Wednesday, November 5, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 206

டிரைவர் இல்லாத பஸ் சேவை அடுத்த வாரம் துவக்கம்

0

உலகிலேயே முதன் முறையாக டிரைவர் இல்லாத பஸ் சேவை, ஸ்காட்லாந்தில் அடுத்த வாரம் துவங்க உள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ஒரு பகுதியாக ஸ்காட்லாந்து உள்ளது. இங்கு, டிரைவர் இல்லாத பஸ் சேவையை அடுத்த வாரம் துவங்க, பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தானியங்கி பயணியர் பஸ் இயக்கப்படுவது, உலகிலேயே இதுதான் முதன்முறை. ‘சென்சார்’கள் பொருத்தப்பட்ட இந்த பஸ்கள், மணிக்கு, 80 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

அதே நேரத்தில், முழு அளவிலான தானியங்கி பஸ் சேவைக்கு அரசு அனுமதி தராததால், ஒவ்வொரு பஸ்சிலும் பாதுகாப்புக்காக டிரைவர் இருப்பார்.

அவர், பஸ்சின் இயக்கத்தை கண்காணிப்பார். தேவைப்படும் நேரத்தில், பஸ்சை அவர் இயக்கி கட்டுப்படுத்துவார். மேலும், பயணியருக்கு பயணச்சீட்டு வழங்க, நடத்துனரும் பஸ்சில் இருப்பார்.

இந்த தானியங்கி பஸ்கள், செயற்கை நுண்ணறிவு இயந்திரம் வாயிலாக இயக்கப்படும். இது, பாதுகாப்பான வழிகளை கண்டறிந்து, பஸ் இயங்க வழிவகை செய்கிறது.

இந்த சேவை பாதுகாப்பானதாகவும், எரிபொருள் சிக்கனமானதாகவும், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தையும் அளிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் காதலியை சுட்டு தானும் தற்கொலை

0

வவுனியாவில் இன்று (13) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஒரு பிள்ளையின் தாயை நபர் ஒருவர் சுட்டுக் கொன்றதுடன், தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியா, பறயனாலங்குளம், நிலியமோட்டையில் உள்ள வீடொன்றில் வைத்து பெண் ஒருவர் இன்று (13) அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

26 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

பின்னர் சந்தேக நபரும் இன்று காலை நிலியமோட்டை கோவிலுக்கு அருகில் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சந்தேகநபர் அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த பெண் திருமணமாகி தனது கணவர் மற்றும் குழந்தையுடன் நிலியமோட்டை பிரதேசத்தில் குடியேறியுள்ளார்.

திருமணத்திற்கு முன்னர் குறித்த சந்தேக நபருடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாக பொலிஸாரிடம் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டின் இன்றைய வானிலை முன்னறிவிப்பு

0

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75

மில்லிமீற்றருக்கும் அதிகமாக பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவின் ஏனைய பகுதிகளில் இடைக்கிடை மழை பெய்யும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது 40 தொடக்கம் 45 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இடியுடன் கூடிய மழை, மின்னல் தாக்கம் மற்றும் கடும் காற்று நிலைமைகளின் போது ஏற்படக்கூடிய அனர்த்தங்களில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.

அரச பாடசாலைகளுக்கு விடுமுறை

0
நாட்டில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 12ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

கல்வி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 29ஆம் திகதி முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இடம்பெறவுள்ளதால் இவ்வாறு 27ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.பி.எல். வரலாற்றில் யஷஸ்வி ஜய்ஸ்வால் சாதனை

0

கொல்கத்தா, ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (11) நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 13 பந்துகளில் 50 ஓட்டங்களை பூர்த்தி செய்த ராஜஸ்தான் றோயல்ஸ் வீரர் யஷஸ்வி ஜய்ஸ்வால், ஐ.பி.எல். வரலாற்றில் அதிவேக அரைச் சதத்தைப் பெற்று சாதனை நிலைநாட்டினார்.

அப்போட்டியில் 41 பந்துகள் மீதம் இருக்க, ராஜஸ்தான் றோயல்ஸ் மிக இலகுவாக 9 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 150 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் 13.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து, 151 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஜய்ஸ்வாலின் சாதனைமிகு முதல் 50 ஓட்டங்களில் 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கின.

இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் 14 பந்துகளில் அரைச் சதம் குவித்த கே.எல். ராகுல், பெட் கமின்ஸ் ஆகியோரின் அதிவேக இணை சாதனையை ஜய்ஸ்வால் முறியடித்தார்.

சிறு பிராயத்தில் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற தனது கனவை நனவாக்கும் பொருட்டு மும்பைக்கு சென்று பசி, பட்டினியுடன் ஒரு கூடாரத்தில் வாழ்ந்து சிறுக சிறுக கிரிக்கெட்டில் முன்னேறிய ஜய்ஸ்வால், கொல்கத்தா அணித் தலைவர் நிட்டிஷ் ராணா வீசிய முதல் ஓவரில் 26 ஓட்டங்களை விளாசித் தள்ளினார்.

இதன் காரணமாக இங்கிலாந்துக்கு எதிராக 2007இல் நடைபெற்ற இருபது 20 உலகக் கிண்ணத்தில் யுவ்ராஜ் சிங் 12 பந்துகளில் குவித்த 50 ஓட்ட உலக சாதனையை ஜய்ஸ்வால் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதனை சமப்படுத்த ஒரு பந்தினால் அவர் தவறினார்.

21 வயதான இடதுகை துடுப்பாட்ட வீரரான ஜய்ஸ்வால் இந்த வருட ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தனது 2ஆவது சதத்தை 2 ஓட்டங்களால் பெறத் தவறினார். நிகர ஓட்ட வேகத்தை குறியாகக் கொண்டு மறு பக்கத்தில் அணித் தலைவர் சஞ்சு செம்சன் சிக்ஸ்கள் மூலம் ஓட்டங்களைக் குவித்ததால் சதம் குவிக்கும் வாய்ப்பு ஜய்ஸ்வாலுக்கு கிடைக்கவில்லை.

அவர் 94 ஓட்டங்களை பெற்றிருந்தபோது வெற்றிக்கு 3 ஓட்டங்களே தேவைப்பட்டது. ஆனால், வெற்றி ஓட்டங்களை பவுண்டறி மூலம் பெற்றதால் ஜய்ஸ்வால் 98 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். 47 பந்துகளில் பெறப்பட்ட அந்த ஓட்டங்களில் 12 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் அடங்கியிருந்தன.

மொத்த எண்ணிக்கை 30 ஓட்டங்களாக இருந்தபோது ஜொஸ் பட்லர் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் ஜய்ஸ்வாலும் சஞ்சு செம்சனும் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 69 பந்துகளில் 121 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை உறுதிசெய்தனர்.

சஞ்சு செம்சன் 29 பந்துகளில் 5 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகள் உட்பட 49 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

“நான் எப்போதும் சிறப்பாக தயார்ப்படுத்திக்கொண்டு விளையாடுவேன். எனது அடிகளை கச்சிதமாக செயற்படுத்த முடியும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளேன். சாதகமான முடிவு வரும் என்பதை அறிந்திருந்தேன். போட்டியை வெற்றியுடன் முடிக்கவேண்டும் என்பதே எனது நோக்கமாக இருந்தது. ராஜஸ்தானின் நிகர ஓட்ட வேகத்தை மாத்திரமே நான் சிந்தித்தேன். எனது சதத்தை அல்ல” என போட்டி முடிவில் ஜய்ஸ்வால் கூறினார்.

அவர் கூறியது போல் இந்த வெற்றியுடன் அணிகள் நிலையில் 12 புள்ளிகளுடன் சிறந்த நிகர ஓட்ட வேக அடிப்படையில் ராஜஸ்தான் றோயல்ஸ் 3ஆம் இடத்தை அடைந்துள்ளது.

முன்னதாக அப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

துடுப்பாட்டத்தில் முதல் 6 பேர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளை பெற்ற போதிலும், இருவர் மாத்திரமே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

வெங்கடேஷ் ஐயர் 57 ஓட்டங்களையும், நிட்டிஷ் ராணா 22 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்கள் இருவரும் 3ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 48 ஓட்டங்களே அணியின் சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது.

