையான அறிக்கையை மட்டுமே வழங்குகிறார்கள். எதிர்காலத்தில் அது நடக்காது. ஒரு சங்கம் அல்லது கிராமப்புற வங்கி சரிந்தால், தலைவர் அல்லது இயக்குநர்கள் குழு கூட்டாகவோ அல்லது தனிப்பட்ட முறையில்வோ பொறுப்பேற்கப்படும் ஒரு அமைப்பு உருவாக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். சங்கங்கள் தனித்தனியாக சரிந்து விழும் வீணான அமைப்பு முடிவுக்கு வர வேண்டும்.

இதேபோல், கூட்டுறவுகளின் பெயரை தவறாகப் பயன்படுத்தி பொதுமக்களை தவறாக வழிநடத்தும் பல்வேறு கூட்டுறவு மற்றும் நிதி நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் மோசடி நடவடிக்கைகளும் தடுக்கப்பட வேண்டும். நாடு முழுவதும் பிராந்திய கிளைகளை நிறுவுவதன் மூலம், அதிக வட்டி வழங்குவதாக விளம்பரப்படுத்துவதன் மூலம் வட்டி கடைகள் வடிவில் மேற்கொள்ளப்படும் இந்த மோசடி நிதி பரிவர்த்தனை முறைகளை உடனடியாக நிறுத்த நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். அதற்காக, இந்த நிறுவனங்கள் மற்றும் சங்கங்களின் செயல்பாடுகளை நேரடியாகக் கண்காணிக்கவும், தேவையான ஒழுங்குமுறை மற்றும் தணிக்கை நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் தேசிய மற்றும் மாகாண கூட்டுறவு ஆணையர்கள் மற்றும் தகுதிவாய்ந்த அதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தல்கள் மற்றும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

மற்ற துறைகளைப் போலவே, கூட்டுறவுத் துறைகளிலும், ஏதேனும் அதிகாரி, அமைப்பு அல்லது ஏதேனும் இருந்தால் வரலாற்றில் எந்தவொரு துஷ்பிரயோகம், வீண்விரயம், ஊழல் அல்லது மோசடியையும் குழு செய்திருந்தாலும், அவர்கள் வெறுமனே மறக்கப்படுவதில்லை. மக்களும் நிறுவனங்களும் அவர்களைப் பற்றி எங்களுக்குத் தகவல் அளித்து புகார் அளித்துள்ளனர். எனவே, கூட்டுறவுத் துறை குறித்து தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் முறையான விசாரணைகள் தொடங்கப்பட்டு வருகின்றன. அவர்கள் காலத்தின் மணலில் மூழ்க அனுமதிக்கப்பட மாட்டார்கள், ஆனால் உண்மை தேடப்படும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்.

இந்தக் கூட்டத்தில் முக்கிய உரையை வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் ஆலோசகர் டாக்டர் சாந்த ஜெயரத்ன நிகழ்த்தினார். மத்திய மாகாண ஆளுநர் சரத் அபயகோன், மத்திய மாகாண தலைமைச் செயலாளர் அஜித் பிரேமசிங்க ஆகியோரும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர், மேலும் மத்திய மாகாண கூட்டுறவுத் துறை ஆணையர், மாகாணத்தில் உள்ள பல கூட்டுறவுத் தலைவர்கள் மற்றும் கூட்டுறவுகளின் பிரதிநிதிகளுடன் கலந்து கொண்டனர்.

அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்!

வவுனியா மற்றும் கிளிநொச்சி அரச கால்நடை வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

அரச கால்நடை வைத்தியர்களுக்காக தனியான பணி யாப்பு உருவாக்கப்பட்ட போதிலும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என குற்றஞ்சாட்டியுள்ள கால்நடை வைத்தியர்கள் சங்கத்தினர், அந்த யாப்பினை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அரச கால்நடை வைத்தியர்களுக்கான தனியான யாப்பை அரசாங்கம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட அதனை தடுக்கும் முயற்சியில் விவசாய அமைச்சர் ஈடுபடுவதாக தெரிவித்து, அரச கால்நடை வைத்தியர்கள் இன்று காலை 6.00மணி முதல் 24மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவு தெரிவிக்கும்  முகமாக வவுனியா அரச கால்நடை வைத்திய அலுவலகங்களிலும் கால்நடை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி ,கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி, கண்டாவளை நான்கு கால்நடை வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும் கால்நடை வைத்தியர்கள் சமூகம் அளிக்காமையால் கால் நடை வைத்திய சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், பொதுமக்கள், தங்கள் கால்நடைகளுக்கான மருத்துவ சேவையை பெற்றுக்கொள்வதற்காக கால்நடை வைத்தியசாலைகளுக்குச் சென்று, வைத்தியர்கள் இல்லாத காரணத்தினால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.