பந்துவீச்சில் யுஸ்வேந்த்ர சஹால் 25 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ட்ரென்ட் போல்ட் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பிணையில்

0
கைது செய்யப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரை இன்று இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் முன்னிலையாக வந்த இம்ரான் கானை ரேஞ்சர் படையினர் அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இதையடுத்து, இரவு முழுவதும் இரகசிய இடத்தில் வைத்து முன்னாள் பிரதமர் இம்ரான் கானிடம் என்.ஏ.பி அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதன் பின்னர், காவல் தலைமையகத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மூடிய அறைக்குள் இம்ரான் கான் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இந்தநிலையில், அவரை இன்று இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பால்மா விலை குறைப்பு!

0
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 200 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.

வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் 15ஆம் திகதி முதல் இந்த விலை குறைப்பு அமுலாகும் எனவும் வர்த்தக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சீமெந்து விலை அடுத்தவாரம் குறைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது சந்தையில், சீமெந்து மூடை ஒன்று, 2,750 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

எவ்வாறிருப்பினும், அடுத்தவாரம், சீமெந்து மூடை ஒன்றின் விலையை, குறிப்பிடத்தக்க அளவில் குறைக்க எதிர்பார்ப்பதாக, சீமெந்து உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வீட்டுக்கடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், சீமெந்துக்கான கேள்வி தற்போது 50 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக சீமெந்து உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் காரணமாக, நாட்டின் முன்னணி சீமெந்து உற்பத்தி நிறுவனம் ஒன்று, தமது நான்கு தொழிற்சாலைகளில், மூன்றை மூடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

0

நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று (11) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் படி, அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 308.66 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 322.70 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

நேற்று நாணய மாற்று வீதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 310.90 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 324.80 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

அத்துடன், யூரோ, பிரிட்டிஷ் பவுண்ட்ஸ், சுவிஸ் ப்ரேங்க் உள்ளிட்ட நாணயங்களுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியிலும் இன்றைய தினம் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

No description available.

1200 புத்தளம் மாணவர்களுக்கு இலவச மூக்குக்கு கண்ணாடி

0

புத்தளம் பொதுச் சுகாதார திணைக்களத்தின் ஏற்பாட்டில் முதல் கட்டமாக 1200 பாடசாலை மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் மூக்குக் கண்ணாடி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புத்தளம் பொதுச் சுகாதார திணைக்களத்திற்குட்பட்ட புத்தளம் பிரதேச செயலகம்  மற்றும் வண்ணாத்தவில்லு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சுமார் 44 பாடசலைகளில் கல்வி கற்கும் மாணவர்களில் முதல் கட்டமாக 1200 மாணவர்களுக்கு இலவச மூக்குக்கண்ணாடி வழங்கப்பட உள்ளது.

இதில் முதல் கட்டமாக புத்தளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 30 பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களில், பார்வை குறைபாடுடைய மாணவர்கள் புத்தளம் பொதுச் சுகாதார திணைக்களத்தின் அதிகாரிகளினால் இனம்காணப்பட்டு, அவர்களுக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 16.05.2023 செவ்வாய்க்கிழமை காலை 08.00 மணி முதல் புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெற உள்ளது.

இரண்டாம் கட்டமாக வண்ணாத்தவில்லு பிரதேச செயலகத்திற்குட்பட்ட 14 பாடசாலைகளில் கல்வி கற்கும் பார்வை குறைபாடுடைய மாணவர்கள் புத்தளம் பொதுச் சுகாதார திணைக்களத்தின் அதிகாரிகளினால் இனம்காணப்பட உள்ளத்துடன், அவர்களுக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு எதிர்வரும் வாரங்களில் இடம்பெறும் என புத்தளம் பொதுச் சுகாதார திணைக்களத்தின் தலைமை அதிகாரி திரு. சுரேஷ் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

இதற்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தியடைந்துள்ள நிலையில் பார்வை குறைபாடுடைய மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளுக்கு இது குறித்த தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் மோதல்களால் 8 பேர் பலி

0

பாகிஸ்தானில், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்ட பின்னர் நடந்த மோதல்களால், குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளதுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரிஐ கட்சியின் தலைவரான இம்ரான் கான், லஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பில் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டார். அதையடுத்து அவரின் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்களும் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன்  290 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை சுமார் 1900 பேர் கைது செய்யப்பட்டுள்னர்;.

பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்பின் லாகூர் இல்லமும் பிரிஐ கட்சி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பிரிஐ கட்சியின் உபதலைவர் பவாத் சௌத்தி, செயலாளர் நாயகம் அசாத் உமர் ஆகியோரும் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.